Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை: சங்கு கல்மண்டபங்கள் - 10


சங்கு கல்மண்டபங்கள் 

சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று பொருள். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள். 
* * * * * * *

ன்றைக்கு செயற்கைகோள்கள் இருக்கின்றன. ரமணன் இருக்கிறார் மழையைப் பற்றி சொல்ல. அன்றைக்கு இரண்டுமே இல்லை. மழையையும் வறட்சியையும் கணிக்க முடிந்த மனிதனால் ஆற்றில் மளமளவென்று உயரும் வெள்ளத்தை கணிக்க முடியவில்லை. ஒரு வெள்ளம் பல உயிர்களை காவு வாங்கிவிடும்.


ஒவ்வொரு வெள்ளத்திலும் சொந்த பந்தங்களை இழந்த நம் முன்னோர்கள் உயிரிழப்பை தடுக்க ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். அதுதான் 'சங்கு கல்மண்டபம்'. தலைமை கிராமத்தின் அருகில் ஆற்றின் மையத்தில் இந்த கல்மண்டபத்தை அமைத்திருப்பார்கள்.

இந்த மண்டபம் மூன்றுப் பக்கமும் திறந்த அமைப்புடன் இருக்கும். ஆற்றின் நீர் வரும் பகுதியில் மட்டும் கல் சுவர் ஒன்றை எழுப்பியிருப்பார்கள். இந்த சுவரின் வெளிப்பகுதியில் உச்சியில் ஒரு பிரமாண்டமான சங்கு பதித்திருப்பார்கள். இது ஆற்றின் கரை உயரத்துக்கு இணையாக அது அமைக்கப்பட்டிருக்கும். இந்த சங்கு மட்டத்திற்கு நீர் உயர்ந்துவிட்டால் அடுத்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்துவிடும். 

இதில்தான் ஒரு அருமையான தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள். வழக்கமான நீர் மட்டத்தைவிட ஆற்றின் நீர் மட்டம் உயருகிறது என்றால் இந்த சங்கு ஒலிக்கத் துவங்கும். நதி நீரின் வேகமும் உயரமும் கூடும்போது அது ஒருவிதமான காற்றழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த காற்று வேகமாக வெளியேற ஒரு துவாரம் அமைத்திருப்பார்கள். அந்த துவாரத்தில்தான் சங்கை கச்சிதமாக பொருத்தியிருப்பார்கள். அந்த காற்றழுத்தம் கூடக்கூட சங்கின் ஒலியும் கூடிக்கொண்டே வரும். 

இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. உடனே தாய்க் கிராமம் சுறுசுறுப்பு அடையும். தனது கட்டுப்பாட்டில் வெள்ளம் வரக்கூடிய அபாயம் உள்ள ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளம் வருகிறது என்ற செய்தியை அறிவிக்கும்.  

நீரின் வேகத்தை வைத்து எத்தனை மணி நேரத்தில் ஆற்று வெள்ளம் கரையைக் கடந்து ஊருக்குள் புகும் என்பதை சங்கு ஒலிக்கத் தொடங்கியதுமே கணித்துவிடுவார்கள். அதற்குள் ஊர்மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிடுவார்கள்.


இப்படி எதிர்பாராத வெள்ளம் வந்துவிட்டால் தங்குவதற்கென்றே ஊரின் உயரமான பகுதியில் ஒரு கோயில் கட்டி அங்கு ஒரு மண்டபம் அமைத்திருப்பார்கள். அந்த கோயில் மண்டபத்தில் ஊர்மக்கள் அனைவரும் தங்கிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக கட்டியிருப்பார்கள். வெள்ளம் வடியும் வரை கிராமத்தின் சார்பாக அனைவருக்கும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். 

சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று பொருள். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.


நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத்துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள். நீர் வடியும்போது உக்கிரமமாக ஒலிக்கும் சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். 

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. தாமிரபரணி போன்ற ஒருசில நதிகளில் வெகு அபூர்வமாக இந்த சங்கு கல்மண்டபங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை. 

சிறுவயதில் ஆற்றுக்கு நடுவே இத்தகைய மண்டபங்களை பார்க்கும்போது தேவையில்லாமல் எதற்கு ஆற்றுக்கு நடுவே மண்டபத்தை கட்டி வைத்திருக்கிறார்கள் என்று நினைப்பதுண்டு. இப்போதுதான் தெரிகிறது அவைகள் ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய உன்னதங்கள் என்று. 

நம் முன்னோர்கள் எதையும் தேவையில்லாமல் ஏற்படுத்தவில்லை. நாம்தான் அவற்றை தேவையில்லை என்று ஆங்கிலேயர்கள் போல் ஒதுக்கிவிட்டோம். 

மேலும் பேசுவோம்.

                                                                                                                              -தொடரும்




தொடர்புடைய பதிவுகள்


  

34 கருத்துகள்

  1. சங்கொலிபோல மிக அழகான அருமையான தகவல்களைத் தெரிவித்துள்ளீர்கள். ஒவ்வொன்றையும் படிக்கப்படிக்க விறுவிறுப்பாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளது.

    அந்தக்காலத்திலேயே இதுபோலெல்லாம் யோசித்து திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது மிகவும் பாராட்டும்படியாக உள்ளது. தொடரட்டும் தங்களின் இந்தப்பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகையும் பாராட்டு கருத்துக்களும் எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  2. தங்கள் பதிவும் விளக்கமும் மக்கள் அறிய வேண்டிய செய்தி! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. என்ன ஒரு அழகான தொழில் நுட்பம். முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல என்பதை உணர்த்தும் செய்தி. நாம் நம் அலட்சியத்தாலும், அகங்காரத்தாலும், பேராசையாலும் அழி(க்கிறோம்.

    தம +1

    பதிலளிநீக்கு
  4. சங்கு கல் மண்டபங்கள் பற்றி தற்போதுதான் அறிந்தேன். நம் முன்னோர்களின் அறிவுத்திறனுக்கு இணை எதுவுமில்லை. இரண்டாவது, மூன்றாவது புகைப்படங்களில் உள்ள இடங்களைக் கூறமுடியுமா? மூன்றாவதாக உள்ளது திருவில்லிப்புத்தூர்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவொரு மாதிரிக்காகத்தான் கொடுத்திருக்கிறேன். மற்றபடி இவைகள் எங்கிருக்கிறது என்பது சரியாக தெரியவில்லை.

      நீக்கு
  5. சங்கு கல் மண்டபங்கள் பற்றி அறிந்து வியந்தேன் நண்பரே
    நமது முன்னோர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்
    பொது மக்களின் நலனில் அக்கறை மிகுந்தவர்கள்
    தன்னலமற்ற பொதுநலன் நாடுவோம் இப்போது யாரிருக்கிறார்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. சங்கு கல்மண்டபம் - புதிய செய்தியாக இருக்கிறது. இங்கு எங்கள் பக்கம் (சோழ மண்டலம் என்று சொல்லுவார்கள்) இந்த மாதிரி மண்டபங்கள் இருந்ததாக தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போது இந்த மண்டபங்கள் அதிகம் இல்லை. சோழ மண்டலத்திலும் சில நதிகளில் இருந்திருக்கிறது. ஆனாலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது பாண்டிய நாட்டில்தான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  8. சங்கு கல் மண்டபம் புதிதாக அறிந்து கொண்டேன் நண்பரே
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  9. சங்கு மண்டபம் குறித்து செய்தி புதியதானாலும் அதன் பயன் பாடும் நம் முன்னோர்களில் அறிவியல் தெளிவும் அறீந்து வியப்பே ஏற்படுகின்றது. மழை பெய்தால் வெள்ளத்தினை தடுக்க முடியாது என உணர்ந்து அதற்கேற்ப தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விபரம் வியப்பளிக்கின்றது. நாம் இத்தனை வளர்ச்சி யடைந்து என்ன பல விடயங்களில் நம் முன்னோட்களின் அறிவியல் அறிவோடு போட்டு போட முடியாமல் தான் இருக்கின்றோம்.

    இன்னும் தொடருங்கள்.. தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  10. இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் திரும்பவும் அதுபோல் சங்கு மண்டபத்தை கட்டவேண்டும் போல் இருக்கிறது!! அரிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. சங்கு மண்டபம் அறியாத தகவல்! நம் முன்னோர்களின் அறிவியல் நுட்பம் வியக்க வைக்கிறது! முந்தைய பகுதிகளை நேரம் கிடைக்கையில் வாசிக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. நம்பவே முடியவில்லை ,அந்த காலத்திலே அப்படியா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  13. ஆச்சரியமான, அதிசயமான தகவல்.
    சங்கு கல் மண்டபம் பற்றி அறிந்துகொண்டேன்.
    என்ன ஒரு தொழில்நுட்பம்!!!

    பதிலளிநீக்கு
  14. அருமையான தொடர்
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. பிரமிப்பாகவே இருக்கிறது என்று சொல்ல முடியாது ஏனெனில் ஒரு தலை முடியை வைத்துக் கொண்டு அவரை பார்க்காமலே ஓவியமாக வரையும் ஆற்றல் படைத்தவர்கள் என்றால் இன்னும் அப்படி எத்தனை எத்தனையோ. இப்படி எத்தனை நுணுக்கமான நல்ல செய்திளை எல்லாம் நழுவ விட்டிருப்போமோ. நினைக்கவே வேதனையாக இருக்கிறது. என்ன சாபக் கேடோ. பதிவுக்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ! ஆனால், நம் பெருமைகளை இன்று அறிவார் யார் இருக்கிறார்கள். ஒரு துறையிலே இத்தனை மேன்மை என்றால் ஒவ்வொரு துறைகளிலும் இவர்கள் சாதித்தது திகைப்படைய வைக்கிறது.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  16. சங்கு கல்மண்டபங்கள் என்னவொரு அற்புதமான கண்டுபிடிப்பு. இப்போதுதான் முதன்முறையாக இவைகுறித்து அறிகிறேன். பயனுள்ள தகவல் பகிர்வுக்கு மிகவும் நன்றி செந்தில்.

    பதிலளிநீக்கு
  17. என்ன ஒரு தொழில்நுட்பம் இல்லையா!!! சங்கு கல்மண்டபங்கள் கண்டதுண்டு தமிழ்நாட்டில் ஆனால் சங்கு கண்டதில்லை. மட்டுமல்ல தகவலும் அறிந்ததில்லை. பிரமிப்புகள் அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கின்றோம் அறிவிலிகளாகிய நாம்..

    கீதா: தாமிரபரணி ஆற்றில் உண்டு சகோ. அதைப் பற்றி எனது பாட்டி சொல்லியிருக்கிறார். நான் மண்டபம் பார்த்ததுண்டு. ஆனால் சங்கு எதுவும் இருந்ததாக நினைவில்லை, இப்போது அது வேலைசெய்வதும் இல்லை இப்போது என்றால் நான் சொல்லுவது நான் சிறுவயதில் கண்ட போதே...

    சத்தியமாக இவை எல்லாம் நம் முன்னோரது அறிவை எண்ணி வியக்க வைக்கிறது. இப்போது நாம் என்னதான் அறிவியலில் முன்னேறி இருந்தாலும் பாருங்கள் வெள்ளம் வந்து அழிந்ததை...மெத்தனத்தினால்...என்ன சொல்ல...தமிழகத்தின் விதி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை