Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

1945 ஆகஸ்ட் 6 காலை 8:15 - உலகின் முதல் அணுகுண்டு!


1945 ஆகஸ்ட் 6 காலை 8:15

இப்படியொரு கொடூரமான நாளை சந்திப்போம் என்று எந்தவொரு ஜப்பானியரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.ஆனாலும் அந்த கொடூரம் நடந்தது. 1945 ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 8.15 மணிக்கு உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட நரக அனுபவத்தை அந்த நகரம் பெற்றது. அந்த நகரத்தின் பெயர் ஹிரோஷிமா. அணுகுண்டை வீசிய நாடு அமேரிக்கா. அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய்.

'லிட்டில் பாய்' அணுகுண்டு போர் விமானத்தில் பொருத்துதல்
என்ன நடந்தது? என்று சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர்விட்டிருந்தார்கள். கணக்கில்லாதவர்கள் சட்டென்று ஊனமானார்கள். இன்னமும் கூட குழந்தைகள் அங்கு ஊனமாக பிறப்பதை மாற்றமுடியவில்லை. மிகப் பெரிய இந்த கொடூர நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களின் அனுபவங்களை ஒன்றாக திரட்டியுள்ளார் பேராசிரியர் அரடா ஒசர்டா என்பவர். அந்த தொகுப்பிலிருந்து சில பகுதிகள்...

கிய்கேர் சகசி 
(1945-ல் 6 வயதுக் குழந்தை)

"காதைப் பிளக்கும் அந்த ஓசை என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஒரு வயதான மனிதர் தாங்க முடியாத வேதனையோடு ஓலைமிட்டவரே ஓடிவந்தார். அணுகுண்டால் ஹிரோஷிமா நகரமே முற்றிலுமாக அளிக்கப்பட்டதாக கூறினார். அதைக் கேட்டதும் எனது பாட்டியால் வீட்டில் இருக்க முடியவில்லை. தலையில் அடித்தவாறு அழுதுகொண்டே ஹிரோஷிமாவை நோக்கி வேகமாக ஓடினாள்.


போன பாட்டி திரும்பி வரவில்லை. ஒரு வாரம் கழித்து வந்தாள்.

"அம்மா எங்கே?" என்றேன்.

"அவளை என் முதுகில் தூக்கி வந்திருக்கிறேன்." என்றாள் என் பாட்டி.

என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உற்சாகமாக கூச்சலிட்டேன்.

"அம்..மா..!"

கத்திக்கொண்டே என் பாட்டியின் பின்னால் சென்று பார்த்தேன்.

அம்மா இல்லை..!

ஒரு டிராவல் பேக் மட்டும் பாட்டியின் முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது.

"அம்மா எங்கே பாட்டி..?!"

நான் ஏமாற்றமடைந்தேன்.

எனது அக்காவும் பக்கத்து வீட்டுக்காரர்களும் வாய்விட்டு கதறி அழுதார்கள்.

"ஏன் அழுகிறார்கள்..?"

என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பாட்டி கண்ணீரோடு அந்தப் பையை கீழே வைத்தாள். அதில் இருந்து சில எலும்புகளை வெளியே எடுத்து எல்லோரிடமும் காட்டினாள். அதில் எனது அம்மாவின் தங்கப்பல்லும் அவருடைய கை எலும்புகளும் இருந்தன. எல்லோரும் குலுங்கி குலுங்கி கதறி அழுதார்கள்.

அப்போதும் என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை!"

கிமிகோ தகாய்
(1945-ல் 5 வயது சிறுமி)

அந்த நாளை நினைத்தால் இன்னமும் என் மனம் பதறுகிறது. அன்று நான் என் தோழி தாத்சுகோவுடன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது விமானம் ஒன்று பறந்து வரும் சத்தம் கேட்டது.

"ஏய்.. ஏரோப்ளேன்..!" கத்திக்கொண்டே பார்க்க வெளியே ஓடினேன்.


அந்த நொடியில் இடி இடித்து மின்னலடித்தது போல் ஒரு ஒளிவெள்ளம் தெரிந்தது. பயந்துபோன நான் பக்கத்து வீட்டுக்குள் ஓடிப்போய் என் தோழியின் அம்மா பின்னால் பதுங்கிக்கொண்டேன். அவரும் பயத்தில் நடுங்கிகொண்டிருந்தார். என்னை உதறி விட்டு தனது கணவனை கட்டிக்கொண்டார்.

நீளமான ஒரு துணியை எடுத்து தன் இடுப்பில் கட்டிக்கொண்டு தன் கணவருடன் வீட்டை விட்டு ஓடினார்.

எனக்கும் என் தோழிக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. வேகமாக வானில் இருள் பரவியது. வீட்டின் கூரை உடைந்து விழத் தொடங்கியது. கண்களில் மிரட்சியுடன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம்.

தாத்சுகோவின் பாட்டி அச்சத்துடன் கூவி அழைத்தார். அதனால் அவளும் என்னை விட்டு ஓடி விட்டாள். நான் தனித்து விடப்பட்டேன். எனக்கு அழுகை வந்தது அழத்தொடங்கினேன்.


அப்போது முகம் முழுவதும் புழுதி அப்பிய மற்றொரு பக்கத்து வீட்டுப்பெண், "அழாதே கிமிகோ! உங்க அம்மா இங்கேதான் இருக்கிறாள்." என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓடினாள். நான் மீண்டும் தனித்து விடப்பட்டேன்.

சிறிது தூரத்தில் "கிமிகோ! கிமிகோ!" என்று என் அக்கா என்னை கூப்பிடும் குரல் கேட்டது. என் அம்மாவும் வந்துவிட்டாள். நாங்கள் நேரத்தை வீணாக்காமல் பாதுகாப்பான இடத்தை தேடி ஓடினோம்.

பின் நடந்தோம். நிற்காமல் போய்க்கொண்டே இருந்தோம். வழியெங்கும் வயிறு உப்பிய வீரர்களின் உடல்கள் ஆற்றில் மிதப்பதைக் கண்டோம். அவர்கள் அணுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் விழுந்து உயிர் விட்டவர்கள். சாலையோரங்களில் ஏராளமான பிணங்கள் நிறைந்து கிடந்தன.

மற்றொரு இடத்தில் ஒரு பெண் மரத்தடியில் கால் சிக்கி, நகர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். யாரும் அவரைப் பற்றி கவலைப்படாமல் ஓடிக்கொண்டே இருந்தார்கள். எனது தந்தை கோபமாக கத்தினார்.

"இங்கே ஜப்பானியர் யாருமே இல்லையா? ஒரு பெண் போராடிக்கொண்டு இருக்கும்போது ஓடுகிறீர்களே!" என்றார். சிலர் உதவிக்கு வந்தனர். அந்தப் பெண்ணை மற்றவர்களுடன் சேர்ந்து என் தந்தை விடுவித்தார்.

மற்றோரிடத்தில் உடல் முழுக்க தீக்காயங்களுடன் ஒரு மனிதர் சாவின் விளிம்பில் நடந்து கொண்டிருப்பதை பார்த்தோம்.

என் அம்மா தன்னால் இனிமேல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது  என்று அங்கேயே உட்கார்ந்து விட்டார். தன்னை விட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிடுமாறு கூறினார். அப்படி விட்டு செல்ல அங்கு யாருக்கும் மனமில்லை.

அருகில் பிணங்கள் மிதந்துக் கொண்டிருந்த கலங்கிய ஆற்று நீரை எடுத்து அம்மாவுக்கு கொடுத்தோம். சிறிது நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் எங்களுடன் சேர்ந்து நடந்தார்.

நாங்கள் எங்கள் நகரத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். கிராமங்களில் நடந்து சென்றபோது விவசாயிகள் எங்களை திகைப்புடன் பார்த்தார்கள். என்ன நடந்தது? என்று கேட்டார்கள். பண்ணை வீடுகள் வழியே நடந்தபோது, அவர்கள் சோற்று உருண்டைகளை எங்களுக்கு தந்தார்கள்.

நாங்கள் எங்கள் உறவினர் வீட்டில் ஒரு மாதத்துக்கு மேல் தங்கினோம். நாங்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது எனது அம்மா முதுகில் காயம்பட்டு வலிப்பதாக சொன்னார். நான் பார்த்தபோது அம்மா முதுகில் ஒரு அங்குல அகலத்துக்கு ஒன்றரை அங்குல நீளம் உடைய ஒரு கண்ணாடித் துண்டு காயப்படுத்தியிருந்தது. எனது தம்பியை தனது முதுகில் தூக்கி நடந்ததால் அது ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது.


மறுநாள் எனது தந்தை எனது சகோதரியை தேடிச் சென்றார். ஹிரோஷிமா தபால் நிலையத்துக்கு அருகில்தான் குண்டு வீசப்பட்டது. அலறக்கூட நேரம் தராமல் அவள் கொல்லப்பட்டிருந்தாள். அந்த தபால் நிலையத்தில் பணிபுரிந்த ஒருவர் மட்டுமே பிழைத்திருந்தார். அவர் கொல்லப்பட்டவர்களின் சாம்பலை சேகரித்து அவரவர் வீடுகளில் கொடுத்துச் சென்றார். எனது அக்காவின் சாம்பலும் அதில் இருந்தது."

இப்படியாக உண்மைகள், உணர்வுகளை உறைய வைக்கிறது. இன்றைக்கு இருக்கும்  அணு ஆயுதங்களோடு ஒப்பிடும்போது ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட்ட லிட்டில் பாயும் பேட் மேனும் மிக மிக சிறியவை. இதிலாவது தப்பிப்பிழைத்தவர்கள் அனுபவத்தை சொன்னார்கள். ஆனால் இப்போது உள்ள சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் வீசப்பட்டால் அனுபவத்தை சொல்ல ஒரு ஆள் கூட மிஞ்சமாட்டார்கள் என்பதுதான் நம் முகத்தில் அறையும் உண்மை!!!

* * * * *


32 கருத்துகள்

  1. படிக்க படிக்க வேதனையாக இருந்தது நண்பரே மீண்டும் அந்த கருப்புநாளை நினைக்காமல் மறக்க முயல்வோம்.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை மறப்போம். அது தந்த அனுபவத்தை எப்போதும் மறக்கக் கூடாது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  2. நினைத்துப் பார்க்கவேண்டிய மறக்க வேண்டிய நாள்களில் இதுவும் ஒன்று. ஏனென்றால் நமக்கு பல பாடங்களைத் தந்தது இந்நாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அய்யா! நினைத்தால் தான் அதன் வீரியம் மறக்காமல் இருக்கும். வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. அணுகுண்டுவின் அபாயத்தை அறிந்தும் ஏன் ஒவ்வொரு நாடும் அதை தயாரிக்க முயற்சி எடுக்கின்றன என்பதுதான் புரியவில்லை. ஹிரோஷிமா - நாகசாகி க்கு ஏற்பட்டதுபோல் இனி எங்கும் நடக்கவேண்டாம் என வேண்டுவோம். தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தன்னை பலசாலி என்று நிரூபிக்கத்தான். அதனால் தான் இந்திய பாகிஸ்தான் பிரச்சனை என்றால் உலகம் உற்றுப் பார்க்கிறது. இரண்டுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள். யாரவது ஒருவர் எல்லை மீறினாலும். உலகமே பாதிக்கும்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  4. படங்களும் தகவல்களும் கண்ணீரை வரவழைக்கின்றன... இந்தக் கொடுமை இனி நடக்கவே கூடாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்கக்கூடாது. மீறி நடந்தால் பதிவெழுத நாமும் இருக்க மாட்டோம். வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. வேதனை தரும் நாள்.... பதவிக்காகவும், தனது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அன்னிய நாட்டு மனிதர்களை இப்படி அழிப்பது காட்டுமிராண்டித்தனம். இன்றைக்கு இதை விட அதிக சக்தியுள்ள அணுகுண்டுகள் கண்டுபிடித்து விட்டார்கள் என நினைக்கும் போதே வேதனை அதிகமாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதன் ஒரு சமூக மிருகம் என்று சொல்லுவார்கள். என்னதான் அவன் நாகரிகமாக இருந்தாலும் உள்ளுக்குள் அந்த மிருகம் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அது விழிக்கும் போதெல்லாம் இப்படி பாதிப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன.

      நீக்கு
  6. மனித நேயமே இல்லாதவர்களா இப்படியான மனித இனத்தையே அழிக்கும் அணுகுண்டுகளை தயாரிப்பவர்கள்....
    தொடர்ந்து படிக்க இயலாமல் என் கண்கள் கலங்கிவிட்டன.
    ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களும் மற்றவர்களுக்கு உதவமுடியாவிட்டாலும் இப்படியான செயல்களை செய்யாமல் இருந்தாலே போதும் என எண்ணத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைய கண்டுபிடிப்புகள் பலவும் எதிரிகளை அளிப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டன. மனிதனை எப்படி விதம் விதமாக கொல்லலாம் என்று ஹிட்லர் யூதர்களை வைத்து சோதனை செய்தார். ஒரு சாம்பிளுக்கு வேண்டுமானால் இந்த பதிவை படித்துப் பாருங்கள்.

      அனார்ச்சா : பெண்மையை சிதைத்து போட்ட ஆராய்ச்சி..!

      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  7. யுத்தத்தால் யாரும் யாரையும் வெல்வதில்லை. இது புரியாமல் அணுஆயுதங்களைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மற்றவர்களைப் பயம் காட்டும் நாட்டுத் தலைவர்கள் இருக்கும்வரை மனிதகுலத்திற்கு அபாயம்தான்.

    பதிலளிநீக்கு
  8. ஹிரோஷிமா நிகழ்வைப் படித்தால் மனம் வெதும்பிவிடும். மனிதர்களின் மண் ஆளும் ஆணவம். முழுவதும் வாசிக்க முடியாமல் திணறியது உண்டு...இதில் நீங்கள் சொல்லி இருப்பவையே மனதை நொறுக்கும் போது, இதைவிட சக்திவாய்ந்த அணுகுண்டுகள் இருக்கின்றன என்று எண்ணும் போது எந்த புற்றுக்குள் (நாட்டில்) என்ன "பாம்பு" இருக்கின்றதோ என்ற பயம் வரத்தான் செய்கின்றது....இல்லையா...ஹிரோஷிமா முழுவதும் வாசித்தால் நம் மனம் மரண பயத்தில் வருவது நிச்சயம்...

    கீதா: மகன் படித்த ஜப்பான் வரலாற்றில் இந்த நிகழ்வு மிகவும் விரிவாக இருந்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவன் படித்த அமெரிக்கப் பள்ளியில், ஜப்பானின் வரலாறு ஹிரோஷிமா பற்றியும்...அமெரிக்கா எறிந்தது என்று சொல்லி விட்டு அதில் எந்த வித ஜஸ்டிஃபிக்கேஷனும் கொடுக்காமல் மிகப் பெரியகொடுமை என்றும் சொல்லாமல் வரலாறு நிகழ்வாகச் சொல்லப்பட்டிருந்தது...ஆனால் விரிவாக....ஒரு குற்ற உணர்வு மறைந்திருந்தது போலவும் தோன்றியது...ஒரு வேளை தற்போதைய அரசியல் காரணங்களாக இருக்கலாம். எப்போதுமே அமெரிக்கா ஜப்பானைக் கொஞ்சம் பொறாமையாகப் பார்ப்பதாகத்தான் தெரிகின்றது அவர்களது உழைப்பை...மற்றுமொரு ஆச்சரியம்..அமெரிக்காவில் நிறைய ஜப்பானியர்களும் இருக்கின்றார்கள்..இரண்டாம் போருக்கு முன் குடியேறிய அமெரிக்க ஜப்பானியர்களைத் தவிர,,,,,போருக்குப் பின்னும் தங்கள் நாட்டின் இரு நகரங்களை அழித்த நாட்டில்...குடியேறி இருப்பதும் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது..அதை வாசித்த போது..

    இந்த அணுகுண்டுவின் ஈக்குவேஷனை எய்ன்ஸ்டின் நல்ல எண்ணத்துடன் கண்டுபிடித்திருந்தாலும், ஹிரோஷிமா தாக்குதலுக்குப் பின்னர் தனது மரணத்திற்கு முன் அவர் "நான் என் வாழ்க்கையில் மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன். ப்ரெசிடென்ட் ரூஸ்வெல்ட்டிடம் அணுகுண்டு தயாரிக்கலாம் என்று ஆதரவு அளித்துக் கடிதத்தில் கையொப்பம் இட்டது"

    என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றியே வருதியிருக்கின்றார்...

    இனியேனும் அணுகுண்டு வெடிக்காமல் இருந்தால் சரி..ஆனால் எல்லா வல்லரசுகளும் ...இதை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டுதான் இருக்கின்றன மறைமுகமாக...நம்மூரில் அவ்வப்பொது நடக்கும் தொடர் குண்டுவெடிப்பை மறக்க முடியுமா....சின்னதாக இருந்தால் என்ன பெரிதா இருந்தால் என்ன.....வல்லரசு என்று இதை வைத்துதான் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றார்கள்...பேராபத்துதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜப்பானும் சாதாரண நாடில்லை நண்பர்களே. ஜப்பான் ஆசியாவை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியில் அது தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் யுத்தம் செய்தது. அமெரிக்காவையும் வம்பிழுத்தது. பேர்ல் ஹார்பர் தாக்கப்பட்டது அமெரிக்காவிற்கு பெருத்த அவமானமாக போய்விட்டது. அதற்கு பதிலாகத்தான் லிட்டில் பாய் வீசப்பட்டது. அத்தோடு அதை நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஏதோ பலிக்குப் பலி என்று முடிந்திருக்கும். தன்னிடம் அணுகுண்டு இருக்கிறது என்பதற்காகவும் அதை சோதிக்க சரியான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்பதற்காகவும், இரண்டு நாள் கழித்து மீண்டும் நாகசாகியில் மற்றுமொரு குண்டு வீசியபோதுதான் இந்த பெரியண்ணனின் கொடூர குணம் உலகுக்கு தெரிய வந்தது.

      ஜப்பானியர்கள் அமெரிக்காவில் வசிப்பதேல்லாம் காலத்தின் கட்டாயம்!

      வருகைக்கும் வழக்கம் போல் விரிவான கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

      நீக்கு
    2. ஆம்! உண்மைதான் இதைப் பற்றி எழுத வந்து ஏற்கனவே உள்ளது பெரியதாகி விட்டதால் நிறுத்திவிட்டோம். இந்த வரலாறு எல்லாமே மகன் அங்கு 7 ஆம் வகுப்பு படித்த போது மகனின் சமூகப் பாடத்திட்டத்திலிருந்து அறிந்தவைதான்....அமெரிக்க வரலாறு, தென் கிழக்கு ஆசிய நாடுகள் வரலாறு, சீனா வரலாறு, ரஷ்யா வரலாறு என்று வந்தது....இந்தியவரலாறு அதில் இல்லை..

      தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே!

      கீதா

      நீக்கு
  9. படித்து பார்க்கையிலேயே மிகவும் வேதனையாக இருக்கிறது! அந்த நாள் உலகத்திற்கே ஓர் கறுப்பு நாள்!

    பதிலளிநீக்கு
  10. பதற வைக்கும் நிகழ்வு. இந்த சமயத்தில் எடுக்கப்பட்ட, ஓடிவரும் ஒரு சிறுமியின் புகைப்படம் உலகப் புகழ் பெற்றது, இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிர்வாணமாக ஓடிவரும் அந்த சிறுமியின் படம் இந்த குண்டு வெடிப்பில் எடுக்கப்பட்டதல்ல. வியட்நாம் போரில் அமெரிக்க வீசிய நேப்பாம் குண்டு அது. அந்த படம்தான் அந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  11. காலையில் படித்தபோதும் பின்னூட்டம் இட முடியவில்லை.
    இது குறித்து முன்பே அறிந்திருக்கிறேன் என்றாலும் உங்கள் எழுத்தில் வலிமிகுந்த துயரநாள் என் முன் வந்து போனது.

    த ம கூடுதல் 1

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவை சரியாக ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியிட வேண்டும் என்றிருந்தேன் சற்று தாமதமாகி விட்டது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  12. நண்பர் செந்தில்,

    ஹிரோஷிமா அழிவு பற்றிய பகீர் பதிவு. அந்தப் படங்கள் மனதைப் பிழிந்தன.

    இரண்டாம் உலகப் போர் மனித வரலாற்றில் ஏற்படுத்திய மகா அழிவை நியாயப் படுத்தவே முடியாது. ஹிட்லர் பெயரைச் சொல்லி ஐரோப்பா தனக்கே மரண அடி கொடுத்துக்கொண்டது. ஹிட்லரை வளர விட்டு (அமெரிக்கா நினைத்திருந்தால் ஹிட்லரை முதலிலேயே துவம்சம் செய்திருக்க முடியும். But they needed a scapegoat to continue the war and to check USSR.) அவன் ரஷ்யாவை என்ன செய்கிறான் என்று பார்த்துவிட்டு ஜப்பான் தங்களை தாக்கியதும் அமெரிக்கா போரில் வெறி கொண்டு குதித்தது. ஐரோப்பாவில் துவங்கிய இந்தப் போர் அங்கே 1945, மே 7 ஆம் நாளில் முடிந்தாலும் கிழக்கில் ஜப்பான் ஜெர்மனியைவிட அதிக குரோதத்துடன் போரை நடத்திக்கொண்டிருந்தது.

    போர் நீளும் அபாயம் ஒரு பக்கம். அப்படியான பட்சத்தில் ஏற்படக்கூடிய மனித இழப்புக்கள் இன்னொரு பக்கம், இது தவிர அமெரிக்கா தரை வழியாக ஜப்பானை தாக்க எண்ணம் கொண்டிருந்தது. அவர்கள் கொடுத்த அல்டிமேட்டம் பற்றி ஜப்பானியர்கள் அலட்டிக்கொள்ளவே இல்லை. உண்மையில் ஜப்பானியர்கள் மிகக் குரூரமானவர்கள். ஜப்பானிய அரசு பொதுமக்களை ஆயுதம் ஏந்தி உள்ளே வரும் அமெரிக்கர்களை கொல்ல கட்டளை இட்டிருந்தது. ஹிரோஷிமா அணு குண்டு நிகழ்வுக்கு முன்னே அமெரிக்க விமானங்கள் அந்த நகரில் ஏறக்குறைய 63 மில்லியன் துண்டுச் சீட்டுகளை வீசின. அதில் நிகழ இருக்கும் அபாயத்தை குறிப்பிட்டு மக்களை இடம் பெயர்ந்து போகச் சொல்லிய எச்சரிக்கை இருந்தது. ஆனால் ஜப்பானியர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதில் இந்தத் துண்டுச் சீட்டு வைத்திருந்தவர்களை அரசு கைது செய்த வேடிக்கை வேறு நடந்தது.

    போரை முடிவுக்கு கொண்டுவர இரண்டே வழிகள் தான் இருந்தன. ஒன்று தரை வழி தாக்குதல். அது 12 மில்லியன் அமெரிக்கர்களை பழிவாங்கும் கொடூர முடிவு. இரண்டு; அமெரிக்கா புதிதாக கண்டுபிடித்திருந்த அணு குண்டை பயன்படுத்தி போரை உடனே முடிப்பது. இதிலும் ஏகத்து மனித இழப்புக்கள் உண்டு. ஆனால் போர் நீண்டிருந்தால் இதைவிட அதிக உயிர் சேதத்திற்கு உத்திரவாதம் இருந்ததால், ஒரு வழியாக லிட்டில் பாய் என்ற முதல் அணு குண்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 1945 ஆகஸ்ட் ஆறாம் தேதி காலையில் ஹிரோஷிமா மக்கள் தங்களுக்கு மேலே இரண்டாவது சூரியனைக் கண்டார்கள். சூரிய ஒளியை வெல்லும் சக்தியுடன் ஆனால் சிறிது கூட சப்தமில்லாமல் விழுந்த முதல் அணு குண்டு ஒரு மிகப் பெரிய மரணக் கச்சேரியை நிகழ்த்தியது. உலகம் மறக்க முடியாத துயர தினம். காளான் மேகம் என்று வர்ணிக்கப்படும் அந்த பேரு வெடிப்புக்குப் பின்னும் ஜப்பான் அரசர் போரை நிறுத்தவில்லை என்பதுதான் இங்கே வியப்பு. நாகசாகிக்கும் அதே அழிவுக் கவிதை வாசிக்கப்படதும்தான் ஜப்பானிய அரசர் கீழிறங்கி வந்தார். போர் 1945 ஆகஸ்ட் 15 ஆம் நாள் முடிவு பெற்றதாக அறிவித்தார். செப்டெம்பர் 2இல் போர் முடிவுக்கான அதிகாரப்பூர்வ சம்பிரதாயங்கள் நடந்தன.

    போர் என்றாலே மரண ஓலம்தான். ஜெர்மனியை அமெரிக்காவும் ரஷ்யாவும் குதறியதைக் குறித்து நாம் கவலைபடுவதே இல்லை. ஹிட்லர்தானே ஆரம்பிச்சான் என்று அந்த அழிவை நியாயப்படுத்துகிறோம். ஜப்பானுக்கும் அதேதான். விட்டிருந்தால் நம் இந்தியாவே ஜப்பானியர்களின் கையில் சிக்கி சின்னா பின்னமாகி இருக்கும். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவதுதான் நடைமுறை உண்மை.

    உலகப் போரின் முடிவில் ரஷ்யா ஐரோப்பாவில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருந்தது.இதை தடுக்க அமெரிக்கா கைகொண்ட வியூகமே அணு குண்டு வீச்சு. ரொம்ப வாலாட்டாதே. இதே கதிதான் உனக்கும் என்ற எச்சரிக்கை கொண்ட செய்தி அது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் துவங்கியது இப்போதுதான்.

    பதிலளிநீக்கு
  13. மிக விரிவான பதிவு நண்பரே, பல அபூர்வ சரித்திர தகவல்களை தந்துள்ளீர்கள். ஜப்பான் சரணடைந்தது போரின் திருப்புமுனை நிகழ்வுதான். அதற்கான தெளிவான காரணங்களை அருமையாக சொல்லிவிட்டீர்கள். ஏராளமான தகவல்களுக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி காரிகன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரிகனின் விரிவான பின்னூட்டம் தான் மகனின் வகுப்பில் இருந்த ஒரு அமெரிக்கப் பையன் இந்த இரண்டாவது போரின் அமெரிக்காவை சப்போர்ட் செய்து தனது அசைன்மென்டில் எழுதியிருந்தான். அங்கு மாணவர்கள் இரு தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்க வேண்டும் அப்படித்தான் நடத்தப்படும். அப்படி வாதங்கள் செய்யப் பட்டபோது இவை எல்லாமே..

      காரிகன் அவர்கள் சொல்லிய இந்த வரிகள்...ஒரு ஜெர்மனியைச் சேர்ந்த பெண் தங்கள் நாட்டை எந்த நாடும் கண்டு கொள்ளவே இல்லை என்பதையும் முன் வைத்தாள்..அமெரிக்காவிற்கு எதிராக. இப்படி ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் வாதங்கள் ப்ரதிவாதங்கள் என்று உணர்ச்சி வசப்படாமல் வகுப்பை நடத்துவார்கள். நான் மகனுக்குச் சொல்லிய அதே வார்த்தைகளைத்தான் காரிகன் அவர்கள் சொல்லி இருப்பது...இந்தியா மட்டும் ஜப்பானிடம் சிக்கி இருந்தால் .....இன்று நாம் இப்படி இருந்திருக்க முடியாது என்பதுதான் அது....இவற்றை பெற்றோர் முன்னிலையிலும் நடத்தினார்கள்....சுவாரஸ்யமாக இருந்தது...மாணவர்கள் நிறைய வாசித்திருக்கின்றார்கள் என்று தெரிய வந்தது...

      மிக்க நன்றி காரிகண், நண்பர் செந்தில்

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி கீதா அவர்களே,

      இரண்டாம் உலகப் போர் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஹிட்லர்தான். அந்த அளவுக்கு அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டிஷ், நாடுகள் நம்மை மூளை சலவை செய்துவிட்டன.

      ஹிட்லர் கொடுங்கோலன்தான். ஆனால் அவனை விட அதிக அளவில் மக்களைக் கொன்ற ஸ்டாலின் (ரஷ்யா) மா சே துங் (சீனா) பற்றி நாம் பேசுவதேயில்லை. சொல்லப்போனால் ஹிட்லர் கூட தன் இன மக்களை தேவையில்லாமல் கொன்றதே கிடையாது. ஆனால் ஸ்டாலின் மா சே துங் இருவரும் தன் நாட்டு மக்களையே ஏகத்துக்கு கொன்ற தலைவர்கள். ஹிட்லர் தன் ஜெமானிய தேசம் உலகத்திலேயே முதலாக இருக்க வேண்டும் என்ற நாட்டுப்பற்று காரணமாகத்தான் இந்த அழிவைச் செய்தான். அவன் உயிரோடு இருந்தவரை ஜெர்மானிய மக்களுக்கு ஹிட்லர் செய்த அட்டூழியங்கள் தெரியவில்லை. அதன் பின்னர்தான் அவர்கள் ஹிட்லர் எத்தனை கொடூரமாக யூதர்களை பூண்டோடு அழித்தான் என்பதை அறிந்து அவனை வெறுத்தார்கள். இன்றுவரை ஜெர்மனியில் எந்த குழந்தைக்கும் இரண்டு பெயர்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. ஒன்று ஏசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ். இன்னொன்று ஹிட்லர்.

      ஹிட்லர் ஒரு கொடியவன்தான். ஆனால் அவனை மட்டுமே குற்றம் சொல்லிக்கொண்டு நாம் மற்ற கொடுங்கோலர்களை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதித்து வைத்திருக்கிறோம். உண்மையில் ஹிட்லர் ஒரு தீவிர சைவ உணவி. புகை பிடிக்காதவன். குடி என்ற எண்ணமே கொண்டிராதவன், பல பெண்களை அனுபவித்தவனல்ல. ஒரே பெண்ணை நேசித்தான், அவளையே திருமணம் செய்துகொண்டான். இருந்தும் ஹிட்லரை வைத்தே நவீன உலக சரித்திரம் தன்னை வடிவமைத்துக்கொள்கிறது. உலகப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்க ரஷ்ய நாடுகளின் பார்வைகளை வைத்தே நாம் ஹிட்லர் பற்றி எடை போடுகிறோம். வெற்றி பெற்றவன் சொல்வதே வரலாறு. பரிதாபம்.

      நீக்கு
    3. உண்மைதான் நண்பரே, நான் பள்ளியில் படிக்கும் போது ஏதோவொரு பத்திரிகையில் கருணாநிதியின் பேட்டியைப் பார்த்தேன். அதில் ஸ்டாலின் மீது இருக்கும் பற்றால்தான் என் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தேன் என்று சொல்லியிருந்தார். அப்போது அந்த பெயர்மீது பெரிய மதிப்பு ஏற்பட்டது. பின்னாளில் ஸ்டாலினைப் பற்றி படித்தபோது அதிர்ச்சியடைந்தேன். எப்படி மக்களைப் பற்றி கவலைப்படாத அவர்கள் உயிரை கொடிய வேலை மூலம் பறித்தவன் இவரைக் கவர்ந்தான் என்று புரியவில்லை. அதிலும் மகனுக்கு அந்தப் பெயரை வைக்கும் அளவுக்கு.

      கிட்டத்தட்ட இதே நிலைதான் மா சே துங். நண்பர் காரிகன் சொல்வது உண்மைதான். ஹிட்லரை மாய்ந்து மாய்ந்து குறை சொல்பவர்கள். இவர்களைப் பற்றி பெரிதாக சொல்லவில்லை. நான் படித்தபோதுதான் இவ்வளவும் தெரிந்தது. இவர்களைப் பற்றி தினம் ஒரு தகவலில் எழுதியபோது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. தங்கள் கருத்துக்கும். வருகைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
    4. ஆம் காரிகன், செந்தில் அவர்களே....ஸ்டாலின், மாசேதுங்க் எல்லாம் நான் பொருளாதாரம் படித்த போது அறிந்தது....என்னைப் பொருத்தவரை உலகத்தில் ஒரு சாரார் இவர்களைக் கொண்டாடலாம் ஆனால் என்னை பொருத்தவரை மனித உயிருக்கு மதிப்பு கொடுக்காத எந்தத் தலைவனும் நல்ல தலைவனல்ல....கொடுங்கோலன்

      கீதா

      நீக்கு
    5. சரியான கூற்று! மக்களைக் கொன்று ஒரு நாட்டை முன்னேற்றுபவன் எப்படி நல்ல தலைவனாக இருக்கமுடியும். மக்களைக் காப்பற்றுபவனே நல்ல தலைவன். நல்லவேளை நம் இந்திய நாட்டுக்கு இப்படி எந்த கொடுங்கோலனும் ஆட்சியாளனாக வரவில்லை.
      வருகைக்கு நன்றி கீதா மேம்!

      நீக்கு
  14. உலக வரலாற்றில் ஓர் கருப்பு நாள்
    வேதனைதான் நண்பரே
    குண்டினால் பாதிக்கப் பட்டவர்களுக்கும்,இறந்தவர்களுக்கும்
    உலக யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்
    என்றுமே பாதிப்பு என்பது பொது மக்களுக்குத்தானே
    கொடுமை நண்பரே கொடுமை
    இதுவே உலகில் வெடித்த கடைசி அணுகுண்டாக இருக்கட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவே கடைசி அணுகுண்டாக இருக்கட்டும்.
      தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை