செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

விவசாயத்தை சீரழிக்கும் எலிகள்



விவசாயத்தில் எலிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் நெல் மற்றும் கரும்பு பயிர் செய்திருந்தால் எலிகளின் தொல்லைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதிலும் அறுவடைக்குப் பின் இவைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. 

எலிகள் சேதம் செய்வது ஒரு மடங்கு என்றால் அதனுடைய கழிவுப் பொருட்கள் மற்றும் துர்நாற்றத்தால் சேதப்படுத்தும் அளவு 30 மடங்காகும். ஒரு எலி ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 250  கிராம் வரை உணவு உட்கொள்ளும். எலியின் உடலளவோடு ஒப்பிடும் போது, அது சாப்பிடும் உணவின் அளவு மிக அதிகம். உணவு போக ஒரு எலிக்கு 40 மிலி நீரும் அன்றாடம் தேவைப்படுகின்றது. 


எலிகள் உணவு இன்றி ஏழு நாட்களும், நீர் இன்றி இரண்டு நாட்கள் வரையும் உயிர் வாழக்கூடியது. எலிகளின் கூரிய வெட்டுப்பற்கள் மாதம் தோறும் ஒரு செ.மீட்டர் வரை வளரும். இப்படியே போனால் ஒரு ஆண்டில் 12.5 செ.மீட்டர் வரை வளர்ந்துவிடும். இந்த வளர்ச்சி எலிகளுக்கு ஆபத்தானவை. அதனால் இப்பற்களின் வளர்ச்சியை எலிகள் குறைத்தாக வேண்டும். இல்லையென்றால் அதன் பற்கள் வாயை விட்டு வெளியே வளர்ந்து வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் எலி இறந்துவிடும். அதனால் பற்களின் வளர்ச்சியைக் குறைக்க எலிகள் ஏதாவது ஒரு பொருளை கடித்து கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாக கரும்பு வயல்களில் எலிகளின் சேதம் அதிகமாக இருக்கிறது. பயிர்களோடு விட்டுவிடாமல் கரும்பு வயலில் உள்ள நிலத்தடி சொட்டு நீர் பாசன குழாய்களையும் கடித்து சேதப்படுத்தி விடுகின்றன. நம் நாட்டில் எலிகளால் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு தானியங்கள் சேதமாகின்றன. 


இந்தியாவில் மொத்தம் 400 கோடி எலிகள் உள்ளன. ஒரு மனிதனின் ஒரு நாள் உணவை இரண்டு எலிகள் ஒரு நாளில் காலி செய்து விடுகின்றன. 
இந்தியாவில் மொத்தம் 71 வகையான எலி வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு வகை ஆண் பெண் பிறப்புறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டவை. இவைகளில் ஒரு எலி 18 மாதங்களில் 10 லட்சம் எலிகளை உருவாக்கிவிடும். 

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் எலிகளை பயிர் அறுவடைக்கு பின் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டியும் சமப்படுத்தியும் புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்துகிறார்கள்.


தொடர்ந்து கரும்பு சாகுபடியை தவிர்த்து கரும்புக்கு பின் பயறு மற்றும் நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து எலிகளின் தாக்குதலை ஒரளவுக்கு குறைக்கலாம். வயலில் உள்ள காய்ந்த கரும்பு சருகுகளை வயலில் பரப்புவது எலிகளை அதிகம் ஈர்ப்பதுடன் அவை பொந்துகள் அமைத்து வாழ ஏதுவாக உள்ளதால் கரும்பு தோகைகளை சுத்தம் செய்தால் எலிகளின் நடமாட்டத்தினை மற்றும் இனப்பெருக்கத்தினை குறைக்கலாம். எலிகளை கட்டுப்படுத்தினால் மகசூலை கூட்ட முடியும் என்கிறார்கள் விவசாய வல்லுநர்கள். 




24 கருத்துகள்:

  1. அடேங்கப்பா..!!! சின்னாதா இருந்தும் இவ்வளவு பெரிய வேலையை செய்யுதுங்க..!! இதில் வியப்பு ஒரு வருடத்திற்கு 2 ஆயிரத்து 500 கோடி தானியங்கள் பயனின்றி போவது தான் ஐயா.இதற்கு தீர்வு இல்லையா..??.சிந்திக்க வைத்தது நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  2. எலிகளைப்பற்றி இவ்வளவு விபரங்களா ? பிரமிப்பாக இருக்கின்றது நண்பரே அப்படியானால் பூனைகளை இறைவன் படைத்ததும் சரியே....
    த.ம. 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  3. உருவம் சிறியது என்றாலும்
    செய்யும் வேலை பெரியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. ஆனால் இயற்கைச் சுழற்சியில் எலிகளின் இருப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே.. சமீபத்தில் என் அலுவலகக் கணினியின் மௌஸ், கீ போர்ட் ஒயர்களைக் கடித்துக் குதறிய அந்த எலியை சுந்தரா டிராவல்ஸ் வடிவேலு பொல்லாத தெடிக் கொண்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொல்லாத அல்ல! 'போல' என்று படிக்கவும்... நறநற கூகிள்!

      நீக்கு
    2. இயற்கை சுழற்சியில் எலிகளுக்கும் ஒரு காரணத்தை இயற்கை வைத்திருக்கிறது. அதை பற்றி மற்றொரு பதிவில்..
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  5. சுண்டெலிதானேன்னு அலட்சியமா விட முடியாது போலிருக்கே! சிறப்பான தகவல்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான்....
    விவசாயத்தை எலிகள் சீரழித்து விடும்தான்...
    நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பாம்பையும் ,பூனையையும் இரு மடங்கு ஆக்கினால் எலிகளை ஒழித்து விடலாமோ :)

    பதிலளிநீக்கு
  8. எலிகள் கிலிகள் தான்..பூனைப்படை தேவையோ..அருமையான தகவல்..

    பதிலளிநீக்கு
  9. நுணுக்கமான,அதே சமயம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றைப் பற்றி பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  10. அப்பாடி.... அந்த பற்களைப் பார்க்கும்போதே கிலி ஏற்படுகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எலியின் பற்கள் பயங்கரமானவைதான்.
      வருகைக்கு நன்றி வெங்கட்ஜி!

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...