Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

அரிய கண்டுபிடிப்பை அசால்டாக தொலைத்த விஞ்ஞானி


ரு பொருளை மறதியாக ஒரு இடத்தில் வைத்துவிட்டு நாள் முழுக்க தேடியும் கிடைக்காமல் தொலைத்து விடுவது நமக்கு மட்டுமல்ல பெரிய பெரிய விஞ்ஞானிகளின் வாழ்விலும் நடந்திருக்கிறது. தொலைந்தது அற்பமான ஒரு பொருளாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், அது தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டு ஆராய்ச்சியால் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு என்றால், எப்படி இருக்கும்..?

அப்படியொரு சம்பவம் நியூட்டனின் வாழ்வில் நடந்தது. ஹாலி வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த ஹாலியும் அவரது நண்பர்கள் சிலபேரும் கெப்ளரின் மூன்றாவது கொள்கையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கோள்களை அதன் சுற்றுப்பாதையில் வைக்கும் சூரியனின் ஈர்ப்புவிசையை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். 


சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையில் இருக்கும் தொலைவின் இருமடங்கிற்கு எதிர்மறையாக அதன் சுற்றுப்பாதை அமைந்திருப்பது தெரியவந்தது. ஆனால், அது எந்தளவிற்கு உண்மை என்பதை அவர்களால் நிர்ணயம் செய்ய முடியவில்லை.

சில மாதங்கள் கழித்து கேம்பிரிட்ஜில் ஹாலி நியூட்டனை சந்தித்தார். அப்போது நியூட்டனிடம் "சூரியனால் கோள்களின் மீது ஏற்படும் ஈர்ப்புவிசை தொலைவின் இருமடங்கிற்கு எதிர்மறையாக இருக்குமெனில் அவற்றின் சுற்றுப்பாதை வடிவம் எப்படி இருக்கும்?" என்று கேட்டார். அதற்கு நியூட்டன் சட்டென்று, "நீள் வட்டப்பாதை" என்றார். 

ஹாலி ஆச்சரியப்பட்டுப்போனார். "எப்படி தெரியும்?" என்று கேட்டார். அதற்கு நியூட்டன் "கண்டுபிடிப்பின் மூலமே இதை என்னால் கணிக்க முடிந்தது." அனுமானமோ வியூகமோ என்று சொல்லாமல் முற்றிலும் கணித்திருக்கிறேன் என்று சொன்ன நியூட்டனின் ஆற்றலைக் கண்டு மலைத்துப்போன ஹாலி, அந்த கணித முறை கணிப்பை கேட்டபோது நியூட்டன் அதை தொலைத்திருந்தார். 


மனித இனத்தின் முன் நிற்கும் மிக சிக்கலான கேள்விகள் அனைத்திற்கும் ஒரு சூத்திரத்தை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் அதை தொலைக்கவும் செய்திருக்கிறார். பிறகு ஹாலி கேட்டுக்கொண்டதற்கு இணங்க மீண்டும் தனது கண்டுபிடிப்பை நினைவில் கொண்டுவந்து கணித்தார். அரிதான ஒரு கண்டுபிடிப்பை சாதாரணமாக தொலைத்த நியூட்டன் ஒரு வித்தியாசமான விஞ்ஞானியே!

========================================


எனது யூ-ட்யூப் சேனல்களில்..

நாம்  முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது? என்பதைப்பற்றி விரிவாக சொல்லும் காணொலி.



=================================


'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' யூட்யூப் சேனலில் இந்தியாவின் முதல் டாப்லெஸ் பீச் என்று அழைக்கப்பட்ட கோவளம் பீச் பற்றி ஒரு காணொலி. 



11 கருத்துகள்

  1. இப்படியும் அறிவியலாளர்கள் உள்ளார்களா? கோவளம் சென்றுள்ளேன். இருந்தாலும் காணொளியில் அதிகம் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    மறதி என்பது பெரும் நோய்... அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ரயில் டிக்கெட் பற்றிய காணொளி அனைவருக்கும் பயன் தரும்...

    பதிலளிநீக்கு
  4. மிகச்சாதாரணமான நமக்கே இவ்வளவு ஞாபக மறதி இருக்கும்போது, எப்போதுமே அசாதாரண சிந்தனைகளுடன் இருந்துள்ள மிகப்பெரிய விஞ்ஞானிகளுக்கும் மறதி இருந்திருப்பதில் வியப்பேதும் இல்லை. தகவலுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் காணொளிகள் எதுவுமே எப்போதுமே பார்க்க முடியாத வண்ணமே உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  7. ஆனைக்கும் அடி சறுக்கும் , அறிஞனுக்கும் மறதி பிறக்கும்.

    நல்ல செய்தி செந்தில்.

    கோ

    பதிலளிநீக்கு
  8. அறிவியல் அறிஞர்களின் பதிவுகள்
    அருமையான தொகுப்பு

    பதிலளிநீக்கு
  9. மறதி!! ஐயோ அது படுத்தும் பாடு!! விஞ்ஞானிக்கே இப்படி என்றால் நாங்களெல்லாம் ??!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை