Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வாங்க.. சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்..! - 2


முந்தைய பதிவின் தொடர்ச்சி..

லகம் முழுவதும் லட்சக்கணக்கில் வங்கிகள் இருந்தாலும் சுவிஸ் வங்கியில் மட்டும் நமது இந்தியர்கள் பணத்தை கோடி கோடியாய் கொண்டு போய் கொட்டக் காரணம், நம் நாட்டில் மட்டும்தான் கணக்கு காட்டாமல் சட்ட விரோதமாக எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் என்ற அடிப்படை காரணம்தான். மற்ற நாடுகளில் கணக்கில் வராமல் சம்பாத்தியம் என்பது கடினமான காரியம். இந்தியாவில் அது சுலபம் அதனால்தான் சுவிஸ் வங்கியின் 60 சதவீத கணக்குகள் இந்தியர்களுடையதாக இருக்கிறது.


சுவிஸ் வங்கியில் இரண்டு விதமான கணக்கு முறைகள் உள்ளன. ஒன்று உலகம் முழுவதும் எல்லா வங்கிகளும் பின்பற்றும் சாதாரண நடைமுறை. அதாவது கணக்கு வைத்திருப்பவரின் பெயர் வெளிப்படையாக தெரியும். டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி கிடைக்கும். இந்த முறை நமது இந்திய ஊழல்வாதிகளுக்கு பிடிக்காத முறை. இந்த முறை கணக்கை நமது இந்தியர்கள் யாரும் சுவிஸ் வங்கியில் வைக்கவில்லை என்பது தனிக்கதை. 

மற்றொரு முறைதான் இந்திய அரசியல்வாதிகளுக்கும் சட்டவிரோத தொழில் செய்பவர்களுக்கும் பிடித்தமானது. இதில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் இருக்காது. எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்தாலும் எப்படி வந்தது என்று கேட்க மாட்டார்கள். இரண்டாவது கணக்கு முறையில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் சுவிஸ் வங்கியில் வேலை செய்யும் யாருக்குமே தெரியாது. மிக உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே அது தெரியும். அவர்களும் எந்த காரணத்தைக் கொண்டும் பெயரை வெளியே சொல்லக்கூடாது. மீறி பெயரை சொன்னால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 50 ஆயிரம் சுவிஸ் ஃபிராங்க் அபராதமும் செலுத்த வேண்டும். அதனால் யாரும் கணக்கைப் பற்றி வாயை திறக்கமாட்டார்கள்.


நம்மூரில் வெறும் ஆயிரம் ரூபாயை வைத்து வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கிவிடலாம். சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்க மிக குறைந்தபட்ச தொகையாக ஒரு கோடி ரூபாய் வேண்டும். சில வங்கிகள் இந்தியர்களின் இரண்டாவது வகை கணக்கிற்கு ரூ.50 கோடியில் இருந்து 100 கோடி வரை டெபாசிட் செய்ய சொல்கிறது. நம்மூர் வங்கிகளில் இப்படி கோடி கணக்கில் டெபாசிட் செய்தால் கிடைக்கும் வட்டியில் கால்நீட்டி உட்கார்ந்து வாழ்நாள் முழுதும் சாப்பிடலாம். 

சுவிஸ் வங்கியில் இப்படி கோடிக்கணக்கில் செய்யப்படும் பணத்திற்கு ஒரு பைசா கூட வட்டி கிடையாது. மாறாக நாம் சுவிஸ் வங்கிக்கு பணம் கொடுக்க வேண்டும். கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அந்த தொகைக்கு 3 சதவீதம் சேவைக் கட்டணமாக கொடுக்க வேண்டும். உதாரணமாக நமது கணக்கில் 1000 கோடி இருந்தால் வருடத்திற்கு 30 கோடி ரூபாய் சேவைக் கட்டணமாக தரவேண்டும். நாம் தர வேண்டியதில்லை. வங்கியே நம் கணக்கில் இருந்து எடுத்து கொள்ளும். அப்படி பார்த்தால் நமது முத்துவேல் கருணாநிதி 35,006 கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் வைத்துள்ளார். (பார்க்க: முந்தைய பதிவு) அவர் ஒருவர் மட்டும் வருடத்திற்கு 105 கோடி ரூபாயை சேவைக் கட்டணமாக தருகிறார்.


ஏன் நம் பணத்திற்கே நம்மிடம் கட்டணம் கேட்கிறார்கள்? என்று கேட்டால் நமது ஊரில் வங்கி லாக்கரில் நகை, பத்திரங்கள் வைத்து கொள்வதற்கு நமது நகையாக இருந்தாலும் பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு கட்டணம் வங்கிக்கு செலுத்துகிறோம் அல்லவா.. அப்படிதான் இதுவும். நமது பணத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கிறார்களே அதற்குத்தான் அந்த பணம். 

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த சேவை பணத்தை வருடந்தோறும் கட்ட முடியாமல் மொத்த பணத்தையும் இழந்தவர்களும் இருக்கிறார்கள். வங்கி கணக்கு எண் மட்டும்தான் இங்கு மிக மிக முக்கியம் அதை மறந்துவிட்டால் அவ்வளவுதான். பலரும் ரகசியமாக இந்த கணக்கை வைத்திருப்பதால் கணக்கு எண்ணை தொலைத்துவிட்டு பணத்தை எடுக்க முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. இது கணக்கற்ற பணம் என்பதால் மற்ற வங்கிகள் போல வேறு ஆவணங்களைக் காட்டி பணத்தைப் பெற முடியாது. சேவைக் கட்டணம், மறந்தவர்கள் விட்டுப்போன பணம், வாரிசில்லாமல் கணக்கில் கிடக்கும் பணம், இப்படி ஏகப்பட்ட பணம் வங்கிகள் மூலமே வருவதால் சுவிஸ் நாட்டின் பொருளாதாரமே வங்கியை நம்பித்தான் உள்ளது. 

இங்கு கணக்கு வைத்திருப்பவர் குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது அந்த நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கையின் பேரில் தேவைப்பட்டால் சுவிஸ் வாங்கி தனது ஒத்துழைப்பையும் விவரத்தையும் தர மறுப்பதில்லை. நாளுக்கு நாள் கோடிக்கணக்கில் பணம் சேர்ந்து கொண்டே வரும் சுவிஸ் வங்கியில் நமது இந்தியர்களின் நிலை என்ன தெரியுமா?

சேவைக் கட்டணம் கட்ட முடியாமலும், கணக்கு எண் மறந்து போனதாலும் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் இழந்த பணம் 189 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல். சுவிஸ் வங்கியில் கணக்கு வைக்க மிதமிஞ்சிய பணம் மட்டும் இருந்தால் போதாது. நல்ல ஞாபக சக்தியும் வேண்டும்.

அவ்வளவுதான் விதிமுறைகள், வாங்க சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்க போகலாம்..!



13 கருத்துகள்

  1. பதில்கள்
    1. நமது 2ஜி ஊழலை விட கொஞ்சம் அதிகம்.
      வருகைக்கு நன்றி வெங்கட்ஜி!

      நீக்கு
  2. பிரமிப்பான விடயம் நண்பரே இதில் இந்தியர்கள்தான் முன்னிலை என்றால் நமது நாட்டின் லட்சணம் அழகாக தெரிகின்றது.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்ககேடுதான் என்ன செய்ய..?
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் எதுவும் எனக்கு எழப்போவதில்லை. நான்தான் அங்கே கணக்கு தொடங்கப்போவதில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு அவ்வளவு வருமானம் இல்லை என்பதால் கவலையில்லை.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  4. பிரமிப்பான விஷயம்...
    நாம அங்கிட்டெல்லாம் கணக்குத் தொடங்கப் போவதில்லை என்பதால் பயமில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயப்படும் அளவிற்கு நமது வருமானம் இல்லை என்பதே நிம்மதியான விஷயம்தான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. ம்ம்ம்.... எங்க மச்சமோ.. என்ன புண்ணியமோ.. சுவிஸ் வங்கியில் கோடிகோடியாய் வைக்கும் அளவு பணம். எழவு அதை வைத்து என்னதான் செய்வார்கள்? கூடவா வரப்போகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவு பணம் மட்டுமே நமது வாழ்வுக்கும் வசதிக்கும் பயன்படும். அதற்கு மேல சேர்க்கும் பணம் நமது நிம்மதியை குழிதோண்டி புதைத்துவிடும். வாழ்வின் நிம்மதிதான் மிகப் பெரும் சொத்து. அதையும் ஆரோக்கியத்தையும் தொலைத்துவிட்டு கோடி கோடியாய் பணம் மட்டும் வைத்திருப்பதில் எந்தவொரு பயனுமில்லை. சரியாகத்தான் சொன்னீர்கள் எழவு அதை வைத்து என்னதான் செய்வார்கள் என்று..
      வருகைக்கு நன்றி நண்பரரே!

      நீக்கு
    2. அதிகம் பேர் இப்படி இருக்கிறார்கள்

      நீக்கு
  6. வேண்டவே வேண்டாம் கணக்கும் இந்த அளவு பணமும்...

    அது சரி இத்தனைக் கோடியை எவனுக்கோ சேவைக்காகக் கட்டி அழுவதை நாம் ஊரில் மக்கள் சேவைக்காவது உபயோகிக்கலாம் தானே...நம்மூரில் எத்தனை மக்கள் ஏழ்மையில்...ம்ம்ம்ம் இத்தனையும் அவர்களுக்கு எதற்கு என்ன செய்யப் போகிறார்கள். இத்தனைக் கோடி சேவைக்காக மட்டுமே கட்டுகிறார் என்றால் எப்படி இத்தனைப் பணம் சேர்ந்தது என்று கேள்விகள் எழுகின்றது இல்லையா? அப்படி என்றால் எவ்வளவு ஊழல்! யம்மாடியோவ்....ஒரு பயனுமில்லை அவர்கள் பணத்தினால்..இங்கு நம் மக்களுக்கு உபயோகமில்லாத அந்தப் பணம்...அந்த நம்பர் மறந்து போகக் கடவ

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு
    தொடருங்கள்
    தொடருகிறோம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை