திங்கள், அக்டோபர் 17, 2016

கேம்பிரிட்ஜில் படித்த இந்தியர்கள்


புகழ்பெற்ற பலரையும் உலகிற்கு வழங்கிய மாபெரும் குருகுலம் கேம்பிரிட்ஜ். மனித இனத்தின் பரிணாம தத்துவத்தை சொன்ன டார்வின் முதல் நியூட்டன் வரை பல விஞ்ஞானிகள் படித்த இடம்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
வில்லியம் வோர்ட்ஸ் வொர்த் போன்ற கவிஞர்களை உலகுக்கு அளித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தனது 800-வது ஆண்டு விழாவை 2009-ம் ஆண்டு முழுவதும் கொண்டாடியது. நமது நாட்டிலும் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பிரபலங்கள் பலரும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் மாணவர்களே.

புகழ் பெற்ற இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் கேம்பிரிட்ஜ் மாணவர். ராமானுஜத்தின் திறமையை அறிந்து அங்கு அழைத்தவர் ஜி.ஹெச்.ஹார்டி என்பவர், 1913 முதல் 1918 வரை டிரினிட்டி கல்லூரியில் படித்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராமானுஜன்
'ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி' என்ற விருது பெற்ற இரண்டாம் இந்தியர் ராமானுஜன்தான். ஹரிவம்சராய் பச்சன் என்பவரும் கேம்பிரிட்ஜ் மாணவர்தான். இந்திய திரையுலகின் சகாப்தம் என்று சொல்லப்படும், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் தந்தை இவர். கவிஞரான இவர் ஆங்கில இலக்கியத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்ற முதல் இந்தியர்.
ஹரிவம்சராய் பச்சன்

ஜவஹர்லால் நேரு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான டிரினிட்டி கல்லூரியிலும் இந்தியர்கள் படித்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பிரதமாரான ஜவஹர்லால் நேரு 1907 முதல் 1910 வரை இங்கு படித்தார். ராஜீவ்காந்தி 1970-களில் டிரினிட்டி கல்லூரியில் தான் படித்தார். இந்த கல்லூரியில் படிக்கும்போதுதான் உணவுவிடுதி ஒன்றில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை சந்தித்து, காதல் வயப்பட்டு பின்னர் திருமணமும் செய்து கொண்டது எல்லாமே உலகம் அறிந்த தனிக்கதை.

சோனியா - ராஜிவ் காந்தி
இந்திய கிரிக்கெட்டின் தந்தையாக கருதப்படும் ரஞ்சித் சிங்ஜி 1888 முதல் 1891 வரை கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியில் படித்தவர். டாட்டா குழுமத்தின் நிறுவனரான சர் தொரோப்ஜி டாட்டா, இந்திய தொழில் நுட்ப துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியவர், 1877 முதல் 1879 வரை இங்கு படித்தவர். இந்தியாவுக்கு நோபல் பரிசு பெற்று தந்த பொருளாதார நிபுணர் அமர்தய சென் 1957 முதல் 1963 வரை டிரினிட்டி கல்லூரியில் பயின்றார்.

சர் தொரோப்ஜி டாட்டா
மற்றொரு பொருளாதார மேதையும் இந்தியாவின் முன்னாள்  பிரதமருமான மன்மோகன்  சிங் கேம்பிரிட்ஜில் படித்தவர்தான்.

மகள்களுடன் மன்மோகன் சிங் - 1967





10 கருத்துகள்:

  1. இந்தியாவில் இருந்து படிக்கச் சென்று இங்கே வந்தவர்களின் ஒருவர் மேலாவது உங்களுக்கு மரியாதை வரும் அளவிற்கு இங்கே வாழ்ந்து இருக்கின்றார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தகவலை எழுதும்போதே எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. என்ன செய்ய அவ்வளவு உயர்ந்த பல்கலைக்கழகத்தால் கூட நல்ல இந்தியர்களை உருவாக்க முடியாவில்லை? என்பதுதான் வேதனை. அந்த அளவிற்கு நமது பெருமை பரவியிருக்கிறது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  2. அரிய தகவல்களைத் தரும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். தாங்கள் தெரிவு செய்யும் புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. அரிய தகவல்கள் நன்று நண்பரே வாழ்த்துகள்
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

      நீக்கு
  4. Sonia Gandhi DID NOT study in Cambridge University. She lived in Cambridge village and worked as a bar maid.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் செய்துவிட்டேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...