ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

'கடவுளின் சொந்த பூமி' - கேரளா மட்டுமல்ல!

விக்லோ மலை
நண்பர் கில்லர்ஜியின் பதிவை படிக்கும் போது மனதில் தோன்றியதுதான் இது. 'கடவுளின் சொந்த பூமி' என்ற வார்த்தைகளை கேரளா மட்டும் பயன்படுத்தவில்லை. இன்னும் சில நாடுகளும் பயன்படுத்துகின்றன.

இந்த வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் எட்வர்ட் டு போய்ஸ் என்ற கவிஞர். இவர்தான் அயர்லாந்தில் இருக்கும் விக்லோ மலைகளின் அழகையும் அதன் வசீகரிக்கும் சூழலையும் வைத்து கடவுளின் சொந்த இடம் இப்படிதான் இருக்கும் என்று அந்த வார்த்தையிலிருந்து கவிதையை தொடங்கினார். கவிதை புகழ் பெற அந்த இடமே கடவுளின் சொந்த பூமியானது. அன்றிலிருந்து அதாவது கி.பி.1807-ல் இருந்து அது கடவுளின் பூமியாக இன்றுவரை இருக்கிறது. உலகின் முதல் கடவுளின் சொந்த பூமி இதுதான். 

டென்னெசி
அதன் பின்னர் ஐரோப்பா கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய வெள்ளையர்கள் சும்மா இருப்பார்களா..! அமெரிக்காவில் இருக்கும் இயற்கை அழகு நிறைந்த இடத்திற்கெல்லாம் 'கடவுளின் சொந்த பூமி' என்று பெயர் வைத்துவிட்டார்கள். 

மிசிசிப்பி
உலகின் இரண்டாவது கடவுளின் சொந்த பூமி என்ற பெருமையை அமெரிக்காவில் உள்ள டென்னெசி என்ற இடமும், மிசிசிப்பி சமவெளியும் கி.பி.1860-ல் பெற்றன. 

நியூசிலாந்த்
அமெரிக்கா சென்று பெயரிட்ட வெள்ளையர்கள் அடுத்து குடியேறியது நியூசிலாந்த்தில். அங்கும் கடவுளின் சொந்த பூமியை தேடத் தொடங்கினார்கள். மொத்த நாடுமே அழகாய் இருந்ததால் கி.பி.1890-ல் அந்த நாட்டையே கடவுளின் நாடாக மாற்றி விட்டார்கள். 

ஆஸ்திரேலியா
அடுத்த கடவுளின் நாடாக மாறியது ஆஸ்திரேலியா. அது நடந்தது கி.பி.1900-ல். அதற்கடுத்து, 1970-ல் ஜிம்பாவே நாடு கடவுளின் சொந்த பூமியாக மாறியது. 

ஜிம்பாவே
கி.பி.1989-ல் கேரளாவில் வால்டர் மென்டேஸ் என்ற விளம்பர பட இயக்குனர் கேரளாவைப் பற்றிய விளம்பரத்தில் கடவுளின் சொந்த பூமி என்ற கேப்ஷனை பயன்படுத்தினார். இந்த வார்த்தையை அப்படியே கேரளா சுற்றுலாத் துறை உள்வாங்கி கொண்டது. அதையே முன்னிறுத்தியது. இன்று சுற்றுலாவில் பின்னி எடுக்கிறது.

கேரளா
சரி, இந்தியாவில் இன்னொரு இடமும் கடவுளின் சொந்த பூமியாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அது, அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு நடுவே அமைந்துள்ள மஜுலி என்ற தீவுதான். இயற்கை அழகு அள்ளும் இந்த இடத்தில்தான் கிருஷ்ணர் சிறுவனாக இருக்கும்போது தனது தோழர்களுடன் விளையாடியதாக கூறுகிறார்கள். அதனால் அது கடவுளின் சொந்த பூமியாக மாறியது. 

மஜுலி - அசாம்
இப்படியாக கடவுளின் சொந்த பூமிகள் நிறைய இருக்கின்றன. இதில் கடைசியாக இடம் பெற்றது தான் கேரளா. ஏதோ கேரளா மட்டும்தான் கடவுளுக்கு சொந்தம் என்று கேரளத்தவர்கள் நினைத்துவிடக் கூடாது. வேறு சில இடங்களும் கடவுளுக்கு சொந்தமாக இருக்கின்றன. 


ராஜஸ்தான் சுற்றுலாத்துறை இந்த இடத்தை 'கடவுளின் சொந்த பூமி' என்கிறது. 
கானொளியில் காணுங்கள்!


34 கருத்துகள்:

 1. எல்லோரும் ஆளாளுக்கு விளையாடுறீங்களா ? கூடிய சீக்கிரமே மோடியிடம் பேசி தேவகோட்டைதான் கடவுளின் பூமியின்னு சட்டப்படி சொல்ல வைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா இயற்கை தானே கடவுளாய் எங்கும் நிறைந்துள்ளது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்..! எல்லாமே இயற்கைதான்!
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 3. அவை மட்டும் சொந்த பூமி ,மற்றவை வாடகைக்கு எடுத்ததா ,ஒத்திக்கு எடுத்ததா ?கடவுளைப் படைத்த மனிதனுக்குத்தான் எவ்வளவு பெருந்தன்மை ?அவருக்கு சொந்தமா பூமியில் சில இடங்களையும் கொடுத்து இருக்கிறானே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியோ கடவுள் தந்த உலகில் மனிதன் கடவுளுக்கென்று சில இடங்களை ஒதுக்கியிருக்கிறானே அதுவே பெருந்தன்மைதான்!
   வருகைக்கு நன்றி ஜி!

   நீக்கு
 4. நல்லதொரு தொகுப்பு.புதிய தகவல்கள்.

  அப்படியே இதோட மலையாள மொழியாக்கமும் இடுகையிடுங்கள்.!!!
  இப்பவே தண்ணிக்கு ததிங்கினத்தோம் அப்புறம் கேட்கவே வேண்டாம்....

  நேரம் பொருத்து கீழ்க்கண்ட சுட்டி உரல்களை உரசிப் பார்க்க.


  http://coconutboard.gov.in/coconut.htm#sugar

  இது என்ன ஏன் எப்படி என்பது பற்றிய மேலதிக தகவல்களிற்கு, கீழ்க்கண்ட உரல்களினை உரசிப் பார்க்க.

  http://demo.dodotechnologies.in/digest/index.php/health/item/410-palakkad-coconut-producer-company-and-cftri-join-hands-to-take-neera-to-newer-heights

  http://www.coconutboard.nic.in/Producer-companies.htm

  http://www.coconutboard.gov.in/

  http://www.coconutboard.in/innov.htm

  http://coconutboard.gov.in/coconut.htm#sugar

  http://indpad.blogspot.in/2015/10/dovetailing-coconut-farmers-in-palakkad.html

  தொடர்பு கொள்ள வேண்டின் : http://www.keralacoconut.com/contact-us

  Padmanbhan B, Vice President - B2B sales,PCPCL +91 - 9495098243

  ----------------------------

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 5. படங்களைப் பார்த்தால் சொர்க்கமாகத்தான் தெரிகிறது!
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்!

   நீக்கு
 6. பதில்கள்
  1. எல்லாமே அருமையான இடங்கள்தான்.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. அப்போ தமிழ்நாட்டில் நிறைய கடவுளின் சொந்த பூமி உருவாக்கி விடவேண்டியதுதான்.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 8. நண்பரே மிக்சிகன் அருகே டென்னசி இல்லை இரண்டுக்கு இடையே உள்ள தூரம் (712.2 மைல்ஸ் அதுபோல கலிபோர்னியாவிற்கு அருகில் மிசிசிப்பி இல்லை இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் 2,008.4 மைல்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு கிடைத்த தரவுகளில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதை நீக்கி விட்டேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி மதுரைத் தமிழரே!

   நீக்கு
 9. எனக்கும் கேரளா கடவுளின் பூமி என்பதில் உடன்பாடில்லை...அதற்கு 1000 சொல்லலாம்...அதுசரி...புகைப்படங்கள் எப்படி எடுக்கின்றிர்கள் ? அத்தனை அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! படங்கள் குறித்த பாராட்டுக்கும் நன்றி!

   நீக்கு
 10. கண்ணுக்கு இதமான இயற்கையெழிலும் செழிப்புடை இயற்கைவளமும் நிறைந்த இடங்களெல்லாம் சொர்க்கம்தான்.. மனிதன் மனம் வைத்தால் எந்த நிலப்பரப்பையும் சொர்க்கமாக்கமுடியும். மனம் வைக்கவேண்டும்.. இயற்கையைப் பாதுகாக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். மனிதன் மனம் வைக்க வேண்டும்.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு

 11. அழகிய புகைபப்டங்களுடன் அருமையான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! உண்மையில் எல்லா இடங்களுமே கடவுளின் சொந்த பூமிதான்.

  பதிலளிநீக்கு
 12. உலகமே இயற்கை அரசியின் மடியில்தானே தவழ்கின்றது! இந்த பூமியே கடவுளின் சொந்த பூமிதான். அப்படியிருக்க ஆளாளுக்குப்பெருமை கொள்கின்றார்கள். ஒவ்வொரு இடமும் அழகுதான் அது பாலைவனமே என்றாலும். எல்லாமே அழகுதான்..சரி யார் வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளட்டும்..உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் அழகு கொள்ளை அழகு! கடவுளின் சொந்த பூமிக்கு உங்களை அம்பாசடராக நியமித்து விட்டார் போலும்!! படங்கள் அனைத்தும் மனதை அள்ளுகின்றது! சொர்கபூமி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. இயற்கை எப்போதுமே பேரழகுதான்!
   வருகைக்கு நன்றி நண்பர்களே!

   நீக்கு
 13. வணக்கம்
  அவர் அவர் பிறந்த மண் சொர்க்க பூமிதான் அண்ணா.. இலங்கை எனக்கு இரத்த பூமி. ஆவிகளின் இருப்பிடம்.என்று சொல்லலாம்... அழகிய படங்கள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 14. இயற்கை கொட்டிகிடக்கும் இடங்கள் அனைத்துமே சொர்கம்தான்.அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு
 15. இயற்கை கொட்டிகிடக்கும் இடங்கள் அனைத்துமே சொர்கம்தான்.அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...