Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

அதிர்ச்சியைக் கொடுத்த வலைப்பதிவர் சந்திப்பு..!


புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் நமது வலைப்பதிவர் சந்திப்பு, முத்து நிலவன் அய்யா அவர்களின் சீரிய திட்டமிடல் மூலம் நாளுக்குநாள் மெருகேறிக்கொண்டே வருகிறது. 20 குழுக்களின் அயராத உழைப்பில் அதன் பிரமாண்டம் கூடிக்கொண்டே போகிறது. நல்ல வழிகாட்டுதல் இருந்தால் எந்த நிகழ்வும் அற்புதமாக ஜொலிக்கும் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு.

இதுவரை நான் வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதில்லை. காரணம் நான் வலைப்பூ தொடங்கி இன்னும் ஒரு வருடம் கூட நிறைவு பெறவில்லை. அதனால்தான் நான் வசிக்கும் மதுரையில் கடந்த முறை நடந்தும் கூட எனக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை. விழா நடைபெறும் நாளில் நான் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தேன்.

'பதிவர் சந்திப்பு விழா' என்ற அறிவிப்பு வந்தவுடன் அது ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில் சில பதிவர்கள் ஒன்று கூடி, அளவளாவி விட்டு, ஒரு நேரம் உணவு உண்டு, களைந்து செல்லும் ஒரு நிகழ்வாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். அப்படியொரு சிறு நிகழ்வாக இருந்தாலும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் தீயாக வளர்ந்தது.

இதற்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்திருக்கிறார்கள் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. உடனே நண்பர் வலைஞானி திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு போன் செய்தேன். அவர் கட்டணம் எதுவும் இல்லை, இலவசம்தான். நண்பர்கள் கொடுக்கும் நன்கொடையை ஏற்றுக்கொள்வார்கள். என்றபோது என்னுள் உருவான அதிர்ச்சி அதிர்வுக்கு அளவேயில்லை.

இலவசமாக அதுவும் வெறும் நன்கொடையை நம்பி ஒரு விழாவை நடத்தமுடியுமா! என்ற எனது ஆச்சரியம் வலைப்பதிவர்களின் தாராள நன்கொடையால் உடைந்து போனது. முதல் அதிர்ச்சிக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்தது.

அதற்குள் அடுத்த அதிர்ச்சி வலைப்பதிவர் கையேடு. அதுவும் இலவசமாக..! என்ன நடக்கிறது இங்கே? என்று சுதாரித்து எழுவதற்குள் அடுத்த அதிர்ச்சி மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் பரிசு ரூ.50,000 என்று. ஒரு வலைப்பதிவர் சந்திப்பு இத்தனை பிரமாண்டமாக இருக்குமா என்ற எனது வியப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஆனால், அடுத்த அதிர்ச்சி அழைப்பிதழ் ரூபத்தில் வந்துவிட்டது. ஒவ்வொரு துறையிலும் கோலோச்சும் பெரும் ஜாம்பவான்கள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகிறார்கள் என்பதை பார்த்தபோது மனம் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறது.

இப்போதெல்லாம் நான் என் மனதிடம் சொல்லிக்கொள்வது "மனமே, எதற்கும் தயாராகவே இரு! இத்தோடு அதிர்ச்சி முடிந்துவிட்டது என்று நிம்மதி கொள்ளாதே. அடுத்த அதிர்ச்சி நாளைக்கே கூட வரலாம். தயாராய் இரு!" என்பதுதான்.

விழா முடிவதற்குள் இன்னும் எத்தனை எத்தனை அதிர்ச்சியை கொடுக்கப்போகிறாரோ முத்து நிலவன் அய்யா!

இரவு பகல் பாராது உழைக்கும் விழாக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார்

                                            * * * * *

புதுக்கோட்டை விழாக்குழுவினர் சார்பாக நமது வலைப்பதிவர் இல்ல விழாவிற்கு இந்த அழைப்பிதழ் வழியாக அனைவரையும் அழைக்கிறேன்.
              வாருங்கள்! விழாவில் சந்திப்போம்!



முதலில் ஈரோட்டில் சிறிய அளவில் தொடங்கிய தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு, சென்னையில் இரண்டுமுறை (2012,2013) நடந்தபின்னரே உலகறியத் தொடங்கியது. நான் 2013இல் சென்னையில் கலந்து கொண்டு வந்தேன்...  
புதுக்கோட்டையில் எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் வழிகாட்டுதலில் “கணினித் தமிழ்ச்சங்கம்“ உருவானது. அதன் வழியே தமிழாசிரியர் நண்பர்களின் ஒத்துழைப்போடு,  இருமுறை “வலைப் பதிவர்களுக்கான இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்” நடத்தினோம். அதில் சுமார் 50பேர் “வலை“யில் சிக்கினார்கள்! இது ஓர் இன்ப வலையானது!
மதுரையில் கடந்த ஆண்டு நடந்தபோது, ரூ.2,000 நன்கொடை தந்ததோடு, புதுக்கோட்டையிலிருந்து சுமார் 25பேர் சென்று கலந்துகொண்டு வந்தோம்.


இப்போது புதுக்கோட்டையிலேயே...
சென்னையில், “புலவர்குரல்“அய்யா இராமாநுசம் அவர்கள் தலைமையில் நண்பர்கள் மதுமதி, தி.ந.முரளி, சென்னைப்பித்தன், கவியாழி உள்ளிட்ட பலப்பல நண்பர்களின் ஒத்துழைப்பிலும் சிறப்பாக நடந்தேறியது...
மதுரையில், அய்யா சீனா அவர்களின் தலைமையில் ரமணி, தமிழ்வாசி உள்ளிட்ட பல நண்பர்களின் உழைப்பிலும் சிறப்பாக நடந்த விழா இப்போது புதுக்கோட்டையில் “கணினித் தமிழ்சங்க“ நண்பர்களின் கூட்டு உழைப்பில் தயாராகி வருகிறது... ஒரு பெரும் பட்டாளமே உழைத்துக்கொண்டுள்ளது!

இதோ அழைப்பிதழ்!
உலகறிந்த தமிழ் எழுத்தாளர், இன்றும் சலிக்காமல் லட்சக்கணக்கான வாசகர் திரளோடு அடிக்கடி வலைப்பக்கத்திலும் எழுதி வருகிற எழுத்தாளர் எஸ்.ரா.அவர்கள் வருகிறார்கள்!
உலகம் முழுவதும் தேடுபொறியில் கோடிக்கணக்கானோர் தினமும் தேடும் கட்டற்ற தகவல் களஞ்சியமான “விக்கிமீடியா“வின் இந்தியத் திட்ட இயக்குநர் திருமிகு அ.இரவிசங்கர் அவர்கள் வருகிறார்கள்...(இவர்களின் சொந்த ஊர் புதுக்கோட்டை என்பதும் குறிப்பிடத் தக்கது)

புதுக்கோட்டையில் பயின்று, பலகாலம் பணியாற்றி, தற்போது காரைக்குடிஅழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குப் பெருமை சேர்த்து வரும் முனைவர் சொ.சுப்பையா அவர்கள் வருகிறார்கள்...
முதன்முறையாக, தமிழ்ப் பதிவர்களோடு இணைந்து, ரூ.50,000 ரொக்கப் பரிசும் அறிவித்து மகிழ்வித்திருக்கும் தமிழ்இணையக் கல்விக கழகத்தின் இணைஇயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள் வருகிறார்கள்...

எங்களையெல்லாம் “வலை“யில் வீழ்த்தி, தமிழ் இணையப் பயிற்சிக்கும் தூண்டி, கல்வி-இலக்கியம்-தொழில்நுட்பம்-தலைமைப் பண்பு-மனிதப்பண்பு எனப் பலப்பல துறைகளில் எங்களுக்குத் தன் செயல்களால் பயிற்சி தந்தவர், தற்போது கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணிமாறுதல் பெற்றுச் சென்றாலும், இதயத்தால் எங்களுடனே எப்போதும் இருக்கும் எங்களய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் வருகிறார்கள்...

இவர்களொடு, த.இ.க. தொடர்பு நமக்குக் கிடைக்கக் காரணமான இளைஞர், கணினித்துறையில் ஆற்றலும் அனுபவமும் தொடர்ஆர்வமும் கொண்ட நம் நண்பர் நீச்சல்காரன் அவர்கள் வருகிறார்கள்..
காலை 8.30 மணிக்கு – கவிதை-ஓவியக் காட்சி திறப்புடன் தொடங்கி, மாலையில் இன்ப அதிர்ச்சியாக வரப்போகும் சில முக்கியமான நண்பர்களின் வரவு வரை தொடர் நிகழ்ச்சிகள்...5மணிக்கு விழா நிறைவடையும்.

பதிவர் அறிமுகம்- தமிழிசைப்பாடல்கள்- புத்தக வெளியீடுகள்- பதிவர் நூல் காட்சி மற்றும் விற்பனை- சிறப்புரைகள்- போட்டிகளில் வெற்றி பெற்ற பதிவர்களுக்கு ரொக்கப்பரிசும் சான்றுகளும் வழங்கல்- தமிழ் வலைப்பதிவர் கையேடு வெளியீடு-என நிகழ்ச்சிகள் 5மணிவரை தொய்வின்றித் தொடரும்..!

இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் சுமார் 350பேர் வருவார்கள் என்னும் எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு நிகழ்வு-பணிகளுக்கும் ஒரு குழுவென 20குழுவைச் சேர்ந்த சுமார் 50பேர் இதற்கெனக் கடந்த ஒருமாதமாக உழைத்து வருகிறார்கள்..

தாங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழ்வலைப்பதிவர் பயனுறவும் அதன்வழியே கணினித் தமிழ் வளரவும், முகம்தெரியாத முகநூலில் சிக்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர் வலைப்பக்கம் திரும்பவும் உதவ வேண்டும்!

வாசலில் நின்று வரவேற்கக் காத்திருக்கிறோம்.. வருக!
இணையத் தமிழால் இணைவோம்... வருக! வருக!!
தங்கள் வருகை எங்கள் உவகை!... வருக! வருக!! வருக!!! என
விழாக்குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்....!

அன்பில் மகிழ்ந்து, ஆதரவால் நெகிழ்ந்து-
கூப்பிய கைகளுடன் தங்ளுக்காகக் காத்திருக்கிறோம்!
இவண், நா.முத்துநிலவன்,

ஒருங்கிணைப்பாளர் - வலைப்பதிவர் திருவிழா-2015,
மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை.
செல்பேசி – 94431 93293.
மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com
விழாவுக்கான வலைப்பக்கம் –  http://bloggersmeet2015.blogspot.com
விழாத் தொடர்பான மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com
பி.கு. - விழாவில், அதுவரை முகமறியாத நட்புக் கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவர்களை ஓரிடத்தில் சந்திப்பதைவிட வேறென்ன மகிழ்ச்சி?


----------------------------------------------------------------- 
நண்பர்களுக்கு வேண்டுகோள்!
இதைப் படிக்கும் 
நமது வலைநண்பர்கள்
இந்த அழைப்பிதழை
தம்வீட்டு நிகழ்வாக எண்ணி,
தமது வலைப்பக்கத்தில் 
அன்போடு பகிர்ந்து
அனைவரையும் அழைக்க வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------- 

36 கருத்துகள்

  1. ஆமாம் நண்பரை! எனக்கும் இன்ப அதிர்ச்சிதான்! நானும் வலைதளம் ஆரம்பித்து 90நாட்கள் தான் ஆகிறது! முகம் தெரிய நட்புகளை பார்க்க மிக மிக ஆவலாக வருகிறேன்

    பதிலளிநீக்கு
  2. அழகாக விவரித்துள்ளீர்கள் நண்பரே வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே,
      விமானம் ஏறி வாருங்கள் சந்திப்போம்!

      நீக்கு
  3. நினைத்ததை அப்படியே சொல்லிச்சென்ற விதம் கவர்ந்தது. வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  4. மிக மிக சுவாரஸ்யமாக
    அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி
    பதிவிட்ட விதம் அருமை
    விழாவில் சந்திப்போம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    அன்பான அழைப்போடு கூடிய அருமையாக நீண்ட விளக்கங்களுடன் வரவேற்று மகிழ்ந்தது கண்டு மிகவும் மகிழ்ச்சி.
    நன்றி.
    த.ம.3

    பதிலளிநீக்கு
  6. நண்பருக்கு நன்றி. அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அருமையாக, நீரோட்டம் போல்,,,,அருமை சகோ,
    பார்ப்போம்,, நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அழகான பதிவு நண்பரே! தெளிவாக...சந்திப்போம் புதுகையில்..நாங்களும் இதுதான் முதல் முறை. சென்ற முறை மதுரையில் சந்திக்க நினைத்துப் பதிந்து, இறுதியில் இயலாமல் போய்விட்டது. இம்முறை அவ்வாறு நிகழாது என்ற நம்பிக்கையில் இருவரும் வருகின்றோம்....சந்திப்போம் !! மகிழ்வாய் ஆவலுடன் காத்திருக்கின்றோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  9. ஆம் நண்பரே... இன்ப அதிர்ச்சிகள் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். வலைப்பதிவர் திருவிழா சென்று வந்த பின் அந்த அனுபவத்தையும் விரிவாக எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்ப்போம், நண்பரே,
      தங்களால் விழாவிற்கு வர முடியுமா, வந்தால் சந்திப்போம்.

      நீக்கு
    2. எவ்வளவோ முயற்சித்தும் விழாவிற்கு வரமுடியவில்லை. தங்கள் அலைபேசி எண்ணை thubairaja@gmail.com என்ற முகவரிக்கு தனி மடலிடுங்கள். அழைக்கிறேன். நன்றி.வணக்கம்.

      நீக்கு
    3. தங்களின் மின்னஞ்சல் முகவரியில் என்னுடைய தொடர்பு எண்ணை கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது அழையுங்கள்!

      நீக்கு
  10. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே!
      விழாவில் சந்திப்போம்!

      நீக்கு
  11. வாழ்த்துகள் செந்தில்குமார். விழா சிறக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழா சிறப்பாக நடைபெறும்.
      விழாவில் சந்திப்போம்!

      நீக்கு
  12. விழாவிற்காகப் பாடுபடுபவர்களை உளத்தில் நினைவுகொண்டு
    அழைத்த விதம் அருமை சகோதரரே!

    விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களோடு விழா சிறப்புற நடைபெறும். நன்றிகள்!

      நீக்கு
  13. அன்பான அழைப்புக்கு நன்றி. விழாவில் சந்திப்போம் சகோதரர். மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  14. நன்றி நண்பரே.
    தங்களை விழாவில் காண ஆவலாக இருக்கிறோம். பதிவு அழைப்புக்கும் நன்றி. இன்றைய எனது பதிவில் இட்டிருக்கும், லோகோ பற்றிய தங்கள் கருத்தறிய ஆவல். நா.மு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருத்தமான லோகோ. நன்றாக உள்ளது. விழாவில் சந்திப்போம் அய்யா!

      நீக்கு
  15. அருமையான அழைப்பு.விழாசிறப்பாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை