ஞாயிறு, மே 10, 2015

கேமரா கவிதை - மீனாட்சி திருக்கல்யாணம்ஒன்பதாம் நாள்
திக் விஜயம் - இந்திர வாகன விமானம்

 மீனாட்சியம்மன் இந்திர விமானத்தில் திக் விஜயம் புரிகிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்த நாலாபுறம் படையெடுத்துச் செல்வது போல், பட்டாபிஷேகம் நடந்த மறுநாள் மீனாட்சி அம்மன் இனி இங்கு தன்னுடைய ஆட்சி என்பதை பக்தர்களுக்கு அறிவிக்கவே இந்த பவனி.


திக்விஜயம் தொடக்கம்


பாலகர்களின் போர்


அம்பு எய்த படுகிறது


வில் விடுபடுகிறது

மீனாட்சி திக்விஜயம் என்பது எட்டு திக்கும் உள்ள பாலகர்கள் எட்டு பேரையும் வெற்றி கொள்ளும் நிகழ்ச்சி. அதன்படி கீழமாசி வீதியில் இந்திரனையும், விளக்குத்தூண் அருகில் அக்னியையும், தெற்குமாசி வீதியில் எமனையும், தெற்குமாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் நிருதியும், மேலமாசி வீதியில் வருணனையும், மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பில் வாயுவையும், வடக்குமாசி வீதியில் குபேரனையும், வடக்குமாசி வீதி - கிழக்குமாசி சந்திப்பில் ஈசானையும் வெற்றி கொண்டப் பின் நந்தி தேவரையும் மீனாட்சி வெற்றி கொள்கிறாள்.

இறுதியாக சொக்கநாதர் போருக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் மீனாட்சி நாணம் கொள்கிறாள். உடனே அவரின் மூன்றாவது மார்பகம் மறைந்து போக ஸ்ரீ ரெங்கச்சந்திரத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


திருக்கல்யாண விருந்து ஏற்பாடு


சமையலில் உதவும் பக்த்தர்கள்


விடிய விடிய விருந்து தயாராகிறது


பத்தாம் நாள்
திருக்கல்யாணம் - பூப்பல்லக்கு உலா


உலகை வென்ற மீனாட்சி அம்மன் இறுதியாய் இறைவனையும் வென்றாள்.அதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குலசேகரப் பட்டர் வழிவந்த சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரரகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழிச் சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டு மாலை மாற்றி கொண்டபின் மீனாட்சிக்கு மங்கல நாண் அணிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் ப்ரியா விடை அம்மனுக்கு பொட்டும், மாங்கல்யமும் அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெறுகிறது.

படம்: பரத் கார்லோஸ்
படம்: காளிமுத்து 
படம்: காளிமுத்து 
படம்: பரத் கார்லோஸ்
படம்: பரத் கார்லோஸ்
படம்: பரத் கார்லோஸ்

பூப்பல்லக்கில் அன்னை மீனாட்சிகடந்த வருட பூப்பல்லக்கில் நான் எடுத்த படங்கள். கடைசி மூன்று படங்களில் பூப்பல்லக்கை காணலாம்.


படங்கள்: குணா அமுதன், காளிமுத்து, பரத் கார்லோஸ், எஸ்.பி.செந்தில்குமார்.

நாளை திருத்தேரோட்டமும் கள்ளழகர் வைகை எழுந்தருளல்.

முந்தைய பதிவுகளை பார்க்க கீழே உள்ள தொடர்பை சொடுக்கவும்

சித்திரை திருவிழா - 1   2   3   4 


12 கருத்துகள்:

 1. காலையில் உங்கள் பதிவால் தெய்வீக உலா வந்தது போல் உள்ளது. படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகை தந்து முதல் வாக்களித்த நண்பருக்கு நன்றிகள்!

   நீக்கு
 2. பதில்கள்
  1. பாராட்டி வாக்களித்த தனபாலன் சாருக்கு நன்றி!

   நீக்கு
 3. புகைப்படங்கள் அனைத்தும் அருமை அன்னையர் தின வாழ்த்துகள் நண்பரே
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
   தங்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்!

   நீக்கு
 4. கண்ணெடுக்கவிடாத் துல்லியப் படங்கள்
  உங்கள் பதிவுகளைப் போன்றே...))

  தொடருங்கள்.

  தம 5

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாக்குக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 5. ஆஹா! பக்தி அமுதம்......புகைப்படங்கள் அருமை! நேரிட்டுக் காண்பது போல்..
  வெரி குட் வெரி குட் டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் ஸோமாச் ஹான்.....(சுட்டது மகளிர் மட்டும்..டயலாக்..)

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...