கூட்டாஞ்சோறு என்ற இந்த வலைத்தளம் பத்திரிக்கையாளர்களால் நடத்தப்படுகிறது. இந்த தளம் அனைத்து விதமான தகவல்களையும் தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், இந்தியா, சுற்றுலா, தகவல்கள், விவசாயம், பாலியல் போன்ற பல தகவல்களை வழங்குகிறது. சாதனை மனிதர்களின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் வாழ்க்கை முறை என்று சகலவிதமான தகவல்களையும் நிறைவாக தரும் தளமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த வலைத்தளத்தின் உரிமையாளரான எஸ்.பி.செந்தில்குமார், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவர். வாசிப்பிலும் தீவிர தேடலிலும் ஆர்வம் கொண்ட இவர் ‘தினத்தந்தி’யில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மேலும் யாத்ரிகன், கலாதேவி, கண்மணி பிரியங்கா என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களிலும் இணையத்திலும் பல ஆக்கங்களையும் பயணக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ‘ஹாலிடே நியூஸ்’ என்ற சுற்றுலா இதழில் இணை ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார். ‘தினத்தந்தி’ வெள்ளி மலரில் இவர் எழுதிய ‘சித்தர் அற்புதம்’ என்ற சித்தர்கள் பற்றிய ஆன்மிகத் தொடர் பலராலும் பாராட்டப் பெற்றது. ‘நம்பமுடியாத உன்மைகள்’ என்ற பெயரில் இவர் எழுதி, தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் வாசகர்களின் பேராதரவை பெற்றது. இந்தப் புத்தகம் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது.



