Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பனையும் பதநீரும்

னை மரத்தை தமிழர்களோடு ஒப்பிட்டு சொல்கிறார்கள். ஆனால், பனை மரம் தென்னாப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் காணப்படுகின்றன. பனை மரத்தின் அனனைத்துப் பகுதிகளும் மனிதனுக்கு பயன்படுகிறது. பனைமரத்தின் முக்கிய விளைபொருளாக பதநீரை சொல்லலாம். 


பனைமரத்தில் இருக்கும் மஞ்சரிகளில் இருந்து பதநீரை எடுக்கிறார்கள். இந்த மஞ்சரியில் ஆண் மஞ்சரி, பெண் மஞ்சரி என்று இரண்டு வகையுண்டு. இரண்டில் இருந்துமே பதநீரை எடுக்கலாம். இந்த பதநீர் சுவை மிக்கதாகவும் கொஞ்சம் அமிலத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். காலை மற்றும் மாலையில் எடுக்கப்படும் பதநீர் சுவையாக இருக்கும்.

மழை மற்றும் காற்று அதிகம் வீசும் காலங்களில் பதநீரின் தரம் மிகவும் குறைந்துவிடும். பொதுவாக ஒரு பனைமரம் ஒரு வருடத்தில் 3 முதல் 5 மாதங்களுக்கு பதநீரை சுரக்கும். அதிலும் மூன்று மாதங்கள் மட்டுமே அதிகமாக கிடைக்கும். பதநீர் பெற இடையூறாக இருக்கும் சில ஓலைகளை வெட்டி எடுத்துவிட்டால் போதும். இந்த ஓலை வெட்டுதலை 30 சதவீதம் வரை அதிகப்படுத்தினால் பதநீர் சுரப்பு காலம் மேலும் அதிகரிக்கும். அதைவிட அதிகமாக ஓலைகளை வெட்டினால் பதநீர் சுரப்பு குறைந்து போகும் அபாயம் இருக்கிறது.


பெண் பனைகள் எப்போதும் ஆண் பனைகளைக் காட்டிலும் 33 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதலான பதநீரை தரும். ஆண் பனைகளில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையும், பெண் பனையில் பிப்ரவரி முதல் மார்ச் வரையிலும் பதநீர் கிடைக்கும். 


ஒரு பனை மரம் 150 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது. 12 ஆண்டுகளில் இருந்து பதநீர் சுரக்கத் தொடங்கும். முதல் ஆண்டு 60 லிட்டர் பதநீர் கிடைக்கும். பின் அடுத்துவரும் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு 10 லிட்டர் என்ற கணக்கில் கூடுதலாக கிடைத்துக் கொண்டே வரும். இந்த அளவு 100 லிட்டரை அடைந்தவுடன் மேற்கொண்டு கூடாமல் அதே அளவில் தொடர்ந்து கிடைக்கும். சில மரங்கள் அபூர்வமாக 200 லிட்டர் பதநீரையும் தரும். இப்படியே 100 ஆண்டுகளுக்கும் மேலாக பதநீர் தொடர்ந்து கிடைக்கும். அதன்பின் படிப்படியாக குறைந்து 150 வயதில் முற்றிலுமாக நின்று போகும். 


ஒவ்வொரு பனை மரமும் பருவ காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு லிட்டரிலிருந்து 12 லிட்டர் வரை பதநீர் தரும். பதநீரின் நன்மைகள் ஏராளம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. கோடையில் நிலவும் அதிக வெப்பத்தால் ஏற்படும் சோர்வை இது நீக்கும். பதநீர் வயிற்றுப் புண்ணை சரிசெய்யும். மலச்சிக்கலால் அவதிபடுபவர்களுக்கு பதநீர் நல்ல மருந்து. இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கங்களை சரி செய்து ஜீரணம் சீராக நடக்க உதவும். 


பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமையாக்குகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுக்கிறது. பித்தத்தை குறைக்கிறது. ரத்த சோகையை போக்குகிறது. இனப்பெருக்க உறுப்புகளை புத்துணர்வோடு செயல்பட வைப்பதால் இல்லறம் சிறக்கிறது. எனவே பதநீர் பருகுவோம். உடல் நலனை பேணுவோம்!

* * * * *

என்றென்றும் அன்புடன்..  
(எஸ்.பி.செந்தில் குமார்)




24 கருத்துகள்

  1. பதநீர் பற்றிய சுவையான பகிர்வு. படங்கள் மிகவும் அழகு. நுங்குப்படம் பார்க்கவே அழகாக உள்ளது. பகிர்வுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. பனையும் பதநீரும்
    அருமையான பதிவு...
    பதநீர் என்றாலே நாவில்
    எச்சில் சுரக்கிறது....
    இனிமையான பதிவு நண்பரே ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. பதநீரைப் போலவே நீங்கள் கொடுத்திருக்கும் செய்தியும் சுவையானது.

    பதிலளிநீக்கு
  4. படித்ததும் பதநீர் குடிக்கும் ஆசை மேலிடுகிறது,...விரிவான தகவலுக்கு மிக்கநன்றி சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  5. பனை மரத்தின் பயனை விளக்கும் அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  6. நல்ல பயன் உள்ள பகிர்வு. நேரம் அமைவு பொருத்து வந்து பார்க்க.


    And a similar technology mission by CDB is in work for Coconut. It is also taking effect in TN. URLs ll give more info. (sorry for not in Tamil - keyboard issue)

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_17.html


    ------------------------------

    முடிந்தால் இதனை முயற்சித்துப் பாருங்கள். நல்ல ஒரு உட்கொள்ளக் கூடிய பண்டம்.

    http://coconutboard.gov.in/coconut.htm#sugar

    இது என்ன ஏன் எப்படி என்பது பற்றிய மேலதிக தகவல்களிற்கு, கீழ்க்கண்ட உரல்களினை உரசிப் பார்க்க.

    http://demo.dodotechnologies.in/digest/index.php/health/item/410-palakkad-coconut-producer-company-and-cftri-join-hands-to-take-neera-to-newer-heights

    http://www.coconutboard.nic.in/Producer-companies.htm

    http://www.coconutboard.gov.in/

    http://www.coconutboard.in/innov.htm

    http://coconutboard.gov.in/coconut.htm#sugar

    http://indpad.blogspot.in/2015/10/dovetailing-coconut-farmers-in-palakkad.html

    தொடர்பு கொள்ள வேண்டின் : http://www.keralacoconut.com/contact-us

    Padmanbhan B, Vice President - B2B sales,PCPCL +91 - 9495098243

    பதிலளிநீக்கு
  7. அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
    பதநீர் பற்றிய அருமையான அலசல்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
      இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      நீக்கு
  8. பனை பற்றிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா
      இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      நீக்கு
  9. பதநீரும், நுங்கும் பற்றி நிறைய தகவல்கள். இரண்டுமே எனக்குப் பிடித்தமானவை. இப்போது பதநீர் என்ற பெயரில் வடி கட்டிய நுங்கு சாற்றில், சாக்ரின் கலந்த தண்ணீரை விற்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் எல்லாவற்றிலும் ஒரிஜினல் மறைந்து கொண்டே இருக்கிறது. வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  10. இனிப்பான விடயங்கள் இனிமை நண்பரே மனிதன் மரங்களை அழித்தும் 150 ஆண்டுகள் வாழும் மரங்கள் அழிக்காமல் இருந்தால் ? எவ்வளவு மரங்கள் இருந்திருக்கும் ?
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைக்கவே மனம் மகிழ்கிறது. ஆனால், மனிதனின் பேராசை எங்கே விட்டது?
      வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  11. நுங்கு சாப்பிட்டா நல்லது ,அதை நோகாம சாப்பிட நினைச்சாதான் தப்பு :)

    பதிலளிநீக்கு
  12. நாங்கள் வள்ளியூர், நாகர்கோயிலில் இருந்தவரை பதநீர் நல்ல பதநீர் கிடைத்ததுண்டு. நிறைய பருகியிருக்கிறோம். அது போல நுங்கும் நிறைய. இப்போது கிடைக்கும் பதநீர் சுத்தமாக நன்றாக இல்லை எனலாம். மனிதர்கள் சுயநல்வாதிகளாகி வரும் போது என்ன சொல்லுவது..பேசிப் பயனில்லை....நல்ல பகிர்வு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. If my understanding is correct, you are proximate to / in Palakkad....then please Google PCPCL or visit Big Bazar in Pkd Town and ask for Neera in the PCPCL Coconut Point there. Then let me know!

      நீக்கு
  13. நுங்கு பதநீர் பதிவு அருமை. தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை