புதன், ஜூலை 06, 2016

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் மரணம்


லகம் முழுவதுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில் அம்மாக்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த தயக்கம் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் மிக அதிகமாக இருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் குறைவாக இருக்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணமாக இருப்பது தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால் மார்பகத்தின் அழகும் கவர்ச்சியும் குறைந்துவிடும் என்ற நம்பிக்கைதான். 


இந்த நம்பிக்கை இப்போது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் தாய்மார்களையும் தொற்றிக்கொண்டது. 37 சதவீத குழந்தைகளுக்குதான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இயற்கையாக தாய்ப்பால் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. இது போக தாய்ப்பால் உடல் பருமன், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், அலர்ஜி, பல் சொத்தை போன்ற நோய்கள் வராமல் குழந்தைகளை பாதுகாப்பதில் தாய்ப்பால் மிக முக்கிய பணியாற்றுகிறது. 

குழந்தைகளைப் போலவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் ஏராளமான நன்மைகளை தருகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் பாதுகாக்குகிறது. தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை உடலுறவு கொண்டாலும் கரு உருவாகாமல் தடுக்கலாம். அதுவொரு இயற்கை கருத்தடை அம்சமாக திகழ்கிறது.


குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் கொடுக்காததால் உலகம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட 8,23,000 குழந்தைகள் வருடந்தோறும் இறக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் தாய்ப்பால் கிடைக்காமல் மரணிக்கின்றன என்கிறது உலகப் புகழ் பெற்ற 'லேன்செட்' மருத்துவ இதழ். மேலும் இந்த இதழ் தாய்ப்பால் தொடர்பாக இந்தியாவில் சமீபத்தில் ஒர் ஆய்வு நடத்தியது. 

அந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், வருடந்தோறும் நிகழும் 5 வயதுக்குட்பட்ட 1,56,000 குழந்தைகளின் மரணத்தை தடுக்கலாம். 36 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதை தடுக்கலாம். 34 லட்சம் குழந்தைகளுக்கு நிமோனியா வராமல் பாதுகாக்கலாம். மார்பக புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் இறக்கும் 7 ஆயிரம் பெண்களை காப்பாற்றலாம். இந்த நோய்களுக்காக செலவிடப்படும் 4,300 கோடி ரூபாயையும் மிச்சப்படுத்தலாம். 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தைகளின் மரணத்தை தடுப்பது ஒவ்வொரு தாய்மார்களின் கடமை என்பது உணர வேண்டும். இதையும் படிக்கவும்..
தாய்ப்பால் ஏன் அவசியம்?

விலங்குகளுக்கு தாய்ப்பால் தரும் பெண்கள்..

17 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 2. இப்போது அழகு உருக்குலைந்து விடும் என்றே தாய்மார்கள் பால் கொடுப்பதில்லை...
  அருமையானதொரு கட்டுரை...
  இனிமேலா மாறப் போகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 3. அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே
  பெண்கள் தாய்ப்பாலின் அருமையினை உணர வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

   நீக்கு
 4. நல்ல பகிர்வு. பல பெண்கள் இப்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க விரும்புவதில்லை. அதுவும் தவிர வேலைக்குப் போவதையும் ஒரு காரணமாகச் சொல்லி விடுகிறார்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

   நீக்கு
 5. அவசியமான பகிர்வு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா !

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

   நீக்கு
 7. பதிவு நல்ல பதிவு. ஆனால் வேதனை ஒரு புறம்...

  தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை உடலுறவு கொண்டாலும் கரு உருவாகாமல் தடுக்கலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றா என்றே தோன்றுகிறது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருத்துவத்துறையில் நிரூபிக்கப்பட்ட விடயம் தான். வெகு சில தம்பதிகளிடம் மட்டுமே இந்த இயற்கை கருத்தடை தோற்றுப்போயிருக்கிறது.

   நீக்கு
 8. வேதனை ஒருபுறம்

  இப்போதெல்லாம் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலைப் பம்ப் செய்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொடுக்கின்றார்கள். அதற்கு ஒரு நேரம் உண்டு. ..அதற்கு மேல் அதை வைத்துக் கொள்ளக் கூடாது..

  தாய்பால் கொடுக்கும் காலம் வரை உடலுறவு கொண்டாலும் கரு தரிக்க வாய்ப்பில்லை செயற்கைத் தடை என்று சொல்லப்படுவது நடை முறையில் உறுதிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டிலில் தாய்ப்பாலை சேமித்து செல்வது வரவேற்க தக்கது. எப்படியோ குழந்தைக்கு தாய்ப்பால் கிடைத்தால் சரி.!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...