Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பாஸ்போர்ட் வந்த பாதை


ன்று 'பாஸ்போர்ட்' என்றால் எல்லோருக்கும் தெரிகிறது. வெளிநாட்டுப் பயணமும் வெளிநாட்டு வேலையும் சுலபமான பின்பு பாஸ்போர்ட் என்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. பாஸ்போர்ட்டில் அதை வைத்திருப்பவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய் - தந்தை பெயர், கணவன் அல்லது மனைவி பெயர், பாஸ்போட் எண், வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் பெயர் என்ற பல விவரங்கள் இருக்கும். இது இல்லாமல் வெளிநாட்டுப் பயணத்தை நினைத்துப் பார்க்க கூட முடியாது. 

வெளிநாடு செல்வதற்கு பயன்படும் பாஸ்போர்ட்டை தமிழில் 'கடவுச்சீட்டு' என்று அழைப்பது வழக்கம். முன்பெல்லாம் போலீசார் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அதாவது, தங்களது காவல் நிலைய எல்லையை கடந்து, பிற இடங்களுக்கு வேலை நிமித்தமாக செல்லும்போது கடவுச்சீட்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 

இந்திய பாஸ்போர்ட்டின் அமைப்பு
பாஸ்போர்ட் என்ற முறை குறித்து ஹீப்ரு மொழியில் உள்ள பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு.405-ல் பாரசீக மன்னன் ஆர்டெக்ஸ்ரெக்ஸ் என்பவரிடம் வேலைப்பார்த்த நேகமியா என்ற அலுவலர் ஜுதேயா என்ற இடத்துக்கு செல்ல அனுமதி கேட்டார்.

அப்போது அந்த மன்னன் ஆற்றுக்கு மறுபுறம் உள்ள ஆளுநர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அரசவை அலுவலர், சம்பந்தப்பட்ட பகுதி ஆளுநர்களின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியில் வரும்போது, அவரது பயணத்துக்கு தடை எதுவும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவே பாஸ்போர்ட் வரலாற்றின் துவக்கம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். 

ஐஸ்வர்யாராய் பாஸ்போர்ட்
இஸ்லாமிய கலீஃபாக்களின் ஆட்சியில் நாடு கடந்து செல்லும்போது இதே முறையில் 'ஃபாரா-ஆ' என்ற ரசீது வழங்கப்பட்டது. அந்த ரசீதில் ஜகாத் என்ற ஏழைகளுக்கான வரி செலுத்தியுள்ளார் என்றும், பாதுகாப்பு வரி செலுத்தியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுவே பயணிகளுக்கான முதல் பாஸ்போர்ட் என்று கூறப்படுகிறது.

பாஸ்போர்ட் என்ற வார்த்தை கடல், துறைமுகம், நுழைவாயில் ஆகியவற்றைக் கடந்து செல்வது என்ற வார்த்தையிலிருந்து உருவானது. அப்படிப்பட்ட பாஸ்போர்ட்டுக்கு 'சீ போர்ட்ஸ்' மற்றும் 'பாஸ் த்ரூ தி கேட்' என்ற பெயரும் இருந்தது. 

பாகிஸ்தான் பாஸ்போர்ட்
இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஹென்றி கி.பி. 1540-ம் ஆண்டு முதல்முறையாக வெளிநாட்டினர் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக பாஸ்போர்ட் முறையை அமல்படுத்தினார். இதுவே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முதல் உலகப்போரின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பாஸ்போர்ட் கட்டாயம் என்ற நிலைக்கு முன்னேறியது. 

இப்போது சாதாரண பாஸ்போர்ட், அலுவலக பாஸ்போர்ட், தூதர்களுக்கான பாஸ்போர்ட், அவசர பாஸ்போர்ட், குழு பாஸ்போர்ட், குடும்ப பாஸ்போர்ட் என்று பல வகையான பாஸ்போர்டுகள் இருக்கின்றன. 1980-ல் தான் 'சர்வதேச சிவில் விமான போக்குவரத்துக் கழகம்' பாஸ்போர்ட் குறித்து சட்டத்திட்டங்களை வரையறுத்தது. அதன்பிறகே ஒவ்வொரு நாடும் தங்களது வசதிக்கு ஏற்ப பாஸ்போர்ட் விதிகளை கொண்டுவந்தன. 

பங்களாதேஷ் பாஸ்போர்ட்
தற்போது தீவிரவாதம் பெருகி வருவதால் பாஸ்போர்ட் குறித்த சட்டதிட்டங்களும் கெடுபிடிகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. வருங்காலத்தில் பாஸ்போர்ட் எடுப்பது பெரும் சாதனைப்போல் மாறினாலும் மாறலாம்..!




14 கருத்துகள்

  1. இதைப்படிக்கவும் நானும் கடவுச்சீட்டு எடுக்க வேண்டும் என்ற ஆசை வருகின்றது நண்பரே
    த,ம,2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட தலைவரே, இது தெரியாமல் நான் வெளிநாட்டுக்கு போகணும்னு கடவுச்சீட்டெல்லாம் எடுத்து வைத்திருக்கிறேனே..!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  3. அரிய தகவல்களை அறியத்தரும் உங்கள் முயற்சி போற்றற்குரியது.

    உண்மையில் இதுவும் ஓர் ஆசிரியப்பணிதான்.

    தங்கள் தேடலும் வாசிப்பும் காணப் பிரமிப்பு.

    த ம

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. வழக்கம்போல் மிகவும் அருமையான தகவல்கள்.

    ஒவ்வொன்றின் அவசியமும், அதன் வரலாறும், படிப்படியான நவீன முன்னேற்றங்களும் அறிய ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் உள்ளன. பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. பாஸ்போர்ட் குறித்து விவரமான தகவல்கள் அடங்கிய பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  7. நல்ல தகவல்கள் அறிய முடிந்தது. குறிப்பாக பைபிளிலிருந்தது புதிய தகவல். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை