சனி, அக்டோபர் 31, 2015

புலி எங்கள் செல்லம்


ம்ம வீட்டு செல்லப் பிராணியாக நாய் வளர்க்கலாம், பூனை வளர்க்கலாம்! யாராச்சும் புலி வளர்பார்களா..? 


வளர்க்கலாம் என்கிறார்கள் பிரேசிலை சேர்ந்த போர்கேஸ் குடும்பத்தினர். இவர்கள் இரண்டு புலிகளை தங்கள் செல்லங்களாக வளர்த்து வருகிறார்கள். பிரேசிலில் உள்ள மரிங்கா நகரில்தான் இந்த குடும்பம் வாழ்கிறது. 

இதற்காக தங்கள் வீட்டுத் தோட்டத்தில் சிறிய சரணாலயம் அமைத்துள்ளார்கள். போர்கேஸ் தனது இரண்டு மகள்களுடனும் மூன்று பேரக் குழந்தைகளுடனும் வசித்து வருகிறார். 


இவரது பேத்திகளுக்கு புலி முதுகில் சவாரி செய்வதுதான் பிடித்தமான பொழுது போக்கு. ஜாலியாக வீட்டுக்குள் கம்பீர நடைபோடும் இந்த புலிகளுக்கு பசி வந்துவிட்டால் சமையல்கட்டு கதவருகே வந்து நின்று ஏக்கமாக பார்த்துக் கொண்டே இருக்கும். 

உடனே இரண்டு வயதே நிரம்பிய பேத்திகள் தங்களது பிஞ்சுக் கைகளால் மாமிசத்தை எடுத்து புலிகளுக்கு ஊட்டிவிடுவார்கள். வயிறு நிறைந்ததும் நாவால் அந்த பிஞ்சுக் கைகளை வருடிவிட்டு புலிகள் சென்றுவிடும். 


"இவைகளை பார்த்து எங்களுக்கு கொஞ்சம் கூட பயமில்லை. இவைகளும் எங்கள் குடும்பத்தில் ஒன்றாக மாறிவிட்டன. இவைகளை பிரிந்து எங்களால் இருக்க முடியாது." என்று கூறுகிறார்கள். 

மனிதன் காட்டை அழித்து அவைகளின் வசிப்பிடத்தில் வாழும்போது, அவைகள் நம் வீடுகளில் வசிப்பதும் ஒரு சமத்துவம்தானே..!!   
வெள்ளி, அக்டோபர் 30, 2015

உலகில் வேறு எங்கும் இப்படியொரு புரட்சி நடந்ததில்லை


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், 

நான் 'தினம் ஒரு தகவல்' என்ற பெயரில் ஒரு வலைத்தளம் நடத்தி வந்தேன். அதில் பார்வையாளர்கள் குறைவாகவே இருந்தனர்.  நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் பேசியபோது இரண்டு மூன்று தளங்கள் வேண்டாம். எல்லாவற்றையும் ஒரே தளத்தில் பதிவிடுங்கள் என்று கூறினார். அதுவும் நல்ல யோசனையாக இருக்க அதன்படி அந்த தளத்தில் நான் பதிவிட்ட பதிவுகளை மீண்டும் கூட்டாஞ்சோறில் பதிவிடுகிறேன். இனி தினம் ஒரு தகவலில் எழுதும் பதிவுகளும் இந்த தளத்திலே பதிவிட உள்ளேன். நண்பர்கள் தொடர்ந்து வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  நமது நண்பர்களில் சிலர் இந்தப் பதிவுகளை ஏற்கனவே அந்த தளத்தில் படித்திருக்கக்கூடும், அவர்கள் பொறுத்தருள்வார்களாக..! இனி பதிவு...    

--------------------------------------------------------------------

ஆட்சியை மாற்றிய மாணவர்கள்

மாணவர்கள் நினைத்தால் ஆட்சியை கூட மாற்றமுடியும் என்று உலகுக்கு உணர்த்திய நாடு இந்தியா. இந்த புரட்சி நடந்தது அசாம் மாநிலத்தில்.

1971-இல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் முடிவில் கிழக்கு பாகிஸ்தான் ‘பங்களாதேஷ்’ என்ற புதிய நாடாக உருவானது. போர் உச்ச கட்டத்தில் இருந்த போது ஏராளமான பங்களாதேஷ் வாசிகள் அசாமில் அகதிகளாக குடியேறினர். குடியேறியவர்கள் போர் முடிந்தும் அவர்களின் தாய்நாட்டிற்கு திரும்பவில்லை.
லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவிலே தங்கிவிட்டதால் மண்ணின் மைந்தர்களான அசாமியர்களுக்கு வேலை கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டன. அதனால், அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையோடு உருவானதுதான் ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’.
a
இந்த மாணவர்கள் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடைந்து, ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. அகதிகள் அனைவரும் அடையாளம் கண்டு தாக்கப்பட்டார்கள். சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் 7 ஆண்டுகளாக அனைத்து கல்லூரிகளும் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.
மாநில அரசால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மாநிலம் வந்தது. இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே வேளையில் அகதிகளாக வந்திருந்த 30 லட்சம் பேரும் அசாம் மாநில வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தனர்.
இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டுத்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், மீறி நடத்தினால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அசாம் மாணவர் சங்கம் அறிவித்தது. ஆனால், இதையெல்லாம் இந்திய அரசு காதில் வாங்கவில்லை. ராணுவ அடக்குமுறையோடு தேர்தலை நடத்தியது.
தேர்தலை புறக்கணிக்குமாறு மாணவர் சங்கம் எச்சரிக்கை விட்டது. வெறும் 32 சதவிகித வாக்குகளே பதிவானது. பெரும்பாலான வாக்குசாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தேர்தல் நடந்த 109 தொகுதிகளில் 91 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.
அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைந்தன. தினமும் சராசரியாக 25 பேர் கொல்லப்பட்டனர். 1984-ல் இந்திரா காந்தி மறைவிற்கு பின், பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, அசாம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மாணவர் சங்கங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி 10 லட்சம் பேர்களின் வாக்கு பறிக்கப்பட்டது. காங்கிரஸ் பதவி விலகியது.
20100827271704101
மீண்டும் 1985-ல் தேர்தல் நடத்தப்பட்டது. 'அசாம் கனபரிஷத் கட்சி', மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 66 பேரில் 65 பேர் திருமணம் ஆகாத இளைஞர்கள். அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
உலகில் வேறு எங்கும் இப்படியொரு புரட்சி நடந்ததில்லை. மாணவர்களின் போராட்டத்தால் ஆட்சியை மாற்றி காட்டியதும் இல்லை. 

அசாம் கன பரிஷத் தேர்தல் அரசியலை ஏற்று ஆட்சிக்கு வந்ததும் பரிதாபமாக சீரழிந்து போயின. அதன் பின்னடைவுகளிலிருந்து அசாம் மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

வியாழன், அக்டோபர் 29, 2015

பண்ணை வீட்டில் ஒருநாள்


ரபரப்பான இந்த உலகில் இருந்து விலகி, விளைநிலங்களுக்கு நடுவே… கறவை மாடுகளுக்கு மத்தியில்…வித்தியாசமாக விடுமுறையை கழிக்க நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, சுர்ஜீவன். அழகான தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட ஓலைக்குடிசை வீடுகள் நமக்காகவே காத்திருக்கின்றன.மார்பிள் தரையிலும், பளிங்கு படிகளிலும், கிரானைட் அறைகளோடு வாழ்ந்து பழகியவர்களும் சாணம் மெழுகிய மண் தரை வித்தியாசமான அனுபவத்தைத் தரும். பண்ணை வீடுகள் எப்படி என்ற அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக உணரலாம்.
வெறுமனே பண்ணை வீட்டில் தங்குவதோடு இந்த பயணம் முடிந்து விடாது… நம்மூர் மாட்டு வண்டிகள் போல் ஒட்டகங்கள் பூட்டிய வண்டிகளில் வலம் வரலாம். விவசாய வேலைகளை பார்வையிடலாம். பாறைகள் மீது ஏறலாம். 'பாராகிளைடிங்' பண்ணலாம். இப்படிப்பட்ட சாகஸங்களும் இங்குண்டு.

மேலும் பண்ணையில் விளையும், ஃப்ரெஷ் காய்கறி, வாசனைப் பொருட்களோடு தயாரான ரொட்டிகளையும் சாதத்தையும் சாப்பிட்டு மகிழலாம்.
போக்குவரத்து நெரிசலும், மக்கள் கூட்டமும் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று நினைப்பவர்கள் இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள குர்கான் நகருக்கு சென்று வரலாம். நாட்டிலேயே சிறந்த ஷாப்பிங் மால்கள் இங்கு இருக்கின்றன. இந்தப் பண்ணை வீடுகளில் தங்க குளிர்காலமே சிறந்தது.
எப்படி போவது?
ஹரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் மானேஸர் என்ற ஊரில் இந்த பண்ணை வீடுகள் இருக்கின்றன. சாலை வழியாக 6 மணி நேரத்தில் சென்று சேரலாம்.
எங்கு தங்குவது?
சுர்ஜீவன் பண்ணை வீடுகள் தங்குவதற்கு ஏற்ற இடம். ஒருநாள் இரவு தங்க ரூ.5,000-ல் இருந்து கட்டணம் பெறப்படுகிறது.

செவ்வாய், அக்டோபர் 27, 2015

குழந்தைகளை ஊனமாக்கும் குமட்டல் மாத்திரை


ரு பெண்ணின் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்பது கர்ப்பம் தரிப்பதுதான். அந்த பெண்ணை மட்டுமல்லாது, அவளின் குடும்பத்தையே சந்தோஷப் படவைக்கும் சங்கதி. அந்த கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் குமட்டலும் வாந்தியும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை மறக்கடித்துவிடுகிறது. 


கர்ப்பிணிகளுக்கு இம்சைதரும் இந்த குமட்டலை கட்டுப்படுத்துவதற்காக 1957-ல் 'தலிடோமைட்' என்ற மாத்திரை அறிமுகப்படுத்தப் பட்டது. தொடக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதமாக கருதப்பட்ட இது சிறிது காலத்திலேயே மோசமான விளைவுகளை தரத் தொடங்கியது. 

இந்த மாத்திரையை உபயோகித்த தாய்மார்களின் குழந்தைகள் பெரும்பாலும் கை கால் ஊனத்துடன் பிறந்தன. 1950-களின் இறுதியிலும் 60-களின் தொடக்கத்திலும் 46 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்புக்குள்ளாயின. இது தவிர கணக்கில் வராத குழந்தைகளின் எண்ணிக்கை ஏராளம். 

மாத்திரையின் வீரியம் கண்டு 1961-ல் இதன் உபயோகம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. சிறிது காலம் கடந்தப் பின் வேறு சில நோய்களுக்கு 'தலிடோமைட்' கொடுக்கத் தொடங்கினர். கேன்சர் நோய்க்கும் வலி நிவாராணியாகவும் அது பயன்ப்பட்டது.

இந்த மாத்திரை குழந்தைகளை ஊனப்படுத்த என்ன காரணம் என்று இங்கிலாந்தில் இருக்கும் அபிர்தீன் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன் முடிவில் தலிடோமைட் மாத்திரை ரத்தக் குழாய்களை அதிகமாக பாதிக்கிறது என்று கூறியது.

ஒரு பெண் கர்ப்பம் ஆக ஆரம்பித்த முதல் மூன்று மாதங்களுக்குத்தான் குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகள் அதிகம் இருக்கும். அப்போதுதான் இந்த மாத்திரையை அவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கை கால்கள் வளர தொடங்கும் நேரம். எனவே, தலிடோமைட் நேரடியாக அதை பாதிக்கிறது. அதனால்தான் பிறக்கும் குழந்தைகள் கை கால் வளர்ச்சி இன்றி பிறக்கின்றன என்று கண்டறிந்தார்கள். இருந்தாலும் தொழுநோய்களுக்கு தலிடோமைட் பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்று கூறியது. 


இந்த மாத்திரை குழந்தைகளை அரைகுறையாக பிறக்க வைப்பது மட்டுமல்ல. வேறு சில கேடுகளையும் உருவாக்குகின்றன. மலச்சிக்கல், நரம்பு பாதிப்பு, கால்களில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து போதல் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானிகள் இந்த மருந்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். 

இங்கிலாந்தில் உள்ள பிரிங்க்டனை சேர்ந்த ஜான் ராபர்ட் இவருக்கு 48 வயது ஆகிறது. இவருக்கு காது வளரவே இல்லை. இவரின் தாயார் இவர் கருவில் இருக்கும் போது தலிடோமைட் மாத்திரையை உட்கொண்டாராம். 

ராபர்ட்டுக்கு இப்போது கண்களும் சரியாக தெரிவதில்லை. கண்ணாடி போட வேண்டும். கண்ணாடி போட காதுகளும் வேண்டுமே அது இல்லாததால் தனது டிஜிட்டல் கேமரா வழியாகவே அனைத்தையும் பார்க்கிறார். 

ஒரு நோய்க்கு தரும் மருந்து மற்றொரு நோய்க்கு காரணமாவது ஆங்கில மருத்துவத்தின் எழுதப்படாத விதி.சனி, அக்டோபர் 24, 2015

மருதுபாண்டியர்களின் இறுதிநாள் கோட்டை


ரித்திரத்தின் மிகக் கொடூரமான காலகட்டம் என்று அதை சொல்லலாம். மருதுபாண்டியர்களையும் அவரைச் சார்ந்த 600 பேர்களையும் 214 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு கொன்றது இன்றுதான்.


மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்ட இடம் இந்தக் கோட்டை. இதைப் பற்றி விரிவான கட்டுரையை 'ஹாலிடே நியூஸ்' இதழில் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதினேன். அதை அவர்களின் நினைவு நாளான இன்று வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்காததால் அதை தட்டச்சு செய்து பதிவிட முடியவில்லை. 

அப்போதெல்லாம் நான் எழுதும் கட்டுரைகள் சிலவற்றுக்கு புகைப்படம் மட்டுமல்லாமல் வீடியோவும் எடுத்துவிடுவேன். அந்த வீடியோவை கட்டுரையின் இறுதியில் 'க்யூ.ஆர்.கோடாக' கொடுத்து, ஸ்மார்ட் மொபைல் மூலம் ஸ்கேன் செய்து பார்க்கும் விதமாக செய்துவிடுவோம். இதன் மூலம் மொபைலில் நாங்கள் பார்த்த இடங்களை வாசகர்களும் பார்க்கும் வசதியை செய்து கொடுத்திருந்தோம்.


அப்படி இந்த கட்டுரைக்காக நான் எடுத்த வீடியோவை மட்டும் இங்கு கொடுக்கிறேன். மற்றொரு நாளில் கட்டுரையை வெளியிடுகிறேன். இப்போது மருதுபாண்டியர்களை கைது செய்த சங்கரபதிக் கோட்டை பற்றிய வீடியோ.  

பின்னணிக் குரல்கள் நானும் எனது மகளும்.  ரெசல்யூசன் மிகக் குறைவாக இருந்தால்தான் மொபைலில் விரைவில் டவுன்லோடாகும் என்று வீடியோ எடிட் செய்பவர் வேறு பார்மேட்டுக்கு மாற்றியதால் வீடியோவின் தரம் சுமாராகத்தான் இருக்கும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். எங்களது குரல்கள் கூட மொபைலில் பதிவு செய்து சேர்த்ததுதான். பாருங்கள் கருத்திடுங்கள். செவ்வாய், அக்டோபர் 20, 2015

தரங்கம்பாடி: கடற்கரையில் கொண்டாட்டம்


'பங்களா ஆன் த பீச்'

ரித்திரப் புகழ்பெற்ற தரங்கம்பாடி, ஹனிமூனுக்கும் பெயர் பெற்றது. கி.பி.1680 முதல் 1845 வரை டேனீஷ் கிழக்கிந்தியா கம்பெனியின் தலைமையிடமாக திகழ்ந்த இடம், வரலாற்று சிறப்பு மிக்கது. டேனீஷ் கோட்டை சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். அதன் அருகிலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் இரண்டு தேவாலயங்கள், ஒரு ரெஸ்ட்டாரண்ட், ஒரு கைவினைப் பொருட்கள் விற்கும் இடம் ஆகியவை உள்ளன.


இங்கு இருந்த டேனிஷ் அரசின் கலெக்டர் பங்களா தற்போது 'பங்களா ஆன் த பீச்' என்ற பெயரில் ஹோட்டல்களாக இயங்கி வருகிறது. பல்வேறு நாடுகளின் கட்டடக்கலை அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இந்த ஹோட்டலில் தங்கி எதிரே மின்னும் கடல் அலைகளைப் பார்ப்பது தனி சுகம். அதிலும் மனதுக்குப் பிடித்த துணையோடு கை கோர்த்தபடி பார்ப்பது பரவசமான அனுபவம்.  


மாலை நேரத்தில் இந்தக் கடற்கரையில் உள்ளூர் மக்கள் வந்து செல்வது மனதைக் கவரும் அம்சம். அதிலும் வண்ண வண்ண சேலைகளில் அந்தப் பெண்கள் குழந்தைகளுடன் வருவதும் பார்க்க ஆனந்தம் தரும். இவற்றையெல்லாம் பார்த்தப்படி சமையல் செய்யலாம். இல்லையென்றால் துணையோடு ரசிக்கலாம். ஹனிமூன் ஜோடிக்கு ஏற்ற இடம் இது.

எப்படி போவது?
சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் பாண்டிச்சேரியில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் தரங்கம்பாடி உள்ளது.

எங்கு தங்குவது?
நீம்ரானா ஹோட்டல் குழுமம் இங்குள்ள 'பங்களா ஆன் த பீச்' ஹோட்டலை நடத்தி வருகிறது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.4,450.
புதன், அக்டோபர் 14, 2015

நதிநீர் இணைப்பு பற்றி அப்துல் கலாம் மதுரையில் பேசியது


நதிகளை இணைக்க முடியும் என்று ஒரு சாராரும் இணைக்கவே முடியாது என்று ஒரு சாராரும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நான் இணைக்க முடியும் என்று ஆறு முறை பத்திரிகையில் கட்டுரை எழுதியிருக்கிறேன். அவற்றை பிறகு பதிவிடுகிறேன். இப்போது டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் நதிநீர் இணைப்பைப் பற்றி மதுரையில் பேசிய பேச்சை காணொளியாக பதிவிடுகிறேன். உங்களின் கருத்துக்களையும் கூறுங்கள்.சனி, அக்டோபர் 10, 2015

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டியில் முதல் பரிசு

வலைப்பதிவர் சந்திப்பின் ஒரு நிகழ்வாக தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்திய மின்-தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 - க்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. 
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து நான் எழுதிய 'இருட்டு நல்லது' என்ற ஒளி மாசு பற்றி எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்ற மகிழ்வினை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 
அனைத்து வெற்றியாளர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்!
கீழே போட்டிகளின் முடிவு.


வகை (1) 
கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்


முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன் - மாயனூர், கரூர் மாவட்டம்
   26. →தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் - கோயம்புத்தூர்
   14. →கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ

திருமிகு P.S.D.பிரசாத் - சென்னை
   16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே

மூன்றாம் இடம்
திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை

வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் - மதுரை
   13. →இருட்டு நல்லது..!

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
   05. →கான் ஊடுருவும் கயமை

மூன்றாம் இடம்
திருமிகு கோபி சரபோஜி - சிங்கை
   10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?


வகை(3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி - கன்னியாகுமரி
   10. →இதுவும் தப்பில்லை

இரண்டாம் இடம்
திருமிகு ரஞ்சனி நாராயணன் - பெங்களூரு
   39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா
   04. →உன்தடம் மாற்றிடு தாயே!வகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் - புதுக்கோட்டை
   40. →சின்னவள் சிரிக்கிறாள்

இரண்டாம் இடம்
திருமிகு இரா.பூபாலன் - கோயம்புத்தூர்
   69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

மூன்றாம் இடம்
திருமிகு வைகறை - புதுக்கோட்டை
   27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்

வகை(5) மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி
   20. →புறப்படு வரிப்புலியே

இரண்டாம் இடம்
திருமிகு மகா.சுந்தர் - புதுக்கோட்டை
   25. →விரைந்து பாயும் விண்கலம் நீ!

மூன்றாம் இடம்
திருமிகு கருமலைத் தமிழாழன் - கிருஷ்ணகிரி
   02. →கனவுகளும் நனவாகும்

விமரிசனப் போட்டி

முதல் இடம்
யாருமில்லை

இரண்டாம் இடம்
திருமிகு கலையரசி ஞா - புதுச்சேரி

மூன்றாம் இடம்
திருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி

ஒரே இடத்தை பகிர்ந்து கொள்ளும் படைப்பாளிகளுக்கு,
வெற்றிக் கேடயங்கள் தனித்தனியே வழங்கப்படும்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் நாளைய விழாவில் (11.10.2015)
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

அதோடு தமிழ்க்களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) வழங்கும்
வெற்றிக் கேடயங்கள் வழங்கப் படும்.

தங்களது கடவுச் சீட்டு அளவு (Passport Size) நிழற்படங்களைbloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டுகிறோம்.

நன்றிக்குரிய நடுவர்கள்

முனைவர் திருமிகு பா.மதிவாணன்
(தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பதிவர்)

பேராசிரியர் திருமிகு இல.சுந்தரம்
(கணினித் தமிழாய்வர், SRM பல்கலைக்கழகம், பயிற்றுநர் உத்தமம்)

எழுத்தாளர் திருமிகு ஹரணி
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)

கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி
(கவிஞர், சாகித்யஅகாதெமி உறுப்பினர், பதிவர்)

முனைவர் திருமிகு மு.பழனியப்பன்
(தமிழ்த்துறைத் தலைவர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு புதியமாதவி - மும்பை
(எழுத்தாளர், ஊடகர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

திருமிகு தி.ந.முரளிதரன்
(உதவி தொடக்கக் கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)

முனைவர் திருமிகு இரா.குணசீலன்
(தமிழ்ப் பேராசிரியர், பிரபல பதிவர்) 

திருமிகு செல்லப்பா யாகசாமி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

திருமிகு பொன்.கருப்பையா
(விருதுபெற்ற ஆசிரியர், எழுத்தாளர், நாடகர், பதிவர்)

திருமிகு ராசி.பன்னீர்செல்வன்
(விருது பெற்ற ஆய்வாளர், பதிவர்)

புலவர் திருமிகு கு.ம.திருப்பதி
(மூத்த தமிழாசிரியர், இலக்கிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு இரா.எட்வின்
(கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிவர்)

திருமிகு துளசிதரன் - பாலக்காடு
(ஆசிரியர், குறும்படம் இயக்குனர், அனுபவமிக்க பதிவர்)

திருமிகு எஸ்.ரமணி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

குறுகிய காலத்தில் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு கொண்ட படைப்பாளிகளுக்கு பாராட்டுகள்.

நமது விழாவோடு இணைந்து செயல்படுத்திய தமிழ் இணையக் கல்விக்கழக நிர்வாகிகளுக்கு நன்றி.

வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

ஒருங்கிணைப்பு

விழாக் குழுவின் சார்பாக

நா.முத்துநிலவன், திண்டுக்கல் பொன்.தனபாலன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------வெள்ளி, அக்டோபர் 09, 2015

புதுக்கோட்ட அம்புட்டு தூரமாவா இருக்கு..?!


புதுக்கோட்டையில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருப்பது முதியவர்களுக்கும் பெண்களுக்கும் சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அங்கு மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் தினசரி வந்து போகிறது. 

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16713) இரவு 11.45 -க்கு புதுக்கோட்டை வந்து சேருகிறது. இதே எக்ஸ்பிரஸ் மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வ.எ.16714) ஆக நள்ளிரவு 12.30 -க்கு புறப்பட்டு காலை 8.20-க்கு எழும்பூர் சென்று சேருகிறது. 


அடுத்து பகல் நேர வண்டியான பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எ.12606) சென்னை எழும்பூரில் மதியம் 3.45 மணிக்கு 4-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 10.11 -க்கு புதுக்கோட்டை வந்து சேருகிறது. இதே வண்டி (வ.எ.12605) மறு மார்க்கத்தில் காலை 05.05 -க்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.10-க்கு சென்னை சென்று சேருகிறது. 

இந்த ரயில்கள் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் போன்ற ஊர்களை இணைக்கிறது. இந்த ஊர்களில் இருந்து புதுக்கோட்டைக்கு தாரளமாக ரயிலில் வரலாம். 

இது போக ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வ.எ.16101) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.40-க்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் போன்ற ஊர்களை இணைக்கிறது. இந்த வண்டி புதுக்கோட்டைக்கு காலை 06.25-க்கு வருகிறது.  

இதே வண்டி மறுமார்க்கத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எ.16102) ஆக இரவு 9.14-க்கு புறப்பட்டு காலை 6.30-க்கு எழும்பூர் சென்று சேருகிறது. 

விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சாலை மார்க்கமாக வந்து விடலாம். 

இனி நமது வலைப்பதிவர்களின் வருகைப் பதிவு பட்டியல் வரிசையில் உள்ள ஊர்களுக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே இருக்கும் தூரம், பயண நேரம் ஆகியவற்றைப் பார்ப்போம். அரியலூர் 
தொலைவு: 110 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 30 நிமிடம்

ராமநாதபுரம் 
தொலைவு: 132 கி.மீ.  பயண நேரம்: 2 மணி.40 நிமிடம்

ஈரோடு
தொலைவு: 202 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 50 நிமிடம்

கரூர்
தொலைவு: 138 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 45 நிமிடம்

கன்னியாகுமரி 
தொலைவு: 355 கி.மீ.  பயண நேரம்: 6 மணி 10 நிமிடம்

காஞ்சிபுரம் 
தொலைவு: 341 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்

கிருஷ்ணகிரி 
தொலைவு: 304 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 15 நிமிடம்

கோயம்புத்தூர் 
தொலைவு: 285 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 00 நிமிடம்

சிவகங்கை 
தொலைவு: 92 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 45 நிமிடம்

சென்னை 
தொலைவு: 384 கி.மீ.  பயண நேரம்: 7 மணி 05 நிமிடம்

சேலம் 
தொலைவு: 193 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 45 நிமிடம்

தஞ்சாவூர் 
தொலைவு: 61 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 30 நிமிடம்

திண்டுக்கல் 
தொலைவு: 114 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 00 நிமிடம்

திருநெல்வேலி 
தொலைவு: 272 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்

திருச்சிராப்பள்ளி 
தொலைவு: 55 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 10 நிமிடம்

திருப்பூர் 
தொலைவு: 225 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்

திருவண்ணாமலை 
தொலைவு: 238 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 15 நிமிடம்

திருவள்ளூர்
தொலைவு: 380 கி.மீ.  பயண நேரம்: 6 மணி 45 நிமிடம்

திருவாரூர்
தொலைவு: 121 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 45 நிமிடம்

தேனி
தொலைவு: 195 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 25 நிமிடம்

நாகப்பட்டினம் 
தொலைவு: 147 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 35 நிமிடம்

நாமக்கல் 
தொலைவு: 141 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 00 நிமிடம்

பாலக்காடு 
தொலைவு: 284 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்

புதுச்சேரி 
தொலைவு: 254 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்

பெங்களூர் 
தொலைவு: 395 கி.மீ.  பயண நேரம்: 7 மணி 10 நிமிடம்

பெரம்பலூர் 
தொலைவு: 112 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 10 நிமிடம்

மதுரை 
தொலைவு: 110 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 30 நிமிடம்

விருதுநகர்
தொலைவு: 163 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 15 நிமிடம்

வேலூர் 
தொலைவு: 322 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்


இங்கே குறிப்பிட்டுள்ள பயண நேரம் கார்களில் வரும் நேரத்தைக் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளது. பொது வாகனங்களில் வரும் போது சாலையின் தன்மை போக்குவரத்து நெரிசலை பொறுத்து 30 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. எனவே அதற்கேற்றார்ப் போல் திட்டமிட்டு பயணத்தை தொடங்குங்கள்.

பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!புதன், அக்டோபர் 07, 2015

நான் அறியாத டிடி..!


லைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிமையானவராக, தொழில்நுட்ப பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் பிதாமகராக இருக்கும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைப் பற்றி எனக்கு கொஞ்சமாகத்தான் தெரியும். அவர் ஒரு தேர்ந்த கவிஞர் என்பது இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது.


சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களின் வலைப்பதிவில் டிடி எழுதிய 'ஒவ்வொரு பூக்களுமே ..' பாடலை படித்த போது அசந்துப் போய்விட்டேன். என்னவொரு சந்தம்..! பொருத்தமான வார்த்தைகள்..! திக்குமுக்காடிப் போய்விட்டேன். பாடலை முழுவதுமாக பாடிப் பார்த்தேன். எந்தவொரு இடத்திலும் சொற்கள் இடிக்கவில்லை. மிக நேர்த்தியான கவிஞனால் மட்டுமே இப்படி ஒன்றை இயற்றமுடியும். நீங்களும் இதை பாடிப்பாருங்களேன்..!ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது...
"என்ன இந்த வலைப்பூ...?" என்ற
எண்ணம் தோன்றக் கூடாது...

எந்த வலைப்பூ பதிவில்
கருத்தில்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் கருத்தெல்லாம்
மாறி போகும் மாயங்கள்...!

கருத்து தாங்கும் பதிவுகள் தானே
முன்னணி பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...

யாருக்கில்லை போராட்டம்...?
பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?
ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!

மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...

லட்சம் பதிவுகள் கண்ணோடு...
லட்சியங்கள் நெஞ்சோடு...
நம்மை வெல்ல யாருமில்லை...
உறுதியோடு போராடு...!

பதிவரே... உன் மனதை கீறி
பதிவு போடு மரமாகும்...
கருத்துரை மறுமொழி
எல்லாமே நட்பாகும்...

பதிவுகள் இன்றி வலைப்பூவா...?
நேரம் ஏனில்லை என் தோழா...?
ஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...
வலைப்பூ வானில் சிறகடிக்கும்...

மனமே ஒ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!


                                                                                                - திண்டுக்கல் தனபாலன்


தங்களின் அனுமதி பெறாமல் பகிர்ந்தமைக்கு மன்னியுங்கள் நண்பரே! LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...