Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சூரியன் உருவாக்கும் வலிப்பு


சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களும் 179 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொள்ளும். 1982-ம் ஆண்டு கடைசியாக இந்த நிகழ்வு நடைபெற்றது. அடுத்து 2161-ம் ஆண்டு நிகழும். ஒருவேளை யாராவது உயிரோடு இருந்தால் பார்க்கலாம்.

சூரியனின் ஆயுள் 1000 கோடி ஆண்டுகள் . தற்போது 460 கோடி ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருக்கும். நாம் வாழும் பூமியை விட சூரியன் 13 லட்சம் மடங்கு பெரியது. சூரிய குடும்பத்தின் மொத்த எடையில் 99 சதவீதத்தை சூரியன் கொண்டுள்ளது. சூரியக் குடும்பத்தின் மற்ற எல்லா கோள்களும் சேர்ந்து ஒரு சதவீத எடையை பகிர்ந்து கொள்கின்றன. சூரியன் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.சூரியனில் ஏகப்பட்ட கரும்புள்ளிகள் உண்டு. இது 11 வருடங்களுக்கு ஒரு முறை மாறும். இது சுழற்ச்சி முறையில் மாறுகிறது. 11 வருடங்கள் கரும்புள்ளிகள் அதிகரிக்கும். அடுத்த 11 வருடங்கள் குறையும்.

கரும்புள்ளிகள்
சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் எப்போதும் 6000 கெல்வின் வெப்பம் இருக்கும். மையத்தில் 1.56 கோடி கெல்வின் வெப்பம் இருக்கும். மேற்பரப்பில் சில இடங்களில் 4500 கெல்வின் வெப்பம் காணப்படும். இப்படி குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும்  இடங்களே நமக்கு சூரியனின் கரும்புள்ளியாக தெரிகிறது. இந்த கரும் புள்ளிகளில் சிறியது 1500 கி.மீ குறுக்களவு கொண்டதாகும். பெரிய கரும்புள்ளி ஒரு லட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாகவும் உள்ளது. இந்த பெரிய கரும் புள்ளியில் நமது பூமியைப் போன்ற 5 பூமிகளை உள்ளடக்கி விடலாம். அவ்வளவு பெரியது.

கரும்புள்ளிகளின் 'க்ளோசப்'
சூரியனும் தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது. சூரியனின் மத்திய பாகம் 25.4 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதி 36 நாட்களுக்கு ஒருமுறையும் சுற்றுகிறது. இப்படி திருகிக்கொள்வது போல் சூரியன் சுற்றுவதால் தான் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.

விண்வெளியில் இருந்துவரும் கதிர்கள் பூமியில் உள்ள நைட்ரஜனை தாக்கும் போது 'கார்பன் 14' தோன்றுகிறது. இது கரும்புள்ளி ஏற்படும் காலங்களிலேயே உருவாகிறது. அப்படி கரும் புள்ளி ஏற்படும் போது காந்த சக்தி அதிகமாவதால் பூமியில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சூரியனும் பூமியும்
காந்த சக்தி அதிகமாகும் போது 'காஸ்மிக் கதிர்கள்' திசை திரும்பி  விடுகிறது. இதனால் கார்பன் 14 குறைகிறது. இப்படி குறைவதால் தாவரங்கள், பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. நமது ரேடியோ, தொலைக்காட்சிகள் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு மன நோயும் வலிப்பும் ஏற்படலாம்.

தினமும் சூரியன் ஒளிவீசுவதற்க்கு 39,744 டன் ஹைட்ரஜன் அணுக்கள் பிணைந்து ஹீலியமாக வெளிவருகிறது.



23 கருத்துகள்

  1. அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. சூரியனின் ஆயுள் பற்றிய கணக்கீட்டில் சிறு தவறு இருக்கிறது! டைப் செய்யும்போது விடுபட்டிருக்கலாம்! அறியவேண்டிய தகவல்கள். ஆனால் வகுப்பில் அமர்ந்திருப்பது போல இருக்கிறது!

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்திவிட்டேன். அறிவியல் என்றாலே பள்ளிக்கூட ஞாபகம் வந்துவிடுகிறது. வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. பயனுள்ள பதிவு
    அறியாதன அறிந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும்
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பல தகவல்கள்..... பிரமிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. அறியாத பல தகவல்கள். ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள்!

    பதிலளிநீக்கு
  6. செந்தில் குமார்,

    அறிய தகவல்களை சேகரித்து அளித்தமை பாராட்டுக்குரியது.

    பூமி தன்னைத்தானே சுற்றிகொண்டு சூரியனையும் சுற்றுகிறது என அறிந்தபோதே என் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது இதில் சூரியனும் தன்னைத்தானே சுற்றும் தகவல் அறிந்து என் தலை இன்னும் அதிக வேகமாக சுற்ற ஆரம்பித்துவிட்டது.

    அருமையான அறிவியல் தகவல்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் தலைச்சுற்றல் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  7. தகவல் அனைத்தும் சூப்பபர் சகோ,

    பகிர்வுக்கு நன்றி,,

    பதிலளிநீக்கு
  8. அறிவியல் தகவல்கள் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  10. பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல ஐயா. அருமையான படங்கள்.பாரத்து வியந்து போனேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. மிகவும் ஆச்சர்யமளிக்கும் தகவல்களைத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  12. நல்ல தகவல்கள். அறிவியல் வகுப்பில் படித்ததை மீண்டும் நினைவுப்படுத்தியது....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை