வியாழன், ஜூன் 04, 2015

கார்களின் நிறமும் விபத்துக்களும்இந்த காரை எந்த நிறத்தில் சேர்ப்பது
கார்களின் நிறத்துக்கும் விபத்துக்கும் சம்பந்தம் உண்டா..? என்றால் உண்டு..!  என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்காக 20 வருடங்களாக 8,50,000 விபத்துக்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அதன் முடிவில்தான் இப்படி ஒரு தீர்வை தந்திருக்கிறார்கள். இது விஞ்ஞான முறையில் நிரூபிக்க படாவிட்டாலும் 20 வருட ஆய்வு ரீதியாக உண்மை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நமது ஊரில் டிராவல்ஸ் கார்கள் எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெண்மை நிறம் சூரிய ஒளியை கிரகித்துக்கொள்ளாது. திருப்பி அனுப்பிவிடும். இதனால் வெயிலின் தாக்கம் காருக்குள் குறைவாக இருக்கும். ஏ.சி.யின் குளுமை நன்றாக இருக்கும். இதனால் எரிபொருள் செலவு குறையும்.

மற்றொன்று நமது சாலைகள் எல்லாமே கருப்பு. அதில் வெள்ளை நிறத்தில் வரும் கார் 'பளிச்'சென்று எதிரே வரும் வாகன ஓட்டுனருக்கு தெரியும். இதனால் வெண்மைக் கார்கள் பாதுகாப்பானவை. விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு குறைவு என்கிறது அந்த ஆய்வு. இந்த காரணங்களினால் தான் வாடகைக் கார்கள் பெரும்பாலும் வெள்ளை நிறமாகவே இருக்கிறது.

கருப்பு நிறம் உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒரு வண்ணம். கார்களில்தான் மனிதர்களில் அல்ல. இளைஞர்கள் எப்போதும் கருப்பு நிறக் காரையே விரும்புகிறார்கள். ஆனால், கருப்பு விபத்தை ஏற்படுத்தும் நிறம் என்கிறது ஆய்வு. அவர்கள் ஆராய்ந்த 8 லட்சத்து 50 ஆயிரம் விபத்துக்களில் 47% கருப்பு நிறக் கார்கள். அதனால் இந்த நிறத்தை 'பாதுகாப்பற்ற நிறம்' என்கிறார்கள்.

'பாதுகாப்பற்ற நிறம்'
கருப்பு நிறக் காரில் பயணிக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக  பயணிக்க வேண்டும். சாலையின் நிறமும் கருப்பு என்பதால் எதிரில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு தெரியாது. அதிலும் மாலை நேரங்களில் கேட்கவே வேண்டாம். இந்த நேரங்களில்தான் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வு கூறுகிறது. அதனால் கருப்பு, கிரே போன்ற அடர் வண்ணங்களில் கார் வைத்திருப்பவர்கள். லேசாக இருட்டியதுமே 'பார்க் லாம்ப்' போட்டுக் கொள்வது பாதுகாப்பு.

இந்த ஆய்வு பாதுகாப்பான நிறம் என்று மூன்று வண்ணங்களை சொல்கிறது. வெள்ளை, பொன்னிறம், மஞ்சள் என்பதுதான் அது. இந்த நிறக் கார்கள் வெறும் 3 % தான் விபத்தில் சிக்கியுள்ளதாம். ஆக, புதிதாக கார் வாங்கப் போகும் நண்பர்கள் இதை கவனத்தில் கொள்ளவது நல்லது.

மேலும் அந்த ஆய்வு சிவப்பு நிறக் கார்களை விட நீல நிறக் கார்கள் அதிகம் விபத்துக்கு உள்ளாவதாக தெரிவிக்கிறது. அடர் பச்சை நிறத்தில் இருக்கும் கார்களுக்கு இன்னொரு பிரச்னை இருக்கிறது. மேலே பறக்கும் பறவைகள் இவற்றை மரம் என்று நினைத்து வந்து அமர்கின்றன. எச்சம் இடுகின்றன. பறவைகள் அதிகமாக எச்சம் இடுவது இந்த நிறக் காரில்தான்.


மஞ்சள் நிறத்தில் கார் வைத்திருப்பவர்கள் எப்போதும் கார் கண்ணாடிகளை இறக்கிவிடக் கூடாது என்கிறார்கள். பூந்தோட்டம் என்று நினைத்து தேனீக்களும் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் இந்த கார்களை சூழ்ந்து கொள்கின்றனவாம். கண்ணாடி திறந்திருந்தால் உள்ளே புகுந்து கொட்டிவிடும் என்கிறார்கள்.


வெளிர்நீல நிறத்தில் கார்கள் வைத்திருப்பவர்களுக்கு இன்னொரு பிரச்னை உண்டு. பறவையின் கண்களுக்கு இந்த கார் சிறிய நீர்த்தேக்கம் போல் தெரியுமாம். அதனால் பறவைகள் இந்த காரை தேடி வந்து மோதி அடிபட வாய்ப்பு உண்டு.

ஆபத்தான நிறம் என்று சொல்லப் படும் கருப்பு நிறக் கார்கள் கூட சில நாடுகளில் பாதுகாப்பானவையாக இருக்கின்றன. எப்போதும் பனி சூழ்ந்து காணப்படும் குளிர் நாடுகளில் கருப்பு நிறம்தான் பாதுகாப்பானது. வெண்மை நிற பனியில் கறுப்புக் கார் பளிச்சென்று தெரியும்.

நம்மூரை பொறுத்தவரை வெள்ளை நிற கார்களே பாதுகாப்பானவை. அடர் நிற கார்களைவிட வெள்ளை நிற கார்களில் அழுக்கு குறைவாகவே தெரியும். கீறல் விழுந்தால் கூட பளிச்சென்று தெரியாது. அதனால் நமக்கு ஏற்ற வண்ணம் வெண்மைதான்.


=====

36 கருத்துகள்:

 1. நண்பரே வெள்ளையனை வரவேற்போம்!
  பதிவின்படி வெள்ளை நிற கார்களைமட்டுமே சொன்னேன்!
  என்னை சபித்து விடாதீர்கள்! ப்ளீஸ்!
  ஜெய் ஹிந்த்!
  த ம 2
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே, இந்த வெள்ளையன் நமக்கு நல்லது விளைவிப்பவன்.
   வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

   நீக்கு
 2. இது கார் வாங்க வேண்டியவர்களுக்கு எமக்கு பார்க்க மட்டும்தான் நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் கார் வாங்க வாழ்த்துக்கள்.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 3. காரின் நிறங்களால் என்ன பிரச்சனைகள் அவைகள் எப்படி...என அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு விசயங்களிலும் எத்தனை பரிணாமங்கள் இருக்கின்றன...நல்ல தகவலை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோ.வாழ்த்துக்கள்.தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காரிலும் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்பதை சொல்வதற்குதான் இந்த பதிவு!
   வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

   நீக்கு
 4. கார்களின் நிறத்தில் இத்தனைப் பிரசன்னைகள் உள்ளதா?

  பதிலளிநீக்கு
 5. கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலருன்னு சொல்லக்கூடாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா..!!!
   கார் விஷயத்தில் மட்டும்தான்.

   நீக்கு
 6. அப்ப கருப்பு வெள்ளை தான் சரி என்கிறீர்கள். அறியாத தகவல்கள், தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், கருப்பு ரோட்டில் வெள்ளை காரும், வெண்மைப் பனியில் கருப்பு காரும் என்பதுதான் சரி!
   வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 7. தங்களின் கருத்து உண்மைதான் நண்பரே அதேபோல் குளிர் பிரதேச நாடுகளில் கருப்பு நிற கார்களே அதிகமாக விற்கப்படுகிறது 80ம் உண்மையே
  தங்களது முதல் புகைப்படத்தில் உள்ள கார் நம்பரின் கூட்டுத்தொகை 8 ஆகவே
  தமிழ் மணம் 8 நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜியின் பார்வை எவ்வளவு துல்லியம். 8-க்கு நன்றி!

   நீக்கு
 8. காரில் இவ்வளவு செய்திகளா? நல்ல தகவல்கள். கார் வாங்குபவர்களுக்குப் பயனுள்ள பதிவு. 30 வருடங்களுக்கு முன் கோயம்புத்தூரில் The Car என்று ஆங்கிலப்படம் பார்த்தேன். காரில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் அந்த கார் செய்யும் காரியங்கள் அசத்தலாக இருக்கும். சஸ்பென்சான படம். அப்படத்தின் நினைவு இக்கார்களைப் பார்த்ததும் எனக்கு வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்த படத்தைப் பார்த்தேன். நன்றாக இருந்தது. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 9. அட! இப்படியெல்லாமா!!!! நம்ம வண்டி நீல நிறம்தான். நேற்று மகளுக்கு வாங்கினதும் நீல நிறமே!

  இங்கே அனைவரும் சாலை விதிகளை அனுசரிப்பதால் பெருசாப் பிரச்சனை ஒன்னும் இருக்காது!

  ஆனாலும் பெருமாள் காப்பாற்றட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் துளசியம்மா,
   அபூர்வமாகத்தான் எனது வலைத்தளத்திற்கு வருகிறீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   வெளிநாடுகளில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக கடிபிடிக்கப் படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெருமாள் துணை இருக்கும் போது ஏன் கவலை.!

   நீக்கு
 10. வாஸ்து சாஸ்திரத்தை நம்புவதை விட ,இந்த ஆராய்ச்சியின் முடிவை தைரியமாய் நம்பலாம் :)

  பதிலளிநீக்கு
 11. கருப்பை பொதுவா சிலர் விரும்புவதில்லை சனிபகவானுக்கு பிடித்த கலர் என்று அதை அணிந்தால் பிரச்சனை வரும் என்று பயப்படுவார்கள். ஆனால் எனக்கு பிடிக்கும். ம்..ம் நிச்சயம் இந்த ஆராய்ச்சி சொல்வதை நாம் நம்பக் கூடியதாகவே உள்ளது.இனி வாங்கும் போது இக் காரணங்களை மனதில் கொண்டு வாங்குவேன். நன்றி உபயோகமான தகவல் நன்றி !தொடர வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 12. பல ஆண்டுகளுக்கு முன்னால் அம்பாசாடர் கார் கோலோச்சிக் கொண்டிருந்தபோது பெரும்பாலும் வெள்ளைக் கார்களே சாலையில் பவானி வந்தன. அதுவும் அமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியாளர் வரை அரசு இயந்திரம் வெண்ணிற காரையே பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போதோ பல வண்ணத்தில் கார்கள் வந்துவிட்டன. நீங்கள் தந்த தகவல்படி வெண்ணிற வண்ணம் கொண்ட கார்களில் விபத்து ஏற்படுவது குறைவு என்பது சரிதான் என எண்ணத்தோன்றுகிறது. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!
  த.ம.12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் முன்பு எல்லாமே வெள்ளை நிறக் கார்கள்தான். இப்போதுதான் விதவிதமான வண்ணங்களில் கார்கள் வருகின்றன.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

   நீக்கு
 13. நண்பரே,

  வித்தியாசமான அருமையான பதிவு. கார்களின் நிறங்கள் குறித்து எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. வெப்பப் பிரதேசங்களில் பொதுவாக வெள்ளை அல்லது பழுப்பேறிய நிறங்களில் அதிக கார்களைக் காணலாம். குளிர் பிரதேசங்களில் வித விதமான நிறங்கள் சாத்தியம். காரணம் நீங்கள் கூறியபடி வெப்பம்தான்.

  இது போன்ற பதிவுகளை எழுதும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 14. கருப்பு நிறம் உலகம் முழுவதும் விரும்பபடும் ஒரு வண்ணம் கார்களில் மட்டுமே தான், மனிதர்களில் அல்ல என்று நீங்க சொன்னது உண்மை தான். USA வில் கறுப்பர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...