சனி, அக்டோபர் 01, 2016

இளைஞர்களின் 'ஹேர் கலரிங்'ரே மாதிரியாக நடந்துபோகும் கூட்டத்தில் தன்னை வேறுபடுத்திக் காட்ட பல முயற்சிகளை இளைஞர்கள் எடுக்கிறார்கள். அதில் ஒன்றுதான் ஹேர் கலரிங். ஆரம்பக் காலத்தில் 'டை' என்ற பெயரில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெட்கப்பட்டு பூசிக்கொண்ட ஒரு சமாச்சாரம்தான் இன்று கலரிங் என்ற பெயரில் இளைஞர்களையும் வசியப்படுத்தி வைத்திருக்கிறது. 


முன்பெல்லாம் அடர்த்தியான கருமை மட்டுமே அதன் நிறமாக இருந்தது. இன்று, விதவிதமான வண்ணங்களில் வந்துவிட்டது. டையின் நவீன பெயர்தான் ஹேர் கலரிங் என்பது. இதன் மூலம் விருப்பப்பட்ட வண்ணத்தை தலையில் பூசிக்கொண்டு ஆனந்தப் பட்டுக்கொள்ளலாம். இதற்காக நூற்றுக்கணக்கான வண்ணங்கள் கிடைக்கின்றன. ஆனாலும், இந்தியர்கள் ஐந்தாறு வண்ணங்களை பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். மற்ற வண்ணங்கள் எல்லாம் வெளிநாட்டினருக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்கள். 


இந்த கலரிங் 15 வயது முதல் 60 வயது வரை செய்து கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் முடியின் தன்மையைப் பொறுத்து அதன் செயல்படும் நேரம் மாறும். வெளிநாட்டினருக்கு முடி மென்மையாக மெலிதாக இருப்பதால் கலரிங் செய்வதற்கு 10 நிமிட நேரம் போதுமானது. இந்தியர்கள் முடி சற்று முரட்டுத்தனம் கொண்டதால் 20 நிமிடம் தேவைப்படுகிறது. மிகவும் தடிமனனான முடி கொண்ட நீக்ரோக்களுக்கு 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது. 


இன்னமும் கூட 80 சதவீதம் பேர் நரைமுடியை மறைப்பதற்குத்தான் கலரிங் செய்கிறார்கள். மீதமுள்ள 20 சதவீதம் பேரே தங்கள் முடி வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று கலரிங் செய்து கொள்கிறார்கள். இப்படி ஹேர் கலரிங் செய்வதால் என்ன பயன் என்றால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வயதானவர்களுக்கு வேண்டுமானால் நரை முடியை மறைக்க பயன்படலாம். அந்த தோற்றம் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கலாம். 


மற்றபடி சரியான பிரசஸில் கலரிங் செய்யாவிட்டால் முடி உதிரும், சிலருக்கு முகமும் கறுப்பாகும். இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டே ஹேர் கலரிங் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். 18 கருத்துகள்:

 1. முடிகளுக்கு நிறமூட்டலாம்
  பக்க விளைவுகள் இல்லாத வரை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்க விளைவுகள் நிச்சயம் உண்டு.
   வருகைக்கு நன்றி நன்பரே!

   நீக்கு
 2. நான் ஒருவனை சமீபத்தில் பார்த்தேன் நண்பரே சுத்தமான பச்சை நிறத்தில்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பச்சை நிறமே! பச்சை நிறமே என்று பாடியிருக்கலாம்.

   நீக்கு
 3. தில்லியில் இந்த கலரிங் இளைஞர்களிடம் நிறைய பிரபலம்.... பல பெண்களும் இப்படி கலரிங் செய்து கொள்கிறார்கள்.....

  ஆளடிக்கும் கலரில் பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெருநகரங்களில் இது தவிர்க்க முடியாத நாகரிகம்.
   வருகைக்கு நன்றி வெங்கட்ஜி!

   நீக்கு
 4. கலரிங்க் ரொம்பவே பிரபலமாகி வருகிறது. நம்ம ஊரில் நடுவயதுப் பெண்கள் நரை முடியை மறைக்கவே மருதாணிக் கலர் செய்து கொள்கிறார்கள். ஒரு சிலருக்குப் பொருந்துகிறது. ஒரு சிலருக்குப் பொருந்துவதில்லை. அதுவும் வித விதமாக இளைஞர்கள் கலர் செய்து கொள்கிறார்கள். இதில் சில பக்கவிளைவுகள் இருப்பதாகத்தான் தெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு தெரிந்த ஒரே கலரிங் கருப்பு மட்டும்தான். இளைஞர்களுக்கே பல வண்ணங்கள் தெரிகின்றன.
   வருகைக்கு நன்றி நண்பர்களே!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் ஆச்சரிய கருத்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 6. கலரிங் செய்து கொள்ளாத இளம் வயதினரைப் பார்க்கவே முடியாதபடிக்கு மிகப் பிரபலமாயிருக்கிறது. பக்க விளைவுகள் ஏற்பட்டால் பிரச்சினை தான். புகைப்படங்கள் நன்றாய் உள்ளன.

  பதிலளிநீக்கு
 7. வண்ணமுடி அதிசயம் கண்டேன். அது என்ன பெண்களின் புகைப்படம் மட்டுமே அதிகமாக உள்ளது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் ஆண்களைவிட பெண்களே அதிகம். மற்றொன்று பெண்களுக்கு நீளமான முடி என்பதால் கலரிங் எடுப்பாக தெரிகிறது. ஆண்களுக்கு அவ்வளவு ஈர்ப்பாக தெரியவில்லை. அதனாலே பெண்கள் இங்கு முன்னிலை வகிக்கிறார்கள்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...