Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது?



னிதன் மரணம் அடைந்த பின் என்ன நடக்கிறது? அவன் உயிர் எங்கே போகிறது? என்பதெல்லாம் அறிவியலால் கூட கண்டுபிடிக்க முடியாத விடை தெரியாத புதிராகவே இருக்கிறது. இதைப்பற்றி பல கருத்துக்கள் மனிதர்கள் மத்தியில் உலவுகிறது. இந்த கேள்விக்கு விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவோடு மரணத்தின் வாசல் வரை சென்று பார்த்துவிட்டு, திரும்பி உயிர் பிழைத்து வந்தவர்களை தேடிப்பிடித்து அவர்களின் அனுபவங்களை பேட்டியாக எடுத்திருக்கிறார்கள். அதை பல புத்தகங்களாக எழுதியிருக்கிறார்கள் சிலர்.

இத்தகைய அனுபவங்களை ஆங்கிலத்தில் என்.டி.இ. என்று அழைக்கிறார்கள். அதாவது 'நியர் டெத் எக்ஸ்பீரியன்ஸ்'. பொதுவாகவே நாம் அனைவரும் நம் உடல் மூலமாகவே பார்க்கிறோம். மரணம் ஏற்படும்போது மட்டுமே உயிர் உடலை விட்டுப்பிரிந்து உடலுக்கு அப்பால் இருந்து பார்க்கிறது. இப்படி உடலுக்கு அப்பால் இருந்து ஏற்படும் அனுபவங்களை 'அவுட் ஆப் பாடி எக்ஸ்பீரியன்ஸ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.


இவைகளெல்லாம் உடலில் இருந்து உயிர் பிரிந்தப்பின் ஏற்படும் அனுபவங்களாகவே இருந்தது. உயிர் பிரியும் போது நீண்ட கருமையான குகைப் பாதையில் பயணித்ததாகவும், முடிவில் பெரும் பிரகாசமான ஒளி மிகுந்த இடம் இருந்ததாகவும், சிலர் அந்த பிரகாசத்தில் தேவதைகளை கண்டதாகவும், இன்னும் சிலர், இவற்றைத் தவிர தங்கள் உடல் மற்றும் அதன் அருகே இருக்கும் பொருட்கள், நிற்கும் ஆட்கள், அவர்கள் பேசிய பேச்சுகள், இவற்றை கேட்டதாகவும் கூறினார்கள்.

இவையெல்லாம் உண்மையா? மரணத்திற்குப்பின் இப்படித்தான் நடக்கிறதா? என்று விஞ்ஞானிகளிடம் கேட்டால் 'இல்லை' என்பதுதான் பதிலாக வருகிறது. இது எல்லாம் ஒருவித மயக்கத்தில் உருவாகும் மாயக்கற்பனை பிம்பங்களின் அனுபவங்களே என்று கூறுகிறார்கள்.


மரணத்தை நெருங்கி அனுபவித்தவர்களின் அனுபவங்கள் பலவற்றையும் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வரும் மனநல மருத்துவர் சூசன் பிளாக்மோர் என்பவர் இந்த அனுபவங்கள் எல்லாம் உடலின் பார்வையில் இருந்து வேறுபட்டு, மற்றொரு கோணத்தில் புற உலகினை அறிய மூளை முற்படுவதால் ஏற்படும் கற்பனையான உணர்வு எனக்கருதுகிறார்.

கார்ல் லாகன் என்பவர் பிறப்பின் போது ஏற்படும் அதிர்ச்சியினை, மீண்டும் மூளை நடத்தும் இயக்கத்தின் விளைவாகவே கடுமையான பாதை வழியே சென்று இறுதியில் ஒளியை காண்பது என்பது பெரும்பாலானவர்களின் அனுபவம் என்று கூறுகிறார்.

மரணப்படுக்கையில் இருந்து இந்த அனுபவங்களை பெற்றவர்களுக்கு இது விஞ்ஞான விளக்கங்களுக்கு அப்பால் இருக்கிறது. இந்த உலகைவிட உண்மையாக இருப்பவைகளிடம் அவர்கள் வாழ்க்கை பெரும் மாற்றம் அடைகிறது. மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்க்கை இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.




31 கருத்துகள்

  1. வணக்கம் நண்பரே இந்தப் பதிவைப் படித்ததும் எனக்கு மிகவும் ஆச்சர்யம் காரணம் இதனைக் குறித்து நானும் ஒரு பதிவு வெகு நாட்களாக ட்ராப்டில் வைத்து இருக்கிறேன்
    இதுவரை உலக அளவில் இறந்து பிழைத்தவர்கள் 7 நபர்கள் சொல்லி இருக்கின்ற வார்த்தைகளை வைத்து நானும் சில அனுமானங்களையும் வைத்து எழுதி இருக்கிறேன் தாங்களின் சில கருத்தையும் நான் எழுதி வைத்துள்ளேன்
    மேலும் 35 வருடங்களுக்கு முன்பு எங்கள் சொந்க்காரர் ஒருவர் (நான் பார்த்ததில்லை) இறந்து அனைவரும் வந்து பிறகு விழித்தவர் கறிக்குழம்பு கேட்டு இருக்கின்றார் சாப்பிட்டவர் மீண்டும் இறந்து விட்டார்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஜி

      என்னஜி.. கறிக்குழம்பு கேட்டதா....ஹீ...ஹீ..ஹீ.....

      நீக்கு
    2. ஆஹா..! நமக்குள் என்னவொரு ஒற்றுமை ஜி! ஒரேமாதிரி சிந்திக்கிறோம். விரைவில் பதிவிடுங்கள்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
    3. இன்று என் பதிவிலும் ஒரு டாக்டர் போஸ்ட்மார்ட்டம் செய்து,இதை கண்டு பிடிக்க முயன்று இருக்கிறாரே :)

      நீக்கு
  2. செந்தில் சகோ நானும் இது குறித்த ஒரு பதிவை எழுதி பாதி எழுதி இருக்கின்றேன். இதனைக் குறித்து (இப்படித்தான் பல பதிவுகள் கிடக்கின்றன எனது கணினிக் கோப்புகளில் வேர்ட் ஃபைலாக. 25 பதிவுகள் இருக்கின்றன பாதியாக, கால் பாகமாக என்று...ஹும் மூட் இல்லை பல அறிவியல் பதிவுகள் அதில் அடக்கம்..) அறிவியல் ரீதியாக. அதாவது மூளையின் வேலைதான் என்று சொல்ல நினைத்து வந்தால் நீங்களும் அதைக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்...நம் நண்பர் திருப்பதி மகேஷ் இது பற்றி முன்பு பதிவு எழுதியிருக்கின்றார். நாங்கள் இருவரும் இது குறித்து ஸ்கைப்பில் பேசிய போது அவர் என்னை பதிவு எழுதச் சொல்ல அப்படி நான் எழுதத் தொடங்கி பாதி..ஹிஹி....

    மிகவும் தெரிந்த ஒருவர் இறந்து (மருத்துவ மனையில் டாக்டர்கள் உறுதிப்படுத்திய பின் தான் )ஒரு நாள் வைத்திருந்து, எல்லோருக்கும் சொல்லி வந்து பாடையில் வைத்துக் கொண்டு சென்று மயானத்தில் வைத்து எரிப்பதற்கு முன் எழுந்தவர் என்றால் நம்புவீர்களா...போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்பது போல்....இது நான் சிறுமியாக இருந்த போது. அப்புறம் சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு இறந்து போனார். அப்போதும் எழுந்துவிடுவாரோ என்று எல்லோரும் எரிக்கத் தயங்கிக் காத்திருந்து, உலுக்கி எழுப்பிப் பார்த்துவிட்டு சரி வேறு வழியில்லை என்று எரித்துவிட்டனர். ஆனாலும் பல நாட்கள் மக்கள் மத்தியில் ஐயோ இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாமோ பொழைச்சிருப்பாரோ என்ற பேச்சும் அடிபட்டது...அவர் பல கதைகள் விட்டார்...என்பது வேறு விஷயம்...

    ஆனால், அறிவியலில் இதற்குப் பதில் இருக்கிறது..உங்கள் பதிவிலேயே நீங்கள் சொல்லிவிட்டீர்கள் எல்லாவற்றிற்கும் இந்த மூளைதான் காரணம்....மரணத்திற்கு அப்பால் வாழ்க்கை இல்லை என்பதே அறிவியல்.

    நல்ல சுவாரஸ்யமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜிக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். எத்தனை ஒற்றுமை நம் நால்வருக்குள்ளும். ஆனால், சுடுகாடுவரை போய் இப்படி உயிர் பெற்றவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். எங்கள் ஊரில் கூட உயிர்பிழைத்த கிழவி இருக்கிறார். அதைப் பற்றி இன்னொரு பதிவில் பேசுவோம்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  3. இந்த அனுபவங்கள் பற்றிப் படித்திருக்கிறேன். 'ஒரு யோகியின் சுயசரிதை' புத்தகத்திலும் இதைப் பற்றி சுவாரஸ்யமான விவரங்கள் இருக்கும்.

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னும் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. முயற்சி செய்கிறேன்.
      வருகைக்கு நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
    2. சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு, நானும் இந்த நூலை வாங்கி வைத்து இருக்கிறேன். திரு V.G.K. அவர்களுக்கும் ஒரு பிரதியை அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறேன். இருவருமே இன்னும் படிக்கவில்லை.

      நீக்கு
    3. படித்து விரிவாக கருத்திடுங்கள் நண்பரே!

      நீக்கு
  4. உடல் என்பதே ஒரு இயந்திரம்தானே
    இயந்திரம் பழுதானால் ஓய்வுதானே நண்பரே
    நிரந்தர ஓய்வு
    தமிழ் மணம் சுற்றிக் கொண்டே இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே!
      தமிழ் மணம் சில நாட்களாகவே அப்படித்தான் இருக்கிறது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. ஆஹா எப்பவும் என் மண்டைக்குள் ராட்டினம் விடும் ஒரு கேள்வி,, அதற்கான பதில்,,
    நல்ல பகிர்வு சகோ,,,
    ஆனாலும் இன்னும் ,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் இன்னும் சந்தேகம் தீரவில்லையா? அப்படித்தானே..! எப்படி தீரும்? அப்படி தீர்ந்து விட்டால் இந்த சினிமா பாடலுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் அல்லவா..!

      //பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
      புரியாமலே இருப்பான் - ஒருவன் அவனை
      புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்//

      நம் அறிவுக்கு எட்டாத ஒரு பெரும் சக்தி இருக்கிறது. ஆத்திகர்கள் அதை கடவுள் என்கிறார்கள். நாத்திகர்கள் இயற்கை என்கிறார்கள். அவ்வளவுதான்.

      நீக்கு
  6. வணக்கம்

    நல்ல தலைப்பு அது பற்றி சொல்லிய பதில்கள் நன்று.. இந்த கேள்விக்கான விடையை யாராலும் சொல்ல முடியாது அனுமானமாக சொல்லத்தான் முடியும்..இறந்த பின் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. நினைவுகள், உணர்வுகள் அனைத்தும் மூளை எனும் இயந்திரத்தின் செயல்திறனே. இறப்பு என்பது மூளை முற்றிலும் செயலிழந்து, அதாவது மூளைச் செல்கள் உயிரிழந்து போவதுதான். எனவே இறப்பிற்குபின் எவ்வித பதிவுகளும் மூளையில் நடைபெறாத நிலையில், 'இறந்து பிழைத்தவர்கள்' என சொல்லப்படுபவர்களால் கூறப்படும் கட்டுக் கதைகளே. அதைவிட அவர்கள் முற்றிலும் இறக்கவில்லை என்பதே உண்மை. 'விண்டவர் கண்டிலர் - கண்டவர் விண்டிலர்' என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறுவது ஓரளவுக்கு உண்மை. முற்றிலும் உண்மை என்று சொல்லமுடியாது. இதைப் பற்றி இன்னுமோர் பதிவெழுத இருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    ‘பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருகின்றதென்பது மெய் தானே...’

    மரணம்... உயிரின் முற்றுப்புள்ளி.

    நாய் நரியின் மரணத்தைப் போலத்தான்...

    மனிதனின் மரணம்...!

    கடவுளைப்போல மரணத்திற்குப்பின் என்னவென்று தெரியாமலே இருப்பதால்...

    பயத்தின் காரணமாக... அதைப் பயன்படுத்தி... இல்லாத ஒன்றை இருப்பதாகக்

    காட்டும்... கட்டுக் கதைகள்... பேயாக... பிசாசாக... சொர்க்கமாக... நரகமாக...!

    நன்றி.

    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை அப்படி சாதாரணமாக கடந்து விட முடியவில்லை. அதற்குப் பின்னும் ஆழமான ஒன்று இருக்கிறது என்றே எனக்கும் படுகிறது. இன்னும் கொஞ்சம் படிப்போம்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  9. மரணம் என்பது இறப்பல்ல அது ஒரு பிறப்பு

    பதிலளிநீக்கு
  10. நாம் வாழும் வாழ்க்கை முடிவற்றது அது பல அடுக்குகளைக் கொண்டது அதுப் பற்றி நாம் அறிய வேண்டுமானால் வேதம் முக்கியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் விடை தெரியாத ஒரு கேள்விதான் இந்த மரணம்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு

  11. விடைதெரியாத கேள்விகளுள் ஒன்றனுக்கு விடைதேடும் முயற்சி. எனக்கும் இந்த அனுபவம் (நமது உடலை நாமே மேலிருந்து பார்த்தல்) எனக்கும் உண்டு.அது கனவா நிஜமா என்று சொல்ல இயலாத மோன நிலை. இன்னும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கூட இதை உணர்ந்திருக்கிறேன். அது குறித்து மனநல மருத்துவர்களிடமும் உரையாடி இருக்கிறேன். அதைப் பற்றியும் எழுதுகிறேன். வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  12. நல்ல பதிவு...ஆனாலும் என் கருத்து எல்லாம் கற்பனையாகவே இருக்கவேண்டும்...புதிய கோணத்தில் வித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள் செந்தில் சார்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை