செவ்வாய், பிப்ரவரி 27, 2018

இந்தி சினிமாவில் நடித்தாலும் தமிழை கொண்டாடிய ஸ்ரீதேவி


இந்திய திரையுலகத்தை கலங்கடித்த மிகப்பெரிய துயரம் சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் இறந்ததுதான். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி மிகப் பெரிய இடத்தை தொட்ட ஸ்ரீதேவியின் வாழ்க்கை மற்ற நடிகைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டி. இந்தி சினிமாவுக்கு சென்ற பிறகு தமிழை ஸ்ரீதேவி சுத்தமாக மறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது.

சனி, பிப்ரவரி 17, 2018

சிறுதானிய உணவுகள் - 1 | ராகி அவல் இட்லி 5 நிமிடத்தில் ரெடிதமிழர்களின் பாரம்பரிய உணவுகளாக சிறுதானிய உணவுகளே இருந்திருக்கிறது. சமீபத்தில் அந்த நிலை மாறி இருக்கிறது. இதனால் ஏராளாமான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மீண்டும் நாம் சிறுதானிய உணவுகளை ஒருநாளைக்கு ஒரு வேளை உணவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான சிறுதானிய உணவு செய்முறைகள் பற்றி ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த சேனலில் இடம்பெற இருக்கிறது. தவறாமல் பார்த்து குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் கொடுத்தால் ஆரோக்கியம் பேணப்படும்.

இன்றைய ராகி அவல் இட்லி உணவு உடனடியாக தயார் செய்யக்கூடியது. காலையில் பள்ளி, அலுவலகம் செல்பவர்கள் உடனே தயாரித்து சாப்பிடக்கூடியது.

வியாழன், பிப்ரவரி 15, 2018

குண்டானால் குழந்தைப்பேறு பறிபோகும்உடற்பருமன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். சென்ற தலைமுறை வரை ஓரளவு உடல் பூசியதுபோல் சற்று பருமனாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. உடற்பருமனாக இருப்பவர்களை பார்த்தாலே இவர்களுக்கு என்னென்ன வியாதிகள் இருக்குமோ என்று மக்கள் பேசிக்கொள்ளும் அளவிற்கு உடற்பருமன் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்பு நோய்களை மட்டுமே கொண்டுவருவதாக இருந்த உடற்பருமன் வேறுபல பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலக அளவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் போதிய உணவு கிடைக்காமல் மரணமடையும் மனிதர்களை விட உடற்பருமனால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

புதன், பிப்ரவரி 14, 2018

2000 வருடங்களுக்கு முன்பே காதலர் தினம் கொண்டாடிய தமிழர்கள்காதலர் தினம் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக பெருபாலோனோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காதலர் தினக் கொண்டாட்டம் என்பது தமிழர்களிடமிருந்து வெளிநாட்டிற்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் புதிய விழா போல் அறிமுகமாகியிருக்கிறது.

செவ்வாய், பிப்ரவரி 13, 2018

தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் புத்திசாலிகளா பைத்தியக்காரர்களா!
இன்றைய நவீன உலகில் நெருக்கடிகள் அதிகம். பலரும் தங்களுக்குள் பல பிரச்சனைகளை வைத்துக்கொண்டு வெளியில் வேறுவிதமாக நடிக்கிறார்கள். இவர்களில் சிலர் தங்களையும் மறந்து தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மனநலம் பாதித்தவர்கள் என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், அப்படி ஒதுக்கக்கூடாது. அதனை மனநலம் பாதிப்பு

ஞாயிறு, பிப்ரவரி 11, 2018

தமிழர்களுக்கு நற்செய்தி! தமிழ் மொழியை அங்கீகரித்தது Google..!
உலகின் மிகப் பழமையான மொழி, முதல் மொழி என்று எதை நீங்கள் Google-ல் தேடினால் அதில் வந்து நிற்கும் மொழி தமிழ் என்பதுதான். ஆனாலும் அந்த தமிழ் மொழியை Google கண்டுகொள்ளவேயில்லை. நீங்கள் தமிழ் வலைப்பதிவராகவோ அல்லது இணையதளம் நடத்துபவராக இருந்தால் உங்களுக்கான வருமானத்தை விளம்பரம் மூலம் தரும் நிறுவனம் Google AdSense தான். இவ்வளவு காலம் இந்த நிறுவனத்திற்கு நீங்கள் உங்கள் இணையதளத்திற்கு விளம்பரம் வரவேண்டி விண்ணப்பித்தால் unsupported language என்றுதான் வரும். இதனால் தமிழ் இனையதளங்கள் வருமானம் ஈட்டமுடியாத நிலையிலே இருந்தன. 

கிட்டத்தட்ட உலகத் தமிழர்களின் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகள் Google நிறுவனத்திற்கு வைத்தும், Email கண்டுபிடித்தது ஒரு தமிழனாக இருந்தும், Google -ன் CEO -வாக ஒரு தமிழரான சுந்தர் பிச்சை பொறுப்பேற்றும் நிலைமை மாறாமலே இருந்தது. இந்தநிலையில் நேற்று முன் தினம் Google -ளிடம் இருந்து ஒரு மகிழ்ச்சியான திடீர் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு Google செவிசாய்த்திருக்கிறது. 

சனி, பிப்ரவரி 10, 2018

சத்தான சிறுதானியங்களை தேர்வு செய்ய இதெல்லாம் அவசியம்இன்று இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகள் மீதும் சிறுதானியங்கள் மீதும் அளவற்ற காதல் மக்கள் மத்தியில் பிறந்திருக்கிறது. இதற்கு காரணம் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் நம் உடலுக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கும் தீங்குகள்தான். அதனால் ஆர்கானிக் உணவுகள் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்றிருக்கிறது. ஆனாலும் இவற்றிலும் போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. சிறுதானிய உணவுகளிலும் அரிசியைப் போன்றே சத்துக்களை நீக்கிவிட்டு வெறும் சக்கையைத்தான் சாப்பிடுகிறோம் என்று சிறுதானிய நிபுணர் சொல்கிறார். 

சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் எவை? அதனை எப்படி கண்டறிவது? சிறுதானியங்களால் கிடைக்கும் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக பேசுகிறார். இதுமட்டுமல்ல, இன்று சிறுதானியங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அவற்றை எப்படி சுவையாக சமைத்து உண்பது என்பது பலருக்கும் தெரியவில்லை. அதனாலே பலரும் சிறுதானியங்களை ஒதுக்கிவிட்டு மீண்டும் அரிசியின் பக்கமே தங்கள் கவனத்தை திருப்புகிறார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில்

வியாழன், பிப்ரவரி 08, 2018

முதல் குழந்தையை அழித்தால் வரும் ஆபத்துசென்ற தலைமுறைவரை வெகு இயல்பாக நடந்து கொண்டிருந்த ஒரு விஷயம் இன்று மிக சிக்கலாக வடிவெடுத்திருக்கிறது. திருமணமாகி 10 வருடங்கள் 15 வருடங்கள் கழித்து குழந்தைப் பெற்ற தம்பதிகள் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைய தம்பதிகளோ திருமணமான இரண்டே மாதங்களில் கரு உருவாகவில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு வந்து விடுகிறார்கள். தங்களிடம் மிகப் பெரிய குறை இருப்பதாக புலம்புகிறார்கள். அதேவேளையில் இன்னொரு வகை தமப்திகள் இருக்கிறார்கள், இவர்கள் எங்களுக்கு இப்போதைக்கு குழந்தை வேண்டாம் இந்தக் கருவை கலைத்துவிடுங்கள் என்று டாக்டரிடம் அடம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே மிக ஆபத்தான போக்கு

சனி, பிப்ரவரி 03, 2018

குழந்தைப் பிறந்தபின் பெண்களுக்கு தோன்றும் மனநிலை தடுமாற்றம்ஒரு பெண்ணுக்கு மிகப் பெரிய மனமகிழ்ச்சியைத் தருவது, தாய்மை. ஆனால், அந்த தாய்மையே சில பெண்களுக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்கிவிடுகிறது. சில பெண்களுக்கு உடல் நலப்பிரச்சனைகள், சில பெண்களுக்கு மனநல பிரச்சனைகள். குழந்தைப் பிறந்தபின் அதிலும் குறிப்பாக முதல் குழந்தைப் பிறந்தபின் அந்த தாய் அடையும் மனநல தடுமாற்றத்தை பற்றி இந்தப் பதிவு பேசுகிறது. 

வெள்ளி, பிப்ரவரி 02, 2018

தூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம்நமது அக்கம் பக்கத்தில் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே இறந்து விட்டார் என்று. அவருக்கு எந்த வியாதியும் இருந்திருக்காது. உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். பின் எப்படி இத்தகைய மரணம் ஏற்படுகிறது. அந்த  மரணம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். யார் யாருக்கு இத்தகைய மரணம் நிகழும்

வியாழன், பிப்ரவரி 01, 2018

சாகர்மாலா திட்டம், நவீன நீர்வழிச்சாலை எந்த திட்டம் பெஸ்ட்?சாகர்மாலா என்ற மத்திய அரசின் திட்டம் இப்போது வெகுவாக விமர்சிக்கப்படுகிறது. இது பெரும் வர்த்தக பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் சாதகமானது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதகமானது என்ற கருத்து பலமாக இருக்கிறது. அதே நேரத்தில் சாகர்மாலா திட்டத்தைவிட மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயத்திற்கும் மிகவும் பயன்படும் நவீன நீர்வழிச்சாலை தொடர்ந்து தாமதப்படுத்துவதற்கான காரணம் பற்றியும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...