வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

அபார்ட்மெண்ட் மாடியில் மலை பங்களா


லமாடிகள் கொண்ட அபார்ட்மெண்ட் மீது ஒரு மாபெரும் மலை பங்களா இருந்தால் எப்படி இருக்கும்..? இப்படியொரு எண்ணம் சீனப் பேராசிரியர் ஒருவருக்கு ஏற்பட்டது. உடனே அப்படிப்பட்ட மலை பங்களாவை கட்டி ஒட்டுமொத்த அபார்ட்மென்டையும் திக்குமுக்காட வைத்துவிட்டார். 


26 மாடிகள் கொண்ட அபார்ட்மெண்டின் மீது 8,600 சதுரடி பரப்பளவில் பாறைகள் மரங்களை வைத்து, தோட்டங்கள், புல்தரையில், நிலச் சரிவுகள் போன்ற அனைத்துமுள்ள கடலோர கனவு மாளிகையைக் கட்டியிருக்கிறாரார், அக்குபஞ்சர் பேராசிரியர் ஜாங் பைகிங். இவர் தற்போது சீன அக்குபஞ்சர் வர்த்தக சங்கத்தின் தலைவராக இருக்கிறாராம். அதோடு ஹைதியன் மாவட்ட அரசியல் ஆலோசகராவும் இருக்கிறார். 

நம்மூர் அரசியல்வாதிகள் போலவே இவருக்கும் சட்டதிட்டங்களை மதிக்காமல் தன் மனம் போனபோக்கில் அபார்ட்மெண்டில் மொட்டை மாடியில் ஒரு கனவு பங்களாவை உருவாக்கிவிட்டார். இது எதுவுமே அப்பார்ட்மெண்ட் நிறுவனத்துக்கோ அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கோ தெரியாமல் நடந்தது என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் எதோ அழகுக்காக அபார்ட்மெண்ட் நிறுவனம் இதை செய்வதாகத்தான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். 


மேலே அளவுக்கதிகமாக பாரம் ஏற்ற ஏற்ற மொத்த கட்டடமும் விரிசல்விடத் தொடங்கியது. குழாய் இணைப்புகளில் பிரச்சனை வர அபார்ட்மெண்ட் வாசிகள் விழித்துக்கொண்டார்கள். தங்கள் அதிருப்தியை பதிவு செய்தார்கள். மொட்டை மாடியில் மலையை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதில் அதிரடி இசையில் லேட் நைட் பார்ட்டி வேறு நடந்ததாம். பொதுவாக இரவு நேரத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். 

மலை பங்களாவில் கட்டிய நீச்சல் குளத்தால் அடிக்கடி கீழேயிருக்கும் வீடுகளில் மழைபோல் தண்ணீர் கசிந்து கொட்டியிருக்கிறது. இத்தனை சிரமங்கள் இருந்தாலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் 6 வருடங்களாக தனது கனவு பங்களாவை காட்டியிருக்கிறார் இவர். 


சீன ஊடகங்களில் இந்த பங்களாவைப்பற்றி செய்தி வந்த பிறகேதான் அரசு அதிகாரிகளுக்கே இதைப்பற்றி தெரியவந்தது. சீன அமலாக்கத் துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும் ஜாங் சிக்கவேயில்லை. ஆனால், ஊடகங்கள் விடாப்பிடியாக விரட்டிப்பிடிக்க, பிரபலமானவர் வருகைக்காக அந்த பங்களாவை உருவாக்கியதாக சொன்னார். ஆனாலும் அவர்மீது சொல்லப்பட்ட எந்த புகாரைப் பற்றியும் அவர் கவலைப்படவேயில்லை. இப்போது அந்த மலை பங்களாவை அகற்றியிருக்கிறார்கள். சீனா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த பங்களா. மிக தாமதமாக ஜாங் 'இதுவொரு பெரிய தவறுதான்' என்று ஒத்துக்கொண்டிருக்கிறார். 
12 கருத்துகள்:

 1. கைது செய்ய வருகிறார்கள் என்றாலே மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்ளும் செயலில் ஜாங் ஈடு பட்டிருக்க மாட்டார் என்று நம்புவோம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மாட்கள் யாரும் ஐடியா கொடுக்கவில்லை போலும்.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பகவான்ஜி.

   நீக்கு
 2. ஹா... ஹா...
  அடப்பாவி... அப்பார்மெண்ட்ல மலை பங்களா கட்டினானா...?
  நம்ம பகவான்ஜி சொல்ற மாதிரி நம்ம ஆளுக பாணியை கடைபிடித்திருக்க மாட்டார்...
  பிடித்திருந்தால்... தப்பிச்சிருப்பாரோ...

  பதிலளிநீக்கு
 3. தலைப்பை பார்த்ததும் பதிவுக்குள் வந்தேன்! படத்தினை பார்த்ததும் மனதினுள் இத்தனை பாரத்தினை கட்டிடம் எப்படி தாங்கியது என நினைத்துக்கொண்டே படித்தேன். விடையும் கண்டேன். அப்பாட்மெண்ட்கள் கட்டும் போது மேல் தளங்களில் நீச்சல் குளம் கட்டவே அனுமதி மறுப்பார்கள் எனும் போது இத்தனை பெரிய கற்பாறைகளை கொண்டு உருவாக்கிய புதிய மலைசூழலை எட்டு வருடமாக கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்பது அதிசயமான செய்தி தான்.

  இதையெல்லாம் சாதனையாக சேர்க்கவே முடியாது. பழு தாங்காமல் கட்டடம் இடிந்து விழுந்திருந்தால் இது சாதனையா? சோதனையா என்பதுதெரிந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 4. எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள். வியப்பாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 5. வித்தியாசமான சிந்தனையினை செயலாக்கிக் காட்டியிருக்கிறார்

  பதிலளிநீக்கு
 6. in metro cities in india penthouses are constructed above the top floor of apartment against the rules....

  பதிலளிநீக்கு
 7. என்ன ஒரு கற்பனை! கொஞ்சம் யோசித்து கட்ட ஆரம்பிக்கும்போதே தகுந்த முன்னேற்பாடுகளுடன் வேறு யாராவது இதை வருங்காலத்தில் செய்வார்கள் என்று நம்பலாம்!

  தம +1

  பதிலளிநீக்கு
 8. சைனாவில் இது எப்படி சாத்தியம் ..?
  ஊழல் இல்லா இடமே இல்லை போல
  தம +

  பதிலளிநீக்கு
 9. ஆச்சர்யமாயிருக்கிறது! கட்டி முடிக்கும் வரை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்பதை நம்பமுடியவில்லை!

  பதிலளிநீக்கு
 10. ஆச்சர்யம்... தகுந்த முன்னேற்பாடுகளோடு ஆரம்பித்திருந்தால் நல்ல பெயர் கிடைத்திருக்கலாம்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...