Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கூட்டாஞ்சோறுக்கு வயது இரண்டு..!





'கூட்டாஞ்சோறு' நேற்று தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடியது. இரண்டு வருடங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாமல் தொடங்கப்பட்டதுதான் கூட்டாஞ்சோறு. தொடங்கியபின்தான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். அப்படி தப்பும் தவறுமாக தொடங்கிய ஒரு வலைப்பூவை உங்கள் அனைவரின் நல் ஆதரவால் முன்னணியில் வந்திருக்கிறது. 

தமிழ்மண தரவரிசையில் 4-ம் இடத்தில் இருக்கும் கூட்டாஞ்சோறு, சில மாதங்களுக்கு முன்பு வரை 3-ம் இடத்தில் .இருந்தது. தொடர்ந்து அதை 10 மாதங்கள் தக்க வைத்துக்கொண்டிருந்தது. இரண்டு வருட காலத்தில் 10 மாதங்கள் தொடர்ந்து 3-ம் இடத்தில் இருந்ததும் ஒரு சிறப்புதான். அப்போதைய ஏற்றமும் இப்போதைய இறக்கமும் தானாக நிகழ்ந்ததுதான். அதற்கான எந்தவொரு சிறு முயற்சியும் நான் எடுக்கப்படவில்லை.


பதிவராக வலையுலகில் இனைந்த இந்த இரண்டு வருடங்கள் எனக்கு பல நண்பர்களை பெற்று தந்திருக்கிறது. நட்புலகம் விரிந்திருக்கிறது. எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே உதவ நமக்கு ஒரு பதிவர் இருக்கிறார் என்ற உற்சாகத்தை தந்திருக்கிறது. பதிவர்கள் பல்வேறு துறைகளில் இருப்பதும் மற்றுமொரு சிறப்பு. எந்தவொரு சந்தேகம் என்றாலும் அதனை நிவர்த்தி செய்துகொள்ள முடிகிறது.


இந்த இரண்டு வருடங்களில் வலைச்சரத்தில் நான்கு முறை கூட்டாஞ்சோறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரம் வலைசரத்திற்கு ஆசிரியராகும் பொறுப்பை நண்பர் புதுவை வேலு எனக்களித்தார். அதுவொரு இனிய தருணம். வலைச்சர ஆசிரியராக இருந்த போது நான் எழுதிய பதிவுகள்.



                             வித்தியாசமாக சிந்திக்கும் பெண் பதிவர்கள்





அதற்கடுத்த மகிழ்ச்சி புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு. வலைப்பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் கூட நிறைவு பெறாத அன்றைய நிலையில் மின் இலக்கியப் போட்டியில் சுற்றுசூழல் தலைப்பில் நான் எழுதிய 'இருட்டு நல்லது' கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது மட்டுமல்ல அதுவரை பதிவின் மூலம் மட்டுமே சந்தித்துக்கொண்டிருந்த நண்பர்கள் பலரையும் அன்று நேரடியாக சந்தித்தேன். வாழ்வில்  மறக்கமுடியாத இனிமை அது.

அதன்பின் வலையுலகின் தலைவர் கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்கள் என்னைப் பற்றி அவரது வலைத்தத்தில் ஒரு நேர்காணலை வெளியிட்டு எனக்கு மிகப் பெரும் அங்கீகாரத்தை கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அய்யா வை கோபாலகிருஷ்னன் அவர்கள் தனது வலைத்தளத்தில் என்னை அறிமுகம் செய்தார். நண்பர்கள் 'தளிர்' சுரேஷ், மு,கோபி சரபோஜி ஆகியோரும் தங்கள் வலைத்தளத்தில் என்னை அறிமுகம் செய்து பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தார்கள். மிக இனிமையான தருணங்கள் அவை.

மேலும் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் எனது 'நம்பமுடியாத உண்மைகள்' புத்தகத்திற்கு சிறப்பான அறிமுகமும் விமர்சனமும் கொடுத்த நண்பர்கள் கரந்தை ஜெயக்குமார் மற்றும் வெங்கட் நாகராஜ் ஆகிய இருவரின் பங்களிப்பும் அருமை. இனிமையான தருணத்தின் இன்னுமொரு படி.

இந்த கூட்டாஞ்சோறுக்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவுதான் என்னை புதிதாக ஒரு வலைத்தளம் தொடங்குமளவிற்கு துணிவை தந்திருக்கிறது. தொடர்ந்து ஆதரவும் நம்பிக்கையும் தவறாது வருகை தந்து கருத்திடும் அத்தனை நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.



கூட்டாஞ்சோறின் இன்றைய நிலை...

பதிவுகள்                            :  350

மொத்தப் பார்வைகள்  : 5,65,030

பின்தொடர்பவர்கள்      :  161

தமிழ்மண தர வரிசை  : 4

கூகுள் ப்ளஸ்

மொத்தப் பார்வைகள்   :  43,94,751

பின்தொடர்பவர்கள்      :  216


நன்றிகள் கோடி!


அன்புடன்,

எஸ்.பி.செந்தில் குமார் 







26 கருத்துகள்

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள்!ஆச்சரியம்,அதிசயம்,நம்பமுடியாதவகிகள் என தேடித்தேடி பகிரும் செய்திகள், அறிவியல் தகவல்கள் அத்தனையும் அற்புதமானவை! தங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !

      நீக்கு
  2. தாங்கள் மிகச்சிறந்த எழுத்தாளர் + பதிவுலகில் மாபெரும் சாதனையாளர் என்பதில் சந்தேகமே இல்லை.

    மேலும் பற்பல வெற்றிகள் கிட்டிட என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  3. மென்மேலும் சிறக்க அன்பார்ந்த வாழ்த்துக்கள் தோழர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  4. இரண்டே ஆண்டில் எட்டிய தூரம் பெரிது. இன்னும் எட்ட வேண்டிய தூரம் மிகப்பெரிது நண்பரே! பொழுதுபோக்குப் பதிவர்கள் மத்தியில் உங்கள் எழுத்துப் பழுது நீக்கும் எழுத்து! வெட்டி ஒட்டும் வேலைகள் இல்லாமல் சுயமாக, எளிதாகப் புரிந்துகொள்ளும் படிப் பெரிய பெரிய செய்திகளை அனாயாசமாக எழுதிச்செல்கிறீர்கள்...தெளிவான படவிளக்கங்களுடன்! உங்கள் பயணம் தொடர்ந்து, பயன்மிக்க பதிவுகளை வரைந்து, முன்னிலும் விரைந்து பத்துலட்சம் பார்வையாளர்களைத் தாண்டிப் பயணிக்க நெஞ்சார வாழ்த்துகிறேன். வணக்கம். த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களும் உற்சாகமூட்டும் பின்னூட்டமும் மேலும் ஊக்கமளிக்கிறது. மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  5. குறுகிய காலத்தில் சிகரத்தைத் தொட்டு விட்டீர்கள் ,மேலும் வளர வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  6. மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ...அரிதானது உங்கள் கட்டுரைகளும் ,ஆய்வுகளும்...தரமான கட்டுரைகள் மேலும் பல தர அன்பான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !

      நீக்கு
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே! பதிவுகள், பார்வைகள், பின்தொடர்பவர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் மேலும் சில சுழியங்கள் கூட வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்து நடக்க நானும் ஆவலாய் இருக்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  8. உங்களின் பதிவுகள் அத்தனையும் பொக்கிஷங்களாய் போற்றத்தக்கவை. எழுத்தின் நடையும் , செய்திகளின் வீரியமும், அதற்காக நீங்கள் மேற்கொள்ளும் அதீத ஆராய்ச்சிகளும் முயற்சிகளும் உங்களின் இதுபோன்ற சாதனைகளை படைக்க உறுதுணையாக இருக்கின்றன.

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், தொடருங்கள் செந்தில்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஊக்கமூட்டும் வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  9. இரண்டு ஆண்டுகள் கடந்தன
    திரண்ட வாசகர் பெருகின
    வரண்ட உள்ளங்களையும் ஈரப்படுத்திய
    உருளும் உலகின் உண்மைகளை
    சிறந்த கைவண்ணத்தில் தந்த அறிஞரே
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையில் வாழ்த்து கூறி உற்சாகப்படுத்திய நண்பருக்கு நன்றி !

      நீக்கு

  10. வாழ்த்துக்கள்...
    மிக அருமையான தகவல்களையும் ...செய்திகளையும் வழங்கிடும் தங்கள் பணி மேலும் பல பல சாதனைகளை செய்திட வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  11. வாழ்த்துக்கள் சார்! என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! தொடரட்டும் வெற்றி நடை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

      நீக்கு
  12. பதிவுலகில் இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற தகவல்களைத் தந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்! தங்களின் வலைத்தளம் மூலம் புதுப்புது தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

      நீக்கு
  13. மனம் நிறைந்த வாழ்த்துகள்! தங்களது தரமான பதிவுகள் பல உயரங்கள் எட்டிடவும் வாழ்த்துகிறோம்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை