Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பேயோடு வாழ்க்கை நடத்தும் பெண்கள்

'பேயை பார்த்ததுண்டா?' என்று ஆண்களிடம் கேட்டுப் பாருங்களேன்.
உடனே 'பேயை பார்ப்பதா..? 20 வருஷமா அதோடுதானே குடும்பம் நடத்துறேன்..!' என்று அபத்தமான ஜோக் அடிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால், நிஜமாகவே பேயோடு குடும்பம் நடத்தும் பெண்கள் இருக்கிறர்கள்.

இறந்து போனவர்களை உயிரோடு இருப்பவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் சீனாவிலும் சூடானிலும் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த பழக்கம் இன்றும் தொடர்வதுதான் வேடிக்கை. இவர்கள் இப்படி பேயை திருமணம் செய்து  கொள்வதற்கும்  பல காரணங்களை வைத்திருக்கிறார்கள்.



ஒருவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் நடக்கும் முன்பே மணமகனோ அல்லது மணமகளோ இறந்து விட்டால், அவர்களின் சொத்தும் உறவுமுறைகளும் கை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக இறந்து போனவரின் ஆவியோடு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

நம்மூரைப் போலவே இந்த மூடநம்பிக்கை திருமணங்களில் அதிகம் பாதிக்கப்படுவது அங்குள்ள பெண்கள்தான். ஊரைக்கூட்டி, விருந்து வைத்து, இறந்து போனவர்களோடு திருமணம் முடிந்த கையோடு, அந்த பெண்ணை விதவையாக்கி மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். வாழ்நாள் முழுவதும் விதவையாக மணமகனின் குடும்பத்தோடு, இல்லாத புருஷனை நினைத்துக்கொண்டு கண்ணீர் மல்க வாழ வேண்டும்.


இதுவே இறந்து போன மணமகளை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இப்படி சட்டங்களோ சடங்குகளோ கிடையாது. ஆவியோடு திருமணம் நடந்து முடிந்த நாலு நாட்கள் கழித்து உயிரோடு இருக்கும் இன்னொரு  பெண்ணுடனான திருமணத்திற்கு நாள் குறித்து விடுவார்கள்.

விதவைப்பெண்கள் வாழ்வதற்காகவே ஊரின் ஒதுக்குப்புறமாக ஒரு விடுதி இருக்கும். அங்குதான் விதவைப்பெண்கள் தங்களின் கடைசி காலம் வரை வாழ்வை கழிக்க வேண்டும். சீனர்களின் குடும்ப அமைப்புப்படி திருமணம் ஆகாத பெண்களுக்கு சமூகத்தில் எந்த அந்தஸ்த்தும் கிடையாது.

வசதியற்று, ஏழ்மை காரணமாக திருமணம் ஆகாமலேயே இருக்கும். பெண்களை இதுபோன்று இறந்து போனவர்களோடு திருமணம் முடித்து மணமகன் குடும்பத்து உறுப்பினர் ஆக்கிவிடுவார்கள்.

இறந்து போனவர்களின் ஆவிகள் அவர்களின் குடும்பத்தினரின் கனவிலோ, அல்லது ஆள் மூலமாகவோ, "இங்கே நான் தனிமையில் தவிக்கிறேன். எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள்!" என்று கேட்குமாம். ஆவியின் வேண்டுகோளை தட்டாது, உடனே யாரவது ஒரு ஏழை அபலைப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.


ஏதோ பேயக்குதானே திருமணம் செய்து வைக்கிறோம் என்று ஏனோதானோ திருமணம் நடத்தி விடமாட்டார்கள். பேய் திருமணங்களிலும் ஜாதகம் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நிச்சயதார்த்தம், திருமண சடங்கு, வரதட்சணை என்று அத்தனை அம்சங்களும் உண்டு.

திருமணத்தின் போது  மணப்பெண்ணின் அருகில் இறந்துபோனவரின் அடையாளமாக அருகில் துணியால் செய்யப்பட்ட ஒரு ஆண் பொம்மை இருக்கும். அதுதான் மணமகன். காலம் பூராவும் உயிரற்ற அந்த பொம்மையொடுதான் வாழவேண்டும். இதுதான் பேயை கட்டிக்கொண்டு வாழும் பெண்களின் நிலைமை..!


24 கருத்துகள்

  1. அநியாயம், அக்கிரமம், காட்டுமிராண்டித்தனம், etc, etc,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா!
      இன்றைய கம்ப்யூட்டர் உலகிலும் இப்படி ஒரு உலகம் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஒற்றைச் சொல்லுக்குள் எல்லாவற்றையும் அடக்கிவிட்டீர்கள்!
      நன்றி வருகைக்கும் வாக்குக்கும்!

      நீக்கு
  3. இதென்ன ? காலக்கொடுமை இது பெண்ணடிமைத்தனம் நியாயமானவர்கள் என்றால் ஆண்-பெண் இருவருக்கும் ஒரே நியதி வைத்திருக்க வேண்டுமே...
    த.ம + 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். என்ன செய்ய..? பெண்களுக்கு இன்னும் நல்ல காலம் வாய்க்கவில்லை போலும்..!
      வருகைக்கும் வாக்களிப்புக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. கொடுமை
    கொடுமை
    இக்காலத்திலும் இப்படி ஒரு
    நிகழ்வா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் அதிகம் அறியாத இன்னொரு உலகம் இது. இதை தவிர்த்து விட்டுத்தான் நாம் வளர்ச்சி என்று பெருமை அடித்துக்கொள்கிறோம்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. பேயோட குடும்பம் நடத்துவது கொடுமை அல்ல இந்த கால மனிதர்களோடு ஒப்பிடும் போது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விஷயம் முன்பே சீனர்களுக்கு தெரிந்திருக்கிறது போலும்..
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  6. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அய்யா!

      வலைப்பூவுக்கு புதியவனான என்னை தங்களது வலைச்சரத்தின் மூலம் அறிமுகப்படுத்தி, எனக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள் நன்றி. இந்த அங்கீகாரம் மேலும் மேலும் என்னை எழுத தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

      மீண்டும் கோடி நன்றிகள்!

      அன்புடன்
      எஸ்.பி.செந்தில்குமார்

      நீக்கு
  7. அடக் கொடுமையே! மூடத் தனங்களுக்கு பஞ்சமே இல்லை இந்த உலகில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவைப் போலவே அதிக மூட நம்பிக்கை நிறைந்த நாடு சீனா.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  8. என்ன கொடுமைடா சுவாங் யுவாங் :)

    பதிலளிநீக்கு
  9. பேய்!? அப்படி ஒன்று இருக்கா என்ன? அப்படி இல்லாத ஒன்றுடன் குடும்பம் நடத்துவது பயம் இல்லை...ஆனால் ஆண் பெண் பேதம் பார்க்கின்றார்கள் பாருங்கள்....கொடுமை...கொடுமை....அதுவும் பெண்கள் பாவம்.....

    அது சரி மக்கள் தொகையில் மட்டும்தான் சீனா இந்தியாவுடன் போட்டி போடுகின்றது என்றால் நம்ம இந்தியாவுக்கு இதற்கும் ஒரு காம்படிட்டரா...கொடுமைடா....சீனாவின் மூடநம்பிக்கைகள் பற்றி ஓரளவு வாசித்திருக்கின்றோம்...ஆனால் இது புதிதாக இருக்கின்றது.....ம்ம்ம்(ஆப்பிரிக்கா நாடுகளிலும் நிறைய இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பர்களே,

      சீனா பலவகைகளில் இந்தியாவுடன் ஒத்துப்போகும் ஒரு நாடு. இங்கு இருக்கும் பல மூட நன்ம்பிக்கைகள் அங்கும் உண்டு.

      வருகைக்கும் பதிவுக்கும் நன்றி!

      நீக்கு
  10. உண்மையாகவா!!!? நம்பமுடியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அய்யா!

      வருகைக்கும் பதிவுக்கும் நன்றி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. வாருங்கள் சகோதரி,

      சீனா, சூடான் மற்றும் சில நாடுகளில் இந்த பழக்கம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நவீன உலகத்திலும் இது தொடர்வதுதான் ஆச்சர்யம்.

      தங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை