செவ்வாய், மார்ச் 31, 2015

உயிர் எங்கே..? பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பு

ம் காதல் காவியங்களில் எல்லாம் காதலன் காதலியிடம் நீதான் என் உயிர் என்பான். மாயஜால கதைகளில் ஏழு கடல், ஏழு மலை கடந்து தனது உயிரை கூண்டில் இருக்கும் கிளியின் உடலில் அரக்கன் வைத்திருப்பான்.

உண்மையில் உயிர் அத்தனை எளிதானதா? நினைத்த இடத்தில் நினைத்த மாதிரி வைத்துகொள்ள முடியுமா?

உயிர் என்பது மற்றவர்கள் வைத்துக்கொள்ளும் பொருள் அல்ல. உயிர் தொட்டுப்பார்க்க கூடிய விஷயமும் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? மற்ற உயிரினங்களிடம் எங்கிருக்கிறது? என்பது சிதம்பர ரகசியம் போல் விஞ்ஞானத்துக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தது.

சுவாசிப்பதும், இதயத் துடிப்பும்தான் உயிர் என்றால் அது தவறு. அவைகளெல்லாம் வெறும் செயல்பாடுகள் தானே தவிர உயிர் இல்லை. இதயமும் நுரையீரலும் கூட சுற்றும் பம்பரம் போல்தான். சுற்ற வைப்பது எது? இதுதான் உயிர் என்று யாரும் கண்டு சொல்லவில்லை.

இதயமும் நுரையீரலும் தான் உயிர் என்றல் கனடா நாட்டில் 230 பாரன்ஹீட் வெப்பத்தில் வென்னீர் ஊற்றுகளில் வாழும் பாக்டீரியாக்களுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் என்று எதுவும் இல்லை என சூடம் அணைத்து சத்தியம் செய்கிறார்கள்.

உயிர் இந்த இடத்தில்தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய பொருள் இல்லை. எனவேதான் அறிவியல் அது எங்கிருக்கிறது என்று துருவித்துருவி தேடத் தொடங்கியது. கடைசியாக உயிரின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டார்கள்.


இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இதுதான். உயிர் என்பது நமது உடலில் இருக்கும் செல்களில்தான் ஒளிந்திருக்கிறது. உடலில் மொத்தம் 10 கோடி செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லின் மையத்தில் இருக்கும் உட்கரு என்கிற நீயூக்ளியசில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.

இந்த குரோமோசோம்களில் டி.என்.ஏ. என்று சொல்லக்கூடிய ஆக்ஸ்ரிபோ நீயூக்ளிக் அமிலம் என்ற ஏணி வடிவ பொருள் உள்ளது. இந்த டி.என்.ஏ.-வை விரித்தால் 5 அடி நீளம் நீளும். இதுதான் நமது உயிரின் ஆதாரம். இதில்தான் ஜீன்கள் உள்ளன.

ஜீன்கள்தான் நாம் கருவாக உருவாகும்போது நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் ஆகியவற்றை கொண்டு வந்து நம்மிடம் சேர்கின்றன. நமது உயிரின் ரகசியமே ஜீன்களில்தான் உள்ளது என்பதை அறிவியல் கண்டுபிடித்துவிட்டது.

'கியூமன் ஜீனோம்' என்ற விதிப்படி மனிதன் மற்றும் ஜீவராசிகளின் ஜீன்களில் உள்ளே என்ன பதியப்பட்டிருக்கிறது என்பதை தனித்தனி வகையாகப் பிரித்து தேடிக் கொண்டிருக்கிறது விஞ்ஞானம்.

இன்னும் 50 ஆண்டுகளில் ஜீன்கள் பற்றிய விவரம் முழுவதும் மனிதன் கைக்கு வந்துவிடும். அப்போது உயிரை செயற்கையாகக் கூட உருவாக்கிவிடுவான்.

எனவே நமது உயிர் நமது செல்களில் உள்ள ஜீன்களில்தான் இருக்கிறது. கடந்த ஆயிரம் ஆண்டில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இதுதான்.

அதனால் சிகரெட், மது போன்ற செல்களை பாழ்படுத்தும் பழக்கங்களை
விட்டொளிப்பதுதான் நம் உயிருக்கு நாம் செய்யும் மரியாதை..!


20 கருத்துகள்:

 1. நல்லதொரு விஞ்ஞானப்பூர்வமான விடயத்தை தந்தமைக்கு முதற்கண் நன்றி நண்பரே முடிவில் மரியாதை கொடுக்கவேண்டிய காரணத்தையும் சொல்லியுள்ளீர்கள்.
  மனித மூளையில் இதுவரை 10 சதவீதம் மட்டுமே உபயோகப்படுத்தி இருக்கிறான் இது மிகப்பெரிய விஞ்ஞானிகளுக்கு என்னைப்போன்ற பாமரர்களெல்லாம் அரை சதவீதம் கூட உபயோகப்படுத்தி இருக்க மாட்டார்கள்.
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பின்னூட்டமாக வந்து கருத்தை பதிவு செய்து, வாக்களித்த நண்பருக்கு நன்றி!

   உண்மைதான் ஒரு சதவீத மூளைதான் நாம் பயன்படுத்துகிறோம். அதேபோல், இயற்கையின் பேராற்றல் முன் நாம் கண்டுபிடித்தது, நம் அறிவுக்கு எட்டியது ஒரு சதவீதம் மட்டுமே. இதை தெரிந்து கொண்டே மனிதன் தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறுகிறான். அதுவும் ஒரு அறியாமையின் வெளிபாடுதான்.

   நீக்கு
 2. உயிர் பற்றிய விஞ்ஞான விளக்கம் அளிக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் டி என் ஏ, ஜீன் போன்ற ஆழங்களில் உயிர் உண்டா என்பது இன்னமும் கேள்விக்குறி. அப்படியானால் உயிரே கூட ப்ரோக்ராம் செய்யப்பட்டது என்று ஆகிவிடும். சிலர் உயிர் என்பது பிளாஸ்மாவினால் ஆனது என்று நம்புகிறார்கள். வானத்து நட்சத்திரங்களுக்கும் இதே பிளாஸ்மா தொடர்பு இருப்பதால் அவர்கள் நாம் இறந்த பின் ஒரு நட்சத்திரமாக மாறிவிடுவோம் என்று சொல்கிறார்கள். இது ஒரு மத ரீதியான கருத்து என்று எடுத்துக்கொள்ளலாம். சீரியஸாக ஆராய்ச்சிகள் நடைபெற்றதாக நினைவில்லை.

  ஆனால் உண்மையிலேயே Duncan Macdougall என்ற அமெரிக்க மருத்துவர் 1901 இல் இறக்கும் தருவாயில் இருந்த நான்கு அல்லது ஐந்து மனிதர்களை வைத்து அவர்களின் எடையை சோதித்து ஒரு திடுக்கிடும் தகவலை அறிவித்தார். அதன் படி three-fourths of an ounce (ஏறக்குறைய 21 கிராம் அளவு) எடை கொண்டது நமது உயிர் என்று அவர் தெரிவிக்க அவர் ஒரே நாளில் புகழ் பெற்றது வேறுகதை. இதை 21 கிராம் தியரி என்று சொல்வார்கள். 21 கிராம் என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படம் கூட உண்டு. ஆனால் இதுவும் தற்போது ஒரு புனைவு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

  உயிர் என்பதை மனிதன் கண்டுபிடித்துவிட்டால் அதன் பின் அவன் வேறென்ன செய்வான் என்று கற்பனை செய்தால் அந்த ரகசியத்தை அவன் கண்டுபிடிக்காமலே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே!

   மிக விரிவான பின்னூட்டம் அளித்திருக்கிறீர்கள்.
   அறிவியல் கண்டுபிடிப்புகள் எப்போதுமே மாறுதலுக்கு உட்பட்டதுதான். இன்று சரியென்று சொல்வது நாளையே மாறும். இப்போதைக்கு டி.என்.ஏ. வில் உயிர் இருப்பதாக கூறியுள்ளார்கள். நாளை இதுவே மாறும்!

   ஐந்து வருடத்திற்கு முன்பு டி.என்.ஏ. மாற்றம் செய்தால் மரணமே இல்லாத வாழ்வு வாழ முடியும். அதுவும் 20 வயது இளைஞன் போலவே வாழ்நாள் முழுவதும் இருக்க முடியும் என்ற ஆய்வை நீங்கள் படித்திருப்பீர்கள். டி.என்.ஏ. மாற்றத்தின் மூலம் மரணத்தை விரட்ட முடியும் என்ற போது உயிர் அதில்தான் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானம் சொல்லும் பொது நம்பித்தான் ஆகவேண்டும்.

   நீக்கு
 3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. நண்பரே,

  இன்னும் கூட சொல்ல ஆசைதான். ஆனால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். பொதுவாக சொல்லப்படுவது போல ஒருவர் தன் மூளையின் 10% தான் பயன்படுத்துகிறார். ஐன்ஸ்டீன் போன்றவர்கள் 33% சிலர் 40% என்பார்கள் மூளையை பயன்படுத்தியதால்தான் பெரிய இலக்கை தொட முடிந்தது என்பது போன்ற டெம்ப்ளேட் கருத்துக்கள் உண்மையில்லை. இதை வைத்து வந்த படம்தான் லூசி என்ற ஹாலிவுட் திரைப்படம். இது ஒரு புனைவு. பலர் இதை நம்பிகொண்டிருக்கிரார்கள். இருப்பினும் இது உண்மையில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே,
   நாம் அடிப்படையில் விஞ்ஞானிகள் அல்ல. ஓரளவுக்கு மேல் அதனுள்ளே செல்ல முடியாது. இருப்பினும் விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

   நீக்கு
 5. Actually, one could extract DNA from dead cells as well. Most of our experiments are done using dead cells. So "life" is not in DNA. DNA is just a blueprint of how humans or any organisms are made. All organisms have DNA. Dead or alive.

  You can synthesize DNA at lab, but it won't be functional and produce human

  so it still is a mystery.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் அம்மா,
   முதன் முதலில் எனது தளத்திற்கு வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி.
   உயிர் என்பது இன்னமும் மர்மம் நிறைந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. இது விஞ்ஞானத்தின் முதல் படி என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
   விஞ்ஞான முடிவுகள் மாறுதலுக்கு உட்பட்டதுதான் என்பதில் தீவிரமான நம்பிக்கை கொண்டவன். அதனால் எந்த ஒரு முடிவையுமே இறுதியான முடிவாக எடுத்துக்கொள்வதில்லை. டி.என்.ஏ. கூறுகளில் மனித பண்புகள் பொதியப்பட்டுள்ளன என்று சொன்ன விஞ்ஞானம் தான் இன்று இதையும் சொல்லியிருக்கிறது. நாளை என்ன மாற்றம் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

   நீக்கு
 6. ஆஹா! இதை எப்படித் தவற விட்டோம். அருமையான ஒரு பதிவு (இந்தத் தளத்தில் எதுதான் இல்லை என்று கேட்கின்றீர்களா?ஹஹ்ஹ) வெரி இன்ட்ரெஸ்டிங்க்!
  மகா பாரதத்தில் கூட துரியோதனனுக்குத் தொடையில் உயிர் இருந்ததாகவும், கிருட்ணன் பீமனுக்கு அதைத் தெரிவிக்கத் தன் தொடையைத் தட்டிக் காட்டியதாகவும் சொல்லப்படும். அதே மகாபாரதத்தில், ஜராசந்தனுடன் பீமன் மல்யுத்தம் செய்யும் போது அவனைப் பிளந்து போட போட அந்த உடம்பு ஒன்று சேர, கிருட்ணன் ஒரு புல்லை எடுத்து வகுந்து மாற்றிப் போட்டுக் காட்ட பீமனும் அவ்வாறே ஜயத்ரதனின் உடம்பைப இரண்டாகப் பிளந்து மாற்றி இட்டு ஜயத்ரதனைக் கொன்றதாகக் கதை உண்டு. இப்படி நமது புராணங்களிலும் உயிர் எங்கு இருக்கின்றது என்று பல கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. பகவத் கீதையில், ஒருவரது சிந்தனை எதன் அடிப்படையில் இருக்கின்றதோ அதை அனுசரித்து உயிர் அந்த இடத்தில் இருக்கும் என்று சொல்லப்படுவதாக யாரோ ஒரு ப்ரசங்கி சொல்லக் கேட்டதுண்டு. ஆன்மீகத்தைப் பொருத்தவரை ஆன்மாவைத்தான் உயிர் என்று சொல்லுவதால், ஆன்மாவைப் பற்றி அறியத்தான் மெய்ஞானிகள் தவமிருந்ததாகவும் சொல்லப்படுவதால் ஆன்மீகம் எனப்பட்டது. அந்த ஆன்மா பல பிறவிகள் அதனது கர்ம வினைப் பயன் களின் அடிப்படையில் எடுப்பதாகச் சொல்லும் போது அதாவது உயிர் மீண்டும் மீண்டும் இந்த உலகில் வரும் என்று பார்த்தால்,
  //ஜீன்கள்தான் நாம் கருவாக உருவாகும்போது நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் ஆகியவற்றை கொண்டு வந்து நம்மிடம் சேர்கின்றன. நமது உயிரின் ரகசியமே ஜீன்களில்தான் உள்ளது என்பதை அறிவியல் கண்டுபிடித்துவிட்டது.// என்பதன் அர்த்தமா. என்று எடுத்துக் கொண்டாலும், கேள்வி, அப்படி என்றால் அப்பாவின் வழியா இல்லை அம்மாவின் வழியா யாருடைய உயிர்?
  செல்கள் அணுக்களால் ஆனது என்பதால் அந்த அணுக்களுக்கு ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை என்றுதான் பௌதீகம் சொல்லுகின்றது. இதைத்தான் சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதும் என்ற தனது கட்டுரைகள் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். அவர் எழுதிய ஆன்மா பற்றிய விளக்கம் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. “ப்ரைசனின் புத்தகத்தில் மறுபிறவி பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதற்கு சுவராஸ்யமான விடை கிடைக்கிறது.
  ப்ரைசன் சொல்கிறார்: நம் பிரபஞ்சம் முழுவதும் தனிமங்களின் அணுக்களால் ஆனது.மனித உயிர் என்பதே ஒரு மாலிகூல் நீண்ட கூட்டணு தொகுதிதான்.அணுக்களுக்கு அழிவே இல்லை.பிரபஞ்சம் ஆரம்பித்ததிலிருந்து அப்படியே இருக்கின்றன.ஒரு அணுவின் வாழ் நாள் குறைந்த பட்சம் 10^35. அதாவது 10க்கு பின் 34 சைபெர் போட்டுக் கொள்ளவும். அத்தனை வருஷங்கள்! நாம் இறந்து போய் எரித்தாலோ,புதைத்தாலோ கூட நம் உடலின் அணுக்கள் காற்றிலோ மண்ணிலோ கலந்து விடுகின்றன.இடமாற்றம் நிகழ்கிறது.. அவ்வளவுதான். அணு அளவில் அழிவதில்லை. ஒரு கண சென்டிமீட்டர் காற்றில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை 45 பில்லியன் பில்லியன். இத்தனை அணுக்களின் ஒரு பகுதி நாம் இறக்கும் போது மறு சுற்று வருகிறது.சில இலை தழை தாவரமாகவோ,பிராணிகளாகவோ மாறலாம்.சில மனிதர்களிடமே திரும்பி வரலாம்.எனவே, நம் முன்னோர்களின் புராதன அணுக்களில் சில பில்லியன்கள் நம்மிடம் இருந்தே தீரும். அணுக்களுக்கு அழிவில்லை என்றால், யாருமே இறப்பதில்லைமீண்டும் றக்கிறோம்..தாவரமாக,உயிரினமாக,மனிதராக பிரித்துக் கொடுக்கப் படுகிறோம் ..
  இதை எல்லாம் பார்ர்கும் போது விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தின் அருகில் வந்து விட்டதோ?
  சுஜாதா, உயிரின் ரகசியமும் மரணத்துக்குப் பின் என்ன என்பதும் தெரியும் போது விஞ்ஞானம் முற்று பெறும் என்று சொல்லி இருப்பார் கற்றதுப் பெற்றதும்.
  நண்பரே! எனவே இது இன்னும் மிஸ்ட்ரிதான்!

  மன்னித்து விடுங்கள் நண்பரே! பின்னூட்டம் இடுகை அளவு பெரிதாகி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக நீண்ட பின்னூட்டம் நண்பரே,
   அற்புதமான விளக்கம். புராணங்களில் இருந்து ஏராளமான தகவல்கள் என்று ஒரு இடுக்கையைவிட பெரிய பின்னூட்டம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி!

   நீக்கு
 7. ஆச்சர்யமான தகவல். திரு காரிகனின் பின்னூட்டம் சுவாரஸ்யமான ஒன்று.

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள அய்யா,

  நமது உயிர் நமது செல்களில் உள்ள ஜீன்களில்தான் இருக்கிறது.

  இன்னும் 50 ஆண்டுகளில் ஜீன்கள் பற்றிய விவரம் முழுவதும் மனிதன் கைக்கு வந்துவிடும்.

  ‘ உயிரே... உயிரே... நீ என்னோடு வந்துவிடு... ’

  அறிவுப்பூர்வமான அறிவியல் ஆராய்ச்சியை அலசியது அருமை.

  நன்றி.
  த.ம. 5.

  பதிலளிநீக்கு
 9. அட்டகாசமான பதிவு...வந்து சேர்ந்த பின்னூட்டங்களிளும் நிறையத்தகவல்கள் அறிய முடிந்து. நன்றி

  பதிலளிநீக்கு
 10. கோடிக்கணக்கான செல்கள் தான் உயிர் என்பதான கண்டுபிடிப்பும் அதனைச்சார்ந்த பின்னூட்டம் மூலம் நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன். ஆராய்ச்சியோடு நின்றால் சரி செயற்கை மனிதன் என்றெல்லாம் ஆரம்பித்தால் என்னாவது?

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...