சனி, மே 23, 2015

பராசக்தி: 'இருட்டடிப்பு செய்யப்பட்ட கருணாநிதி'


மு.கருணாநிதி
சென்ற தலைமுறை சினிமா ரசிகர்களை கேட்டுப் பாருங்கள், நடிப்பு என்றால் சிவாஜி என்பார்கள். வசனம் என்றால் கருணாநிதி என்பார்கள். ஆனால், அந்த கருணாநிதியின் பெயரையும் இருட்டடிப்பு செய்த காலம் ஒன்றுண்டு. 

1940-களின் மத்தியில் ஏ.வி.மெய்யப்பசெட்டியாரின் சினிமா தயாரிப்புகள் பெரும் வெற்றி பெற்று வந்தன. அந்த காலத்தில் அவரின் படங்களை விநியோகம் செய்து வந்த பி.ஏ.பெருமாள் மெய்யப்பருடன் சேர்ந்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

அதே நேரத்தில் தேவி நாடக சபா நடத்தி வந்த 'பாரசக்தி' நாடகம் புகழின் உச்சத்தில் இருந்தது. வசூலில் சினிமாவை எல்லாம் பின்னுக்கு தள்ளி, அள்ளிக் குவித்தது. இந்த நாடகத்தை எந்த ஊரில் நடத்தினாலும், அந்த ஊரின் சினிமா வசூல் படுத்தது. 

இப்படி மக்கள் அலைமோதும் அளவிற்கு அந்த நாடகத்தில் என்ன இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளவதற்காக மெய்யப்ப செட்டியாரும் பெருமாளும் கடலூருக்கு சென்று 'பராசக்தி' நாடகத்தைப் பார்த்தனர். நாடகம் பிடித்துவிட்டது. 

ஏ.வி.மெய்யப்பன் செட்டியார்
உடனே, நாடகத்தை எழுதிய பாலசுந்தரத்தைப் பார்த்து விலைபேசி, நாடகத்தை வாங்கி, பெருமாளுக்கு கொடுத்தார் செட்டியார். படத்தை அண்ணாதுரை கதை எழுதிய 'நல்லதம்பி' திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சுவை கொண்டே 'பாரசக்தி' படத்தையும் இயக்கச் சொன்னார்.

அண்ணாதுரையைப் போலவே ஒன்றிரண்டு படங்களுக்கு வசனம் எழுதி வந்த மு.கருணாநிதியை படத்துக்கு வசனம் எழுத வைப்பது என்று முடிவு செய்தனர். 

படத்தின் ஹீரோவாக கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்க செட்டியார் விரும்பினார். ஆனால், பெருமாளோ வேறு விதமாக சிந்தித்தார். அவர் செட்டியாரிடம் "நாம் ஏன் ஒரு புது நடிகரை போடக்கூடாது?" என்றவர் கூடவே "வேலூர் சக்தி நாடக சபாவில் நடந்து வரும் 'விதி' நாடகத்தைப் பார்த்தேன். அதில் கணேசன் என்ற ஒரு பையன் பிரமாதமாக நடிக்கிறான். அவனையே 'பராசக்தி'யில் ஹீரோவாக போட்டால் என்ன..!" என்றார். 

அப்போது 'விதி' நாடகம் திண்டுக்கல்லில் நடந்துக் கொண்டிருந்தது. செட்டியார் அங்கு சென்று நாடகத்தை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். என்னவோ அவருக்கு புது நடிகரை நடிக்க வைப்பதில் உடன்பாடு இல்லாமலே இருந்தது. 

"சினிமா என்பது வேறு. நாடகத்தில் நடிப்பதென்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவரை நடிக்க வைத்து படம் தோல்வியடைந்தால் என்ன செய்வது? இது நீங்கள் என்னுடன் கூட்டுச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம் வேறு. புதுப் பையனெல்லாம் வேண்டாம். ஏற்கனவே நடித்து வருபவர்களை வைத்தே படம் எடுப்போம். எதற்கு ரிஸ்க்?" என்றார்.

பெருமாள் விடுவதாக இல்லை. "ரிஸ்க் எடுப்போம்! கணேசனையே நடிக்க வைப்போம். அவன் பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்..!" என்று பிடிவாதமாக இருந்தார்.

செட்டியார் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டார். 

'பராசக்தி' படபிடிப்பு தொடங்கியது. சுமார் 3,000 அடி படம் எடுத்தப் பின், அதுவரை எடுக்கப் பட்ட படத்தை செட்டியாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. 

படத்தைப் பார்த்த செட்டியாரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. "இந்தப் பையன் தமிழ்நாட்டுக்கே பெரும் புகழ் சேர்ப்பான். இவனே தொடர்ந்து நடிக்கட்டும்." என்றார். 

'பராசக்தி'யில் சிவாஜி கணேசன் 
'பராசக்தி' 1952, அக்டோபர் 17-ல் ரிலீசானது. தமிழ் சினிமாவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக அது மாறியது. சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிப்பு சகாப்தம் உருவானது. 

படத்திற்கு கருணாநிதி எழுதிய வசனம் பட்டிதொட்டிகளில் எல்லாம் படு ஹிட். வசனம் என்றாலே அது கருணாநிதிதான் என்ற புது டிரெண்ட் தோன்றியது. 

இப்படி பெயர் பெற்ற கருணாநிதிக்கும் சினிமா துறைக்கே உள்ள இருட்டடிப்பு அனுபவம் ஏற்பட்டுள்ளது. அது 'அபிமன்யு' படத்தின் மூலம் கிடைத்தது. 1948-ல் அந்தப் படம் ரிலீசானது. படத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்தார். 

'அபிமன்யு' படத்தில் எம்.ஜி.ஆர்
தனது பெயர் வரும் என்று ஆவலோடு காத்திருந்தபோது திரைகதை, வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று வந்தது. தனது பெயருக்குப் பதில் அன்றைக்கு பிரபலமாக இருந்த ஒருவரின் பெயர் வந்திருப்பதைக் கண்டு, படத்தின் தயாரிப்பாளரான ஜுபிடர் சோமுவிடம் போய் கேட்டார். அதற்கு அவர், "உன் பெயரும் பிரபலமாகட்டும், அதுவரை பொறு!" என்றார். 

வசனத்திற்காகவே பின்னாளில் மிகப் பெரும் புகழ் பெற்ற கலைஞர் கருணாநிதிக்கே ஆரம்ப காலங்களில் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு சேதி! 
28 கருத்துகள்:

 1. அறியாத புதிய விடம் தந்தீர்கள், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தேவகோட்டை 80 தெரியுமா ? நண்பரே...
  எங்கள் ஊர்க்காரருக்காக பதிவை இணைத்து தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியும் நண்பரே! தேவகோட்டை ஸ்டுடியோ பற்றியும் எழுதியுள்ளேன். விரைவில் அதையும் பதிவிடுகிறேன்.

   வருகைக்கும் முதல் வாக்குக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. அறியாத விஷயம்...அறியத்தந்தீர்கள்...சகோ நன்றி.தம +1

  பதிலளிநீக்கு
 3. இப்படியும் நடந்திருக்கிறதா?
  தெரியாத செய்தி நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடந்திருக்கிறது நண்பரே, எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ithe pol நடந்திருக்கிறது. அவர் முதலில் இசையமைத்த படத்தில் அவரது பெயர் வரவில்லை. எல்லா பெரிய மனிதர்களும் பெரும் போராட்டத்திற்கு பின் தான் முன்னுக்கு வந்துள்ளார்கள்.

   வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 5. வணக்கம்
  நான் அறியாத தகவல் தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே,
   தங்களின் வருகை எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கருத்துரையோடு வாக்கு அளித்தமைக்கு நன்றி!

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 7. அந்த நேரத்தின் மனிதர்கள் மட்டுமே அறிந்த தகவலை
  அவர்களே சொல்லாது இரட்டடிப்பு செய்து விட்டு போன போது
  இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொன்ன
  உண்மைக்கு உயிர் தந்த பதிவாளராகிய தங்களை
  "தமிழ் "நிச்சயம் பாராட்டும் நண்பரே!
  த ம +1
  (குழலின்னிசையில் இணைந்தமைக்கு மகிழ்ச்சியுடன் கலந்த நன்றி நண்பரே!)
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே!

   வருகைக்கும் வாக்குக்கும் கூடுதல் நன்றி!

   நீக்கு
 8. அறியாதச் செய்தி...அறியத்தந்தற்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 9. இப்போது என்றால் படத்திற்கு வசனம் எழுதியது ஐெயலலிதா என்று போட்டிருப்பார்கள்.தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்கும் வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 10. நாளை தானே கலைஞருக்கு பிறந்த நாள் ...தக்க நேரத்தில் தகுந்த பகிர்வுங்க.

  பதிலளிநீக்கு
 11. அன்றைய நிலைக்கு இது ஒரு அரிய நிகழ்வு தான்... இப்போதைய காலகட்டத்தில் சாதாரணமாக நடக்கிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நண்பரே, இன்று வாய்ப்பு கிடைப்பது சுலபம். தக்க வைத்துக்கொள்வது தான் கடினம். அன்றைக்கு வாய்ப்பே கடினம். கிடைத்தால் ஓரளவு தக்க வைத்துக் கொள்ள முடியும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 12. After saw the 3000 feet movie, AVM wants to destroy all those and re-shoot from the beginning. This info is available from AVM's interview.

  பதிலளிநீக்கு
 13. அல்லாஹ் வை ஏற்று கொள்ளாதவர்களுக்கு அழிவு நிச்சயம்18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 5:11:00 IST

  அரிய தகவலுக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...