Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

உப்பு உருவாக்கும் கெடுதல்


திகால மனிதன் தனது உணவில் உப்பை மிகமிகக் குறைவாகவே பயன்படுத்தி வந்தான். ஒரு வாரத்திற்கு 250 மில்லி கிராம் உப்பு என்ற அளவிலே அவனது உபயோகம் இருந்தது. இந்த அளவுகோல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு 2.4 மடங்கு கூடியிருக்கிறது.  அதாவது 600 மி.கி. கூடுதலாக உப்பை உணவாக உட்கொள்கிறான். 


இதெல்லாம் மேலைநாடுகளின் கணக்கு. இந்தியாவின் நிலைமையை கேட்கவே வேண்டாம். சுமார் 10 ஆயிரம் மில்லி கிராம் உப்பை உணவில் சேர்த்து உணவை விஷமாக்கி வருகிறார்கள் நம் இந்தியர்கள்.

உப்பில் 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு உள்ளது. சோடியமும் குளோரைடும் உடலுக்கு தேவையான ஒன்று. இவை மட்டுமில்லாமல் நமது உடலுக்கு  இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், அயோடின், சிலிகான் போன்ற உப்புகளும் அதிக அளவில் தேவைப் படுகின்றன. இந்த வகை தனிம உப்புகளுக்கு நாம் உணவில் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், சோடியத்தை மட்டும் செயற்கையாக மனிதர்கள் அதிக அளவில் சேர்க்கிறார்கள். இப்படி சேர்க்கத் தேவையில்லை என்று உணவியல் நிபுணர்கள் திரும்பத்  திரும்ப கூறுகிறார்கள்.

உப்பு உடலில் அதிகமாகும் போது என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்றால் உப்பு கூடும்போது கால்சியம்  இயல்பாகவே குறையும் என்கிறார்கள். இதனால் கண்ணில் புரை நோய் ஏற்படும். ஏற்கனவே சர்க்கரை நோய் இருநந்தால் புரைநோய்  வேகமாக பரவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் 'சோடியம் அல்கினேட்' என்ற உப்பை கலக்குகிறார்கள். இதனால் உடல் உறுப்புகள், விரைவாக கெடுகின்றன.


உணவை சரியாக ஜீரணிக்க இயலாத கடல் உப்பை மனிதன் வாழ்நாள் முழுவதும். தொடர்ந்து பயன்படுத்துவதால் நரம்புகளில் எரிச்சலை தந்து வயிற்றில் உள்ள பாதுகாப்பு ஜவ்வுகளை அரித்து விடும். இதனால் மனிதன் குடல் புண் நோய்க்கு ஆளாகிறான்.

இப்படி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது. உப்பு மிக அதிக அளவில் உள்ள கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளை தொடாதீர்கள் என்று மருத்துவர்கள் நம்மை எச்சரிப்பதன் பின்னே இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.  


=========================================================

எனது யூடியூப் சேனலில்...

இந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் இது. காந்தி சுடப்பட்டு இறந்தபோது அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த வேஷ்டி பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதம், பாரதியாருக்கு தமிழில் எழுதிய கடிதம் என்று காந்தியைப்  ஏராளமான சங்கதிகள் இங்கு இருக்கின்றன. அவர் உபயோகித்த பொருட்களும் இங்குள்ளன. 

ராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாக இருந்த இந்த கட்டடம் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. மதுரை வந்தால் தவறவிடக்கூடாத பொக்கிஷம் இந்த அருங்காட்சியகம். நேரில் பார்க்க முடியாதவர்கள் இந்தக் காணொலியில் கண்டு களியுங்கள்.

காந்தி அருங்காட்சியகம்



5 கருத்துகள்

  1. ஆக இனி உணர்வுள்ளோர், உணவில் உப்பு சேர்க்க லாகாது.

    பதிலளிநீக்கு
  2. அளவிற்கு மீறினால் அனைத்தும் நஞ்சு தான்....

    பதிலளிநீக்கு
  3. உப்பு என்றால் அதில், மெட்டல் மற்றும் நான்மெட்டல் ரெண்டும் இருக்கணும்ங்க! இரும்பு, கால்சியம், மக்னீசியம்,அயோடின், பாஸ்பரஸ், சல்ஃபர், சிலிக்கான்(நெஜம்மாவா??) எல்லாம் தனிமங்கள் அல்லது மினரல்கள்னு சொல்லலாம். கால்ஸியம் க்ளோரைட், மக்னீசியம் ஆக்ஸைட், சோடியம் அயோடைட், சோடியும் சல்ஃபைட் னு சொன்னால்த்தான் அவைகள் கால்ஸியம், மக்னீசியம், சல்ஃபைட், அயோடைட் உப்புக்க்ளாகும். "மினெரல்ஸ்"னு வேணா நீங்க சொல்லலாம். உப்புனு சொல்வது "வேதியல்"படி தவறானதாகும். :)

    சிலிக்கான், சாதாரண மண்ணில் நெறையா இருக்கு. மண்ணையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்வது உடல் ந்லத்திற்கு நல்லதுங்கிறாங்க. பொதுவாக நம் ப்ரோட்டீன், டி என் எ, கார்போகஹைட்ரேட்ல எல்லாம் சிலிக்கான் கெடையாது. அப்போ சிலிக்கான் எதுக்கு தேவைனு இப்போத்தான் பார்த்தேன். "கொல்லாஜன்" என்னும் ப்ரோதம் நமக்குத் தேவை, அதை நம் உருவாக்கும்போது "சிலிக்கான்" அந்த ரியாக்ஸைனை காட்டஸை பண்ணும்னு சொல்றாங்க. அதனால் சிலிக்கானும் நமக்குத் தேவையான மினரல் என்கிறார்கள்.

    மற்றபடி நெறைய வேதியியல் எல்லாம் உங்க பதிவு பேச வச்சுடுச்சு. :)

    பதிலளிநீக்கு
  4. அளவுக்கு மீறினால் உப்பும் விசம்தான்! நலமா செந்தில் சார்!http://nesan-kalaisiva.blogspot.fr/2017/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான் அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சுதான்!!!! எல்லாமே அளவோடு இருந்தால் நல்லதே!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை