Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பச்சோந்திகள்


து அரசியலில் நிறம் மாறும் பச்சோந்திகளைப் பற்றிய கதையல்ல. நிஜ பச்சோந்திகள் பற்றிய கதை. இயற்கையின் அற்புதப்படைப்புகளில் ஒன்றுதான் இந்த பச்சோந்திகள். 

பச்சோந்திகள் இடத்திற்கு ஏற்றவாறு தம் நிறத்தை மாற்றிக்கொண்டு எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்கின்றன. அதே வேளையில் தமக்கு வேண்டிய இரையை பிடிப்பதற்கு மறைந்து கொள்ள வசதியாகவும் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. 


பச்சோந்திகள் எல்லாவற்றாலும் நினைத்தவுடன் நிறம் மாற முடியாது. சிலவகை பச்சோந்திகள் மட்டும் தான் நிறம் மாறும் குணம் கொண்டவை. அப்படி நிறம் மாறும் பச்சோந்திகள், பிங்க், நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, கருப்பு, பிரவுன், மஞ்சள் என்று நினைத்த நொடியில் நிறம் மாறிக் கொள்ளும். 


பச்சோந்திகள் இடத்துக்கு தகுந்த மாதிரி தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்றுதான் பெருமான்மையனவர்கள் நினைக்கிறார்கள். அது அத்தனை உண்மையில்லை. இடத்தைவிட பச்சோந்தி தனது எண்ணத்துக்கு ஏற்றபடிதான் தன நிறத்தை மாற்றிக்கொள்கிறது என்பதுதான் உண்மை. அது அப்படி நிறம் மாறினால் சுற்றி இருப்பவர்களுக்கோ அல்லது மற்ற பச்சோந்திகளுக்கோ ஏதோ ஒரு செய்தி சொல்கிறது என்று அர்த்தம். நிறம் செய்தியை சொல்கிறது.


அதேபோல் சூழலுக்கு தகுந்தபடி தன்னை கண்டுபிடிக்க முடியாத படி மறைந்து கொள்ளும் முறைக்கு 'காமோ ப்ளாஜ்' என்று பெயர். அதாவது பூக்களும் இலைகளும் சேர்ந்திருக்கும் இடம் என்றால் அதே பூக்களின் நிறமும் இலைகளின் நிறமும் உடலில் யாரோ வரைந்ததுபோல் தனது நிறத்தை டிசைனாக மாற்றிக்கொள்ளும். உற்றுப்பார்த்தால் கூட இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. இந்த வகை பச்சோந்திகளை 'ஸ்மித்ட்வார்ப்' என்கிறார்கள். இப்போது இந்தவகை பச்சோந்திகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. அழியும் நிலையில் உள்ளது. 


பச்சோந்திகளுக்கு நிறத்தை கொடுப்பது அதன் நிறமிகள்தான். நமது உடலில் இருக்கும் நிறமிகள் சூரியஒளி பட்டால் நமது தோலை கறுப்பாகும். சூரியஒளியே படாவிட்டால் வெளிறிப்போகும். இதே முறையில்தான் பச்சோந்திகளின் தோலுக்கு கீழே இருக்கும் நிறமிகளும் செயல்படுகின்றன. உடலில் உள்ள வெவ்வேறு நிறமிகளை திறந்து மூடுவதன் மூலம் தங்கள் நிறத்தை மாற்றிகொள்கின்றன. 


நமது தலை முடியை கருமையாக்கி காட்டுவது கூட நிறமிகளின் இயக்கத்தால் தான். நிறமி தனது செயல் திறன் குறையும் போது முடி வெள்ளையாக மாறுகிறது. ஏனென்றால், முடியின் இயற்கையான நிறம் வெள்ளைதான். மனிதனுக்கு எப்படி வயதாகும் போது நிறமிகளின் செயல் திறன் குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை முடிகள் தலை காட்டுகிறதோ அதே போல்தான் பச்சோந்திகளின் நிறமிகளும் இருக்கின்றன. வயதாகும் போது செயல் திறன் குறைகிறது. 


பச்சோந்திகளின் நிறம் மாற வெளிச்சமும், தட்பவெப்ப நிலையும் அவசியம். இனப்பெருக்கத்தின் போது தம் இணையை கவர்வதற்காக தனது நிறத்தை மாற்றி வசியம் செய்யும். 


இப்படி நினைத்ததுடன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஆட்டமெல்லாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரைதான். வயதானால் வலிமை போய் நிறமிகளும் செயல் இழந்து பச்சோந்திகளும் வெளிறிப் போய்விடும்.நினைத்தபடி நிறத்தை மாற்ற முடியாது. வயோதிகம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது. 


பச்சோந்திகள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு பொருத்தமானவை அல்ல. ஆனால், மேலை நாட்டினர் எங்கே கேட்கிறார்கள்? வித்தியாசமாக சிந்திக்கிறேன் பேர்வழி என்று நிறையப் பேர் இவற்றை செல்லங்களாக வளர்த்து வருகிறார்கள். 


இந்தப் படத்தில் பார்ப்பது உண்மையான பச்சோந்தியல்ல. இரண்டு பெண்கள் தங்கள் உடலில் வண்ணங்களை பூசிக்கொண்டு பச்சோந்தி போல் போஸ் கொடுக்கிறார்கள். அற்புதமான கலைப்படைப்பு! 

* * * * *  

என்றென்றும் அன்புடன்..
(எஸ்.பி.செந்தில் குமார்)



23 கருத்துகள்

  1. அடேங்கப்பா புகைப்படங்கள் பளீரென்று இருக்கின்றன பிரமிப்பான விடயமே நண்பரே... இருந்தாலும் எடுத்தவுடன் நம் நாட்டை ஆளும் மண்''னர்களை பச்சோந்தி என்று சொல்லியது எனது மனதுக்கு வேதனையை அளிக்கின்றது
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே, அது என்னவோ பச்சோந்தி என்று சொன்னதுமே அவர்களின் நினைவு என்னையறியாமல் வந்துவிட்டது. ஆனாலும் நம் நாட்டு ஆட்சியாளர்கள் மீது தங்களுக்கு இருக்கும் அபிமானத்தைப் பார்க்கும்போது புல்லரித்துப் போனது.

      நீக்கு
  2. பச்சோந்தியைப் பற்றிப் பல தெரியாத தகவல்கள்! இயற்கையில் தான் எத்தனை விநோதங்கள்! இடத்தைவிட எண்ணத்துக்கேற்றபடி நிறம் மாறும் என்பது புது தகவல். பல வண்ணங்களில் உள்ள ஏழாவது படம் சூப்பர்! கடைசி படமும் அசத்தல்! சொன்னபிறகே கண்டுபிடித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் அற்புதங்களில் பச்சோந்திக்கு தனியிடம் உண்டு. அந்த பெண்களின் படமும் அதற்கு இணையான அற்புதம் கொண்டிருக்கிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  3. கட்டுரையின் செழுமைக்கு புகைப்படங்கள் அழகூட்டுகின்றன. அரிய செய்திகள் பல அறிந்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
    2. வீ தி ராஜேந்திரன்18 ஏப்ரல், 2016 அன்று PM 1:45:00 IST

      அருமையான வண்ண படைப்பு கண்னை கவரும் கலை பல விமா்சனம் உள்அடைக்கியது ரியலி சூப்பா் சாா்

      நீக்கு
  4. படங்களும் தகவல்களும் அனைத்தும் அருமை.

    கடைசி படத்தில் இரண்டு பெண்களின் பச்சோந்தி வேஷம் தத்ரூபமாக உள்ளது. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. பச்சோந்தி பத்தி அருமையான தகவல்கள்....
    கடைசி புகைப்படம் பிரமிக்க வைக்கிறது....
    அருமையான பதிவு நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. பருவத்தில் பார்த்தால் பச்சோந்திகூட அழகாய் இருக்கே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பருவத்தில் பன்றி கூட அழகாய் இருக்கும் என்று சொல்வார்கள். பருவம் எல்லா உயிர்களுக்கும் அழகுதான்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  7. இந்த பச்சோந்திகளை பார்த்துதான்.. இங்குள்ளகட்சிகள் பழகிக் கொண்டன....

    பதிலளிநீக்கு
  8. ஒரு வரியில் பாட நூல்களில் படித்த செய்திகளுக்குப் பின்னர் பல சுவராசியமான தகவல்கள் இருப்பதை அறிந்து கொண்டேன். தகவலுக்கேற்ற படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  9. பச்சோந்தி பற்றிய தகவல்களும் படங்களும் அருமை. அதுவும் அந்த கடைசி படம் அற்புதம்! நீங்கள் சொல்லியிராவிட்டால் போஸ் கொடுக்கும் பெண்கள் என்பது தெரியாமல் போயிருக்கும். அற்புதமான கலைப்படைப்புதான்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  10. அறிந்த தகவலில் வயதான பச்சோந்தி பற்றிய தகவல் புதிது. சுவாரஸ்யமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  11. மகனுக்காக வாங்கிய என்சைக்ளோபீடியாவில் உயிரினங்கள் பற்றிய தகவல்களில் இதையும் அவனுடன் சேர்ந்து படித்திருக்கிறேன். அந்த புத்தகங்கள் அனைத்தையும் ஒருவர் அவரது குழந்தைகள் புத்தகப்பிரியர்கள் படித்துவிட்டுத் தந்துவிடுகின்றோம் என்று எடுத்துச் சென்றனர். 10 வருடங்கள் ஆகின்றன இன்னும் வரவில்லை. இப்படி எங்கள் பல புத்தகங்கள் மீண்டும் வரவில்லை.

    நீங்கள் மிக அழகாகத் தமிழில் கொடுப்பது பலருக்கும் பயனளிக்கும் எனக்கும் சேர்த்துத்தான். நிறையக் கற்றுக் கொள்கின்றேன். அறிவியலையும் தமிழில் எழுத உங்களின் கட்டுரைகள் உதவுகின்றன என்றால் மிகையல்ல சகோ.

    படங்கள் அட்டகாசம். அதுவும் அந்தக் கலைநயம் மிக்க படம் சொல்லி மாளாது.

    சகோ உயிரினங்கள் பற்றித் தமிழில் நீங்கள் எழுதுவனவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவரலாம். மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சிக்கிறேன், சகோ!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை