Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

விலங்குகளுக்கு தாய்ப்பால் தரும் பெண்கள்

ன்றைக்கு எல்லோருமே சுற்றுச்சூழல் சீர்கேட்டை பற்றி விலாவாரியாகப் பேசுகிறார்கள். சமீபத்தில் தான் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சீர்கேட்டின் வரலாறு இன்று நேற்று தொடங்கியது அல்ல. அது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தொடங்கி விட்டது.

உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் முதல் பிள்ளையார் சுழி போட்டவர்கள் ரோமானியர்கள்தான். அவர்கள்தான் இந்த சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், பிள்ளையார் சுழி போட்டார்கள். ஆனால் அது 'விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல்' என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள். 

மான்குட்டிக்கு பால்
கி.மு.400-க்குப் முன், அதாவது 2400 வருடங்களுக்கு முன்பு நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் ஒரு உபயம் கையாண்டார்கள். அந்த மதுவில் காரியம் கலந்த ஒரு ரசாயனத்தை கலந்தனர். இந்த ரசாயனம் மதுவுக்கு ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. அதேவேளையில், இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல் மனநிலை பாதிப்புக்கும் காரணமானது. இந்த மது உடலுக்குள் சென்று அது எலும்புகளையும் பெரிதாக பாதித்திருக்கிறது. ரோமப் பேரரசர்களின் எழும்புக்கூடுகள் பலவற்றில் மிக அதிகமான அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கி.மு.வில் ரோமப்பேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால் கி.பி.யில் கிட்டத்தட்ட 2000 வருடங்கள் கழித்து, நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்தது. 

கன்றுக்குட்டிக்கு பால்
கி.பி.1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் மன்னர் அஜய்சிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கு ஏற்ற இடமாக 'மார்வார்' என்ற வனப்பகுதியை தேர்ந்தெடுத்தார். அதுவொரு அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதி. அரண்மனை அமைக்க வேண்டும் என்றால் அங்குள்ள மரங்களை எல்லாம் வெட்டியாக வேண்டும். அந்த வேலையை முடித்து வருவதற்காக மன்னர் தன் வீரர்களை அனுப்பி வைத்தார்.

அந்த பகுதியில் 'பிஷ்ணோய்' என்ற இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இயற்கை விரும்பிகள். இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். மரங்களை வெட்ட வந்த வீரர்களை பார்த்ததும் பதறிப்போனார்கள். பிஷ்ணோய் மக்கள் தங்களால் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்தனர். இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துபோனது. வேறு வழியில்லாமல் ஒவ்வொரு பிஷ்ணோய் இனத்துப் பெண்ணும் ஒரு மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். கட்டிப்பிடித்த பெண்களை வெட்டிபோட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது.

மரத்துக்காக உயிர் விட்ட பெண்கள்
படை வீரர்களும் சலைக்காமல் பெண்களையும் அவர்கள் கட்டிப்பிடித்திருந்த மரத்தையும் வெட்டினார்கள். இப்படியாக, 363 மரங்களையும் கட்டிப் பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய பின்புதான் மன்னனின் மனம் லேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று தனது போர் வீரர்களை திரும்பி வர கட்டளை இட்டார். 

மரத்தைக் காக்கும் பெண்கள்
பிஷ்ணோய் மக்களின் இந்த போராட்டம் அமிர்த தேவி என்ற பெண்ணின் தலைமையில் நடந்தது. இது தான் 'சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதல் போராட்டம்'. அதை நினைவு படுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்வை 'சிப்கோ இயக்கம்' என்று கொண்டாடுகிறார்கள். 

பிஷ்ணோய் இன மக்கள் இயற்கையைப் போலவே விலங்குகளையும் உயிராக நேசிப்பவர்கள். மான்களை அவர்கள் தெய்வமாக வழிபடுபவர்கள். விலங்குகளின் தாய் அந்த குட்டிகள் சிறியதாக இருக்கும் போது இறந்துவிட்டால், அந்த குட்டிகளை தங்களின் தாய்ப்பாலை தந்து வளர்ப்பார்கள். 

ஆட்டுக்குட்டிக்கு பால்
ஒரு மார்பகத்தில் குழந்தையும், மறு மார்பகத்தில் குட்டி விலங்கும் பால் அருந்துவது இங்கு சர்வசாதாரணமான காட்சி. பெற்ற குழந்தைகளுக்கே தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் நாகரிக பெண்கள் மத்தியில் விலங்குகளுக்கு கூட தனது பாலைக் கொடுத்து காப்பாற்றும் பிஷ்ணோய் இன பெண்கள் மிக மிக உயர்ந்தவர்கள். அவர்களைப் போற்றுவோம்..!




31 கருத்துகள்

  1. இந்த புகைப்படங்களை முகநூலில் பார்த்த போது ஏதோ மனிதாபிமானம், இரக்ககுணம், பாலூட்ட மறுக்கும் நவீன பெண்களுக்கான குட்டு என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன். இவைகளுக்குப் பின் இப்படியான ஒரு வரலாற்று நிகழ்வு காலத்தின் வடுவாய் இருப்பதை உங்கள் பதிவின் வழி அறிந்தேன். நல்லதொரு வரலாற்றுத் தகவலை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mr. Senthil Kumar, this is really a good article and thanks. But along with that kindly provide references and proofs so that it is obvious for everyone.

      நீக்கு
    2. அருண் மனோகரன் அவர்களுக்கு,
      இந்த வலைப்பக்கத்தில் நான் பதிவிடும் பெரும்பாலான பதிவுகள் ஏற்கனவே நான் பத்திரிகைகளில் எழுதி வெளிவந்தவைதான். பத்திரிகைகளில் ஆதாரம் தருவதில்லை. தகவல் மட்டுமே தரப்படும். ஆய்வுக் கட்டுரைகளில்தான் ஆதாரம் தருவார்கள். தங்களுக்கு ஆதாரம் தேவை என்றால் இணையத்திலேயே ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. தேடிக்கொள்ளலாம்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  2. வியப்பன செய்தி நண்பரே
    போற்றுதலுக்கு உரிய பெண்மணிகள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  3. விந்தை, வேதனை, அதிசயம். அப்பெண்களின் செயல் பாராட்டத்தக்கது. அதனை வெளிக்கொணர்ந்து பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இந்த புகைப்படங்களை நானும் பார்த்து இருக்கின்றேன் ஆனால் இதன் பின்புலம் இன்றே அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு


  5. பிஷ்ணோய் இன மக்கள் இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள் என அறிந்திருக்கிறேன். ஆனால் இது இதுவரை நான் அறிந்திராத தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. பிஷ்ணோய் இன மக்கள்
    விலங்குகளுக்கு பாலூட்ட அஞ்சவில்லை
    நம்மாளுங்க
    நம்ம பிள்ளைகளுக்குப் பாலூட்ட அஞ்சுவதேன்?
    நம்மவர் அழகு கெட்டுப்போயிடுமாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகை நினைத்துக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கே பாலூட்டாத பெண்களே தற்போது அதிகம். இந்த நிலை மாறவேண்டும்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  7. இந்தப் படங்களை முகநூலில் பார்த்திருக்கிறேன்....
    அவர்கள் குறித்த வரலாற்றுச் செய்தியை தங்கள் மூலம் அறிந்தேன்...
    அருமை செந்தில் சார்.

    பதிலளிநீக்கு
  8. மரம் வெட்டும்போது மரத்தைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு போராட்டம் பற்றிய செய்தி மட்டும் அறிந்திருந்தேன். மற்ற தகவல்களும் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  9. இப்பெண்கள் விலங்குகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பதும் வாசித்ததுண்டு. அது போல மரங்களைக் கட்டிக் கொண்டு காத்த விஷயம். ஆனால் இத்தனை விரிவாக அதன் வரலாற்றை இப்போது உங்கள் பதிவு மூலமே அறிகின்றோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நெகிழ்வான பதிவு SPS
    இதுவரை அறியா தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. அறியா செய்தி. அறிந்தேன். அறியத்தந்தமைக்கு நன்றி.

    M. செய்யது
    Dubai
    த.ம +1

    பதிலளிநீக்கு
  12. கேஜ்ரி படுகொலை முழு விவரங்களுடன் தமிழக பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பாடமாக இருக்கிறது
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியில் பாடமாக இருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று.

      நீக்கு
  13. ஆனால் மானுக்கு பாலுட்டும் விசயம் புதிது
    தொடர்க தங்களின் முத்திரைப்பதிவுகளை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி

      நீக்கு
  14. விலங்குக்கு பாலூட்டும் பெண்கள் உலகெங்கும் ஆதிக்குடிகளிடம் உள்ளது. அவுஸ்ரேலிய,இந்தோனேசிய, அமேசான், ஆபிரிக்க காட்டுவாசிகளிடம் இப்பழக்கம் இருக்கிறது.
    ஆனால் நாகரீக வளர்ச்சியுற்ற, கைத் தொலைபேசியுடன் வாழும், இந்திய "பிஸ்ணோய்" இனப் பெண்களின் இப் பண்பு, அந்த பகுதியில் உள்ள விலங்குகள் பறவைகளில் அவர்கள் காட்டும் அக்கறை, புலால் உண்ணாமை போன்றவற்றை சமீபத்தில் பிரஞ்சுத் தொலைக்காட்சியில் பார்த்து வியப்பும், மகிழ்ச்சியுமடைந்தேன்.
    பிஸ்ணோய் - இனப்பெண்கள் மரங்களைக் காக்க மாண்ட செய்தி உங்கள் பதிவு மூலம் அறிந்தேன் . அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னதுபோல் வெளியுலக தொடர்பே இல்லாத பழங்குடி இன மக்களிடம் இந்த பழக்கம் உள்ளது. ஆனால், நாகரிக உலகில் அனைத்து நவீன வசதிகளுடன் வசிக்கும் பெண்கள் இன்றைக்கும் இதை கடைப்பிடிப்பது மிகுந்த ஆச்சரியமான விஷயம் தான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  15. படம் பார்த்தும் நம்ப முடியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் உண்மைக்கூட கற்பனையை மிஞ்சியதாக இருக்கும். அப்போது அதை நம்புவது கடினம்தான்.
      வருகைக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை