Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை: வீராணம் ஏரி - 9


வீராணம் ஏரி

பிற்கால சோழர்களும் நீர்நிலைகளில் மிகுந்த அக்கறைக் கொண்டிருந்தார்கள். பிரமாண்டமான ஏரிகளை உருவாக்கினார்கள். அதில் ஒன்றுதான் வீராணம் ஏரி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் அடிக்கடி தலைக் காட்டும் ஏரி. தமிழகத்தின் மிகப் பெரிய ஏரியும் இதுதான். 11 கி.மீ. நீளமும் 4 கி.மீ. அகலமும் கொண்ட பிரமாண்டம்.
* * * * * * * 

பாண்டியர்கள் 'நீர் மேலாண்மை'யில் சிறந்து விளங்கினார்கள் என்று பார்த்தோம். இந்த மேன்மை மற்ற மன்னர்களுக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தது. சங்க காலம் முடிந்த பின் களப்பிரர்கள் காலம் தொடங்கியது. அவர்கள் எந்தளவிற்கு நீர் பாசனத்திற்கு உதவினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 

அவர்களுக்கு அடுத்து வந்த பல்லவர்கள் ஆரம்பத்தில் நீர்நிலைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அவர்கள் முக்கியத்துவமெல்லாம் கோயில்களை கட்டுவதில்தான் இருந்தது. கற்கோயில்களை அறிமுகப்படுத்தியவர்கள் அவர்கள்தான். அது அன்றைக்கு புது தொழில்நுட்பம் என்பதால் கற்பாறைகள் கண்ட இடங்களில் எல்லாம்  கோயில்களாக கட்டத்தொடங்கினார்கள்.


இவர்கள் தமிழர்கள் அல்ல என்றபோதும் காலப்போக்கில் தமிழர்களோடு கலந்துவிட்டார்கள். அதன்பின்தான் பாசன அமைப்புகளை வட தமிழகத்தில் அதிகளவில் ஏற்படுத்தினர். இன்றைக்கு அங்கு காணப்படும் நீர்நிலைகள் உருவாக்கத்தில் பல்லவர்கள் பங்கும் உண்டு. 

அதேபோல் பிற்கால சோழர்களும் நீர்நிலைகளில் மிகுந்த அக்கறைக் கொண்டிருந்தார்கள். பிரமாண்டமான ஏரிகளை உருவாக்கினார்கள். அதில் ஒன்றுதான் வீராணம் ஏரி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் அடிக்கடி தலைக் காட்டும் ஏரி. தமிழகத்தின் மிகப் பெரிய ஏரியும் இதுதான். 11 கி.மீ. நீளமும் 4 கி.மீ. அகலமும் கொண்ட பிரமாண்டம்.


இன்றைய காட்டுமன்னார்கோயிலின் முந்தையப் பெயர் வீரநாராயணபுரம். நீர் செழுமையற்ற பகுதியது. அந்த மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்தார்கள். நீர் வேண்டி சோழ மன்னர் பராந்தக சோழனிடம் சென்று விவசாயத்திற்கு நீரில்லை என்று கேட்டனர். மன்னனும் ஏரியை உருவாக்கத் தொடங்கினான். கி.பி.907-ல் தொடங்கிய ஏரியின் கட்டுமானம் கி.பி.935-ல் முடிந்தது. 

கிட்டத்தட்ட 28 வருடங்கள் தேவைப்பட்டது. முழுதாக முடிந்ததும் தனது இஷ்ட தெய்வமான வீரநாராயணப் பெருமாளின் பெயரை ஏரிக்கு வைத்தார் மன்னர். 'வீரநாராயணபுரம் ஏரி' என்பதுதான் பின்னாளில் 'வீராணம் ஏரி' என்றானது. இந்த ஏரி சென்னை மக்களுக்கு குடிநீரையும், 45 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதியையும் தந்து கொண்டிருக்கிறது.


ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் என்று பலவகையான நீர்நிலைகளில் சிறந்து விளங்கிய தமிழர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே நதிகளுக்கு குறுக்கே அணை கட்டத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதே காலக் கட்டத்தில் எகிப்து மக்களும் அணை கட்டும் தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தார்கள். அதனால் அணைக்கட்டுவதில் நாம்தான் முன்னோடி என்று மார்தட்டிக்கொள்ள முடியாது. 

ஆனால், இன்றைக்கும் பயன்படக்கூடிய உலகிலேயே மிகப் பழமையான அணை நம்மிடம்தான் இருக்கிறது. அந்த அணையின் பெயர் கல்லணை. கரிகாலன் கட்டியது. முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் நமது நதிகளின் குறுக்கே நிறைய அணைகள் இருந்ததாக ஏடுகள் சொல்கின்றன. 

அப்போதே காவிரியில் 11 அணைகள் இருந்தன. கொங்கு நாட்டில் ஓடுகின்ற 11 நதிகளில் 90 அணைகள் இருந்தன. இன்று சாயக்கழிவுகளால் மரணித்துப்போன நொய்யல் ஆற்றிலும் சேலம் அருகே ஓடும் திருமணிமுத்தாறு நதியிலும் தலா 32 அணைகள் இருந்தன. தாமிரபரணி ஆற்றில் இன்றும் கூட அன்று கட்டப்பட்ட பழமையான 7 அணைகள் உபயோகத்தில் இருக்கின்றன. 

நாளையும் பேசுவோம்.

                                                                                                                             -தொடரும்.



தொடர்புடைய பதிவுகள்

35 கருத்துகள்

  1. சரித்திரப் புகழ்பெற்ற வீராணம் ஏரி பற்றிய பல தகவல்களை அறிந்ததில் மகிழ்ச்சி. படங்களும் அருமை. இந்த சுவாரஸ்யமான தொடர் மேலும் தொடரட்டும். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. வீராணம் ஏரி பற்றிய தகவல்கள் அறிந்திட முடிந்தது. இன்னும் உங்கள் ஏனைய பதிவுகளை படிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் படிக்கின்றேன்பா! நீர்வழிச்சாலை ஏன் வேண்டும் எனும் ஆய்வுக்கட்டுரைகளை வைத்தே டாக்டரேட் பெற்றிடலாம் நீங்கள். அத்தனை தகவல்களும் இங்கே குவிந்துள்ளதே! சரித்திரத்தையும் அறிந்திட செய்திட்ட உங்கள் பதிவுக்கு நன்றிகள் மனமார்ந்த பாராட்டுகள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. படித்துப் பாருங்கள், முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்..! வருகைக்கு நன்றி நிஷா!

      நீக்கு
  3. தமிழனின் நீர் மேலாண்மை உலகிற்கே எடுத்துக்காட்டு.....அதை அழித்த புண்ணியத்தமிழர்கள் இப்போது..

    பதிலளிநீக்கு
  4. வீராணம் ஏரி பற்றி அறியாத பல செய்திகளை அறிந்தேன்
    நன்றி நண்பரே
    தம2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  5. வீராணம் ஏரி பற்றிய தகவல்கள் நன்று. அதன் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது.
    தம +1

    பதிலளிநீக்கு
  6. கல்கி ரசிகர்கள் மறக்காத ஒன்று வீராணம் ஏரி. அந்த ஏரியைப் பற்றி பிறிதொரு கோணத்தில் அறிந்து வேதனையடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீர் வருகிறது போன்ற மேலதிக தகவல்களை தந்திருக்கலாம். இருப்பினும் வீராணம் ஏரி பற்றிய தகவல்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. தொடர்வேன் வரலாறு ,விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு
  9. சுருக்கென்று முடித்து விட்டீர்கள். இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பல தகவல்கள். வீராணம் ஏரி பிரம்மாண்டம்...அத்தனை நீர் நிலைகளும் பிரமிப்பைத் தருகின்றன. நொய்யல் சாயக்கழிவில் மரணித்தது குறித்து இடையில் பல பிரச்சனைகள் வந்தன. மக்க்களுகும் குரல் கொடுத்தனர். ஆனால் எல்லாமே அடங்கிவிட்டது...தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  11. வீராணம் ஏரி பற்றிய சில சுவையான தகவல்கள் அறியமுடிந்தது.

    மற்ற பகுதிகள் படிக்க ஆவல்...

    பதிலளிநீக்கு
  12. வீராணம் தண்ணி குடிக்கிறவங்க முதலில் இதை தெரிஞ்சுக்கணும் :)

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவுத் தொடர்
    இத்தொடர் நூல் வடிவம் பெறவேண்டும்!

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  14. வீராணம் ஏரி விபரம் அறிந்தேன் தொடர்கிறேன் நண்பரே...
    தமிழ் மணம் 12

    பதிலளிநீக்கு
  15. வீராண‌ம் ஏரி விபரங்கள் யாவும் அருமை!

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    கல்கியில் சொல்லிய ஏரியை அறியத்தந்தமைக்கு நன்றி..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. வீராணம் ஏரியின் பின்னணியும் பிரமாண்டமும் வியக்கவைக்கிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை