ஞாயிறு, ஜூன் 21, 2015

இளம் பெண்ணும் ஐயாயிரம் ஆண்களும்


நிக்கி லீ
து ஒரு 'அல்ஸ் ஒன்லி' பதிவுதான். அதை முதலிலே சொல்லிவிடுகிறேன்.  இப்படி ஒரு பதிவு தேவையா என்றுகூட பலர் நினைக்கலாம். ஆனால், நான் அடிக்கடி சொல்வதுதான், நாம் வாழும் உலகில் நம்மோடு சேர்ந்தே ஒரு வித்தியாசமான உலகம் இயங்கி வருகிறது. அதை பலருக்கும் தெரிவிப்பதுதான் இதன் நோக்கம். செக்ஸ் என்பதற்காக அதை ஒதுக்கிவிட முடியாது. இந்தக் கட்டுரையை நான் 2010-ல் எழுதினேன். இப்போது இந்த எண்ணிக்கை மாறியிருக்காலாம்...!

இனி சாதனைப் பெண் பற்றி..

சாதிப்பது என்று முடிவு செய்துவிட்டால், அது எப்படிப் பட்ட சாதனையாக இருந்தாலும் பரவாயில்லை! என்று சிலர் துணிந்து விடுகிறார்கள். இப்படிதான் 25 வயதான ஒரு இளம் பெண் சாதனைக் களத்தில் குதித்திருக்கிறார். இவர் சாதிக்கப் போவது உடலுறவில்...!

அழகுக் கலை நிபுணர், மாடல் என்று இரண்டு விதமான தொழிலை செய்யும் இந்த இங்கிலாந்து பெண்ணுக்கு தனது 16-வது வயதில் முதல் அனுபவம் ஏற்பட்டது. இல்லை, திணிக்கப் பட்டது. ஆம், அந்த வயதில் அவள் ஒரு ஆணால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.

பொதுவாக கொடூரமான சம்பவங்கள் நடக்கும் போது அதை மறக்கவே முயற்சிப்பார்கள். அதை ஒரு கசப்பான உணர்வாக வெறுத்து ஒதுக்குவார்கள். 

ஆனால், நிக்கி லீ வித்தியாசமானவள். தனக்கு ஏற்பட்டது பலாத்காரம் என்றாலும் கூட 'அது' அவளுக்கு பிடித்துவிட்டது. கற்பழிப்பில் கூட இப்படி ஓர் இனிமையா என்று அவள் மனம் மீண்டும் மீண்டும் அதையே நினைத்தது. திரும்பத் திரும்ப 'அது' நடக்க வேண்டும் உள்ளுணர்வு பரபரத்தது.

மாடலாக நிக்கி லீ
அதற்காக அவள் ஆண்களை தேட ஆரம்பித்தாள். ஆண்களை கவர்வது அவளுக்கொன்றும் சிரமமாக இல்லை. அவளிடம் அழகு நிறைந்திருந்தது. எடுப்பான இளமை இருந்தது. வாளிப்பான உடல் இருந்தது. இது எல்லாமே ஒரு ஆணை, பெண்ணிடம் மயக்கங்கொள்ள வைக்க போதுமானது.

கிறங்க வைக்கும் அம்சங்களைக் கொண்ட நிக்கி லீ, ஆணுடன் கூடுவதற்கு தனியான அறையையோ, வீட்டையோ தேர்ந்தெடுக்கவில்லை. பால்கனி, கடற்கரை, தெருவோரம், கிளப், சினிமா தியேட்டர், டிஸ்கோ ஆடும் இடங்கள் போன்றவைதான் அவள் ஆண்களுடன் கூடும் இடங்கள். தினமும் புதிது புதிதாக ஆண்களுடன் உறவு கொள்ளவில்லை என்றால் நிக்கி லீ கண்களில் உறக்கம் வராது. 

நிக்கி லீ தான் உறவு கொள்ளும் ஆண்களின் விவரங்களை தனியாக ஒரு டைரியில் எழுதி வந்தாள். ஒவ்வொரு ஆணுக்கும் அவன் கொடுத்த சுகத்துக்கு இத்தனை மார்க் என்று மதிப்பெண்கள் வேறு கொடுத்திருக்கிறாள். முழு திருப்தி அளித்த ஆணுக்கு ஸ்பெஷல் மதிப்பெண்களும் உண்டு.

இப்படியே இந்த பட்டியல் நீண்டு கொண்டே போனது. தனது 18-வது வயதில் 800 ஆண்களை உறவு கொண்டிருந்தாள். அப்போதுதான் இதையே சாதனையாக்கினால் என்ன என்று தோன்றியது. 

அதற்காக திட்டம் போட்டாள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாள். ஒரே இரவில் நான்கு ஆண்கள் என்ற சாதனை அளவும் நிக்கி லீயிடம் உண்டு. 

தனது 21-வது வயதில் 2,289 ஆண்களுடன் உறவு கொண்டிருந்தாள். இதில் ஒரே ஆண் மீண்டும் வராமல் பார்த்துக்கொண்டாள். தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரே ஆணிடம் இரண்டு முறை உறவு கொண்டதை 'துன்ப நிகழ்வு' என்று வேதனையோடு தெரிவிக்கிறாள். தனது 25-வது வயதில் 5,000 ஆண்களை நிறைவு செய்திருந்தாள். கிட்டத்தட்ட 9 வருடங்களில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறாள். 

சரி, நிக்கி லீயால் இப்படியே சென்று உலக சாதனை செய்துவிட முடியுமா.. ? என்றால் முடியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால், நிக்கி லீயை விட முன்னோடியான பெண்கள் ஏற்கனவே இந்த சாதனைப்  பட்டியலில் இருக்கிறார்கள். 

பேரரசர் அகஸ்டஸின் மகள் ஜூலியா தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெண். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவரின் சாதனையை எந்த பெண்ணாலும் நெருங்கக்கூட முடியவில்லை. கி.மு.14-ல் வாழ்ந்த இவருக்கு அழகு, அறிவு, படிப்பு என்று எல்லாமே அளவுக்கு மீறி இருந்தது. இது எல்லாவற்றையும் விட ஆணாசையும் மிக மிக அதிகமாக இருந்தது.

ஜூலியோ அகஸ்டஸ்
வயதுக்கு வருவதற்கு முன்பிருந்தே ஆண்களை அனுபவிக்க தொடங்கிவிட்டார். ஒன்று இரண்டாக ஆரம்பித்த ஆண்களின் எண்ணிக்கை கொஞ்ச நாட்களிலேயே ஆயிரத்தை தொட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் இளவரசியோடு இரவைக் கழிக்காத இளைஞனே ரோம் நகரில் இல்லை என்ற நிலை வந்தது. 

பின் தன் தோழிகளோடு வெளிநாட்டு வியாபாரிகள் கூடும் இடங்களுக்கு சென்றார். உடலை அப்பட்டமாக வெளியே காட்டும் மெல்லிய உடைகளைப் போட்டுக் கொண்டு வீதியில் அலைந்தார். 

எதாவது ஒரு புது ஆண் கண்ணில் பட்டுவிட்டால் போதும் அவனை இழுத்துக் கொண்டு ஆளில்லாத இடத்தில் ஒதுங்கி விடுவார். இவர் அப்படி உறவு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் மேல். 

இளவரசியின் இந்த ஆண்கள் வேட்டை செயலை தாங்க முடியாத மன்னர், மானம் போகிறது என்று ஆள் நடமாட்டமே இல்லாத பான்டதீரியா தீவுக்கு அவரை நாடு கடத்தி விட்டார். இல்லாவிட்டால் கணக்கு லட்சத்தை கடந்திருக்கும். 

இரண்டாவது இடத்தில் வருபவர் பிரெஞ்ச் நடிகை மெல்லி துபோஸ். இவரும் தான் உறவு கொண்ட எல்லா ஆண்களின் விவரங்களையும் டைரியில் எழுதி வைத்துள்ளார். இவர் சந்தித்த ஆண்கள் 16,527. இந்த இரண்டாவது இடத்தை வேண்டுமானால் நிக்கி லீ அடைய முடியும். முதலிடத்திற்கு இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். 

"நிக்கி லீ ஒரு செக்ஸ் அடிமை. அவள் தன்னையே பாழாக்கிக் கொள்கிறாள்." என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இதை நிக்கி லீ ஏற்கவில்லை. "எனது நடவடிக்கையால் நான் யாரையும் புண்படுத்தவில்லை. நான் செக்ஸியான பெண். அதனால் தான் என்னால் இந்த சாதனையை படைக்க முடிகிறது. ஆணுறை இல்லாத உறவை நான் அனுமதிப்பதில்லை. கருத்தடை மாத்திரையும் நான் எடுத்துக் கொள்கிறேன். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அருகில் உள்ள மருத்துவமனையில் சென்று பரிசோதித்துக் கொள்கிறேன். இந்த உடலுறவால் எனக்கு பாதிப்பில்லை. பதிலாக நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு அது தேவையாக இருக்கிறது." ஆனாலும் அளவுக்கு மீறினால் எல்லாமே கெடுதல்தான்.

இது பெண்களுக்கான காலம். இன்னும் பெண்கள் எதிலெதில் சாதிக்கப் போகிறார்களோ..! தெரியவில்லை..!    36 கருத்துகள்:

 1. ஒன்பது ஆண்டுகளில் ஐயாயிரம் பேருடன் உறவு என்பது உடலளவில் சாத்தியம்தான் ஆனால் மனதளவில் ஆபத்தானது என்று sexpert சொல்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை கூறிய நண்பர் காரிகனுக்கு நன்றிகள்!

   நீக்கு
 2. கானல் நீர் துரத்தல்
  தொடுவானத்தை ஸ்பரிசிக்க ஆசைப்படுதல்..
  வேறு என்ன சொல்வது
  நிச்சயமாக மனப்பிறழ்வு.
  அதீதமாய் டார்ச்சர் செய்யப்பட்ட நடிகைகள் லெஸ்பியன்களாக மாறிப்போவது போன்றதுதான் ...
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அளவுக்கு மீறிய எந்த செயலுமே மனப் பிறழ்வு தான்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆபத்தானதுதான். ஆனால், ஆபத்து இல்லை என்று அந்த பெண் நம்புவதுதான் முரண்.

   நீக்கு
 4. மனத்தில் பதியும் சில பதிவுகள் திசையையும், போக்கையும் மாற்றிவிடும். அவ்வாறான நிலையினை இவள் சந்தித்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம்.! ஆனால், சரித்தரித்தில் ஹிட்லர் ஒருவிதமான மனப்பிறழ்வு என்றால் இப்படிப்பட்ட மனிதர்கள் காமத்தில் மனப்பிறழ்வு அடைந்தவர்கள். இந்த பட்டியல் மிகப் பெரிய அளவில் என்னிடம் இருக்கிறது. அவற்றையெல்லாம் எழுதினால் இங்கு நன்றாக இருக்காது என்று விட்டுவிட்டேன்.

   நீக்கு
 5. அழகான செயல் அழுக்கானதும் கூட...
  தமிழ் மணம் 6 மனமே 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அளவோடு இருந்தால் அழகானதுதான். இங்குதான் அளவு இல்லையே!

   நீக்கு
 6. already therintha vishayam intha pennai patri but kuduthal thakavalkaludan ezuthiya intha pathivu arumai sir. thodarungal.

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. இப்போதைக்கு இல்லை. மெல்லி டுபோஸ் தான் இப்போதைக்கு சாதனைப் பெண். மற்றபடி 10 மணி நேரத்தில் 620 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பெண்ணும், ஒரு மணி நேரத்தில் 55 பெண்களுடன் உறவு கொண்ட ஆணும்தான் இப்போதைக்கு கின்னஸ் சாதனையாளர்கள்.

   நீக்கு
  2. அடப் பாவிங்களா! யம்மாடியோவ் கணக்கு ரொம்பவே ... எதுக்குதான் கின்னஸ்னு இல்லாமப் போச்சோ....

   நீக்கு
  3. சாதனை என்று முடிவு செய்துவிட்டால் அது எந்த சாதனையாக இருந்தாலும் முடித்து விடுவதுதான் சிலரின் வழக்கம். அதற்கு நிக்கி லீயும் விதி விலக்கல்ல.

   நீக்கு
 8. #ஒரு கட்டத்தில் இளவரசியோடு இரவைக் கழிக்காத இளைஞனே ரோம் நகரில் இல்லை என்ற நிலை வந்தது. #
  ஹும்,நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி சலிப்பு ஓவர்ர்ரரர்ர்ரர்ரர்ரர்ர்ரருருதான்

   நீக்கு
  2. பகவான்ஜி 100 ஜென்மங்களுக்கு முன்பு ரோம் நகரில் இளைஞனாக இருந்ததாக கில்லர்ஜி கூறுகிறார்..!!!

   நீக்கு
 9. அட! இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா? புதிய தகவல்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி!
   எல்லா வகை மனிதர்களும் பூமியில் இருக்கிறார்கள்.

   நீக்கு
 10. ம்ம்ம்ம் புனிதமாகக் கருதப்படும் ஒன்று எப்படியெல்லாம் பாடுபடுத்துகின்றது சிலரை.....இதுவும் ஒரு வகையான நோய்தான் இல்லையோ நண்பரே! அப்படித்தான் செக்சாலஜிஸ்ட்டுகள் சொல்லுகின்றார்கள். எதுவுமே அளவிற்கு மீறினால் நஞ்சுதானே....ம்ம்ம் என்னவோ போங்க எப்படித்தான் சாதனை என்பதற்கு அளவு கோல் இல்லாமல் போய்விட்டது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னவோ நடக்குது... மர்மமா இருக்குது...
   ஒன்னுமே புரியல உலகத்திலே...!

   நீக்கு
 11. செந்தில் சார்

  கிளுகிளுப்பான விஷயம் . ஆனால் அசிங்கமாக ஒரு வார்த்தையும் இல்லாமல் பதிவிட்டிருக்கிறீர்கள். இதைப் போல இன்னொரு செய்தி . வெளிநாட்டில் 60000 பெண்களுக்கு மேல் உறவு கொண்ட ஒரு நீலப்பட நடிகரைப் பற்றி வாசித்திருக்கிறேன். எல்லா பெண்களும் விரும்பி வந்தவர்கள். பொலி காளையைப் போல் தன்னை இதற்காக தயார் செய்து வைத்திருப்பாராம் . யாருக்கு எதில் மச்சம் என்றே தெரியவில்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...