Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

படுத்தால் மரணம்தான்


மக்கு பிடித்தமான உயிரினம் யானைதான். யானைகள் பொதுவாக 90 முதல் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மைக் கொண்டது. சில யானைகளின் தந்தங்கள் சுமார் 90 கிலோ எடைவரை இருக்கும். கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம் வரை வளரும். 

யானைக்கு இவ்வளவு பெரிய உடல் இருந்தாலும் நன்றாக நீரில் நீந்தும். நாலரை மீட்டர் ஆழத்திலும் நீந்தி செல்லும். மனிதன் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரமே யானையாலும் இருக்க முடியும். 

யானை மூச்சு விடுவது தும்பிக்கையினால் தான் என்றாலும் வாசனை அறிவது வாயினால்தான். வாசனை அறியும் நரம்புகள் அங்குதான் இருக்கின்றன. துதிக்கையில் பெரிய மரத்தையும் சாய்த்துவிடும் வலுவான தசைகளை பெற்றிருக்கிறது. 


யானைகளிடம் விசித்திரமான பழக்கங்கள் உள்ளன. காட்டில் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். சண்டையின் போது களைப்பாக இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளும். சிறிது நேரம் மேயும், தண்ணீர் குடிக்கும். பின் மீண்டும் சண்டையைத் தொடரும். இப்படியே பல நாட்கள் நீடிக்கும். 

ஆசிய யானைகள் படுத்து புரள்வது உண்டு. ஆப்பிரிக்க யானைகளோ எப்போதும் படுப்பதில்லை. நின்று கொண்டேதான் தூங்கும். யானை என்று படுக்கிறதோ அன்று அதன் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். யானைப் படுத்தால் அது மரணப்படுக்கைதான். 


யானை மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் ஓடும். எல்லா யானைகளுமே கிட்டப்பார்வை கொண்டது. தொலைவில் உள்ள காட்சிகளை அவற்றால் தெளிவாகப் பார்க்கமுடியாது. 

யானை பன்றி இனத்தை சேர்ந்தது. முதலில் தோன்றிய யானை பன்றி அளவே இருந்ததாம். ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து, பின்பு அதுவே துதிக்கையாக வளர்ந்ததாம். 


இலங்கையில் உள்ள யானைகளில் ஆண் யானை, பெண் யானை ஆகிய இரண்டுக்குமே தந்தங்கள் கிடையாது. யானைக்கு துதிக்கை பலமானது என்றாலும் அதில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அவ்வளவுதான். அது குணப்படுத்த முடியாத அளவுக்கு சென்று, கட்டுக்கடங்காமல் பெரிதாகி விடும். 

யானையின் உடலில் துதிக்கை எட்டாத இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஒரு குச்சியை பிடித்து சொரிந்து கொள்ளும். யானையால் மற்ற விலங்குகளைப் போல் நான்கு கால்களால் ஒரு இடத்தை தாண்டமுடியாது.  நன்றாக பழகிய யானைப்பாகன் சொல்லும் சில வார்த்தைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப யானைகள் நடந்து கொள்கின்றன என்பது உண்மையே!  



26 கருத்துகள்

  1. செந்தில் குமார்,.
    யானைகளை பற்றிய அறிய தகவல்கள் அனைத்தும் அருமை.
    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. யானை பற்றிய அரிய தகவல்கள் யானை அளவுக்குக் கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள். படங்கள் அனைத்தும் அழகோ அழகு. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. அறியாத பல அரி விடயங்கள் அறிந்தேன் நண்பரே
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  5. யானைகள் பற்றி தகவல்கள் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. மதம் ...யானைக்கு பிடித்தாலும் மனிதனுக்கு பிடித்தாலும் ஆபத்து தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  7. அறிந்த தகவல்களாயினும் சுவாரஸ்யம். தங்களில் ஒருவர் இறந்த இடத்துக்கு சரியாக வருடத்துக்கு ஒருமுறை சென்று மரியாதை செலுத்தும் வழக்கமுடையன. தங்களுக்கு மருத்துவம் பார்க்கும் அந்த (வெளிநாட்டு டாக்டரின் பெயர்தான் மறந்து விட்டது) டாக்டரைத் தேடி வரும் குணங்கள் கொண்டது. அவரின் மறைவுக்கு யாரும் சொல்லாமலேயே பல மைல்களுக்கு அப்பாலிருந்து வரிசையில் வந்து மரியாதை செய்து விட்டுச் சென்றன. நீருக்குள் இருக்கும்போது தும்பிக்கையை வெளியில் நீட்டியபடி நீந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மூலம் மேலும் பல அரிய தகவல்களை அறிந்துகொண்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  8. நல்ல சுவையான தகவல்கள். நண்பர் ஸ்ரீராம் தந்த பின்னூட்டமும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  9. த.ம.? இப்போது அடிக்கடி எல்லோருடைய பதிவுகளிலும் அடிக்கடி காணாமல் போய் விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தமிழ்மணம் அப்படிதான் அடிக்கடி காணாமல் போய்விடுகிறது.

      நீக்கு
  10. ஸ்வாரஸ்யமான தகவல்கள். நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  11. யானையை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாகவும் வியப்பாகவும் இருந்தன! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. தகவல்கள் அறிந்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  13. படுத்தால் அவ்வளவுதான் என்பது
    இதுவரை அறியாத அரிய தகவல்
    அறியாதன அறிந்தோம்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  14. யானை பற்றிய தகவல் அருமை. ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தம் உண்டு பெண் யானைகளுக்குக் கிடையாது என்பதையும், ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டு யானைகளுக்கும் தந்தம் உண்டு என்பதையும் சுமத்ரா போர்னியோவில் வாழும் யானைகளில் ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் இல்லை என்பதையும் பகிர்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. யானையைப் பற்றி அருமையான தகவல்கள் அறிந்தவை என்றாலும் எப்போது வாசித்தாலும் சுவாரஸ்யம்தான். இவற்றிற்கு நினைவுத்திறனும் அதிகம். அதை ஒட்டிய கதைகளைக் கூட நீங்கள் அறிந்திருப்பீர்கள் பஞ்சதந்திரக் கதைகளில். பிரசவ காலம் நெருங்கும் போது பல மைல்கள் கூட கடந்து சென்று ஒரு குறிப்பிட்ட செடியை உண்டு அங்கேயே குட்டியிடும். தங்களை வளர்த்தவர்கள், பாதுகாத்தவர்கள் என்று நினைவில் கொண்டு அவர்களுக்கு நன்றியும் உரைக்கும் மரணத்தையும் நினைவில் கொண்டு அஞ்சலி செலுத்தும் அதுவும் வருடம் தோறும் என்று பல வியக்கத்தக்க இயற்கையாக அமைந்த செயல்களை இவைகளிடம் காணலாம். கோபம் வந்தாலும் ஹஹஹ தெரியுமே உங்களுக்கு அவை எப்படி நடந்து கொள்ளும் என்று. யானையின் குடும்பங்களில் பெண்தான் தலைவி. ஆண் வயதிற்கு வரும் போது விலகும் குழுவிலிருந்து. ஒன்று தனியாக இருக்கும், இல்லை பிற ஆண் யானைகளுடன் சுற்றும். இணையும் காலத்தில் குடும்பங்களுக்குள் நுழைந்து தங்கள் தலைமுறையை உருவாக்க முனையும். குட்டிகளுக்குத்தான் குழுவில் முக்கியத்துவம். பெரும்பாலும் 3 வயதுவரை குட்டிகள் தாயைச் சார்ந்து இருக்கும். யானைகள் அதி புத்திசாலிகள் என்ரு பல சொல்லிக் கொண்டே போகலாம்...

    அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை