திங்கள், ஜனவரி 18, 2016

கண்ணை மூடி சினிமா பார்த்த மக்கள் முதல் உலகப்போர் முடிந்த நேரம். ஆப்ரிக்காவில் பல பிரெஞ்சுக்காலனி நாடுகள் இருந்தன. பிரெஞ்சுக்காரர்கள் இந்த காலனிகளில் அடிக்கடி சினிமா காட்சிகளை காட்ட ஏற்பாடு செய்தனர். சினிமா அப்போது மேற்கத்திய நாடுகளுக்கு சொந்தமான ஒன்றாக இருந்தது. பெரும்பாலும் அதில் வெள்ளையர்களை உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் அடிமை என்பது போலவும் சித்தரிப்பார்கள். சினிமாவில் அதிகமாக காண்பிப்பதும்  வெள்ளயர்களைத்தான். அதிகமாக புகழ்  பாடியதும் வெள்ளயர்களைத்தான்.

இந்த சினிமா காட்சிகள் ஆப்ரிக்காவின் முக்கியப் பிரமுகர்களுக்கும் மற்ற மதத் தலைவர்களுக்கும் போட்டுக்காடப்பட்டன அவர்களில் பெரும்பாலானவர்கள் மத அடிப்படைவாதிகள். அவர்கள் தங்கள் மதப்படி மனித உருவத்தை இறைவனைத் தவிர மற்றவர்கள் படைப்பது தடை செய்யப்பட்ட ஒன்று என்று  நம்பினார்கள். இருப்பினும் அவர்களால் தங்கள் ஆட்சியாளர்களின் உத்தரவை மீற முடியாமல் சினிமா காட்சிக்கு வந்திருந்தார்கள். 

வெப்பம் மிகுந்த அந்த முன்னிரவுகளில் திடீரென்று இரண்டு தூண்களுக்கு இடையே வெண்திரை கட்டப்படும். விளக்குகள் அணைக்கப்படும். அதிசயக்கருவி ஒன்றில் இருந்து ஒளிக்கற்றை வெண்திரையில் பாயும். உடனே ஆப்ரிக்க மதத் தலைவர்களும் மற்றவர்களும் தங்கள் கண்களை மூடிக்கொள்வார்கள். இதனால் என்ன காட்டப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது.


ஆனால் தொடர்ந்து சினிமா காட்டப்பட்ட போது அவர்கள் மனதிலும் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. தைரியம் மிகுந்த சிலர் படிப்படியாக கண்களை திறந்து பார்க்கத் தொடங்கினர். இருந்தும் திரையில் காட்டப்பட்ட  உருவம் தெரிந்தனவே தவிர கதை புரியவில்லை.


ஒரு கார், ஒரு ஆண், ஒரு பெண், ஒரு குதிரை என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மவுன பிம்பங்களைத்தான் அவர்கள் பார்த்தனர். இவற்றை இணைத்து கதையை தெரிந்து கொள்ள இயலவில்லை. திகைப்பும் குழப்பமுமே மிஞ்சியது. தொடர்ந்து சினிமா பார்க்கத் தொடங்கிய பின்னர் தான் அவர்களுக்கு கதை புரியத் தொடங்கியது. சினிமா பார்க்காமல் கண்களை மூடிக்கொண்ட இருண்ட கண்டத்திலிருந்தும் கூட பின்னாளில் தரமான சினிமாக்கள் வெளிவந்தன என்பது தனிக்கதை.


30 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. இப்பக்கூட குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால் பல சமயங்களில் கண்களை மூட வேண்டியதுதான் இருக்கின்றது நண்பரே
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 3. இப்போ ,கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு பார்த்தாலும் பல கதைகள் புரியவில்லையே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவும் உண்மைதான். வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 4. பதில்கள்
  1. நானும்தான். வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
  2. ஒரு சிறு யோசனை. பின்னூட்டம் இடுபவர்கள் பொதுவாக ஒவ்வொரு நாளும் பல வலைத்தளங்கள் செல்லும் நிலையில் மீண்டும் வந்து இங்கு பார்க்க நேரம் இருக்காது என்பதால் பின்தொடரும் ஆப்ஷனைக் க்ளிக் செய்துவிட்டு தங்கள் இன்பாக்சுக்கு வரும் மெயில்கள் மூலமாக தொடருவார்கள். நீங்கள் பதில் அளிக்கும்போது அவாவர்கள் பெயர் சொல்லிக் குறிப்பிட்டால்தான் இன்பாக்ஸில் படிப்பவர்களுக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட பதில் பின்னூட்டம் இது என்று புரியும். இல்லா விட்டால் எது யாருக்கான பதில் என்று தெரியாமல் விட்டு விடுவோம்!

   இது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். இருந்தாலும் சொல்லத் தோன்றியது.

   நீக்கு
  3. ஒ..! இப்படி ஒன்று இருக்கிறதோ..! எனக்கு தெரியவில்லை. இனிமேல் பெயர்களையும் குறிப்பிட்டுவிடுகிறேன். ஆலோசனைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. அன்புள்ள அய்யா,

  கண்மூடிப் பழக்கம் மண்மூடிப் போக... அந்தக் காலத்திலே சினிமா அந்தப் பாடு படுத்தியிருக்கிறது.

  நன்றி.

  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சினிமாவை விட வெள்ளையர்கள் நிறைய படுத்தியிருக்கிறார்கள். வருகைக்கு நன்றி அய்யா!

   நீக்கு
 6. நல்ல அருமையான சுவாரஸ்யமான தகவல். புதிய தகவலும் கூட. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 7. கண்ணை மூடினால் எல்லாம் இருட்டாகத்தானே இருக்கும்.
  இருட்டில் கடவுள் ஒளிந்திருக்க மாட்டாராமா?கடவுள் காணாமல் போய் விடுவாராமா?.சுவாரஷ்யமான தேடல் கள் உங்களுடையது. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நிஷா!

   நீக்கு
 8. தங்களின் தகவல்கள் ஒவ்வொன்றுமே சுவாரசியம்தான் நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 9. நல்ல பதிவு தோழர்
  கண்களைத் திறந்து கொண்டு வாக்களிக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...