முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா?

கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்தனை மனிதர்கள் இருந்தும் சிலரை மட்டும் கொசுக்கள் தேடி தேடி கடிக்கின்றன?

காதலை மறக்கச் செய்யும் மருந்து

காதல் என்ற இந்த ஒரு வார்த்தை பலரின் வாழ்க்கை போக்கையே மாற்றிவிடுகிறது. காதலில் விழாமல் இளமையை கடந்து போக இளைஞர்களுக்கு தெரியவில்லை. அப்படியே விழுந்து விட்டாலும் அதை எப்படி கையாளுவது என்று பெற்றோர்களுக்கு தெரியவில்லை. சமூகமும் சாதிய கட்டுப்பாடுகளும் அவர்களை காதலின் எதிரிகளாக மாற்றுகிறது. சில காதல்களில் காதலர்களுக்கிடையே ஏற்படும் மனக்கசப்பும் காதலை மறக்கச் செய்கிறது. இப்படி பல இன்னல்களுக்கு இலக்காகும் காதலை மறக்க முடியுமா?

பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது?

இன்றைய குழந்தைகள் முந்தைய தலைமுறை குழந்தைகளோடு ஒப்பிடும் போது அதிகமான பிடிவாதமும் அதிக மூர்கத்தனமும் கொண்டதாக இருக்கின்றன. இத்தகைய குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது?

குழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்

குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய

திடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா? எச்சரிக்கை!

சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண்டு வகையான மாற்றங்களும்  நல்லதல்ல என்பதைப்பற்றி விரிவாக அலசுகிறது

நல்லதென்று நினைத்து நாம் செய்யும் 5 தவறுகள்

நமது உடலுக்கு ஆரோக்கியம் என்று நினைத்து நாம் கடைப்பிடிக்கும் பலவற்றை சமீபத்திய ஆய்வுகள் பொய்யென்று நிரூபித்து வருகின்றன. அந்த வகையில் உடலின் நலத்திற்கு இத்தனை காலம் நல்லதென்று நினைத்து தவறாமல் நாம் பயன்படுத்திய பழக்கங்களை தவறு என்று சொல்கிறது.

ஒரு கோடி பார்வைகள்; 2 லட்சம் சந்தாதாரர்கள்; ஒரு வெள்ளி விருது

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தொடர்ந்து உங்கள் அனைவரையும் பதிவுகள் வாயிலாக சந்திக்க வேண்டும் என்ற ஏராளமான ஆர்வம் இருந்தாலும் பலவித சூழல்கள் காரணமாக அது தொடர்ந்து முடியாமலே போகிறது. இப்போதும் அப்படித்தான். பதிவு மூலமாக தங்களை சந்திக்கவில்லை. அதற்கு பதிலாக சில மகிழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வெயிலால் உங்கள் முகம் பொலிவை இழக்கிறதா? வீட்டில் செலவில்லா தீர்வு இருக்கு

கோடைக்காலத்தில் வெளியில் சென்று வருவதே பெரும் பாடு. அதிலும் பெண்கள் நிலை படு திண்டாட்டம்தான். வெயிலால் இழந்த முகப்பொலிவை எந்தவித செலவும் இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

பாலியல் வன்முறையிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

இன்று மிகப் பெரிய பிரச்சனையாக பாலியல் வன்முறை உருவெடுத்துள்ளது. அதிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. குழந்தைகளுடன் குறைவான நேரத்தை செலவழிக்கும் பெற்றோர்கள் இந்த பிரச்சனையிலிருந்து தங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.

பெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா?

சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம்? இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்படி அடையாளம் காண்பது? ஒருவேளை நீங்கள் குழந்தைகள் மீது ஆசைப்படும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ (ஆண் குழந்தைகளிடம் தவறாக நடக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவு) இருந்தால்

இப்படியொரு கொடூரமான கோயிலை நீங்க பார்த்திருக்க மாட்டிங்க..

வழக்கமான சுற்றுலா இடங்களை விட்டுவிட்டு புதிது புதிதாக வித்தியாசமான இடங்களை தேடி செல்லும் போக்கு தற்போது அதிகமாகியிருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கோயில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.

சிறுதானிய சமையல் - 4 கம்பு அவுல் வடை

சிறுதானிய சமையலில் இந்த வாரம்  கம்பு அவுல் வடை எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம். நிறைய பேருக்கு சிறுதானியங்களை உணவாக உண்ண ஆசை இருக்கிறது. ஆனால், அதை எப்படி சமைப்பது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா?

புதிதாக திருமணமாகி கர்ப்பம் அடைத்திருக்கும் தம்பதிகளுக்கெல்லாம் இந்த சந்தேகம் இருக்கும். பலருக்கும் இதை மருத்துவரிடம் கேட்பதில் தயக்கம் இருக்கும். அப்படி தயங்கும் கேள்விக்கு அருமையாக விளக்கம்

மனநிலை பாதித்த தாய்க்கு பிறக்கும் குழந்தை என்னவாகும் தெரியுமா?

மனநிலை பாதித்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அது சரியாகிவிடும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னவாகும்

சிறுதானிய சமையல் - 3 | கம்பு அவுல் உப்மா

சிறுதானிய சமையல் வரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் புதுவகையான சமையலை தெரிந்து கொண்டு வருகிறோம். அந்தவகையில் இந்த வாரம் கம்பு அவுலில் எப்படி உப்மா செய்வது என்பதை பற்றி செய்முறை விளக்கம் தருகிறார் சிறுதானிய சிவக்குமார். இது அனைவரும் சாப்பிடக்கூடிய சத்தான உணவு. குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும்

சிறுதானிய சமையல் - 2 | சோளம் அவுல் கொழுக்கட்டை

சிறுதானிய சமையல் வரிசையில் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய அதிக ஊட்டச்சத்து மிக்க சோளம் அவுல் கொழுக்கட்டையை எப்படி செய்வது என்பதை பார்க்கப்போகிறோம். இதனை செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள். வித்தியாசமான நமது பாரம்பரிய உணவு. இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது புதினா துவையல் போன்றவை சிறப்பாக இருக்கும்.

தற்கொலை என்பது மனநோயா..?

தினசரி செய்தித்தாள்களில் தவறாமல் இடம் பெரும் ஒரு சம்பவம் தற்கொலை. வாழவழியில்லாமல் விரக்தியில்தான் பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக இந்தநிலை சற்று மாறியுள்ளது. நல்ல நிலையில் சமூகத்தில் போற்றத்தக்க நிலையில் உள்ள பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது மிகுந்த ஆச்சரியமான ஒன்று. தற்கொலை என்பது மனநோயா..? அதை முன்கூட்டியே மற்றவர்களால் யூகிக்க முடியுமா..? அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்ற முடியுமா..?

இத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்

பாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் பாம்பு நகரத்தினத்தை காக்கும் என்ற கட்டுக்கதை. இதனைப் பற்றி நமது சேனலில் ஏற்கனவே ஒரு வீடியோ வெளியிட்டிருந்தோம். அதில் பலரும் அந்த தகவலை பொய் என்றே சொன்னார்கள். இதில் வேடிக்கை என்னெவென்றால் பாம்புகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவரும் இதனை பொய் என்றே சொன்னதுதான் ஆச்சரியமாக இருந்தது. ஒன்று அவர் பாம்பு ஆராய்ச்சியாளராக இருக்க முடியாது.

பிரமிக்க வைக்கும் பாதாமி குகைக் கோயில்கள்

சுற்றுலாவில் நம்மை பிரமிக்க வைப்பது நமது முன்னோர்கள் கட்டிவைத்த அற்புத கலைப் படைப்புகள்தான். எல்லோரா குகைக் கோவிலைப் பார்த்து திகைத்து நின்றேன். அங்கிருந்து நகரவே மனசில்லை. அப்படியொரு அற்புதப் படைப்பு. அதேபோன்ற ஒரு பிரமிப்பை இந்த பாதாமி குகைக் கோயில்களும் ஏற்படுத்தின என்றால் அது கண்டிப்பாக மிகையில்லை.

பயமும் பதட்டமும் இல்லாமல் தேர்வுகளை சுலபமாக எழுத டிப்ஸ்

தேர்வு நேரம் நெருங்கிவிட்டாலே மாணவர்களுக்கு தங்களை அறியாமல் ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. இதனாலே நன்றாக தேர்வுக்கு தயாராகி செல்லும் மாணவர்கள் கூட மிகுந்த பதட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அந்த பதட்டத்தை தவிர்த்து தேர்வுகளை சுலபமாக எழுத

இந்தி சினிமாவில் நடித்தாலும் தமிழை கொண்டாடிய ஸ்ரீதேவி

இந்திய திரையுலகத்தை கலங்கடித்த மிகப்பெரிய துயரம் சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் இறந்ததுதான். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி மிகப் பெரிய இடத்தை தொட்ட ஸ்ரீதேவியின் வாழ்க்கை மற்ற நடிகைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டி. இந்தி சினிமாவுக்கு சென்ற பிறகு தமிழை ஸ்ரீதேவி சுத்தமாக மறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது.

சிறுதானிய உணவுகள் - 1 | ராகி அவல் இட்லி 5 நிமிடத்தில் ரெடி

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளாக சிறுதானிய உணவுகளே இருந்திருக்கிறது. சமீபத்தில் அந்த நிலை மாறி இருக்கிறது. இதனால் ஏராளாமான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மீண்டும் நாம் சிறுதானிய உணவுகளை ஒருநாளைக்கு ஒரு வேளை உணவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான சிறுதானிய உணவு செய்முறைகள் பற்றி ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த சேனலில் இடம்பெற இருக்கிறது. தவறாமல் பார்த்து குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் கொடுத்தால் ஆரோக்கியம் பேணப்படும்.
இன்றைய ராகி அவல் இட்லி உணவு உடனடியாக தயார் செய்யக்கூடியது. காலையில் பள்ளி, அலுவலகம் செல்பவர்கள் உடனே தயாரித்து சாப்பிடக்கூடியது.

குண்டானால் குழந்தைப்பேறு பறிபோகும்

உடற்பருமன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். சென்ற தலைமுறை வரை ஓரளவு உடல் பூசியதுபோல் சற்று பருமனாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. உடற்பருமனாக இருப்பவர்களை பார்த்தாலே இவர்களுக்கு என்னென்ன வியாதிகள் இருக்குமோ என்று மக்கள் பேசிக்கொள்ளும் அளவிற்கு உடற்பருமன் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்பு நோய்களை மட்டுமே கொண்டுவருவதாக இருந்த உடற்பருமன் வேறுபல பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலக அளவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் போதிய உணவு கிடைக்காமல் மரணமடையும் மனிதர்களை விட உடற்பருமனால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

2000 வருடங்களுக்கு முன்பே காதலர் தினம் கொண்டாடிய தமிழர்கள்

காதலர் தினம் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக பெருபாலோனோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காதலர் தினக் கொண்டாட்டம் என்பது தமிழர்களிடமிருந்து வெளிநாட்டிற்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் புதிய விழா போல் அறிமுகமாகியிருக்கிறது.

தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் புத்திசாலிகளா பைத்தியக்காரர்களா!

இன்றைய நவீன உலகில் நெருக்கடிகள் அதிகம். பலரும் தங்களுக்குள் பல பிரச்சனைகளை வைத்துக்கொண்டு வெளியில் வேறுவிதமாக நடிக்கிறார்கள். இவர்களில் சிலர் தங்களையும் மறந்து தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மனநலம் பாதித்தவர்கள் என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், அப்படி ஒதுக்கக்கூடாது. அதனை மனநலம் பாதிப்பு

தமிழர்களுக்கு நற்செய்தி! தமிழ் மொழியை அங்கீகரித்தது Google..!

உலகின் மிகப் பழமையான மொழி, முதல் மொழி என்று எதை நீங்கள் Google-ல் தேடினால் அதில் வந்து நிற்கும் மொழி தமிழ் என்பதுதான். ஆனாலும் அந்த தமிழ் மொழியை Google கண்டுகொள்ளவேயில்லை. நீங்கள் தமிழ் வலைப்பதிவராகவோ அல்லது இணையதளம் நடத்துபவராக இருந்தால் உங்களுக்கான வருமானத்தை விளம்பரம் மூலம் தரும் நிறுவனம் Google AdSense தான். இவ்வளவு காலம் இந்த நிறுவனத்திற்கு நீங்கள் உங்கள் இணையதளத்திற்கு விளம்பரம் வரவேண்டி விண்ணப்பித்தால் unsupported language என்றுதான் வரும். இதனால் தமிழ் இனையதளங்கள் வருமானம் ஈட்டமுடியாத நிலையிலே இருந்தன. 
கிட்டத்தட்ட உலகத் தமிழர்களின் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகள் Google நிறுவனத்திற்கு வைத்தும், Email கண்டுபிடித்தது ஒரு தமிழனாக இருந்தும், Google -ன் CEO -வாக ஒரு தமிழரான சுந்தர் பிச்சை பொறுப்பேற்றும் நிலைமை மாறாமலே இருந்தது. இந்தநிலையில் நேற்று முன் தினம் Google -ளிடம் இருந்து ஒரு மகிழ்ச்சியான திடீர் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு Google செவிசாய்த்திருக்கிறது. 

சத்தான சிறுதானியங்களை தேர்வு செய்ய இதெல்லாம் அவசியம்

இன்று இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகள் மீதும் சிறுதானியங்கள் மீதும் அளவற்ற காதல் மக்கள் மத்தியில் பிறந்திருக்கிறது. இதற்கு காரணம் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் நம் உடலுக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கும் தீங்குகள்தான். அதனால் ஆர்கானிக் உணவுகள் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்றிருக்கிறது. ஆனாலும் இவற்றிலும் போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. சிறுதானிய உணவுகளிலும் அரிசியைப் போன்றே சத்துக்களை நீக்கிவிட்டு வெறும் சக்கையைத்தான் சாப்பிடுகிறோம் என்று சிறுதானிய நிபுணர் சொல்கிறார். 
சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் எவை? அதனை எப்படி கண்டறிவது? சிறுதானியங்களால் கிடைக்கும் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக பேசுகிறார். இதுமட்டுமல்ல, இன்று சிறுதானியங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அவற்றை எப்படி சுவையாக சமைத்து உண்பது என்பது பலருக்கும் தெரியவில்லை. அதனாலே பலரும் சிறுதானியங்களை ஒதுக்கிவிட்டு மீண்டும் அரிசியின் பக்கமே தங்கள் கவனத்தை திருப்புகிறார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில்

முதல் குழந்தையை அழித்தால் வரும் ஆபத்து

சென்ற தலைமுறைவரை வெகு இயல்பாக நடந்து கொண்டிருந்த ஒரு விஷயம் இன்று மிக சிக்கலாக வடிவெடுத்திருக்கிறது. திருமணமாகி 10 வருடங்கள் 15 வருடங்கள் கழித்து குழந்தைப் பெற்ற தம்பதிகள் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைய தம்பதிகளோ திருமணமான இரண்டே மாதங்களில் கரு உருவாகவில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு வந்து விடுகிறார்கள். தங்களிடம் மிகப் பெரிய குறை இருப்பதாக புலம்புகிறார்கள். அதேவேளையில் இன்னொரு வகை தமப்திகள் இருக்கிறார்கள், இவர்கள் எங்களுக்கு இப்போதைக்கு குழந்தை வேண்டாம் இந்தக் கருவை கலைத்துவிடுங்கள் என்று டாக்டரிடம் அடம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே மிக ஆபத்தான போக்கு

குழந்தைப் பிறந்தபின் பெண்களுக்கு தோன்றும் மனநிலை தடுமாற்றம்

ஒரு பெண்ணுக்கு மிகப் பெரிய மனமகிழ்ச்சியைத் தருவது, தாய்மை. ஆனால், அந்த தாய்மையே சில பெண்களுக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்கிவிடுகிறது. சில பெண்களுக்கு உடல் நலப்பிரச்சனைகள், சில பெண்களுக்கு மனநல பிரச்சனைகள். குழந்தைப் பிறந்தபின் அதிலும் குறிப்பாக முதல் குழந்தைப் பிறந்தபின் அந்த தாய் அடையும் மனநல தடுமாற்றத்தை பற்றி இந்தப் பதிவு பேசுகிறது.

தூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம்

நமது அக்கம் பக்கத்தில் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே இறந்து விட்டார் என்று. அவருக்கு எந்த வியாதியும் இருந்திருக்காது. உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். பின் எப்படி இத்தகைய மரணம் ஏற்படுகிறது. அந்த  மரணம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். யார் யாருக்கு இத்தகைய மரணம் நிகழும்

சாகர்மாலா திட்டம், நவீன நீர்வழிச்சாலை எந்த திட்டம் பெஸ்ட்?

சாகர்மாலா என்ற மத்திய அரசின் திட்டம் இப்போது வெகுவாக விமர்சிக்கப்படுகிறது. இது பெரும் வர்த்தக பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் சாதகமானது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதகமானது என்ற கருத்து பலமாக இருக்கிறது. அதே நேரத்தில் சாகர்மாலா திட்டத்தைவிட மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயத்திற்கும் மிகவும் பயன்படும் நவீன நீர்வழிச்சாலை தொடர்ந்து தாமதப்படுத்துவதற்கான காரணம் பற்றியும்

'பத்மாவத்' படம் எப்படி இருக்கு? - சினிமா விமர்சனம்

மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'பத்மாவதி' என்ற 'பத்மாவத்' திரைப்படம் நாளை ரிலீசாகிறது. பல போராட்டங்களையும் பல எதிர்ப்புகளையும் மீறி படம் வெளிவரவிருக்கிறது.

அதீத சுத்தம் பார்ப்பவரா நீங்கள்?

எப்போதும் சுத்தம் பார்த்துக்கொண்டே இருப்பவர்கள். நாள் முழுக்க திரும்ப திரும்ப கை கழுவிக்கொண்டே இருப்பவர்கள் போன்றவர்கள் எப்படிப்பட்டவர்கள். அவர்களின் குணநலன் என்ன

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

நான் யூடியூப் சேனல் ஆரம்பித்து ஒரு  வருடம் முடிந்ததுமே அதன் அனுபவத்தை நமது வலைப்பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், பணிச்சூழல் காரணமாக அது முடியாமலே போய்விடுகிறது. விரைவில் அது குறித்த பதிவையும், அதில் எப்படி வருமானம் ஈட்டலாம் என்பது பற்றியும் எழுதுகிறேன். 

பாரம்பரிய ஆர்கானிக் கண் மையை நமது வீட்டிலேயே தயாரிக்கும் முறை

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பது கண்கள். அந்த கண்களுக்கு மிகவும் அழகு தருவது கண் மை. கடைகளில் கிடைக்கும் பலவகையான  கண் மைகள் வியாபார நோக்கத்தில் தயாரிக்கப்படுபவை. அதில் கண்ணுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் கெடுதல் தரும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அப்படியில்லாமல் நமது முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த இயற்கை முறையில்

சர்க்கரை நோயாளிகளும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு கம்பு அவல் பொங்கல்

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

எப்போதும் நாம் பச்சரிசி கொண்டே பொங்கல் வைக்கிறோம். அதை பெரும்பாலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பிட முடியாது. அதனால் அவர்கள் பொங்கல் சாப்பிடும் ஆசையிலிருந்து விலகி நிற்பார்கள். ஆனால் அவர்களும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் ஆரோக்கியமும்

நிறம் மாறும் பச்சோந்திகளின் விசித்திரம்

சில உயிரினங்கள் விசித்திரம் நிறைந்ததாக உள்ளன. அந்தவகையில் பச்சோந்தி மிகவும் விசித்திரமான ஒன்றாக இருக்கிறது. இவைகள் இடத்திற்கு ஏற்றபடி நிறம் மாறுவது ஆச்சரியமான ஒன்று. அந்த ஆச்சரியத்தை பதிவு செய்கிறது

வறுமைக் கோடு என்பது இதுதான்

செய்திகளில் அடிக்கடி அடிபடும் வார்த்தை வறுமைக் கோடு. இந்த வறுமைக் கோடு என்றால் என்ன? அதை எப்படி கணக்கிடுகிறார்கள்? அதனை கணக்கிடுவார்கள் யார்? என்ற ஏராளமான கேள்விகள் மனதில் எழுகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் யார்?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...