Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சென்னையின் முதல் சினிமா

'படம் நம்மைப் போல அசைகிறது..!' இப்படிதான் அன்றைய மக்கள் பேசாத சலன படத்தைப் பற்றி கண்கள் விரிய சொன்னார்கள். ஆரம்பக் கால சினிமா ஒரிரு நிமிடங்கள் மட்டுமே ஒடக்கூடியவையாக இருந்தன. அந்த சில நிமிட திரைப்படம் உலகமெங்கும் வலம் வந்தது. பல இடங்களில் திரையிடப்பட்டு மக்களை மாயலோகத்தில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட திரைப்படம் சென்னைக்கும் வந்தது. 

விக்டோரியா மாளிகை
சென்னை வாசிகளுக்கு சினிமா என்ற அந்த பிரமாண்டம் மிகச் சிறிய அளவில் சுவற்றில் போட்டுக்காட்டப்பட்டது. 1897-ல் எம்.எட்வர்ட்ஸ் என்ற வெள்ளைக்காரர், ரிப்பன் பில்டிங்கிற்கு அருகில் இன்றும் இருக்கும் 'விக்டோரியா மாளிகை'யில் திரையிட்டு காட்டினார். மக்கள் வரிசையில் நின்று அதை கண்டு ரசித்தனர். 

'லீவிங் த பேக்டரி'
இரண்டு படங்களுமே சில நிமிடங்கள் மட்டுமே ஓடின. ஒன்று ஒரு தொழிற்சாலையில் வேலை முடிந்த தொழிலாளர்கள் கூட்டமாக வெளியே வரும் காட்சி. இந்த படத்திற்கு 'லீவிங் த பேக்டரி' என்று பெயர். இதுதான் உலகில் முதன் முதலாக எடுக்கப்பட்ட சினிமாவும் கூட. 

அதற்கடுத்து திரையிடப்பட்டது 'த அரைவல் ஆஃப் த டிரெயின்' இது வேகமாக வரும் ஒரு ரயிலை படம்பிடித்தது. சினிமாவில் வரும் இந்த ரயிலை பார்த்து பயந்துபோய் எழுந்து ஓடியவர்கள் அன்றைய காலகட்டத்தில் ஏராளம். திரையில் வரும் ரயில் நம் மீது மோதிவிடும் என்று பயந்தார்கள். அது படம்தான் என்பதையே அன்றைக்கு நம்ப மறுத்தார்கள். 

'த அரைவல் ஆஃப் த டிரெயின்'
இத்தகைய சினிமாவிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்து இந்த மாதிரி நிறைய படங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டன. அந்தப் படங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றைப் பார்பதற்கு ஒன்றரை பைசா கட்டணம் விதித்தார்கள். மக்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டார்கள். 

பயாஸ்கோப் என்ற படம் காட்டும் கருவி அன்று மிகவும் புகழ்ப் பெற்று விளங்கியது. வெறும் மக்னீசியம் என்ற ஒரு வஸ்த்தை வைத்து மின்சாரம் இன்றி, லைசென்ஸ் இன்றி குறைந்த செலவில் வீதி வீதியாக இதைக் காட்டினார்கள். ”பாரு பாரு பயாஸ்கோப் படத்தப்பாறு.." என்ற பாட்டையும் வைத்திருந்தார்கள். கிராமங்களில் இந்த சில நிமிட படங்களை கொண்டு சேர்த்ததில் பயாஸ்கோப் முக்கிய பங்கிருக்கிறது. 

பயாஸ்கோப்
1900-ம் ஆண்டு மக்களின் பேரார்வத்தை பார்த்து சென்னையில்  வாரிக் மேஜர் என்பவர் ஒரு நிரந்தர சினிமா தியேட்டர் கட்டினார். அதற்கு ”எலக்ட்ரிக் தியேட்டர்” என்று பெயரிட்டார். அண்ணா சாலையில்  இன்றைய 'ஜெனரல் போஸ்ட் ஆஃபிஸ்' இருக்கும் இடத்தில்தான் அன்றைக்கு எலக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. கோஹன் என்பவர் ”லிரிக் தியேட்டர்” என்ற ஒரு தியேட்டரை அண்ணா சாலையில் நிறுவினார். சில நாட்களிலேயே அந்த தியேட்டர் தீயில் எரிந்து சாம்பலானது. அதன் பின் அதே இடத்தில் கட்டப்பட்ட தியேட்டர்தான்  'எல்ஃபின்ஸ்டோன் தியேட்டர்'. இப்படிதான் சென்னையின் சினிமா வரலாறு தொடங்கியது. 


உலகின் முதல் சினிமா

'லீவிங் த பேக்டரி'


உலகின் இரண்டாவது சினிமா

'த அரைவல் ஆஃப் த டிரெயின்'


18 கருத்துகள்

  1. அதே பக்கத்தில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் பற்றியும் இருந்திருக்குமே.. அவர் பெயர்தான் பெரும்பாலும் உச்சரிக்கப்படுவது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாமிக்கண்ணு வின்சென்ட் இல்லாமல் தமிழ் சினிமாவை நகர்த்த முடியாது. இங்கு நான் 1900-க்கு முற்பட்ட சினிமாவைத்தான் சொல்லியிருக்கிறேன். சாமிக்கண்ணு 1907-க்குப்பின் தான் திரையில் வருகிறார். அவரப் பற்றி தனி கட்டுரையே எழுதிருக்கிறேன்.
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஸ்ரீராம்ஜி!

      நீக்கு
  2. காணக் கிடைக்காதப் படத்தினை இன்று தங்களால் கண்டேன்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  3. தகவல்களுக்கு நன்றி. கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றாலும் கூடுதலாகவும் அறிந்து கொண்டோம் தங்கள் பதிவிலிருந்து..நன்றி பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  4. அரிய தகவல்தான் நண்பரே மிக்க நன்றி
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
  5. மக்களுக்குப் பிடித்த சினிமாவின் ஆரம்பத்தை நோக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இதுவரை பார்த்திராத அசையும் திரைப்படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. இப்போது பார்ப்பதற்கு மிக எளிய காட்சியாக தெரிகிறது. ஆனால் அப்போது முதன் முறையாக அகன்ற திரையில் ரயில் வருவதைக் கண்டு மக்கள் பயந்து ஓடியது வியப்பனானது அல்ல. விஞ்ஞானத்தின் வளர்ச்சியை மக்கள் ஏற்றுக் கொள்ள பல காலம் பிடித்திருக்கும் . இந்த செய்தியை நான் முன்பு எங்கோ வாசித்த ஞாபகம் . அதன் பிரதியை வீடியோவில் பார்த்தது அற்புதம். இந்த ஆவணங்கள் அழியாமல் இதுவரை பாதுகாத்து வந்தவர்களை பாராட்டவேண்டும் . உங்களுக்கு கிடைக்கும் தகவல்களும் அதற்கான ஆதாரங்களும் ஆச்சரிய மூட்டுகின்றன . உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறியிருக்கும் அனைத்தும் உண்மை. அகன்ற திரை மட்டும் அப்போது இல்லை. பெரும்பாலும் சுவர்களில் சிறியதாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை