Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

உலகின் மிகப் பெரிய இயந்திரம்

லகத்திலேயே மிகப் பெரிய இயந்திரம் எங்கிருக்கிறது? அதை பார்க்க முடியுமா? என்று கேட்டால் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த இயந்திரம் ஃபிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப் பகுதியில் பூமிக்கடியில் 574 அடி ஆழத்தில் 27 கி.மீ. நீளத்தில் இருக்கிறது. மனிதன் இதுவரை உருவாக்கிய கருவிகளில் இதுதான் பிரமாண்டமானது. 


இந்தக் கருவி 1998 லிருந்து 2008 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உருவாக்கியிருக்கிறார்கள். 100 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் இயற்பியல் வல்லுனர்கள் இதை ஆக்கியிருக்கிறார்கள். இதன் பெயர் 'லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்'. 

இந்த கருவி ஒரு துகள் முடக்கி சோதனைச்சாலையாக செயல்படுகிறது. இதன் மூலம் அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டன்களை  கிட்டத்தட்ட ஒளியின் வேகமான நொடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒன்றுடன் ஒன்றாக மோதவிட்டு ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தனர். இதற்காக பூமியை விட ஒரு லட்சம் மடங்கு கூடுதலான காந்தப் புலம் உருவாக்கப்பட்டது. இந்த துகள்கள் மோதல் மூலம் 'கடவுள் துகள்' என்று கூறப்படும் 'ஹிக்ஸ் போஸான் துகள்' கண்டு பிடக்கப்பட்டது. 


இதன்மூலம் பிரபஞ்சம் மிகப் பெரிய வெடிப்பின் காரணமாக உருவானது என்பதை கண்டறியமுடிந்தது. இங்கு 3 ஆயிரம் பேர் இரவுப் பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். 


22 கருத்துகள்

  1. மிகப்பெரிய விடயம்தான் நண்பரே.
    த.ம. 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. The name boson came from " Satyendra Nath Bose".. Indian Physicist '
    -யூர்கன் க்ருகியர்

    பதிலளிநீக்கு
  3. இதை போன்றே நம்ம தேனிப் பக்கம் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப் படவிருப்பதாக சொன்னது என்னாச்சு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் மெதுவாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

      நீக்கு
  4. இதுவரையும் அறியாத விஷயம்...
    அறியத் தந்தமைக்கு நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  5. CERN பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. சுவாரசியமான தகவல்!

    பதிலளிநீக்கு
  6. இதுகுறித்து பி.பி.சி டாக்கு ஒன்று உண்டு ...
    ஒரு முறை வகுப்பில் போட்ட பொழுது பல்வேறு கேள்விகளை எழுப்பினால் ஒரு மாணவி..
    இன்று அவர் ஒரு முதுகலைப் பட்டதாரி

    காலம் எவ்வளவு வேகமாக ஓடிவிடுகிறது ..

    பதிலளிநீக்கு
  7. தங்களின் பதிவுகள் அனைத்தும் வியப்பே, மலைப்பே. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. இதைப்பற்றி ஒரு டாக்குமென்ட்ரி கூட உண்டு. பார்த்ததுண்டு. மிக நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு தகவல்...அறிவுக் களஞ்சியம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே !

      நீக்கு
  9. அண்மையில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் இருந்தேன். அப்போதே இந்த லார்ஜ் ஹெட்ரன் கொலைடர் பற்றி அறிந்தேன். இங்கே பொதுமக்களுக்கு அனுமதியில்லை அல்லவா? மிக நல்ல தகவல்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஆய்வுக்காக உள்ள இடம் என்பதால் பொதுமக்களுக்கு அனுமதியில்லைதான்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை