Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஜி.எஸ்.எம். & சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம்

ன்று நாம் பயன்படுத்தும் மொபைல்கள் இரண்டு வகையான தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. ஒன்று ஜி.எஸ்.எம். தொழில்நுட்பம், மற்றொன்று சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம். இதில் ஜி.எஸ்.எம். என்றால் 'குளோபல் சிஸ்டம் பார் மொபைல்'  என்றும், சி.டி.எம்.ஏ. என்றால் 'கோட் டிவிஷன்  மல்டிபிள் அக்சஸ்' என்றும் அர்த்தம். 

உலகம் முழுவதும் பரவலாக இருப்பது ஜி.எஸ்.எம். என்ற தொழில் நுட்பம்தான். இது ஐரோப்பிய நாடுகளின் கண்டுபிடிப்பு. சி.டி.எம்.ஏ. என்பது அமரிக்க தொழில் நுட்பம். இதை முதன்முதலில் ராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தினார்கள். 1980-க்கு பின் பொது உபயோகத்திற்கு கொண்டு வந்தார்கள். 


சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தை விட பல வகைகளில் சிறந்தது. இந்த தொழில் நுட்பத்தில் குரல் தரம் கூடும். இரைச்சல் கொஞ்சமும் இருக்காது. வாடிக்கையாளர் பயணம் செய்து கொண்டே மொபைலில் பேசினாலும் சிக்னல் ஒரு டவரில் இருந்து ஒரு டவருக்கு மாறினாலும் அழைப்பு துண்டிக்கப்படாது. வலிமையான சிக்னல் என்பதால் தொடர் பயணத்திலும் தெளிவாக இருக்கும்.

ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தை விட இந்த தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் அதிக தூரம் வரை சென்றடையும். ஒரு பெரிய நகரம் முழுவதற்கும் 40 டவர்கள் இருந்தால் போதும். அதுவே ஜி.எஸ்.எம். என்றால் 200 டவர்களை அமைக்க வேண்டும். இதனால் சி.டி.எம்.ஏ. செலவு குறைவு. 

கட்டடங்களில் சாதாரண சிக்னல்கள் ஊடுருவி செல்வது கடினம். சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் சிக்னல்கள் சுவர்களை ஊடுருவி செல்லும். பலவீனமடையாது. இதற்கு குறைந்த மின் சக்தியே போதும், அதனால், பேட்டரி அதிக நாட்களுக்கு வரும். சிறிய பேட்டரி போதும். அதனால், மொபைல் சிறியதாகவும் எடை குறைவாகவும் வடிவமைக்க முடியும். 


சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் 'சிம் கார்ட்' கிடையாது. மொபைலின் உட்புறமே எண் பொறிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் எண்களை மாற்ற முடியாது. இந்த குறைபாடு காரணமாகவே ஒரு நல்ல தொழில்நுட்பம் இங்கு அதாவது இந்தியாவில் பிரபலமாக முடியாமல் போய்விட்டது. 

சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இயங்கி வந்த ரிலையன்ஸ், டாட்டா இண்டிகாம் போன்ற நிறுவனங்கள் கூட இப்போது ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டன என்பதே இதற்கு சாட்சி.



26 கருத்துகள்

  1. அரிய தகவல்கள் நண்பரே பகிர்வுக்கு நன்றி
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

      நீக்கு
  2. மக்கள் எவ்வழியோ ,நிறுவனங்களும் அவ்வழி சென்றுதானே ஆகணும் :)

    பதிலளிநீக்கு
  3. தெரிந்துகொள்ளவேண்டிய, இதுவரை நான் தெரிந்திராத தகவலை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  4. தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! GSM என்பது 2G என்பதும், CDMA என்பது 3G என்பதும் சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் வெவ்வேறு வகையான தொழில்நுட்பங்கள். நீங்கள் சொல்வது அலைவரிசை.! இரண்டிலுமே 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற சக்தி வாய்ந்த அலைவரிசைகள் உண்டு.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  5. Cell phone ஐ நம் இஷ்டத்திற்கு, GSM போல மாற்றிக் கொள்ள இயலாது என்பதாலேே, CDMA, popular ஆகவில்லை. ஆனால், fixed WLL (BSNL கிராமங்கனில் வழங்கும்) சேவைகளில் CDMA பயன் படுகிறது. ஒரு தகவல்: CDMA க்கு முன்னால் TDMA (Time division multiple access) என்று ஒரு டெக்னாலஜி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் சிறந்த தொழில்நுட்ப விவரங்களுக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. Cell phone ஐ நம் இஷ்டத்திற்கு, GSM போல மாற்றிக் கொள்ள இயலாது என்பதாலேே, CDMA, popular ஆகவில்லை. ஆனால், fixed WLL (BSNL கிராமங்கனில் வழங்கும்) சேவைகளில் CDMA பயன் படுகிறது. ஒரு தகவல்: CDMA க்கு முன்னால் TDMA (Time division multiple access) என்று ஒரு டெக்னாலஜி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் சிறந்த தொழில்நுட்ப விவரங்களுக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  7. திரு நடனசபாபதி அவர்கட்கு, 2G 3G 4G (LTE) என்பது bandwidths. 2G (Commonly known as GPRS) is much slower than 3G. 3G is slower than 4G.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான விவரங்களுக்கு மேலும் நன்றிகள் அய்யா!

      நீக்கு
  8. சிறிய குறைபாட்டினால் நல்லதொரு தொழில்நுட்பம் பயன்பாடு குறைந்து போனது வருத்தமான ஒன்று!

    பதிலளிநீக்கு
  9. அருமை சகோ. சிடிஎம்ஏ தொழில் நுட்ப ப்ராஜக்ட் ஒன்றில் கணவரின் தொழில்நுட்பம் வேண்டும் என ஒரு ப்ராஜெக்ட் வந்து பின்னர் அது வொர்கவுட் ஆகாததால் நின்று போனது. நல்ல தொழில்நுட்பம் ஆனால் இங்கு அது வெற்றி பெற வில்லை என்பது கொஞ்சம் வருத்தத்திற்குரியதுதான். நான் முதலில் அதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் வீட்டில் அதற்கு அனுமதி இல்லாததால் எழுதவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நல்ல தகவல் அளித்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை