Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

புத்தகங்களை பாதுகாப்பது எப்படி?

புத்தகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன. நல்ல புத்தகம், நல்ல நண்பன். ஒருவர் படிக்கும் புத்தகங்களின் அடிப்படையில் அவருடைய பழக்க வழக்கங்கள் இருக்கும். 
புத்தகங்கள் அரிய பொக்கிஷங்கள், புத்தகங்கள் வாங்குவதைவிட அவற்றை பாதுகாப்பது கடினமான காரியம். பொதுவாக புத்தகங்களை அதற்கென்று தனியாக ஒரு அலமாரி ஒதுக்கி பாதுகாப்பது நல்லது. அலமாரிகளில் அடுக்கினால் மட்டுமே புத்தகங்களின் முனைகள் விளிம்புகள் மடங்காமல் இருக்கும். விளிம்புகள் மடங்கினால் அந்த இடங்கள் நாளடைவில் கிழிய வாய்ப்புள்ளது. அலமாரியில் அடுக்கும் போது தூசு, பூச்சிகள் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதனைத் தவிர்க்க அலமாரியில் நாப்த்தலின் உருண்டைகளை போட்டு வைக்கலாம். 

புத்தகங்களை அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் அடுக்கி வைப்பது நல்லது. ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும். படிக்கும் போது கைகளில் அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கையில் எண்ணெய் பசை, அழுக்கு போன்றவை இருந்தால் அவை புத்தகத்தில் படிந்து காலப்போக்கில் எழுத்துகள் அழிய வாய்ப்புண்டு. புத்தகங்களின் விளிம்புகளை அடையாளத்துக்காக மடிக்காமல், அதற்கு பதில் கயிறு, அல்லது சிறு அட்டைகளை வைத்து அடையாளம் ஏற்படுத்தலாம். 


புத்தகங்களில் இருந்து பூஞ்சை வாசம் வந்தால் ஒரு சிறிய காலிப் பெட்டியில் சமையல் சோடாவுடன் சிறிய பேப்பர் துண்டுகளையும் கலந்து ஒரு வார காலத்துக்கு புத்தகங்கள் வைத்துள்ள அலமாரியில் வைத்தால் அவற்றில் இருந்து வரும் கெட்ட வாடை நீங்கும். 

அடிக்கடி உபயோகப்படுத்தும் புத்தகங்கள், அதிகம் பயன்படுத்தாத புத்தகங்கள் என்று வரிசைப்படுத்தி அடுக்குவது சிறந்தது.அடிக்கடி பயன்படுத்தாத புத்தகங்களை தனித்தனியாக பாலிதீன் பேப்பர்களில் உறையிட்டு வைக்க வேண்டும். 


பழைய புத்தகங்கள் தொட்டவுடன் கிழிய வாய்ப்புள்ளது. இத்தகைய புத்தகங்களைப் படிக்கும் போது கை விரல்களால் பக்கங்களை திருப்புவதைக் காட்டிலும் மெல்லிய பேப்பர்கள் கொண்டு பக்கங்களை திருப்புவது நல்லது. இவற்றை டிஜிட்டல் முறையில் நகல் எடுத்து, படம் பிடித்து சேமித்து வைக்கலாம். 

புத்தக அலமாரியில் வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை போட்டுவைத்தால் பூச்சிகள் அண்டாது. அலமாரிகளை அடிக்கடி சுத்தம் செய்வது மிக அவசியம். புத்தகங்களை காப்பது என்பது செல்வங்களை சேமிப்பது போன்றதாகும். புத்தகங்களில் பொதிந்துள்ள கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமையாகும். 



8 கருத்துகள்

  1. முதலில் கடைப்பிடிக்க வேண்டியது - புத்தகங்களை எக்காரணம் கொண்டும் யாருக்கும் இரவல் தரக்கூடாது. ஆனால் நீங்கள் இரவல் வாங்கலாம். புத்தகங்களை விலைக்கு வாங்குவதை விட இந்த முறை மிகவும் சலீசானது.

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள யோசனைகள். நானும் சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளேன். பதிவாகப் போட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான ஆலோசனைகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள யோசனைகள். இரண்டு மற்றும் நான்காம் புகைப்படங்கள் சற்றே நெருடுவதைப் போலுள்ளன.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் மதியுரைகளை வரவேற்கிறேன்

    இதோ மின்நூல் களஞ்சியம்
    http://ypvn.myartsonline.com/

    பதிலளிநீக்கு
  6. அருமையான அறிவுரைகள். தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நல்ல ஆலோசனைகள். இதே போன்றுதான் கிட்டத்தட்ட. பழைய புத்தகங்களைப் பேப்பர் கொண்டு திருப்ப வேண்டும் என்பதைக் குறித்துக் கொண்டோம்.

    பப்பிகள் வாசிக்கும் படம் மிக மிக அழகு. ரசித்தோம்..வெகுவாக

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை