Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

விற்பனைப் பொருளான குடிநீர்


டந்த தலைமுறை வரை குடிக்கும் நீர் ஒரு விற்பனைப் பொருளாக மாறும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மக்களுக்கு மிக முக்கியமான அத்தியாவசியமான பொருளாக குடிநீர் இருந்தது. இப்போது அது கோடிகள் புரளும் மிகப் பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவிட்டது. 


குடிநீருக்கான வர்த்தகம் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதனை வசப்படுத்துவதற்காக முதலாளித்துவ நாடுகள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போடுகிறது. அதற்கான முதல் முயற்சிதான் நீங்கள் குடிக்கும் குடிநீர் பாதுகாப்பற்றது என்ற கருத்தாக்கம். சாதாரணமாக நமது வீடுகளில் வரும் குழாய் தண்ணீரை குடித்தால் ஆரோக்கியம் போய்விடும். நோய்க்கிருமிகள் தாக்கும். என்ற எண்ணத்தை இந்த நிறுவனங்கள் இன்று திட்டம் போட்டுப்பரப்புகின்றன. 

அதன் தாக்கம் ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த குழாய் நீரை குடித்து வளர்ந்தவர்கள் வீட்டில் எல்லாம் இன்று மினரல் வாட்டர். ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்ற கணக்கில் மாதத்திற்கு குடிநீருக்காக மட்டும் 1,500 ரூபாய் செலவழிக்கிறார்கள். குடிநீர் மாபெரும் வர்த்தகப் பொருளாய் மாறிவிட்டது. 

இந்தியாவில் ஆண்டுக்கு 552 கோடி ரூபாய்க்கு குடிநீர் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வர்த்தகத்தையும் கைப்பற்ற தான் பல பன்னாட்டு நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. நீர் விற்பனை என்பது இரண்டு வகைகளில் நடைபெறுகிறது. ஒன்று பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நீர், மற்றொன்று மினரல் வாட்டர் என்கிற பெரிய கேன்களில் விற்கப்படும் குடிநீர். இரண்டுமே உடலுக்கு நல்லது செய்பவை அல்ல. 


பாட்டில் நீரில் இனிப்பு பொருட்களோ, ரசாயனப் பொருட்களோ இருக்கக்கூடாது. சர்க்கரை சேர்க்கக் கூடாது. குறைந்த அளவு கலோரியே இருக்க வேண்டும். அதேவேளையில் பழங்கள், வாசனை பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட எசன்ஸ்களையும், சத்துப் பொருட்களையும் வாசனைப் பொருட்களையும் மிகச் சிறிய அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றின் அளவு மொத்த எடையில் ஒரு சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது. 

அப்படி ஒரு சதவீதத்திற்கு மேல் இது கூடிவிட்டால் அது பாட்டில் நீர் என்ற இனத்தில் இருந்து மாறி குளிர்பானம் என்ற பிரிவில் சேர்ந்துவிடும். சட்டப்படி எல்லா குடிநீரும் சோடியம் கலப்பு இன்றி தயாரித்திருக்க வேண்டும். இந்த குடிநீரும் அதிகபட்சம் 6 மாதம் வரைதான் பாதுகாப்பானது. 

மினரல் வாட்டர் என்பது குடிநீரில் இயற்கையில் கலந்துள்ள தாது உப்புகளைக் குறிக்கிறது. தொடர்ந்து நீரை 180 டிகிரி செண்டிகிரேட்டில் கொதிக்க வைத்த பிறகு மீதமுள்ள தாது உப்புகளின் அளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரே இடத்தில் இருந்து கிடைக்கும் நீரிலேயே கால மாற்றத்திற்கு ஏற்ப கனிமங்களின் அளவில் சிறிய வேறுபாடுகள் இருக்கும். 


ஆனால், என்னதான் மினரல் வாட்டராக இருந்தாலும் அதில் எந்தவொரு தாது உப்பும் இருப்பதில்லை என்பதே உண்மை. தொடர்ந்து இப்படி சுத்தகரிக்கப்பட்ட நீரையே பருகுவதால் நீரின் மூலம் இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் எலும்புகள் பலவீனம் அடைகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

காசு கொடுத்து மினரல் வாட்டரை வாங்குவதை விட வடிகட்டிய நீரை காய்ச்சிக் குடிப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவம் சொன்னாலும், தங்களின் வியாபரத்திற்காக பல நிறுவனங்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குழாய் நீரை கழிவு நீர் போல் சித்தரித்து மக்களை மூளைச் சலவை செய்து, அதன் மூலம் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்கின்றன என்பதே அசைக்கமுடியாத உண்மை. 



8 கருத்துகள்

  1. அருமையான வழிகாட்டல்
    தொடரட்டும் தங்கள் பணி

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. விளம்பரங்களுக்கு அடிமையாகி ,மினரல் வாட்டருக்கும் அடிமையாகிப்போன சமூகம் எப்படி திருந்தும் :)

    பதிலளிநீக்கு
  4. நம் மக்கள் விளம்பர அடிமைகள்
    தொலைக்காட்சியே சரணம் என்று இருப்பவர்கள் அல்லவா
    அதனால்தான் காய்ச்சிய நீருக்கு பதில் காசுகொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  5. நீர் வியாபாரம் அமோகம். கேரளத்தில் எங்கள் வீடுகளில் இன்னும் தண்ணீரை (கிணற்றுத் தண்ணீர் மோட்டார் வைத்துப் பிடித்துக் கொள்வோம்) எங்கள் ஊரில் கிடைக்கும் மூலிகை போட்டுக் கொதிக்கவைத்துக் குடிப்பதே வழக்கம். வெளியில் செல்லும் போதுதான் பாட்டில் தண்ணீர் வெறு வழியின்றி...

    கீதா: நீர் வியாபாரம் அபாரம். தண்ணீரினால்தான் அடுத்த உலகப் போர் வரும் என்று சொல்லுவது கூட உண்மையாகிவிடுமோ என்று தோன்றுகின்றது. எங்கள் வீட்டில் எல்லாம் நோ மினரல் வாட்டர். ஆனால் வெளியில் செல்லும் போது கொண்டு போகும் தண்ணீர் தீர்ந்துவிட்டால் பாட்டிலை நம்பித்தானே ஆக வேண்டியிருக்கு. எந்த ஊரில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது...ஆறுகளையும் நிலத்தையும்நா ப்ளாஸ்டிக் குப்பைகளையும், விஷத்தையும் எரிந்து நாசப்படுத்துகிறோம். நீர்நிலைகள் காணாமல் போகின்றன...அப்புறம் வேறு வழி??!!!

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு ஐயா.ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் குடிநீர் என்பது அசுத்தமாக வருகிறது ஐயா.காய்ச்சி வடிக்கட்டினாலும் உப்பு படிந்து காணப்படுகிறது அதனால் தான் மினரல் குடிநீரைப் பயன்படுத்துகிறோம்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. மினரல் வாட்டார்தான் குடிப்போம் என்று பெருமையோடு பேசிக்கொள்வதை நாம் இப்போது அடிக்கடி காணமுடிகிறது. எப்போது திருந்தப் போகின்றார்களோ?

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு.... எங்கேயும் இப்படி மினரல் வாட்டர் மயம்..... இது ஒரு பெரிய வியாபாரம்.....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை