Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

காயத்திற்கு மருந்து.. கனிவு தரும் பட்ஜெட்!



டந்தது நடந்து விட்டது, இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் என களம் இறங்கிவிட்டது போலும் மத்திய அரசு. 2017-18க்கான பட்ஜெட் குறித்தும், பொதுவான பொருளாதார சூழல் குறித்தும் நிதி ஆயோக் அமைப்பு, பொருளாதார நிபுணர்கள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளது அதையே சுட்டிக்காட்டுவதாக உள்ளது.



நவம்பர் 8ஆம் தேதிக்கு முந்தைய மொத்த பணப்புழக்கம் எல்லோரும் சொல்வது போல் ரூ.17.5  லட்சம் கோடி எனில், அதில் 100 மற்றும் 500 ரூபாய்களின் பங்களிப்பு 86 சதவிகிதம் எனக் கொண்டால், ரூ.15.05 லட்சம் கோடி இத்தகைய நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன என்பதே உண்மை. தற்போது ரூ.14 லட்சம் கோடி இத்தகைய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குள் வந்துவிட்ட நிலையில், கிட்டத்தட்ட அனைத்தும் வந்துவிட்டதாகத்தான் இதற்கு அர்த்தம். இந்நிலையில், பல்வேறு கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலாது.





இருந்தபோதும், அடுத்த பட்ஜெட் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை அடிப்படையில், மக்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து தடவுவதாக அமையும் என்று பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.  மேலும், வரும் நிதியாண்டிலிருந்து வழக்கமான பிப்ரவரி 28 பட்ஜெட் தாக்கல் என்பது பிப்ரவரி 1-ம் தேதியே தாக்கல் செய்யப்படும் என்கிற மாற்றத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. இது வரவேற்கத்தக்கதே.



ஏனெனில், பொதுவாக தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முற்பகுதியில் துவங்கும் நிலையில், பட்ஜெட் ஒதுக்கீடுகள் அதற்குரிய ஒப்புதல்களைப் பெற்று நடைமுறைக்கு வரவே ஜூன் மாதம்ஆகிவிடும் என்பதே இதுகாறும் யதார்த்தமாக இருந்துள்ளது. இதனால் பருவகாலத்திற்கு முன்பே திட்டமிட்டு ஒதுக்கீடுகளை மேற்கொள்ள இயலாமல் போவதும் வாடிக்கையாகவே இருந்துள்ளது.



தற்போதைய பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் என்பது மார்ச் 31க்குள் ஒப்புதல் பெறப்பட்டுவிடும் என்பதால் ஏப்ரல் 1 முதலே அடுத்த நிதியாண்டிற்கான திட்டங்களை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவிட முடியும் என்பது உண்மையில் வரவேற்கத்தக்கதே.




பிரதமருடனான கூட்டத்தின்போது, நிதி ஆயோக் அமைப்பின் பொருளாதார வல்லுநர்கள், விவசாயம், வேலை வாய்ப்பு உருவாக்கம், சீர்திருத்த நடவடிக்கைகள், வரித்துறை மாற்றங்கள், கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம், வீட்டுவசதி, சுற்றுலா, வங்கித்துறை போன்ற பல்வேறு துறைகள் குறித்த விரிவான விவாதங்களை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



தனிநபர் வருமான வரி விலக்கை அதிகரிக்க வேண்டுமெனவும், அதன் அடிப்படையில் நுகர்வுச் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள் ளதாகத் தெரிகிறது. அரசுக்கும் இது ஏற்புடையதாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. தற்போது ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பின் காரணமாக நுகர்வு சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, புதிய வேலை வாய்ப்பு உருவாக்கமும் சங்கடச்சூழல்களை சந்தித்து வரும் நிலையில், கனிவான பட்ஜெட் ஒன்றின் மூலமே சந்தையில் தேவையான உற்சாகத்தை  வரவழைக்க முடியும் என்பது பொதுவாக ஏற்கப்படும் கருத்தாக உள்ளது.




மேலும், 2022 ஆம் ஆண்டுவாக்கில் விவசாயத்துறை வருவாயினை இரண்டு மடங்காக ஆக்கத்தக்க நடவடிக் கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஐஐஎம், ஐஐடி போன்று உயர் கல்வி விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஏற்படுத்துவது குறித்தும் பிரதமர் மிக்க ஆர்வத்துடன் விசாரித்து அறிந்ததாகத் தெரிகிறது. அவ்வாறாயின் அது இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையானதாகவே இருக்கும்.



நுண்ணீர் பாசனம், பண்ணை இயந்திரமயமாக்கல், சந்தை சீர்திருத்தங்கள் போன்றவற்றில் வெகுவாக நாம் பின் தங்கியிருக்கும் நிலையில், புதிய தொழில்நுட்பங்களையும், கோட்பாடுகளையும் பண்ணையில் உபயோகிக்க எளிதான முறையில் கண்டுபிடிக்க இத்தகைய உயர் தொழில் கல்விக்கூடங்கள் நிச்சயமாக உதவும் என்பதால், அவை காலத்தின் கட்டாயமும் கூட.



மேலும் வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் சர்வதேச அளவில் போட்டி போடத்தக்க வகையில் வரி விகிதங்களைக் குறைப்பது குறித்தும் பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் ஆலோசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் அடிப்படையில், என்ன பலன்கள் ஏற்படப்போகின்றன என்பது குறித்து தெளிவான பதில்கள் இல்லாத சூழலில், கடந்த இரண்டு மாதங்களாகவே உச்சகட்ட சங்கடங்களை அனுபவித்து வரும் பொதுமக்களுக்கு 2017 பட்ஜெட் டின் மூலமாக கொஞ்சமேனும் சலுகைகள் வழங்கப்படுமானால், அது வரவேற்கத்தக்கதாகவே இருக்கும்.



நுகர்வுச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அரசுக்கும் அது அத்தியாவசியமான கடமையுமாக மாறியுள்ளதும்  நிஜம்.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 




5 கருத்துகள்

  1. பல தொழில்கள் மீண்டும் புத்துயிர் பெற எப்படியும் ஆறு மாதங்கள் மேல் ஆகலாம்...

    பதிலளிநீக்கு
  2. நம்மின் அடிப்படை மாறியப் பின் செய்ய வேண்டிய விடயங்கள் தான் இது என எனக்குத் தோன்றுகிறது சகோ,, சரி பார்ப்போம் ,

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் சகோ! நசுங்கிய தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளைப் பெருக்கவும், சில வரிச் சலுகைகள் கொடுத்தால்தான் தனிநபர் வருமான வரிச் சலுகைகள் மட்டுமின்றி சில அத்தியாவசியமான நுகர் பொருட்களின் மீது திணிக்கப்படும் ஒரு சில வரிகளிலும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் பணப் புழக்கம் மீண்டும் ஏற்படும். அப்படி ஏற்பட்டால்தான் நசிந்த தொழிகள் மேம்படும். மட்டுமல்ல பெட்ரோல் விலையும் குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் மிக மிக அத்தியாவசியமானப் பொருட்களான காய்கள் பழங்களின் விலை குறைய வாய்ப்புண்டு. மாநில அரசு நல்ல தரமான பொருட்களை அரசு நியாய விலைக் கடைகளில் நியாயமான விலையில், நுகர்வோர் அங்காடிகளில் பெற செய்வதில் நடுவண் அரசு ப்ரைஸ் கன்ட்ரோலைல் கொண்டு வர வேண்டும். இருக்கிறது ஆனால் அது சரியான விதத்தில் நடைமுறையில் இல்லை அதற்கான சட்டம் கண்காணிக்கப்படாததால்...இதையும் மோடியின் அரசு மனதில் கொள்ள வேண்டும்.

    தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், விவசாயத்திற்கும் சரினிகர் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், அப்படிக் கொடுக்கும் போது குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள், கால்நடை பராமரிப்பு போன்றவற்றை மேம்படுத்தி இப்போது நமக்கு மிகவும் இன்றியமையாத காந்தியன் பொருகளாதரத்தை, தொழில்நுட்பத்துடன் மோடி மனதில் கொண்டால், செயல்படுத்தினால் இந்தியா முன்னேறும் என்பது உறுதி. அதே போன்று இடைத்தரகர்களையும் ஒழிக்க வேண்டும், கேஷ்லெஸ் எக்கானமி என்றால் கார்டு தேய்ப்பதற்கான கமிஷன் இல்லாமல் ஆக்க வேண்டும். இன்னும் பல இருக்கிறது கருத்தில் கொள்ள..

    பார்ப்போம்...மோடி அரசின் பட்ஜெட் என்ன வடிவம் பெறப் போகிறது என்றும் செயலாக்கம் எப்படி இருக்கப் போகிறது என்பதையும்.... நம்பிக்கையுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பகிர்வு. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை