Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மதுரையைப் பற்றி யாரும் சொல்லாத கதை


(இந்தக் கட்டுரை 2011-ல் எழுத்தாளர் சு.வெங்கடேசன் 'காவல் கோட்டம்' படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றபோது அவரை பேட்டிக் கண்டு எழுதியது. இனி கட்டுரை..)


அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் போல்தான் இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் சாகித்ய அகாடமி விருது என்ற கருத்து படைப்பாளிகள் மத்தியில் எப்போதும் இருக்கிறது. அது ஓரளவு உண்மையும்கூட.. இளம் வயதில் இந்த விருது பெற பாக்கியம் செய்திருக்க வேண்டும். அந்த பாக்கியம் ஜெயகாந்தனுக்கு இருந்தது. அதற்கடுத்து சு.வெங்கடேசனுக்கு வாய்த்திருக்கிறது. 1973-ல் ஜெயகாந்தன் சாகித்ய அகாடமி விருது பெறும்போது அவருக்கு வயது 38. 2011-ல் வெங்கடேசனுக்கு வயது 41.

சு.வெங்கடேசன்
எப்போதும் ஒரு சரித்திர நாவல் என்பது குறிப்பிட்ட எல்லைக்குள்ளே நின்றுவிடும். பெரும்பாலான படைப்புகள் ஒரு தனி மனிதனின் வீரத்தையோ, அல்லது அரச குடும்பத்தை மையமாக வைத்தோ படைக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், உயிர்ப்போடு இருக்கும் ஒரு நகரை நாவலாக படைத்திருப்பது ஆச்சரியப்படுத்தும் புதுமை. வரவேற்பும் எதிர்மறை விமர்சனங்களும் பெரும் சூறாவளியாய் சுழன்றுக் கொண்டிருக்க.. குளிர் வாட்டியெடுக்கும் மழைக்கால மாலைப் பொழுதில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனை சந்தித்தேன். இந்த சரித்திர படைப்புக்காக தான் பட்டபாடுகளை பகிர்ந்து கொண்டார். இனி அவரது வார்த்தைகளில்..

"இந்த நாவலை நான் எழுத தொடங்கியபோது என் மகள் கைக்குழந்தை. எழுதி முடித்து வெளியே வந்தபோது அவள் என் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறாள். பத்து வருடங்கள் போனது தெரியவில்லை. ஒரு நாவலுக்காக 10 வருடங்கள் உழைத்திருப்பது அதிகமாக தெரிந்தாலும், அந்த உழைப்பு மனநிறைவை தந்திருக்கிறது. அதற்கு பரிசாக சாகித்ய அகாடமி விருது கிடைந்த்தது என் வாழ்நாள் சாதனை. 

மதுரை 2,500 வருடங்கள் பழமையான நகரம். உலகில் வேறு எங்கும் இவ்வளவு பழமையான நகரம் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு நகரங்கள்கூட அழிக்கப்பட்டு, மீண்டும் சிறிது தொலைவு தள்ளி வேறு இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது புதிதாக உருவாகியிருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே இடத்தில் அழிவின்றி இருக்கும் நகரம் இந்த உலகில் மதுரை மட்டுமே! 

நகரம் மட்டுமல்ல, அதன் இடங்கள்கூட மாறவில்லை. தத்தனேரியில் எரியும் நெருப்பு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு யாரோ ஒரு தமிழன் சிதையை பற்றவைத்த நெருப்பு. உலகில் வேறெங்கும் இத்தனை பழமையான சுடுகாட்டை அதே இடத்தில் இருப்பதை பார்க்கமுடியாது. 

வரலாற்றின் மூத்த குடிகளின் மண் இது. தமிழ் நாகரிகம் தழைத்தது இங்குதான். தமிழ் பண்பாட்டை மதுரை வரலாறு வழியாகப் பார்த்தால்தான் அதன் மேன்மை தெரியும். அதனால்தான் மதுரையை மையப்படுத்தி எழுதவேண்டும் என்று நினைத்தேன். 

அதற்காக 1997-ல் முதல் ஆய்வுக்கட்ட பணிகளை மேற்கொண்டேன். அதை நாவலாக எழுதுவதா? ஆய்வுக்கட்டுரைபோல் எழுதுவதா? இல்லை வரலாற்று தொகுப்பாக கொண்டுவருவதா? என்ற குழப்பம் இருந்தது. மூன்று வருடமாக எந்த முடிவுக்கும் வராமல் வெறும் ஆய்வுத் தரவுகளை மட்டும் தேடித் தேடி சேகரித்தேன். அப்போதுதான் நாவலுக்கான கருத்து அதில் இருப்பது தெரிந்தது. நாவலாக எழுதுவது என்ற முடிவை எடுத்தேன். 

மதுரை, சென்னை, லண்டன் ஆவணக் காப்பகங்களில் இருந்தும், பக்தி இலக்கியம், ஓலைச்சுவடிகள், தாமிர பட்டயங்கள், இஸ்லாமியர்களின் குறிப்புகள், கிறிஸ்துவ பாதிரியார்களின் டயரி குறிப்புகள் என்று அனைத்தில் இருந்தும் தகவல்களை சேகரித்தேன். வரலாறு என்பதே எழுதப்படாத தகவல்களில்தான் அதிகம் இருக்கிறது. அதனால் அதையும் தேடி அலைந்தேன். 

கிராமங்களில் சொல்லப்படும் கதைகள், வெறும் கதைகள் மட்டுமல்ல, அது வரலாற்றின் தொடர்ச்சி தொடர்ந்து வாய்வழியாக வந்த சரித்திரம். இதற்காக மதுரை மாவட்டத்தில் இருந்த எல்லா பழைய கிராமங்களிலும் தங்கியிருந்து கதை கேட்டேன். அவற்றை இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். 'காவல் கோட்டம்' எழுதப்படாத வரலாறு நிறைந்த ஒன்று. யாரும் சொல்லாத கதைகள்.

நான் சந்திக்க நினைத்த, சந்தித்த பல மனிதர்கள் வயோதிகத்தின் காரணமாக சில வாரங்களுக்கு முன்பும், பின்பும் இறந்தபடியே இருந்தனர். இரண்டாவது முறை அவரிடம் பேட்டியெடுக்க போகும்போது வெள்ளை அடிக்கப்பட்ட வீட்டுச் சுவரோ, பிரிக்கப்படாமல் இருக்கும் வாசல் கொட்டகையோ தூரத்தில் இருந்தே அந்த துக்க செய்தியை சொல்லும்.

போகும் இடமெல்லாம் மரணம் சகப் பயணியாக கூடவே வந்து கொண்டிருந்தது. 'ஒரு வாரம் முன்னால் வந்திருக்கக் கூடாதா..? இதெல்லாம் தெரிந்த மனுஷன் இப்பதானே செத்தாரு..!' என்ற குரல் கேட்காத கிராமமே இல்லை. ஏதாவது ஒரு தகவல் கிடைக்காதா என்று பொழுதெல்லாம் அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்கள் நிறைய.

அதுகூட பரவாயில்லை. இப்போது கிராமத்தில் கதையை தேடினால் கிடைக்காது. கிராமத்து சாவடிகளை டி.வி. தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 10 வருடங்களுக்கு மேலாகிறது.

தாயக்கட்டங்களைப் போல் சாவடி பட்டியக்கல்லின் மேல் விரிந்துக் கிடந்த கதைகள், இப்போது தூண்களின் இடுக்குகளில் ஒளிய தொடங்கியிருக்கிறது. இப்படி எழுதப்படாத பல கதைகளை இந்த நாவலில் சொல்லியிருக்கிறேன்.

மதுரை; இந்த நகரம் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. துயரை தாங்கியிருக்கிறது. மிகப் பெரிய மனிதர்களை இடம் தெரியாமல் பந்தாடியிருக்கிறது. ஆனாலும் உயிர்ப்போடு இருக்கிறது.


இதுவரை ஒரு நகரை மையப்படுத்தி எந்த நாவலும் இல்லை. இதன் கதை மதுரை நகரைச் சுற்றி காட்டப்படும் கோட்டையில் இருந்து தொடங்குகிறது. கி.பி.1310-ல் அந்தக் கோட்டை கட்டப்படுகிறது. அப்போது மீனாட்சியம்மன் கோயில் ஒற்றைக் கோபுரத்துடன் உயர்ந்து நிற்கிறது. அப்போது நாவல் தொடங்குகிறது.

நாவல் வளர வளர மீனாட்சியம்மன் கோயிலும் வளர்கிறது. மதுரையின் காவல் கோட்டமாக இருக்கும் இந்தக் கோட்டை தனக்குள் நடக்கும் நிகழ்வுகளையும், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. 1920-ல் மீனாட்சியம்மன் கோயில் நான்கு ராஜகோபுரங்களுடன் உயர்ந்து நிற்கிறது. கோட்டை இடிக்கப்படுகிறது.


கோட்டையின் அழிவை மட்டும் 40 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். மிகத்துயரமான நிகழ்வு அது. பொதுவாக கோட்டைகள் எல்லாமே வெளியில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும்தான் தாக்குதல்களை சந்தித்திருக்கும், ஆனால் மதுரைக் கோட்டை மட்டும் உள்ளுக்குள் இருந்து தன் சொந்த மக்களால் இடிக்கப்படுகிறது.

முதலில் ஒருவர் இருவராக வரத் தொடங்கியவர்கள், கடைசியில் அன்று மதுரை நகரில் வாழ்ந்த 42 ஆயிரம் மக்களும் சேர்ந்து எதிரிகளிடம் இருந்து தங்களை இவ்வளவு காலம் காத்து நின்ற கோட்டையை இடித்து தரைமட்டமாக்குகிரார்கள். அந்த சோகத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது.

கோட்டையின் எச்சம்
முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி விரிவாக பேசும் ஆய்வு நாவல் இதுதான். தென்னிந்தியாவை கொடூரமாகத் தாக்கிய தாது வருடப் பஞ்சம் மதுரையை மிக உக்கிரமாக தாக்கியது. அந்த பஞ்சத்தில்தான் மொத்த மக்கள்தொகையில் பாதி காணாமல் போனது. இதன்பின்தான் ஆங்கிலேய அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுகிறது.

இந்த நாவலில் 250 சிறுகதைகள் உள்ளன. அதில் 10 பக்கம் கொண்ட ஒரு சிறுகதைதான் 'அரவான்' திரைப்படம்.

அரவான்
சாகித்ய அகாடமி விருது படைப்பிலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. அது சரியான நேரத்தில் சரியான படைப்புக்கு கிடைத்திருக்கிறது. இந்த விருது மேலும் என்னை எழுத தூண்டுகிறது." என்று தனது நீண்ட உரையை முடித்தார் வெங்கடேசன்.

காவல் கோட்டத்தை நாவல் என்று சொல்வதைவிட வரலாற்று ஆவணம் என்று சொல்லலாம். ஒன்றிரண்டு சம்பவங்களைத்தவிர அத்தனையும் உண்மையான பெயரில் நடந்த செய்திகளை மட்டுமே சொல்கிறது. மதுரையை பற்றிய 600 ஆண்டுக்கால வரலாற்றை முழுமையாக சொல்லும் ஆவணம் இது.





38 கருத்துகள்

  1. உயிர்ப்போடு என்றும் இருக்கும்... இருக்கட்டும்...

    திரு. வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. வணக்கம் நண்பரே!

    இப்புதினம் விருதுகளைப் பெறும்முன்னே படித்துவிட்டேன்.
    அன்று ஞாயிறு. காலையில் படிக்க எடுத்த நூலை முடித்துத்தான் வைக்க முடிந்தது. இருவேளை உணவும் நூலிற் கிடைத்தது.

    ஒரு கதாசிரியன், குறிப்பாகச் சரித்திரக் கதைகளை எழுத முயல்பவனுக்கு இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, சொல்லாளுமை, நுணுக்கப்பார்வை எனப் பட்டியலிடப் பலவிடயங்கள் சு.வெ. அவர்களின் காவல் கோட்டத்தில் உண்டு.

    தங்களின் நேர்காணல் மீண்டும் காவல் கோட்டம் குறித்த சிந்தனைகளை மீட்டுருவாக்கிவிட்டது.

    நன்றி.

    ( தமிழ் மணம் பிரச்சினை போலுள்ளது நண்பரே! வாக்களிக்க இயலவில்லை!எப்போது வரினும் என் வாக்குண்டு! குறிப்பிடாவிட்டாலும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமிக்க வைக்கும் ஒரு படைப்பு. அதிலும் தாது வருட பஞ்சத்தில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் அப்படியே சாலையில் விழுந்து சாவதும், மதுரை வீதிகள் முழுவதும் பிணங்களாக கிடந்தது துர்நாற்றம் வீசுவதும், குஞ்சரத்தம்மாள் என்ற விலைமகள் தனது இரண்டு மாடமாளிகைகளை விற்று மதுரை மக்களுக்கு கஞ்சி ஊற்றியதையும், சித்திரை திருவிழாவைவிட குஞ்சரத்தம்மாள் மரணத்திற்கு அதிக மக்கள் கூடினார்கள் என்று கலெக்டர் இங்கிலாந்துக்கு கடிதம் எழுதியது, அதன் தொடர்ச்சியாக முல்லைப்பெரியாறு என்ற அணை உருவானது என்று உணர்சிக் குவியலாய் செல்லும் நாவல் இது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. //போகும் இடமெல்லாம் மரணம் சகப் பயணியாக கூடவே வந்து கொண்டிருந்தது//

    புதினத்திற்காக, தான் கொண்ட பயணம் முழுமையையும் இந்த வார்த்தைகளில் சொல்லி விட்டார் சு. வெங்கடேசன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் திரட்டுவது எவ்வளவு கடினம் என்பது அவரின் உரையாடலில் காண முடிந்தது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. நண்பரே! நல்லதொரு வரலாற்று ஆவணமாகிய ஒரு நாவலைப் பற்றிச் சொல்லி அந்த ஆசிரியரையும் பேட்டி கண்டு சொல்லியிருப்பது சிறப்பு. ஆம் அந்தப் படமும் அதன் ஒரு சிறிய பகுதியாகத்தான் எடுக்கப்பட்ட படம்.....நல்லதொரு படம்.

    கீதா: என்னிடம் இந்தப் புத்தகம் இருக்கின்றது சகோ. வாசிக்கத் தொடங்கி பகுதி முடித்து அப்படியே வைத்துள்ளேன். ஏனென்றால் நிறைய கதாபாத்திரங்கள். அத்தனையையும் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொஞ்சம் குறைந்துவிட்டதாலோ என்னவோ....சிறிய எழுத்துக்களாக இருப்பதாலும்...ஆனால் அத்தனையும் அருமையான வரலாற்றுப் பதிவுகள். மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அதை வாசிக்கவேண்டும் என்று உங்கள் பதிவைப் படித்ததும் தோன்றுகின்றது...

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பர்களே!
      ஆம், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், ஏகப்பட்ட சம்பவங்கள் என்று நம்மைக் கொஞ்சம் குழப்பும் நாவல்தான் இது. சில இடங்களில் நாவல் தொய்வாக போகிறது. சமபவங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கும் குறையும் இருக்கிறது. நான் இதை நாவல் என்பதைவிட வரலாற்று ஆவணமாகவே பார்க்கிறேன். அதன் மூலம் பழைய மதுரையை பார்க்கிறேன்.
      தொடர்ந்து படியுங்கள்.

      நீக்கு
    2. அதே அதே...சில குழப்பங்கள். எனவே சிலவற்றைக் குறித்துக் கொண்டு வாசிக்க வேண்டியிருக்கின்றது...

      கீதா

      நீக்கு
  5. bro- I AM also inters this novel 'kaval-kkottan'; but I DO NOT UNDERSTAND;writer s.RAMKRISHANAN; this novel wrost said; why this 'kolai-veri" mr S.R ;

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை எப்படி சொல்ல..? ஒருவகையில் பொறாமை என்று கூட சொல்லலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவலுக்கு கள்ளர்கள் பற்றி பல தகவல்களை அவருக்கு தந்துதவியவர்களில் வெங்கடேசன் முக்கியமானவர். இப்படி தனக்கு தரவுகளை தந்து கொண்டிருந்த ஒருவருக்கு இரண்டாவது மூன்றாவது நாவலிலே இப்படியொரு அங்கீகாரமா? என்ற ஆதங்கமாகவும் அது இருக்கலாம்.
      முழுநேர எழுத்தாளராக இருக்கும் தனக்கு இப்படியொரு விருது கிடைக்கவில்லையே என்ற ஆற்றாமையாகவும் இருக்கலாம்.
      தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  6. நானும் மதுர காரன்டா என்று என்னைச் சொல்ல வைத்து விட்டார் தோழர் வெங்கடேசன் :)

    பதிலளிநீக்கு
  7. தங்களின் பதிவு காவற் கோட்டம் நூலினை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது நண்பரே
    அவசியம் வாங்குவோம் படிப்பேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயம் படியுங்கள். பல வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  8. காவற்கோட்டம் படித்ததில்லை. தங்களது இப்பதிவு அந்நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது. அவரது பேச்சிலிருந்து செய்திகளைத் திரட்ட எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை உணரமுடிகிறது. களப்பணி மேற்கொண்டு தகவல்களைப் பெற்று ஒருங்கமைத்துக் கொணர்வது என்பது சிரமமான பணி. ஒரு முறை களப்பணி செல்லும்போது கிடைக்கும் தகவலை விட்டுவிட்டால் மறுமுறை அவ்வாறான தகவலைப் பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் மேற்கொண்டு வரும் 25 ஆண்டு கால களப்பணியில் உணர்ந்துள்ளேன். இவை போன்ற ஆவணங்களே வரலாற்றுக்குத் தேவை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அய்யா! எனக்கிருக்கும் சிறிய அனுபவத்திலே இதை உணர்ந்திருக்கிறேன். இது நல்ல வரலாற்று ஆவணம். தங்களுக்கு மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  9. அருமையான் தகவல் பெட்டகம்..
    நானும் சின்னவளும் போட்டிபோட்டுப்படித்தது....
    மிக்க நன்றி மறு வாசிப்புக்குக்கு தூண்டியமைக்கு...

    பதிலளிநீக்கு
  10. தங்களின் பதிவு காவல் கோட்டம் நூலை படிக்கும் ஆவலை தூண்டிவிட்டிருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. காவல் கோட்டம் நாவல் அல்ல...அது மதுரையின் ஆவணம் என்பது சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  12. வாசிக்க வேண்டிய நூல்! இந்த முறை அவசியம் வாங்கி படிக்கிறேன்! நல்லதொரு விமர்சனம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அரியதொரு தகவலை தந்தமைக்கு நன்றி நண்பரே திரு. சு.வெங்கடேசன் அவர்கள் போற்றப்படக் கூடியவர்
    தமிழ் மணம் 11

    பதிலளிநீக்கு
  14. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. விருது பெற்ற இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்தேன். ஒருமுறை மட்டுமே படிக்க வேண்டிய புத்தகம் அல்ல இது என்று தோன்றியது. நல்ல முயற்சி. ஆனால் எழுத்தாளர் எஸ்ரா - அவரும் மருத்ரைக் காரர் வேறு! - இந்த முயற்சியை எள்ளலாகக் குறிப்பிட்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் அதுவொரு ஆவணம்தான். நமக்கு சரித்திரத்தில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் புரட்டலாம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  16. அன்புள்ள அய்யா,

    ‘காவல் கோட்டம்’ திருவாளர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய நாவல் பற்றியும் அவர் அந்த வரலாற்று ஆவணத்திற்காக உழைத்த உழைப்பு அர்ப்பணிப்பு பற்றியும் தங்களின் மூலம் அறிந்தேன். சாகித்திய அகாதெமி விருது பெற்ற அன்னாருக்கு வாழ்த்துகள்.

    நன்றி.

    த.ம.13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா, அவரின் உழைப்பு பிரமிக்க செய்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      நீக்கு
  17. மதுரையை பற்றிய அருமையான - அறிய தகவல்கள் அடங்கிய "காவல் கோட்டம்" சாகித்திய அகாடமி விறு பெற்றதில் மகிழ்ச்சி , பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    அதே சமயத்தில் உலகிலேயே மதுரை நகரம் மட்டுமே மிக மிக பழமையான நகரம் என்று சொல்வது ஏற்க முடியாத ஒரு தவறான கூற்று.

    இந்தியாவில் உள்ள வாரணாசி - பனராஸ் கி .மு. 3000 ஆம் ஆண்டு முதல் மக்கள் வசிக்கும் ஒரு நகரம்.
    ஸ்பெயினில் உள்ள காடிஸ் -கி.மு. 1100 ஆம் ஆண்டு முதல் மக்கள் வசிக்கும் ஒரு நகரம்.
    கிரீசில் உள்ள தேபாஸ் -கி.மு. 1400 ஆம் ஆண்டு முதல் மக்கள் வசிக்கும் ஒரு நகரம்
    அதே கிரீசில் உள்ள ஏதென்ஸ் -கி.மு. 1400 ஆம் ஆண்டு முதல் மக்கள் வசிக்கும் ஒரு நகரம்
    நகரங்களின் தாய் என்று அரேபியர்களால் வர்ணிக்கப்படும் ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் கி.மு. 1500 ஆம் ஆண்டு முதல் மக்கள் வசிக்கும் ஒரு நகரம்.

    இன்னும் இது போன்று சிரியாவின் தமாஸ்கஸ் ,எகிப்தின் பையூம் , லெபனானின் பெய்ரூத் இப்படி பல நகரங்கள் இருக்கின்றன.
    எல்லா நகரங்களையும் விட உலகின் அதிக பழமையான நகரமாக கருதபடுவது ஏறக்குறைய 11,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த , பாலஸ்தீனத்தில் உள்ள ஜெரிகோ நகரம். (சென்றிருக்கிறேன்)

    மதுரை குறித்து பெருமைதான் என்றாலும் மற்ற நகரங்களின் சிறப்பை மறைப்பது ஏற்புடையதல்ல.

    பகிர்வுக்கு நன்றி செந்தில்குமார்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, நான் மதுரைதான் பழமையான நகரம் என்று சொல்லவில்லை. உலகில் உள்ள பழமையான நகர் பட்டியலில் முதல் 20 இடத்தில் வரும் ஒரே இந்திய நகரம் வாரணாசி மட்டும்தான். நமது தமிழகத்தில் கூட மதுரைக்கும் தஞ்சாவூருக்கும் 200 ஆண்டுகள் தான் வித்தியாசம். நீங்கள் சொன்ன எல்லா நகரங்களும் சில நூறு கிலோமீட்டர்கள் இடம் மாறியிருக்கின்றன. ஒரு இடத்தில் உருவாகி அழிந்து, சிறிது காலம் கழித்து பக்கத்தில் வேறு ஒரு இடத்தில் மீண்டும் உருவாகும்.

      ஆனால், மதுரை எங்கும் இடம் மாறவில்லை ஒரே இடத்தில் தொடர்ந்து 2500 ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கும் நகரம். மற்ற நகரங்களைப் போல் 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் மனிதர்களே இல்லாமல் மீண்டும் உருவான நகரமல்ல மதுரை.

      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  18. காவல் கோட்டம் படிக்கும் வாய்ப்பு இது வரை அமையவில்லை செந்தில். படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை