Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

'நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு..!'


மது நாட்டில் குளிப்பது என்பது பெரும்பாலும் காலை நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வு. கடினமான உழைப்பு கொண்ட சிலர் மட்டும் கசகசப்பான வியர்வையில் இருந்து விடுபட இரவிலும் குளிப்பதுண்டு. ஆனால் சீனாவில் நிலைமையே வேறு.


அங்கு ராத்திரி 10 மணிக்கு மேல் எதிர்படும் எல்லோரிடமும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். "குளிச்சாச்சா..?" என்பது தான் அது. அக்கறையான இந்த விசாரிப்பு புதிதாக அங்கு சென்றவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தரும். இரவுக்கு குளியல் என்பது சீனாவில் பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக கலந்து விட்ட ஒரு கலாச்சாரம்.

ஒருவேளை யாராவது குளிக்கவில்லை என்று பதில் தந்தால் அவ்வளவுதான். அவர்களை ஒரு அற்ப பதர் போல் படுகேவலமாக பார்ப்பார்கள். இரவில் குளிக்கா விட்டால் சீனர்கள் பார்வையில் அவர்கள் ஒரு அசுத்த ஜீவி. சீனர்கள் இரவில் குளித்து விட்டு சுத்த பத்தமாக தூங்கப்போவார்கள். குளிக்காமல் ஒரு நாளும் அவர்கள் தூங்கியதில்லை. குளித்து முடித்து இரவு உடையான நைட்டியை அணிந்து விட்டால் எந்த வேலையாக இருந்தாலும் சரி பெண்கள் வீட்டை  விட்டு வெளியே வர மாட்டார்கள். நம்மூர் பெண்கள் போல் நைட்டியோடு ஊரை வலம் வரும் பழக்கமெல்லாம் அங்கில்லை. 


ஆண்களும் கூட அப்படிதான், இரவு உடைக்கு மாறிய பின் வெளியே எங்கும் சுற்றப்போக மாட்டார்கள். தூய்மையோடு தூங்க வேண்டும் என்பது சீனர்களின் ரத்தத்தோடு கலந்து விட்டப்பழக்கம். 

சரி, இரவில் தான் குளிக்கிறார்கள் என்றால் காலையில் என்ன பண்ணுவார்கள்? சும்மா சும்மா குளித்துக்கொண்டே இருக்கமுடியுமா..? அதனால் காலையில் பல் தேய்த்து, முகம் கழுவிவிட்டு ஆபீசுக்கு அடித்துப்பிடித்து ஓடுவார்கள். காலையில் குளிப்பதெல்லாம் அவர்கள் சரித்திரத்தில் இல்லாத ஒன்று. 


காலையில் அரக்கப்பரக்க குளிக்க வேண்டும். நிம்மதியாக  தேய்த்துக் குளிக்க முடியாது. ராத்திரி என்றால் நம் இஷ்டத்துக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம். அதோடு பகல் முழுவதும் பார்க்கும் வேலை, டென்ஷன், அழுக்கு, வியர்வை, களைப்பு எல்லாம் ஓடிப்போய்  விடும் என்று நீண்ட லெக்சர் கொடுக்கிறார்கள் சீனர்கள்.

இவர்களின் இரவுக் குளியலை பார்த்து மற்ற நாட்டினர் ஆச்சரியப்பட்டு கேட்பது, "நீங்கள் ஏன் இரவில் குளிக்கிறீர்கள்?" என்று அதற்கு அவர்கள் தரும் பதில், "நீங்கள் ஏன் காலையில் குளிக்கிறீர்கள்?" என்பதுதான்.

சீனர்களின் ஆத்திச்சூடியில் 'கூழானாலும் குளித்துக்குடி' என்பது 'நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு' என்றிருக்கிறது போலும்.!



32 கருத்துகள்

  1. உண்மையிலேயே இரவு படுக்கைக்கு முன் குளித்து விட்டு தூங்கினால் அதே சுகமே தனி தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. உண்மை.. இரவில் குளிப்பதே தனி சுகம்தான். ஆனால், நாம் காலையும் குளிக்கிறோம். சீனர்கள் காலையில் குளிப்பதில்லை. அதுதான் இங்கு வித்தியாசம்.

      நீக்கு
  2. அபூர்வமான தகவல் நண்பரே... அரபு நாட்டிலும் வேலை முடிந்து வந்தே பலரும் இரவில் குளிப்பார்கள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கும் காலை இரவு என்று இரண்டு வேளைகளும் குளிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  3. அன்புள்ள அய்யா,

    சுகம் சுகமே! இரவினில் குளிப்பது...! படம் பார்த்து குளித்து பாடம் கற்க வேண்டும்...!

    த.ம.3

    பதிலளிநீக்கு
  4. இங்கு பிரான்சு நாட்டிலும் பிரெஞ்சு இனத்தவர் இரவில்தான் குளிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    உண்மைதான் நானும் இது பற்றி அறிந்திருந்தேன்... விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி.5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. பழக்கம் என ஆரம்பித்து அது மரபாகிவிட்ட நிலையில் மாற்றுவது சிரமமே. வித்தியாசமான பழக்கமாக இருக்கிறது. இருந்தாலும் ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நைட்டியில் ஊரைசுற்றும் பழக்கம் இல்லாததது நல்ல பழக்கம்தான்.. இதையெல்லாம் இங்குள்ளவர்கள் பின்பற்றமாட்டார்கள்..

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான பழக்கம்! ஆனால் இரவுக் குளியல் சுகமானதுதான்!

    பதிலளிநீக்கு

  9. இரவில் குளித்து பயன் என்ன காலையில் தூங்கி எழுந்து குளிக்காமல் இருக்கும்போது? சீனர்களின் பழக்கங்களே விசித்திரமானதுதான்.தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. பகலில் வேலை செய்து அலுத்து களைத்து வந்து குளித்து விட்டு தூங்கினால் தான் நிம்மதியாக தூங்கவே முடியும் எனுமளவு எமக்கும் பழகிப்போனது.

    சீனர்கள் குறித்த பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. என்ன இது :)
    இரவில் குளித்துவிட்டு காலையில் பல்தேய்து முகம் கழுவிட்டு மட்டும் ஆபீசுக்கு சென்றா மற்றவர்களுக்கு இரவு முழுக்க தூங்கிய வியர்வை மணக்காதா?
    நான் படுக்கைக்கு போகும் முன் குளித்தால் பிரஷ்சாயிடுவேன். அதன் பின் எனக்கு தூக்கமே வராது. செந்தில் பதிவுகள், பகவான்ஜி ஜோக்குகள், வலிப்போக்கனின் சமூக பிரச்சனைகளை படித்து கொண்டிருக்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  12. தல இனி அடிக்கபோற வெயிலுக்கு நாம மூன்று தபா குளிக்கணும் ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை