வியாழன், நவம்பர் 17, 2016

இந்தியாவின் முதல் பெண் போட்டோகிராபர்ந்தியாவின் முதல் பெண் போட்டோகிராபர் ஹோமாய் வியாரவல்லா என்பவர். சுதந்திர இந்தியாவில் செங்கோட்டையில் நடந்த முதல் குடியேற்றத்தை படம் பிடித்தவர் இவர்தான். அதுமட்டுமல்லாமல் இந்திரா காந்தி தன் தந்தை நேருவுடன் இருந்த தருணங்கள். நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரி இறுதி நிமிடங்கள், இரண்டாம் உலகப் போருக்கான தயாரிப்புகள், ஜாக்குலின் இந்திய  வருகை, 1956-ல் தலாய் லாமாவின் முதல் இந்திய வருகை, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒப்புதல் அளித்த காங்கிரஸ் கூட்டம். மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற தருணம், பிரதமர் பதவியேற்ற பின் நேரு நிகழ்த்திய உரை, வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய வருகைகள் என்று இவர் இந்தியாவின் பல வரலாற்றுச் சம்பவங்களை தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். 

பிரதமராக நேரு
பெண்களை பள்ளிக்கூடத்துக்கு கூட அனுப்பாத அந்த காலத்திலேயே ஹோமாய் மும்பையின் புகழ்பெற்ற ஜே.ஜே. காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் பட்டயப்படிப்பு முடித்தார். பின்னர் 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் பணியாற்றி வந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் நொடியில் இருந்து தலைவர்களை கூடவே இருந்து படம் எடுத்த ஹோமாய், மகாத்மா காந்தியின் இறுதி நொடிகளை படம் பிடிக்கவில்லை. அதுவே அவரது வாழ்நாள் வருத்தம். 

பொதுமக்கள் அஞ்சலிக்காக காந்தியின் உடல்
காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று காலை அவரது ஆசிரமாக் கூட்டத்தை பதிவு செய்வதற்காகக் கிளம்பிவிட்டார். அவரது கணவர் அவரை தடுத்துவிட்டார். அதனால் அதனை பதிவு செய்யவில்லை. அதை ஈடுசெய்யும்  வண்ணம் காந்தியின் அஸ்தி கரைப்பதற்காக  கொண்டு சென்றபோது அவர் எடுத்த படங்கள் சாகாவரம் பெற்றவை. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காந்தியின் அஸ்தியைக் காணக் குவிந்த பல்லாயிரக்கக்கான மக்கள் கூட்டத்தையும் அவர்களது உணர்வையும் படங்களாகப் பதிவு செய்தார். அவரின் படங்கள் இன்றும் பேசுகின்றன.

காந்தியின் உடல் எரியூட்டு நிகழ்வில் மனைவியுடன் மவுண்ட்பேட்டன்
1913-ம் ஆண்டு டிசம்பர் 9 அன்று பிறந்து, 2012 ஜனவரி 15-ல் தனது 98-வது வயதில், சுதந்திர இந்தியாவின் பல மறக்க முடியாத முக்கிய நிகழ்வுகளை தனது கேமராவில் அடக்கிய அந்த பெரும் ஆத்மா அடங்கியது.

ஹோமாய் வியாரவல்லா
26 கருத்துகள்:

 1. வியப்பான விந்தை மனுஷிதான் தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
  த.ம.2

  பதிலளிநீக்கு
 2. முதல் பெண் போட்டோகிராபர் குறித்து இது வரை அறியாத தகவல் தான் இது. புகைப்படங்களை காணும் போது பல புகய் பெற்ற நினைவுகூரத்தக்க புகைப்படங்களுக்கு சொந்தக்காரரும் இவரென புரிகின்றது. உங்கள் தேடல்கள் தொடரட்டும்.பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. முதன் பெண் புகைப்பட நிபுணர்
  அறியாச் செய்தி நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 4. நானுமே எழுத நினைத்த பதிவு... இன்னுமே எழுதலாம் .. எழுதுகிறேன் ஒரு சிறப்புத் திட்டம் இருக்கிறது ... சமீத்தில் நடந்த பால் சமத்துவம் பயிற்சியில் பெண்களை அதுவும் சாதித்த பெண்களை அறிமுக்கம் செய்ய பணித்தனர்... வேறு யார் என்.சி.ஆர்.டி நீபா போன்ற அமைப்புகள்தான்..
  ஆர் எம் எஸ் எ பயிற்சியின் பொழுது செய்ய நினைத்தது..
  தங்கள் பதிவு இத்து தொடர்பாக இயங்கத் தூண்டியது...
  நன்றிகள் செந்தில் ஜி

  தம +

  பதிலளிநீக்கு
 5. வெளியிட அல்ல ... வாக்குப் பட்டை இயங்கவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தவுடனே வாக்களித்தால்தான் வாக்குப்பட்டை இருக்கும். அதன்பின் https:// என்று வந்துவிடும். இதில் s இல்லாமல் இருந்தால்தான் ஓட்டளிக்க முடியும்.

   நீக்கு
 6. கருப்பு வெள்ளையில் சரித்திரத்தை பதிவு செய்து இருக்கும் ஹோமாய் வியாரவல்லாவின் பணி அருமை :)

  பதிலளிநீக்கு
 7. அந்த காலத்திலேயே பெண் ஒருவர் புகைப்படக் கலைஞராக இருந்திருக்கிறார் என்பதை அறியும் போது பிரமிப்பாய் இருக்கிறது. அவரைப்பற்றியே தகவல்களைத் தந்து அவர் எடுத்த புகைபப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் சாதனையாளர்தான்.
   வருகைக்கு நன்றி அய்யா!

   நீக்கு
 8. படித்திருக்கிறேன் இவரைப்பற்றி. கணினிக்கு வரும்போதுதான் வாக்களிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. இவரைப்பற்றி அறிந்திருக்கிறோம் நண்பரே! நல்லதொரு பகிர்வு!!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...