Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சிக்னலில் காத்திருக்கும் தவிப்பான நேரம்



போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது ஏற்படும் எரிச்சல் சொல்லிமாளாது. சில நேரங்களில் நிமிடக்கணக்கில் நேரம் ஓடிக்கொண்டே இருக்கும். யார் இந்த நேரத்தை 'செட்' செய்தது என்று நொந்து கொள்ள வைக்கும். இந்த நேர நிர்ணயத்திற்குப் பின்னால் ஒரு 'சயின்ஸ்' இருக்கிறது.

பெருநகரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவால். பல இடங்களில் சிக்னல்கள், ஆங்காங்கே போலீஸ் நின்றாலும், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியதாகிவருகிறது.

குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவோம்.என்று கணக்கிட்டு முன்னதாகவே புறப்பட வேண்டியுள்ளது.



பெருநகரங்களில் இயங்கும் சிக்னல்கள் அனைத்திலும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். அந்த வழித்தடத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு குறிப்பிட்ட வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

காலை முதல் மாலை வரை எல்லா நேரத்திலும் அந்த சிக்னல்கள் ஒரே மாதிரி காத்திருக்கும் நேரத்தை காண்பிப்பதில்லை. நேரத்திற்கு ஏற்ப அங்கு காத்திருக்கும் நேரமும் மாறும்.

உதாரணமாக ஒரு முக்கிய சாலை சந்திப்பில் கிழக்கில் இருந்து மேற்காக செல்ல வாகனங்கள் 'பீக் ஹவர்' நேரங்களில் 180 வினாடிகள் காத்திருக்கிறது என்றால், பிற நேரங்களில் அது 150, 120, 80, 60 வினாடிகள் என மாறிக்கொண்டே இருக்கும்.


சரி, இந்த போக்குவரத்து சிக்னல்களுக்கு எப்படி நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்? அங்குதான், தண்ணீர் ஒப்பீடு வருகிறது. அந்த சிக்னலை ஒவ்வொரு வினாடியும் கடந்து செல்லும் வாகனங்களை வைத்து அதை தண்ணீருடன் ஒப்பிட்டு இந்த விநாடிகளை நிர்ணயிக்கிறார்கள்.

சாதாரணமாக, நீரோட்டம் தடையில்லாமல் செல்லும் போது அந்த இடத்தை அது வேகமாக ஓடி கடந்து விடும். இதில் நீர் தேங்கி நிற்பதில்லை. இதை தடையற்ற நீரோட்டக் காலம் என்கிறார்கள். இது நெரிசலின்றி போக்குவரத்து செல்லும் நேரத்தை குறிக்கும். இதனை 'ரன்னிங் ஸ்டேடஸ்' என்று குறிப்பிடுகிறார்கள். அந்த நேரங்களில் சிக்னல்களில் மிக குறைந்த வினாடிகளே காத்திருக்கும் நேரத்தை  நிர்ணயிக்கிறார்கள்.

அடுத்தது 'ஸ்லோரன்னிங் ஸ்டேடஸ்'. போதுமான சரிவு இல்லாத இடத்தில் செல்லும் நீர் மிக மெதுவாக செல்லும். இதை போக்குவரத்தோடு ஒப்பிடும்போது நெரிசல் இருக்கும். ஆனால், தேங்காத நிலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருக்கும். இது காலை 8 மணிக்கு முன்பும் மாலை 7 மணிக்கு பின்பும் உள்ள நிலை. இந்த நேரத்தில் 'பீக் ஹவர்' காலத்தை விட பாதியாக சிக்னல் நேரத்தை நிர்ணயம் செய்வார்கள்.


அடுத்ததாக 'ஸ்லோவாக்கிங் ஸ்டேடஸ்'. இது தேங்கி இருக்கும் நிலை. தண்ணீர் செல்லமுடியாமல் ஆங்காங்கே ஏற்பட்ட தடைகளால் தேங்கி நிற்பது. அதுபோன்று ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பல பகுதிகளில் இருந்தும் வருவதால் போக்குவரத்து தேக்க நிலையை அடைவதை குறிக்கும்.

அந்த நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் இருந்து ஒரு வினாடிக்கு வரும் வாகன எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் 'பீக் ஹவர்' எனப்படும் காலை மாலை நேர பகுதி. இந்த நேரத்தில் மிக அதிக வினாடிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டி வரும்.

எனவே, சிக்னலில் டிஜிட்டல் மீட்டர் காட்டுவது ஒரு தனி மனிதன் நிர்ணயிக்கும் நேரம் அல்ல. தண்ணீரின் ஓட்டத்துடன் வாகனங்கள் ஓட்டத்தை ஒப்பிட்டு பல ஆய்வுகளை நடத்தித்தான் காத்திருக்கும் நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்.

இனி சிக்னலில் காத்திருக்கும் போது, "இவர்கள் இஷ்டத்துக்கு நேரத்தை வைத்துவிடுகிறார்கள்" என புலம்ப மாட்டீர்கள்தானே.!






20 கருத்துகள்

  1. விரிவான பயனுள்ள தகவல்கள் நண்பரே நன்றி.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வருகை தந்து கருத்து பதிவிட்டு வாக்களித்த நண்பருக்கு நன்றிகள்!

      நீக்கு
  2. ஏதோ புரிகிற மாதிரி இருக்கு, ஆனா முழுதும் மண்டையில ஏறல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அய்யா,

      இது ஒன்றும் பெரிய டெக்னாலாஜி இல்லை. ஒரு நிமிடத்தில் எத்தனை வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பதை வைத்து நேரத்தை பிக்ஸ் செய்கிறார்கள்.
      வாகனங்களின் நகர்வை கொண்டு அதை நீரோட்டத்துக்கு ஒப்பிட்டு சில வகைகளாக பிரிக்கிறார்கள். அவ்வளவுதான்.

      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  3. Neerottam signalku Ulla irukuma nanbarae? - comedy aana questionnu ninaika vendaam. Puriyala. Adhaan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் உயரமான ஒரு கட்டடத்தில் இருந்து சாலையை பார்த்தால் அதில் செல்லும் வாகனங்கள் எல்லாம் ஒரு நதியின் நீரோட்டம் போலவே தெரியும். போக்குவரத்து நெரிசல் இல்லாத போது எல்லா வாகனங்களும் வேக வேகமாக போகும். அது ஒரு வேகமான தடையற்ற ஆற்றின் நீரோட்டம் போல இருக்கும். அதுவே தடையிருந்தால் அந்த ஆற்றின் ஓட்டம் மெதுவாக இருக்கும். அதைப்போலவே போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் மெதுவாக செல்லும் என்பதைத்தான் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஒப்பிட்டு சொல்கிறார்கள்.

      நீக்கு
  4. Indha masonslaam samam paaka oru tubela water fill panni check panuvaanga. Andhamaari irukumo?

    பதிலளிநீக்கு
  5. வழக்கமான ஒரு மாறுபட்ட தகவல் பதிவு..... தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. சிக்னலில் நேரம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்என்றே இவ்வளவு காலமூம்
    நினைத்து வந்தேன் நண்பரே
    இப்பொழுது புரிகிறது
    நன்றிநண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  7. சரிதான் நண்பரே! நீங்கள் சொல்லுவது. ஆனால் சில சமயங்களில் இங்கு சென்னையிலேயே கூட போலீஸ் சிக்னலை மேனுவலாக ஆப்பரேட் செய்கின்றார்களே. அதன் அருகில் நிற்கும் போது பார்த்திருக்கின்றோம். போக்குவரத்திற்கு ஏற்ப, அழுத்துவார்கள். அதனால் இந்தக் கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்ப்யூட்டரில் புரோக்ராம் செய்துதான் டைம் செட் செய்கிறார்கள். பல நேரங்களில் அது பழுதடைய வாய்ப்பிருக்கிறது. அது போன்ற சமயங்களில் மேனுவலாக ஆப்பரேட் செய்வார்கள்.
      வருகைக்கு நன்றி நண்பர்களே!

      நீக்கு
  8. உங்கள் எழுத்தின் ரன்னிங் ஸ்டேடஸ் எந்த சிக்னலுக்கும் நிற்காமல் ஒரே ஓட்டத்தில் படிப்பவரை முடித்துத்தான் நிற்க வைக்கும் போல.:))

    உண்மையில் இன்று உங்கள் பதிவின் வாயிலாக புதிய செய்தி ஒன்றைக் கற்றுக் கொண்டேன்.

    உங்கள் கருத்திற்காகவும்பொருள் உரைத்துப் பதிவைச் சற்று விரிவு படுத்தி இருக்கிறேன்.
    நேரமிருப்பின் வந்து இப்பொழுது புரிகிறதா என்று பாருங்கள்.

    இல்லையென்றாலும் சொல்லுங்கள்..!

    எப்பத்தான் உங்களைப் போன்ற நடையில் நானெல்லாம் எழுதுவதாம்?

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே, எனக்கு சற்று புரியவில்லை தான். விளக்கம் கொடுங்கள் நண்பரே!

      நீக்கு
  9. பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே,
      முதன் முதலாக எனது தளத்துக்கு வருகை புரிந்து கருத்து பதிவு செய்தமைக்கு நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை