செவ்வாய், நவம்பர் 24, 2015

48 வருடங்களாக 48 லட்சம் கி.மீ. தொடர்ந்து கார் ஓட்டுபவர்


துரையிலிருந்து சென்னை வரை காரை ஓட்டி திரும்பிவந்தாலே நமக்கெல்லாம் நாக்கு தள்ளிவிடுகிறது. இங்கே ஒரு மனுஷன் விடாம 48 வருஷமா தொடர்ந்து கார் ஓட்டுகிறார். 

தனது 'வால்வோ'வுடன் இர்வ் கோர்டன்
பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம்தான். அதிலும் தனக்கு சொந்தமான காரில் தானே ஓட்டிச் செல்வது அற்புதமான அனுபவம். இப்படி தனது 'வால்வோ' காரில் உலகையே சுற்றி வந்திருக்கிறார் ஒருவர். அவர் பெயர் இர்வ் கோர்டன். நியூயார்க் நகரைச் சேர்ந்த '75 வயது இளைஞர்'. 

வால்வோ கார்களின் அறிவிக்கப்படாத விளம்பர தூதுவர் இவர். தனது 1966 மாடல் காரில் தான் எல்லா பயணத்தையும் நடத்தி வருகிறார். இதுவரை இவர் பயணம் செய்து கடந்த தூரம் கொஞ்சம்தான். அதாவது 48 லட்சம் கி.மீ.கள். 


கடந்த 48 வருடங்களாக விடாமல் இந்த காரை ஓட்டும் கோர்டன், வாரம் ஒரு முறை 10 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கி காரை கூர்ந்து பார்த்து அதிலுள்ள பிரச்சனைகளை தெரிந்து கொள்கிறார். "இன்னும் பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடுவதற்கும் என் வால்வோ ரெடி. ஆனால், எனக்கு தான் வயதாகிவிட்டது." என்று கூலாக சொல்கிறார். 

தனது 45 லட்சம் கிலோ மீட்டர் சாதனைக்காக கோர்டன் தேர்ந்தெடுத்தது, அலாஸ்கா. அவர் உலகில் போகாத இடமாக அலாஸ்கா மட்டுமே இருந்தது. அதனால், அவர் தனது முதல் பயணத்தை அங்கிருந்தே தொடங்கினார். 


இதுவரை 18 நாடுகளில் தனது காரை ஒட்டியுள்ள கோர்டன், தனக்கு மிகவும் பிடித்த நாடாக ஸ்வீடனை சொல்கிறார். 20 லட்சம் மைல்களை கடந்த போதே கொர்டனின் பெயர் கின்னஸ்சில் பதிவாகிவிட்டது. அப்போதே வால்வோ நிறுவனமும் தன் பங்குக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் காரை கோர்டனுக்கு பரிசளித்து பெருமைபடுத்தியது. 

இப்போது வரை கோர்டன் தனது காரில் கடந்துள்ள தூரம் உலகத்தை 120 முறை சுற்றி வருவதற்கு சமமான தூரம். இதைப் பற்றி கோர்டனிடம்  கேட்டால், "எவ்வளவு தூரம் கடந்திருக்கிறேன் என்பது முக்கியமல்ல. 
ஒவ்வொரு பயணமும் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன என்பதுதான் முக்கியம். என் வால்வோ எனக்கு வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுத்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரமும் கற்க வேண்டிய பாடமும் நிறைய இருக்கிறது" என்கிறார். 


பயணம் எப்போதும் அப்படிதான், நமக்கு புது புதுப் பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
22 கருத்துகள்:

 1. 75 வயது இளைஞர்...காணிநிலம் வேண்டும் போல். ஒரு கார் போதும் என வாழ்வார் போலும்...நல்ல அறிமுகம்..

  பதிலளிநீக்கு
 2. பயணம் என்றுமே சுகமானதுதான். வெங்கட் நாகராஜைக் கேளுங்கள், சொல்வார்!

  :))))

  தம +1

  பதிலளிநீக்கு
 3. சாதனைக்கு வயது ஒரு தடையல்ல. தொடர்ந்து பல வருடங்களாக ஓட்டுகிறார் என்பது வியப்பே. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. இவர் தான் உண்மையில் உலகம் சுற்றும் ‘வாலிபர்’! தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. ஆஹா! பயணம்...மிகவும் பிடித்த ஒன்று. பயனம் என்றாலே சுகம் தான்...வெங்கட்ஜி நினைவுக்கு வருவார். துளசிகோபால் சகோ நினைவுக்கு வருவார்.

  கீதா: சமீபகாலமாகத்தான் பயணங்கள் கடமைக்காக என்று ஆகிப் போயிற்று. சுற்றுவது என்று மகன் இப்போது பிசியாகிப் போனதால் இல்லாமல் ஆயிற்று. அவன் செட்டிலாகி கொஞ்சம் விட்டமின் எம் மும் சேர்ந்ததும் மீண்டும் தொடங்கலாம் என்று சொல்லியிருக்கின்றான். பார்ப்போம்...

  இந்த மனிதர் கொஞ்சம் பொறாமை கொள்ள வைக்கின்றார்.ஹ்ஹஹ் அது சரி எப்படி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் சென்றார்...விசா பற்றி அல்ல...இடையில் 10னிமிடம் தான் வாரத்தில் எடுத்துக் கொள்கின்றார் எனும் போது எப்படி அலாஸ்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்தார்....

  புதியதொரு தகவலைத் தந்தமைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 6. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்தான் எனது நண்பர் திருவாளர். இர்வ் கோர்டன் எனது நண்பரைப் பற்றி விடயம் தந்தமைக்கு நன்றி நண்பரே...
  தமிழ் மணம் 6
  நலம்தானே.... ? எனது பெயர் கில்லர்ஜி ஞாபகம் இருக்கின்றதா ?

  பதிலளிநீக்கு
 7. உண்மையான பத்து என்றதுக்குள்ள இவர்தான்... பாண்ட்............ஜேம்ஸ் பாண்ட்

  பதிலளிநீக்கு
 8. தன்னம்பிக்கை கூட்டும் சாதனை மனிதர்.. பகிர்வுக்கு நன்றி செந்தில்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...