திங்கள், அக்டோபர் 05, 2015

கை துடைக்க நியூஸ் பேப்பர் வேண்டாமே!


செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான 'நியூஸ் பேப்பர்' என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள் செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே! ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்துகள் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். 

அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவியப் பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது.


எப்படி என்கிறீர்களா? செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சனையும் இல்லை. தண்ணீர்ப் பட்டால், பிரச்சனைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜிப் போன்ற எண்ணெய்ப் பலகாரங்களில் உள்ள எண்ணையை வெளியே எடுப்பதற்கு செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். . 

காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். இப்படி கெடுதல் விளைவிக்கும் சிலப் பொருட்கள் உடலுக்குள் சென்றால் காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். 

நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு இவைகள் வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சிசெய்தது ஈயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்களும் அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவைகள் கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். 

முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது. இப்போது பெட்ரோலில் காரீயம் கலக்கப்படுவதில்லை. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான். அதனால்தான் மேகி நூடுல்ஸ்க்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தது. தடை செய்யப்பட்டது.35 கருத்துகள்:

 1. தகவலுக்கு நன்றி நண்பரே இனிமேல் வடையே திங்க மாட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னல் வேகத்தில் கருத்துரை இட்டு, வடை சாப்பிடா சபதம் எடுத்த கில்லர்ஜிக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 2. நானும் இனிமேல் நியுஸ்பேப்பரில் கொடுக்கும் பலகாரகங்களை சாப்பிட இல்லை நினைத்துகூட பார்க்கமாட்டேன்! நல்ல தகவலுக்கு நன்றூ நண்பரே!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் நண்பரே!

  பதிவுகளைத் தொடர்ந்தாலும் பின்னூட்டம் இடமுடியாப் பணிச்சூழல்.
  பொறுத்தருள்க.

  சிறு பதிவென்றாலும் கருத்தாழமும் சமூகத் தேவையும் உள்ள பதிவு.

  பூச்சிக் கொல்லிகள், செயற்கை உரங்கள் வழியாகவும் இக்காரீயம் நம் உடலில் அதிகம் கலக்கிறது எனப் படித்திருக்கிறேன்.
  நாமறியாமல் நம் உணவும் நம்மைச் சுற்றியுள்ளவையும் நஞ்சாகின்றன.

  விழிப்புணர்வுப் பதிவு அருமை

  த ம கூடுதல் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இதே நிலைதான். நண்பர்களின் பதிவுகளை படித்துவிடுவேன். ஆனால், பின்னூட்டம் இடுவதில்லை. நேரம் கிடைக்கும்போது மொத்தமாக கருத்திட்டுவிடுவேன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தங்களின் கருத்து புது தெம்பைக்கொடுத்திருக்கிரது.
   நன்றி நண்பரே!

   நீக்கு
 4. அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே
  நாம் அன்றாடம் சர்வசாதாரணமாகச் செய்யும் செயல்களின்
  பின் விளைவுகளை உணர்வதில்லை
  நன்றி நண்பரே
  நினைவில் கொள்வேன்
  தம =1

  பதிலளிநீக்கு
 5. நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு. பல இடங்களில் பேப்பர்களில் வைத்து தான் இவை வழங்கப்படுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக. அதுவும் தெருவோரக் கடைகள், சிறிய ஹோட்டல்களில் இதை கட்டாயம் பார்க்கலாம்.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 6. காரியத்தின் கொடுமையை பேரீயம் பூசிய நிகழ்வுகளையும் சொல்லி விழிப்புணர்வு ஊட்டியமைக்கு நன்றி நண்பரே!
  இதுபோன்ற பதிவுகளை படித்தாவது ஒரு சிலர் திருந்தினால் அதுவே பதிவின் வெற்றி!அந்த வெற்றி அதிபர் நீவீரே நண்பரே!
  நன்றி!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக. ஒரு சிலராவது கடைப்பிடிப்பார்கள் என்று நம்புவோம்.
   நன்றி நண்பரே!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வடை மட்டுமல்ல. பேப்பரில் உள்ள காரீயமும் போனால் நல்லது.

   நீக்கு
 8. இது போன்ற பதிவுகள் இன்று நாட்டுக்குப் தேவை! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. நாம் செய்யும் சிறு தவறினால் எத்தனை பெரிய ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதை தெளிவாகச் சொன்னீர்கள். அனைவருக்கும் இச்செய்தியை பகிர வேண்டும். நன்றிங்க சகோ.

  பதிலளிநீக்கு
 10. ஆபத்தான, நாம் அனைவரும் தெரிந்து செய்கின்ற, ஒரு தவறைத் திருத்திக் கொள்ளும் வகையில் பகிர்ந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 11. ஆம். நல்ல பகிர்வு. எனக்கு வாட்ஸப்பில் வந்தது.

  பதிலளிநீக்கு
 12. ஆஹா... அதிர்ச்சியான விஷயம் தான்...

  அன்றாட வாழ்வில் அனைவரும் அறியாமல் செய்யும் பிழையை விளக்கமாக உரைத்தமைக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்...

  பதிலளிநீக்கு
 13. உபயோகமான தகவல் . இதை தங்களது தினம் ஒரு தகவலில் படித்ததாக நினைவு. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், தினம் ஒரு தகவலில் எழுதியதுதான். வருகைக்கு நன்றி அய்யா!

   நீக்கு
 14. சிறந்த உளநல வழிகாட்டல்
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 15. பல இடங்களிலும் தமிழ்நாட்டிலும் சரி தமிழ்நாட்டை விட கேரளத்தில் பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணைப்பண்டங்கள் பலவும் செய்தித்தாளில் தான் கொடுக்கின்றார்கள்.
  நாங்கள் செய்தித்தாளில் வாங்குவதில்லை. அது போன்று பல வீடுகளிலும் சப்பாத்தி தேய்த்து அதைச் செய்தித்தாளில் போட்டு வைப்பார்கள். நான் அவர்களிடம் போடாதீர்கள் என்று சொன்னாலும் பயன் இல்லை.

  7 வருடங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் இருக்கும் போது ஒரு கல்லூரி மாணவன் திடீரென்று இறந்து போனான். என்னவென்று போஸ்ட்மார்ட்டம் செய்ததில் இந்த விஷம் கலந்துள்ளது தெரிந்தது. அவன் தினமும் செய்தித்தாளில் சுற்றித் தரப்படும் பஜ்ஜியைச் சாப்பிட்டது தெரிய வந்தது.

  எனக்கு சிறு வயதிலிருந்தே இது அறிய நேர்ந்தது எனது வீட்டுப் பெரியோர்கள் மிக மிக ஆச்சாரமானவர்கள். செய்தித்தாள் போன்றவற்றை வீட்டு வரவேற்பரையைத் தாண்டி உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பாக சமையலறையில். அப்போது எனக்கு அவர்கள் சொல்லிய காரணம் செய்தித்தாள் "மடி" யானது இல்லை. அது தீட்டு என்று. நானோ அவர்களுக்கு எதிரானவள். புரியாத நிலை. பின்னர் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வந்த போது அறிவியலில் அறிந்ததும் தான் தெரிந்தது வீட்டில் அவர்கள் தங்கள் சாதி சார்ந்த விஷயமாகச் சொன்னாலும் அதில் அறிவியல் காரணமும் உள்ளது என்று...நான் பல உணவுக் கடைகளிலும் பல வருடமாகச் சொல்லி வந்து கொண்டிருக்கின்றேன்.

  நல்லதொரு விழிப்புணர்வு நண்பரே! நிச்சயம் பலரும் தெரிந்து கொள்ள வேண்டும்/..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னூட்டத்தில் கீதா என்று இட மறந்துவிட்டேன்.நண்பரே!

   நீக்கு
  2. அதிர்ச்சியான தகவலோடு விரிவான கருத்துரை இட்ட கீதா மேடத்திற்கு நன்றி!

   நீக்கு
 16. சின்ன விஷயம்தான். ஆனால் எவ்வளவு பெரிய ஆபத்தை உருவாக்குது அழகா சொல்லியிருக்ககீங்க. இனிமே செய்திதாள் படிச்ச உடனே கூட கைகளை நல்லா கழுவிட்டுதான் சாப்பிடணும்.
  பதிவிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...