வியாழன், ஏப்ரல் 28, 2016

எரிமலையால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


ரிடத்தில் எரிமலை வெடிக்கும்போது அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 1815-ல் ஜாவா கடற்கரை பகுதியில் உள்ள 'டோம்போரோ' தீவிலிருந்த எரிமலை வெடித்த பொது, உலகமே கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை உருவாக்கியது. அப்போது 80 ஆயிரம் பேர் இறந்தார்கள். எண்ணற்ற பறவைகளும், விலங்குகளும் கொல்லப்பட்டன.

எரிமலைகள் உருவாக்கும் அழிவைவிட பூகம்பங்கள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. பூகம்பம் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக ஒரு பெரிய நகரத்திலிருக்கும் கட்டடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து விடுகின்றன. இந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பல லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். 


அதேபோல் அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டுகள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. எரிமலை வெடிக்கும்போது, ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் சக்தி வாய்ந்த பல ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்தால் வெளிப்படும் அழிவு சக்தியைவிட, அதிக அழிவு சக்தியை அது வெளிபடுத்துகிறது. 

அப்படி எரிமலை வெடிக்கும்போது, பல டன் எடை கொண்ட கற்கள் பல மைல் தூரத்திற்கு தூக்கி எறியப்படுவதை உலக மக்கள் கண்டிருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருக்கும் சில எரிமலைகள் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று வெடித்து, மக்கள் தப்பித்துகூட ஓட சந்தர்ப்பம் தராமல் நிறைய உயிர்களை அழித்திருக்கின்றன. 


எரிமலை வெடிக்கும்போது டன் கணக்கில் எடையுள்ள பெரிய எரிகற்கள் ஆகாயத்தை நோக்கி வீசப்படுகின்றன. சில எரிமலைகள் பல டன் எடை கொண்ட விஷ வாயுக்களைக் கொண்ட மேக மூட்டத்தை உருவாக்கி, மனிதர்கள், விலங்குகள், செடி கொடிகள் போன்ற அனைத்து உயிரினங்களையும் அழித்து விடுகின்றன. 

பல எரிமலைகள் ரத்தச் சிவப்பாக காட்சி தரும் எரிமலைக் குழம்பை வெளியேற்றுகிறது. அதிக வெப்பத்தினால் கொதித்துக் கொண்டிருக்கும். இந்த தீக்குழம்ப்பு சுற்றி இருக்கும் எல்லா இடங்களுக்கும் பரவி அனைத்தையும் எரித்துவிடுகிறது.


இப்படி அழிக்கும் எரிமலைகளும் மனிதனுக்கு சில நன்மைகளை செய்கிறது. பூமிக்கு வெகு அழத்தில் இருக்கும் வளமான கனிம சத்துக்கள் நிறைந்த மண்ணையும் கற்களையும் மலைகள் மீதும் சமவெளிகள் மீதும் மிகப் பெரிய அளவில் கொண்டுவந்து சேர்ப்பது எரிமலை வெடிப்பால்தான் நடக்கிறது. இது விவசாயத்தை பெருக்க உதவுகிறது. உலகின் பல இடங்களில் எரிமலை வெளிப்படுத்தும் குழம்பை பயன்படுத்தி நீரை அதிக அழுத்தம் கொண்ட நீராவியாக மாற்றி, அந்த நீராவியை கொண்டு விசையாழிகளை சூழ வைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.

பூமிக்கு வெகு ஆழத்திலிருக்கும் பல தாதுப்பொருள்கள் வெளியே தூக்கி எறியப்படுவதால், பல தொழிலகங்களின் உற்பத்திக்கு இவை மூலப்பொருட்களாக பயன் படுகின்றன. எரிமலையின் உதவி இல்லாமல், வெகு ஆழத்தில் இருக்கும் இந்த தாது பொருட்களை மனிதனால் வெளியே எடுத்து வரவே முடியாது. இவையெல்லாம் எரிமலையால் ஏற்படும் பெரும் நன்மைகள்.
13 கருத்துகள்:

 1. ஆகா
  பெரும் அழிவில்கூட நல்லது நடக்கத்தான் செய்கிறது
  அறியாத செய்தி நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. வெயிலின் தாக்கமே கொடுமையாக இருக்கும்போது.... எரிமலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
 3. வெயிலின் தாக்கமே கொடுமையாக இருக்கும்போது.... எரிமலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
 4. அழிவைத்தரும் அதனால் சில பயன்களும் இருக்கின்றன போல! தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 5. அழிவும் ஆக்கம் தரும் என்பது சரிதான். புதிய தகவளை பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. எரிமலை எப்படிப் பொறுக்கும்? நல்ல விவரமான கட்டுரை.

  பதிலளிநீக்கு
 7. மிகச் சிறப்பான தகவல்கள் சகோ....வேலைப்பளு நேரம் இல்லாததால் நீண்ட பின்னூட்டம் இல்லை ஹிஹிஹி...

  கீதா

  பதிலளிநீக்கு
 8. தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி செந்தில் சார்....

  பதிலளிநீக்கு
 9. அருமையான பகிர்வு

  தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
  http://tebooks.friendhood.net/t1-topic

  பதிலளிநீக்கு
 10. எரிமலையால் சில நன்மைகளும் உண்டு என்று இப்பதிவைப் படித்த பிறகே தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி!

  பதிலளிநீக்கு
 11. எரிமலைகளால் பாதிப்புகள் மட்டுமே என நினைத்திருக்கையில், இதுபோல பல பயன்களும் உண்டு எனக்கேள்விப்பட ஆச்சர்யமாக உள்ளது.

  எவ்வளவோ ‘தீ’மையிலும் .... பல நன்மைகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...