திங்கள், ஆகஸ்ட் 03, 2020

ஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..!

ஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..!


அது ஏப்ரல் மாதம் முதல் வாரம். 2020 ஆண்டு.

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத அசுரன் மொத்த உலகையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்த காலம். இந்தியா; இந்த மனித சரித்திரம் பார்க்காத மிகப்பெரிய ஊரடங்கைப் பூமிக்கு அளித்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்த நேரம். 

இன்றைய நாட்கள் போல் அன்று கொரோனாவை துச்சமாக எண்ணாத மக்கள் அதிகம் இருந்தார்கள். எல்லோருக்கும் உயிர் பயம் என்பது உணவைவிட அதிகமாக இருந்தது. வீட்டுக்கு அடங்காத ஒரு சில இளசுகள்தான் ஊர் சுற்றி, போலீசிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள். மற்ற எல்லோரும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தார்கள். 

எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு பலருக்கு வாழ்வையே சுழற்றிப்போட்டிருக்கிறது. வெளியூர்களுக்குச் சென்றவர்கள் அங்கேயே மாட்டிக்கொண்டார்கள். 

வெள்ளி, ஜூலை 24, 2020

‘சேவ் ஜேர்னலிசம்’ பஞ்சாயத்து. ..!
முன் குறிப்பு- நான்காவது தூணை நாசமாக்கியவர்கள் பற்றியது. இதை படித்து
முடிக்கும் போது நான் ‘காவி சங்கியாக’ மாறியிருப்பேன். அதனால் ஒன்றும்
பிரச்சனையில்லை. தொடருங்கள்...
----------------

கேழ்வரகில் எண்ணெய் வடிகின்றது என்பதையும் நம்பி விடலாம். இந்த உடன்
பிறப்புகளும், திராவிட ‘ஆர்வலர்களும், “சேவ் ஜேர்னலிசம்” என்று
சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை. இதற்கான பதில் பின் பகுதியில்
இருக்கும்.

விடயத்திற்கு நேரடியாக வருகின்றோம்.

உங்களுக்கு என்ன பிரச்சனை? ஊடகவியலாளர் ஆசீப் முகமதுவிற்கு,
‘புரட்சியாளர்’ ரேஞ்சிக்கான கூப்பாடு எதற்கு? என்ன அநீதி நடந்துவிட்டது.?
ஏதோ ஊடக ஜனநாயகம் செத்துவிட்டது போலவும், இவர்கள்தான் ‘காப்பாளர்கள்’
போலவும் விளம்பரம் எதற்கு? எதற்காக இந்த கட்டமைப்பு.?(பில்டப்பு)

இத்தனை ஆண்டுகளும் அந்த இந்துத்துவா ரிலையன்ஸ் நிறுவனத்தில்தானே வேலை
செய்துகொண்டு இருந்தீர்கள். இப்போது மட்டும் என்ன இந்துத்துவா எதிர்ப்பு
கூச்சல்.

சரி, உண்மையிலேயே நீங்கள் இந்துத்துவா எதிர்ப்பினால்தான் வெளி
வந்தீர்களா? அல்லது பதவியிறக்கம் செய்யப்பட்டீர்களா? என்றால்
அதுவுமில்லை.

காரணம், நீங்கள் பணியில் இருந்தபோது, இந்துத்துவா- ஆர். எஸ்.எஸ்.
பார்ப்பன ‘உண்டு உரைவிடப் மடியில்தான்’ வளர்ந்தீர்கள். அதற்கேற்ப
அவர்களுக்கு விதம் விதமான பெயர்சூட்டி விவாதத்திற்குள் வைத்து வளர்த்து
விட்டிருந்தார்கள். அப்படி ஒரு ஆர்.எஸ்.எஸ் பாசக்கார பிள்ளைகளாக
இருந்துள்ளீர்கள்.

இதை நான் சொல்லவில்லை. ராமசுப்பரமணியம் என்கிற ஆர்.எஸ்.எஸ்,
பார்ப்பனர்தான் சொல்கிறார்.

ரேடியோ ஜேர்னலிஸ்ட்டான சகோதரர் ராஜவேல் நாகராஜன் ஒரு வீடியோ
வெளியிட்டிருந்தார். மதன் ரவிச்சந்திரன் ‘பெரியார் படத்தை போட்ட’ பனியனை
அணிந்துகொண்டு வேலை கேட்கவில்லை. “ஆர்.எஸ்.எஸ். காரரான ராமசுப்ரமணியம்
சொல்வதைக் கேளுங்கள் என்கிறார்.

அந்த நபரோ, ‘புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன் எனக்கு நல்ல நண்பர்,
நான்தான் அவரிடம் சொல்லி மதன் ரவிச்சந்திரனை சேர்த்துவிட்டேன்’
என்கிறார். அதே போல் நியூஸ்-7- சேனலிலும் அப்படி சொல்லி சேர்த்துவிட்டேன்
என்கிறார். குணசேகரன் அவர்களின் திறமையை பாராட்டி பேசுகிறார்.

ஆக இந்த ‘திராவிட ஊடக லாபி’ குழுவினர் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க,
பார்ப்பன பிரமுகர்களின் நல்ல நட்பில்தான் இருந்து வந்துள்ளார்கள்.
அவர்கள் சொல்லி இவர்கள் வேறு யார் யாரையெல்லாம் வேலைக்கு வைத்துக்
கொண்டார்கள் எனத் தெரியாது.

ஆனால் அதே அளவிற்கு மற்ற கட்சியினருடன், குறிப்பாக தமிழ்த்தேசிய
தலைமைகளுடன் ‘நட்புறவில்’ இருந்தார்களா?’ என்ற கேள்வி உள்ளது.

எனக்குத் தெரிந்து சில காங்கிரஸ் கட்சி தலைவர்களைக்கூட குறிப்பிட்டு,
‘அவரைக் கூப்பிட வேண்டாம், இவரைக்கூப்பிட வேண்டாம்’ என தவிர்த்த
கதையெல்லாம் உண்டு. பேசியதெல்லாம் உண்டு. பல கட்சி-இயக்கத் தரப்பினரைக்
குறிப்பிட்டு தவிர்த்துள்ளார்கள். அதாவது எந்த விதத்திலும் திமுக-விற்கு
குந்தகம் வந்துவிடக்கூடாது என்ற திட்டமிடலில்.

ஆனால், இவர்களைத்தான் ஒரு கும்பல்,‘நடுநிலை நெடுக்குத்துகள்’ என
கட்டமைப்பு செய்து வருகிறது.

இன்று உங்களுக்கு நேர்ந்த அதே சிக்கல்தானே மதன் ரவிச்சந்திரனுக்கும்
நேர்ந்தது. தொடக்கத்தில் அவர்மீது இந்துத்துவா முத்திரை இல்லையே. ஒவ்வொரு
சேனலில் இருந்தும் நீக்கியபோது, இப்படி ‘ஜேர்னலிசத்தைக் காப்புபோம்’ என
நீங்கள் அவருக்காகவும் பேசியிருக்கவில்லையே ஏன்? அவர் எல்லா தரப்பு
தலைவரிகளிடமும் சரியான கேள்விகளைத்தானே கேட்டபடி இருந்தார்.

அதில் திமுக- சார்பு அமைப்பு, மற்றும் தலைவர்களை அப்படிக் கேட்டார்,
இப்படிக்கேட்டார் என்றுதான் ‘இந்துத்துவா முத்திரை’ குத்தி
ஒதுக்கினீர்கள்.

அந்த தம்பிக்கு செய்தது நியாயம் என்றால், உங்களை ‘திராவிடத்தின் முகமாக’
சொல்லி தனித்து, தவிர்த்து விடுவதும் நியாயம்தானே.? நீங்கள் செய்தால்
நடுநிலை போராட்டம். ஜனநாயகம்? மற்றவர்களுக்கு என்றால் ஏதோ ஒரு
முத்திரைக்குத்தி தள்ளிவிடுகிறீர்கள். இதுவா ஊடக ஜனநாயகம்? ஆனால் நீங்கள்
அதைத்தானே செய்து கொண்டிருக்கின்றீர்கள்!

ஆர்.எஸ்.எஸ் ராமசுப்பரமணியன் ‘திராவிட ஊடக லாபி’ தலைமைகளைப் பாராட்டியதை
நீங்கள் நொட்டம் சொல்ல முடியாது என மறுக்கிறீர்களா? எனில் அதே நியாயம்
மதன் ரவிச்சந்திரனுக்கும் மற்றவர்களுக்கும் பொருந்த வேண்டுமல்லவா. அவரை
ஆடிட்டர் குருமூர்த்தி பாராட்டினார் என்பதற்காக, தூற்றி பேசியது என்ன
நியாயம். அது நியாயம் என்றால் ராமசுப்பரமணியன் உங்களைப் பாராட்டி
பேசியதும் நியாயம்தானே?

உங்களுக்கு உள்ள கருத்துச் சுதந்திரம் மற்ற கட்சியினருக்கும்
இருக்கும்தானே? அதை தனிமைபடுத்துவது என்ன நியதி? ஆனால் நீங்கள் அப்படி
பிரச்சாரம் செய்தீர்கள்தானே?

அடுத்து நிர்பந்தம் காரணமாக ஒரு ஊடக நிறுவனத்தில் இருந்து பணி விலகுவது,
பதவி குறைப்பு நடப்பதும் புதியதல்ல. வழக்கமான ஒன்றுதான்.விகடன் குழுமத்தில் ஜாம்பாவனாக இருந்த ஆசிரியர் ராவ், பிரபல
கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோர் விலக்கப்பட்ட போது- அல்லது விலகிய போது
யாரும் இப்படி ‘சேவ் ஜேர்னலிசம்’ என்று கூப்பாடு போட்டுக்
கொண்டிருக்கவில்லை. கூப்பாடு போட்டு ஒரு ‘கட்டமைப்பை’ உருவாக்கவில்லை.

அதே போன்று புகழ்பெற்ற குமுதம் நிறுவனத்தில் இருந்து எத்தனையோ
ஜாம்பவான்கள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது நிர்வாகம்
அழுத்தம் கொடுக்க விலகியிருக்கிறார்கள். இது சமீபம்வரைகூட நடந்தது.
யாரும் ‘சேவ் ஜேர்னலிசம்’ என்று குத்தவச்சி உட்கார்ந்து கொண்டு,
கோஷ்டிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கவில்லை.

தினகரன் நாளேட்டின் திறமைமிக்க ஆசிரியர் கதிர்வேல் விலகிய போது யாரும்
இப்படி ‘சேவ் ஜேர்னலிசம்’ என பொங்கிக் கொண்டிருக்கவில்லை. புதிய
தலைமுறையிலும் பல சீனியர்கள் அப்படி வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள்,
அல்லது அழுத்தத்தின் காரணமாக விலகியிருக்கிறார்கள். அவர்கள், யாரையும்
தூண்டிவிட்டு அலப்பறை செய்யவில்லை.

மேலே சொன்ன யாரும், “தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின
மக்களுக்காக எழுதியவர், போராடியவர், அதனால்தான் நீக்கப்பட்டார்’ என
பிரச்சாரப்படுத்தவில்லை. தான் ஒரு முஸ்லீம் என்பதற்காக இந்துத்துவா ஊடகம்
பழி வாங்குகிறது என பிரபலங்களிடம் சொல்லி கருத்தெழுத சொல்லவில்லை.

ஊடகத்திற்கு வந்துவிட்டால் எல்லா சமூகத்தவர்களுக்கும்தான் பேச-எழுத
முடியும். அதைச் சொல்லி அனுதாபம் தேடுவதும், பிச்சை எடுப்பதும் ஒன்று.

சரி, இப்போது மட்டும் ஏன் இந்த முழக்கம்? என்றால், அதுதான் தேர்தல்
அரசியல். PK- 380 கோடி விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. இந்த பிரச்சனையை
இந்துத்துவா- திமுக ஆதாய அரசியலாக மாற்றிக்கொள்கிறார்கள். இந்த
பிரச்சாரத்தில் இருப்பவர்களை எல்லாம் நோக்கினால் அது தெரியும்.

இத்தனை ஆண்டுகளாக வேலை செய்துகொண்டிருந்த போது அந்த நிறுவனத்திற்கு அவர்
முஸ்லீம் எனத் தெரியாதா என்ன? பச்சை மோசடி பிரச்சாரம் இது.

இப்படியான உறுப்படிகளை வைத்துக் கொண்டு, உடன் பிறப்புகளும், ‘அய்ய...கோ.
மிரட்டல், இந்த அநியாயத்தை யாருமே கேட்க மாட்டீர்களா (வருத்தப்படாத
வாலிபர் சங்கம் பட சிவகார்த்திகேயன் மாதிரி) என கதறுவதுதான் கொடுமை..

1971- 1976 காலகட்டங்களில் முதல்வராக இருந்த கலைஞரை விமர்சித்து
எழுதியதற்காகவே பல ஊடகங்கள், விதம் விதமாக மிரட்டப்பட்டது. பிரபல குமுதம்
வார இதழை மிரட்டி முடக்கினார்கள். தமிழகம் முழுதும் பறிமுதல் செய்து
எரித்தார்கள். அலுவலகம் தாக்கப்பட்டது

பிரபல விகடன் வார இதழ், கலைஞர் குறித்த கார்ட்டூன் படத்தை
வெளியிட்டதற்காகவே கடுமையாக மிரட்டப்பட்டது. அங்கும் தாக்குதல். கடைசியாக
மன்னிப்பு கேட்க வைத்தார்கள். அதே போன்று தராசு வார இதழ்மீதும்
கடுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அலை ஓசை, நவமணி, நவசக்தி, மக்கள் குரல் உள்ளிட்ட நாளேடுகள் எல்லாம்
மிரட்டப்பட்டது. அலுவலகம்- அச்சகத்திற்கு மின் துண்டிப்பெல்லாம் நடந்தது.
அலைஓசை நாளேடும் தாக்கப்பட்டது என நீண்ட வரலாறு-பட்டியல் உண்டு.

2006- 2011 காலகட்டத்திற்கு வருவோம்.

நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ். மணியை கைது செய்து கடுமையாக தாக்கி சிறையில்
அடைத்தார்கள். அப்போது ‘சேவ் ஜேனர்லிஸம்’ குரல் ஒலிக்கவில்லை.

தினகரன் நாளேடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதற்காக, ஊர்கூடி பார்க்க நாள்
முழுக்க ‘லைவ்’ கலவரம் செய்தபோதும், பத்திரிகை அலுவலகம் எரிக்க, அதில்
மூன்று பேர் கருகி இறந்தபோதும், ’சேவ் ஜேனர்லிசம்’ குரல் அரசியலாக
ஒலிக்கவில்லை?

பிறகு எரித்தவர் குடும்பமும்- எரிக்கப்பட்ட நாளேடு குடும்பமும், ‘கண்கள்
பணித்தது. இதயம் குளிர்ந்தது’ என்று கைகோர்த்துக் கொண்டபோது யாரேனும்
கண்டித்தார்களாக? என்றால் இல்லை. இவர்கள்தான் ஊடக ஜனநாயகத்தைப் பற்றி
பேசுகிறார்கள்.

ஜுனியர் விகடனின் கழுகார் பகுதியில் மதுரை அழகிரியின் கையாள் பொட்டு
சுரேஷ் பற்றி சிறிய செய்தி- நேரடியாக இல்லை, மறைமுகமா
சுட்டியிருந்தார்கள். அதற்காக எத்தனை மிரட்டல்- உருட்டல்? மதுரை
செய்தியாளர் குளசண்முகசுந்தரத்தை விரட்டி விரட்டி மிரட்டினார்கள்.
அப்போது இந்த சேவ் ஜேர்னலிசம் ‘டிரெண்ட்’ ஊருவாக்கவில்லையே ஏன்? என்றால்,
‘380 கோடி’ விளாயாட்டு.

ஆக அவர்களுக்கு ‘அரசியல் லாபம்’ என்றால் புரட்சி அவதாரம் எடுத்து
பிரச்சாரம் செய்வார்கள். தேவையில்லை என்றால் போய் பதுங்கி
படுத்துக்கொள்வார்கள். இவர்களின் போராட்டக் குரல் எல்லாம்
எதிர்க்கட்சியாக இருக்கும் வரைதான். ஆளும்கட்சியானால் மௌனமாகிக்
கிடப்பார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு ‘கணக்கு’ வைத்திருப்பார்கள்.

சமீபத்திய ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியின் கரூர்
செய்தியாளர், ஆளும் கட்சியின் அமைச்சர் ஆட்களால் கடுமையாகத்
தாக்கப்பட்டார். மிரட்டப்பட்டார். அதற்காக இவர்களின், ‘சேவ் ஜேர்னலிசம்’
குரல் என்னவாக ஒலித்தது? இதுதான் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்களின்
புரட்சி. ஒவ்வொன்றிலும் ஒரு அரசியல் கணக்கு.

ஒரு பாதிப்புமே இல்லை. ஒரு தாக்குதலும் இல்லை. ஆசிப் முகமதுவை
புரட்சியாளர் ரேஞ்சுக்கு பில்டப் செய்வதேன்? குணசேகரனுக்கு கோஷம்
போடுவதேன். சரி, விகடன் நிருபர்கள் வேலையிழப்பு சம்பவத்திற்கு கண்டனம்
தெரிவித்த இந்த ‘மாற்றத்திற்கான’ ஊடக தோழர்கள், இப்போது நியூஸ்-18 தமிழ்
சேனலுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டியதுதானே? அங்கும் பாதிப்பு
நடந்திருக்கின்றதுதானே? ஏன் செய்யவில்லை போராட்டத்தை?. அதுதான் 380 கோடி
அரசியல்.

இன்னொரு கேவலம் என்ன என்றால், ஆசிப் அளவிற்கு ஈழப்பிரச்சனை, ராஜிவ்காந்தி
படுகொலை குறித்த புரிதல் உள்ள பத்திரிகையாளர் யாருமே இல்லை என்கிறார்
அறிவாலயம் சகோதரி பனிமலர் பன்னீர்செல்வம். வருத்தப்பட்டிருக்கின்றார்.

கவிஞர் தாமரை, பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் உள்ளிட்ட சில பெண்
தோழர்களை மட்டும் சுட்டுகின்றேன். தெரிந்தும் தெரியாமலும் பல களப்பணிகளை
இழப்பிற்கு மத்தியிலும் செய்துள்ளார்கள். நான் அறிவேன். அதுவும்
நெருக்கடியான காலகட்டத்தில். அப்படி பலர் இருக்கிறார்கள். அதில் ஒரு துளி
அளவும் செய்யாத நபரை, ‘அதைச் செய்தார்-இதைச்செய்தார்’ என முன்நிறுத்தும்
போக்கு ஒரு யோக்கியமற்றத் தனம்.

ஆனால் கடைசிவரை இந்துத்துவா மாரிதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு
பதிலையும் சொல்லாமல் உருட்டி விட்டீரகளே. அங்கேதான் உங்களின் திறமை
இருக்கின்றது. எப்படியோ, அது உங்கள் சகோதர யுத்தம், உங்கள் விவகாரம்.
---------------
குறிப்பு 1) உங்களின் நேர்மையற்ற காலத்தின் குரலை அறிவேன். நேர்பட பேசாத
உங்களை போக்கையும் அறிவேன். உங்களின் ‘தனிப்பட்ட’ விடயங்கள் தேவையற்றது.
கருத்தின் மீது மட்டுமே விமர்சனம் வைக்கின்றேன். அவ்வளவே.

வாசித்து முடித்த பின் என்னை ‘சங்கியாக்கியிருந்தால்’ மகிழ்வேன். கட்டுக்
கதைகளை கட்டினால்... நான் மதன் அல்ல.

உங்களின் முகத்திற்கு நேராக ஸ்கிரீன் ப்ளேவாக திருப்பி வந்து தாக்கும்.

-பா.ஏகலைவன், 
பத்திரிகையாளர்.


சனி, ஜூன் 27, 2020

இந்தியாவின் முதல் ரயிலோட்டம் இப்படித்தான் நடந்தது..!ந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 கோடி பயணிகளையும், ஒரு நாளைக்கு 14,444 பயணிகள் ரயிலையும் இயக்கும் பிரமாண்ட சாம்ராஜ்யம்.  இந்த சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டவர் ரோலண்ட் மெக்டொனால்ட் ஸ்டீவன்சன் என்ற பிரிட்டிஷ் பொறியாளர். 1808-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி லண்டனில் பிறந்தவர். 1843-ல் குடும்பத்தோடு இந்தியா வந்தார். 

இந்தியாவில் ரயிலை இயங்க வைக்கவேண்டும் என்பது அவரின் தீவீர கனவு. ஆனால், இந்திய மக்களுக்கு ரயில் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. அதோடு அன்றைக்கு ரயில்வே துறை தனியார் வசமே இருந்தது. இந்தியா போன்ற கரடுமுரடான நில அமைப்பு கொண்ட ஒரு நாட்டில் ரயிலுக்காக முதலீடு செய்ய யார் முன்வருவார்கள்? இப்படி சிக்கல்கள் பல இருந்தாலும் தனது கனவில் தீவிரமாக இருந்தார் ஸ்டீவன்சன். 

செவ்வாய், ஜூன் 23, 2020

15 லட்சம் பார்வைகள்..! எல்லாப் புகழும் உங்களுக்கே..!
15 லட்சம் பக்கப் பார்வைகள் என்பது வலைப்பக்கத்திற்கு ஒரு சாதனை எண்ணாகத்தான் இருக்கிறது. 'யூடியூபி'ல் இதுவொரு சாதாரண எண்ணிக்கை. ஒரேயொரு காணொளி மட்டுமே இந்த எண்ணிக்கையை தொட்டுவிட்டு போய்விடும். ஆனால், வலைப்பூவில் இதுவொரு சாதனைதான். 

ஏன் இப்படி? இந்தக் கேள்வி பலமுறை எனது எண்ணத்தில் வந்து போயிருக்கிறது. அதற்கான காரணமும் நாம் அறிந்ததே.

இன்றைய தலைமுறையினருக்கு வாசிப்பு பழக்கம் குறைவு. அவர்கள் பிறந்ததில் இருந்து தொலைக்காட்சிகளை பார்த்து பழகிவிட்டார்கள். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் பிள்ளைகளுக்கு எப்படி அந்தப் பழக்கம் வரும்?

2015 வரை வலைப்பூவிற்கு நல்ல காலம் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதன் பின்னர் பெரும்பாலானவர்கள் அதில் எழுதிக்கொண்டிருந்தாலும் அதன் வாசிப்பாளர்கள் குறைவாகவே இருந்தார்கள். ஓரளவு எழுதிக்கொண்டிருந்தவர்களையும் முகநூல் தன் பக்கம் இழுத்துக்கொண்டது.

2016-ம் ஆண்டு மத்தியில் 'ஜியோ' வந்த பின் ஒட்டுமொத்த இந்தியாவும் காணொளி பக்கம் சாய்ந்துவிட்டது. அதுவரை இணையம் என்பது செலவு மிக்க ஒன்றாக இருந்தது. இலவச அதிவேக 4ஜி இணைய வசதி இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த நவீன நோய் என்று சொல்லலாம். எல்லோரும் அந்த நோய்க்கு அடிமையானார்கள்.

இந்த இலவசத்தால் விஸ்வரூப வளர்ச்சி கண்டது 'யூடியூப்'. ஜியோவுக்குப் பின் எல்லோருக்கும் படிப்பது என்பது கசந்தது. பார்ப்பதும் கேட்பதும் மட்டுமே இனித்தது. அந்த இனிப்பை கொடுக்க பல படைப்பாளிகளும் 'யூடியூப்' பக்கம் வந்தார்கள்.

அதனால் வலைப்பூ தனது செல்வாக்கை மேலும் இழந்தது. ஆனாலும் அந்த யூடியூப்-க்கு content கொடுப்பதே வலைப்பூதான் என்பது ஓர் அறியா செய்தி.

2018-ல் தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரங்கள் கொடுக்க கூகுள் முடிவு செய்திருந்தது. இதன் மூலம் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எழுதிவரும் வலைப்பதிவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், அப்படி எந்த மாயமும் நடந்துவிடவில்லை.

யூடியூபில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற கூகுள் ஆட்சென்ஸ் (அதாவது விளம்பரம் மூலம் வருமானம் பெறுவது) தமிழ் வலைப்பதிவில் தோல்வியுற்றது என்றுதான் சொல்லவேண்டும். ஆங்கில வலைப்பதிவர்கள் பலர் ஒன்றுக்கு இரண்டு வீடுகளையும் கார்களையும் வலைப்பதிவு விளம்பரம் மூலம் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், தமிழில் அது ஏன் எட்டாத ஒன்றாக இருக்கிறது என்று தெரியவில்லை.

இத்தனைக்கும் தமிழில் தகவல் வறட்சி இருப்பதாக கூகுள் சொல்கிறது. எதிர்காலத்தில் ஆங்கிலத்தைவிட இந்தியாவில் இந்திய மொழிகளை உபயோகிப்பவர்கள்தான் அதிகமாக இணையத்தை உபயோகிப்பார்கள் என்று கூகுள் சொல்கிறது. அப்படியொரு நிலை வரும்போது நமது மொழிகளில் தேவையான தகவல்கள் இல்லை என்பதுதான் உண்மை. அந்த வறட்சியை போக்கத்தான் இப்போது எழுதச் சொல்கிறது கூகுள்.

இன்று நாம் எழுதும் தகவல்கள் வரும் காலங்களில் வருமானமாக வரவும் வாய்ப்பிருக்கிறது. அது நமது ஓய்வு காலத்திற்கு உதவுவதாக கூட இருக்கலாம். எனவே மனம் தளராமல் எழுதுங்கள். நானும் அவ்வப்போது எழுதுகிறேன்.

ஒருகாலத்தில் அதிக பசு மாடுகள் வைத்திருந்தால் அது செல்வத்தின் அடையாளம். அதன்பின் அதிக நிலம் வைத்திருந்தாள் அது செல்வத்தின் அடையாளம், இப்போது வீடு, தங்கநகை, கார் எல்லாமே செல்வத்தின் அடையாளம். ஆனால், வருங்காலத்தில் யாரிடம் அதிக content இருக்கிறதோ அதுதான் செல்வத்தின் அடையாளம். எனவே நிறைய தகவல்களை சேகரித்து தமிழில் அல்லது உங்களுக்கு தெரிந்த இந்திய மொழிகளில் எழுதுங்கள். இது மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.15 லட்சம் பார்வைகள் வரை என்னை அழைத்துச் சென்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..!!!
வெள்ளி, ஜூன் 12, 2020

கொரோனாவுக்கு பெட் இல்லை..! நெஞ்சை உருக்கும் கண்ணீர்க் கதை..!


பரக்கத் அலி என்பவர் எழுதிய இந்த பதிவை நியாண்டர் செலவன் பகிர்ந்திருந்தார். மனதை பாதித்த அந்தப் பதிவை அப்படியே உங்களுக்கு தருகிறேன்.

வரதராஜன்

'கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை' என வரதராஜன் சொன்னதற்குப் பின்னால் நெஞ்சை உருக்கும் அவரது கண்ணீர்க் கதை ஒன்று உள்ளது.

2006 செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள்!

`பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக... நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக!' - `பணக்காரக் குடும்பம்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரியைத் தன் வீட்டு வாசலில் எழுதி வைத்திருந்தார் செய்தி வாசிப்பாளரும் நாடகக் கலைஞருமான வரதராஜன்.

இந்த பாடல் வரிக்குக் காரணம் மனைவி உஷா. மாமன் மகள் உஷாவைக் கரம்பிடித்து, 32 ஆண்டுகள் மணவாழ்க்கை இனிமையாக நடத்திக்கொண்டிருந்தார் வரதராஜன். இந்த 32 ஆண்டில் ஒருமுறை கூட இருவருக்கும் சண்டையே வந்ததில்லை. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள். 2006 ஜூலையில் உஷாவுக்கு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதனால், ஒரு சேஞ்சுக்கு புனேவில் இருக்கிற மூத்த மகள் ஶ்ரீவித்யா வீட்டுக்குப் போய்விட்டு வரலாம் எனப் புறப்படுகிறார்கள் வரதராஜனும் உஷாவும்.

2006 செப்டம்பர் 5-ம் தேதி புனேவுக்குப் பயணம். காலை 11.15 மணிக்கு மும்பை எக்ஸ்பிரஸ். குளிர்சாதன இரண்டாம் வகுப்பு பெட்டியில் ரிசர்வ் செய்திருந்தார்கள். சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் வழியில் அடையாறு, வாரண் ரோடு, சென்ட்ரல் ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்களில் தேங்காய்களை உடைத்துவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைகிறார்கள் வரதராஜனும் உஷாவும். கிட்டத்தட்ட அது அவர்களுக்கு இரண்டாவது ஹனிமூன் பயணம் போல இருந்தது. ரயிலில் ஏறி அமர்ந்ததும் கையோடு கொண்டு போயிருந்த லேப் டாப்பில், வரதராஜன் நாடக விழாவைப் பாராட்டி சோ, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் பேசிய வீடியோக்களைப் பார்த்தபடியே பயணத்தைத் தொடர்கிறார்கள்.

ரேணிகுண்டா ஸ்டேஷன் வருகிறது. வீட்டிலிருந்து எடுத்துப் போன இட்லியைச் சாப்பிடுகிறார்கள். மாலை ஐந்து மணி. ரயிலுக்குள்ளேயே வாக்கிங் போகிறார் உஷா. புனேவில் உள்ள மகளிடம் வருகையைப் பற்றி செல்போனில் பகிர்ந்துகொள்கிறார் உஷா. வரதராஜனின் தம்பி ராமகிருஷ்ணனின் மனைவி ஜெயந்தி செய்து கொடுத்த சப்பாத்தி, தயிர்ச் சாதத்தை இரவு சாப்பிடுகிறார்கள். சாப்பாடு பிரமாதமாக இருந்ததால், உடனே ஜெயந்திக்கு போன்போட்டு பாராட்டுகிறார் உஷா.

இரவு 10 மணி ஆனதும் பெர்த்தில் படுக்கப் போகிறார்கள். கொஞ்ச நேரத்தில் உஷா மட்டும் எழுந்து உட்கார்ந்திருக்கிறார். ``என்னம்மா தூக்கம் வரலையா?'' எனக் கேட்கிறார் வரதராஜன். ``இல்லை. உட்கார்ந்தா பெட்டராக இருக்கும்'' என்கிறார் உஷா. ``கொஞ்சம் முதுகைத் தடவி விடுங்க'' என உஷா சொல்ல.. தடவி விடுகிறார் வரதராஜன். ரெய்ச்சூர் ஸ்டேஷனில் ரயில் வந்து நிற்கிறது. மூச்சுவிடக் கஷ்டப்படுகிறார் உஷா. பதறிப்போய் டி.டி.இ-யிடம் உதவி கேட்கிறார் வரதராஜன். ரயிலில் டாக்டர் யாராவது இருக்கிறாரா என செக் செய்துவிட்டு வந்த டி.டி.இ, உஷா படுத்திருந்த பெர்த்துக்கு மேலே இருப்பவர் ஹோமியோபதி டாக்டர் என்கிற தகவலைச் சொல்கிறார்.

உடனே அவரை எழுப்பி, விவரத்தைச் சொல்கிறார்கள். அவர் சில மாத்திரைகளைக் கொடுத்து வெந்நீரில் போடச் சொன்னார். ஸ்டேஷனில் இறங்கி, அலைந்து திரிந்து வெந்நீர் வாங்கி வந்தார் வரதராஜன். அதற்குள் உஷாவின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, ``ஆக்சிஜன் தேவைப்படுது''னு சொன்னார் ஹோமியோபதி டாக்டர்.

"எனக்கு முடியலங்க'' என உஷாவும் சொல்கிறார். அதற்குள் ஸ்டேஷனை விட்டு ரயில் கிளம்ப ஆரம்பித்துவிட்டது. டி.டி.இ-யிடம் சொல்லி, வண்டியை நிறுத்த உதவி கேட்டார் வரதராஜன். அவரும் உடனடியாக கார்ட்டிடம் சொல்லி வண்டியை நிறுத்தினார். லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு இறங்கினார்கள். பிளாட்பார பெஞ்சில் மனைவியை உட்கார வைத்துவிட்டு, ``உஷா தைரியமாக இரு. டாக்டரை அழைச்சிட்டு வருகிறேன்'' எனச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்க்க ஓடுகிறார் வரதராஜன். "பதறாதீங்க... என்னை எப்படியும் நீங்க காப்பாத்திடுவீங்க'' என உஷா நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார். உஷா இருப்பது மூன்றாவது பிளாட்பாரம். ஸ்டேஷன் மாஸ்டர் இருந்ததோ முதல் பிளாட்பாரத்தில். வரதராஜன் பதற்றத்தில் ஓடியபோது, உஷாவின் செல்போன் கைத்தவறி விழுந்து தண்டவாளத்தில் உடைந்து நொறுங்குகிறது.

``டாக்டர் வர அரைமணி நேரம் ஆகலாம்'' என ஸ்டேஷன் மாஸ்டர் சொல்ல... ``வீல் சேர் இருந்தால் கொடுங்கள்'' எனக் கேட்கிறார் வரதராஜன். வீல் சேரைத் தேடியபோது கிடைக்கவில்லை. யாரோ எடுத்துச் சென்றிருந்தார்கள். ஸ்டேஷன் மாஸ்டரிடம் வரதராஜன் போராடிக் கொண்டிருந்தபோது மூன்றாவது பிளாட்பாரத்தில் உஷா தன்னந்தனியாக துடித்துக்கொண்டிருந்தார். உஷா என்ன நிலையில் இருக்கிறாரோ என்கிற கவலையில் பதற்றத்தோடு வரதராஜன் இருக்க... ஒரு வழியாக வீல் சேர் கிடைத்து ஒரு உதவியாளரை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்தை நோக்கி ஓடு வருகிறார். அங்கேயும் விதி விடவில்லை. வழியில் குறுக்கே ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த ரயில் கிளம்பிய பிறகுதான் அவர்களால் உஷாவை நெருங்க முடியும்.

ரயில் கிளம்பியதும் உஷா இருந்த இடத்தை நோக்கி ஓடி வருகிறார் வரதராஜன். அங்கே உஷா மூச்சு விடச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். எமர்ஜென்ஸிக்காகப் போடும் மாத்திரையை உஷாவுக்குக் கொடுத்தார் வரதராஜன். பலன் இல்லை. மனைவியை வீல் சேரில் வைத்து, ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் இறக்கி ஏற்றி ஸ்டேஷனை விட்டு வெளியே போவதற்குள் அரசாங்கத்தின் அத்தனை கட்டமைப்புகளும் கேலி பேசின.
உஷா துவண்டு போயிருந்தார். சென்னையில் உள்ள இருதயவியல் மருத்துவரிடம் செல்போனில் பேசுகிறார் வரதராஜன். ``உடனடியாக ஆக்சிஜன் அளிக்க வேண்டும். டெரிப்ளின் ஊசி போட வேண்டும்'' என்கிறார் கார்டியாலஜிஸ்ட். டாக்டரின் அறிவுரைப்படி உஷாவின் பாதங்களைச் சூட பறக்கத் தேய்த்துக்கொண்டிருந்தார் வரதராஜன்.

ரெய்ச்சூர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் ஆட்டோ ஒன்றைப் பிடித்து மருத்துவமனையைத் தேடி ஓடுகிறார்கள். உதவிக்காக இரண்டு பேரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார் வரதராஜன். முதலில் போன ஆஸ்பிட்டல் பூட்டப்பட்டிருந்தது. வாட்ஜ்மேன் வேறு இல்லை. அடுத்த மருத்துவமனையை நோக்கி ஆட்டோ விரைகிறது. மருத்துவமனை வாசலில் ஆட்டோ நின்றதுமே உள்ளே இருந்து வந்த டாக்டர், உஷாவைப் பரிசோதித்துவிட்டு உடனடியாக ``ராஜீவ் காந்தி ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போங்க'' என்கிறார். ராஜீவ் காந்தி மருத்துவமனையை நோக்கிச் சீறிப் பாய்கிறது ஆட்டோ. அங்கே இருந்த டாக்டர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு, ``சிவியர் கார்டியாக் அரஸ்ட். சாரி.. இறந்துட்டாங்க..'' என்கிறார்கள். அப்போது நேரம் நள்ளிரவு 12.10 மணி. நள்ளிரவு நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்கிறது வரதராஜனின் அழுகைச் சத்தம்.

வரதராஜன் மனைவி படத்துடன்

ஆம்புலன்ஸ் ஒன்றைப் பிடித்து உஷாவின் உடலோடு சென்னையை நோக்கிக் கிளம்புகிறார் வரதராஜன். மனைவியை இழந்த சோகத்தில்தான் வீட்டு வாசலில், `பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக... நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக! ’என எழுதி வைத்திருந்தார்.

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு டாக்டர், ஸ்டேஷனை விட்டு அவசர காலத்தில் வெளியேற ஒரு அவசர வழி, ஆக்சிஜன் வசதி, ஆம்புலன்ஸ் இவற்றில் ஒன்று இருந்திருந்தாலும்கூட உஷா உயிர் பிழைத்திருப்பார். பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பாக ரயில்வே போலீஸ் கூடவே ரயிலில் பயணிக்கிறார்கள். அப்படி உயிரைக் காப்பாற்ற ஒரு டாக்டரோ ஆக்சிஜனோ ரயிலில் நிறுவ முடியாதா? முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் மருத்து வசதிகள் இருக்க வேண்டும் என அன்றைக்கு வரதராஜன் வைத்த கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

உஷாவின் உயிர் காக்க அன்றைக்கு வரதராஜன் நடத்திய போராட்டம் மனைவிக்கானது மட்டுமல்ல. பிறருக்கானதும்கூட. அடிப்படை வசதிகள் அன்றைக்கு இருந்திருந்தால் உஷா மட்டுமா உயிர் பிழைத்திருப்பார்?*

அந்த ஆதங்கம்தான் கொரோனாவில் யாரும் உயிர் இழந்துவிடக் கூடாது என வரதராஜனிடமிருந்து
உணர்வாக வெளிப்பட்டிருக்கிறது. 'ஆஸ்பிட்டலில் படுக்கை வசதிகள் இல்லை. பாதுகாப்பாக இருங்கள்’ எனச் சொல்ல எந்தக் குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதுவும் தன்னுயிரான இன்னுயிரை இழந்த வரதராஜனுக்கு.


செல்லப்பா
இவர்தான் செல்லப்பா. சமையல் கலை உலகின் சக்கரவர்த்தி. கொரானா என்னும் கொடிய நோயால் இவர் உயிர் பிரிந்தது. முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் அவர்கள் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் பெட் (அட்மிஷன்)கேட்டது இவருக்கே. இவரது இழப்பு சமையல் உலகின் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்

சென்னையில் உள்ள பிரபலங்கள் அனைவரும் இவர் அறிந்தவரே இவருடைய ஆளுமையின் கீழ் ஒரே நாளில் 50 திருமணங்கள் செய்யக் கூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர். ஒரு திருமணத்திற்கு 200 பேர் வேலை செய்கிறார்கள் என்றால் 50 திருமணத்திற்கு 10,000 பேர்கள் வேலை செய்வார்கள் சென்னையில் உள்ள மிகப்பெரிய திருமண மண்டபம் அனைத்தும் இவர் அறிந்ததே! இதுவரையிலும் ஒரு கோடி திருமணங்களுக்கும் மேல் திருமணம் செய்து நடத்தி சிறப்பாக செய்து கொடுத்தவர்.

பழகுவதில் இனிமையானவர். யாரிடத்திலும் அதிர்ந்து பேசாதவர்.

திருமணத்தில் செல்லப்பா சார் சமையல் என்றால் மக்கள் அனைவரும் நிம்மதியோடு திருமணத்திற்கு வந்து அறுசுவை உணவு உண்டு விட்டு செல்வர். எத்தனையோ இலவச திருமணங்களுக்கு தன் சொந்த செலவில் அருசுவை உணவு வழங்கியவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ 50,000 பேருக்கு மேல் அவர்களுக்கு வேலை கொடுத்தவர் அதோடு உணவும் அளித்தவர்

சினிமா நட்சத்திரங்கள், அரசு பதவியில் உள்ள பெரிய அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் இன்னும் எத்தனையோ அதிகாரிகள் என பலரும் இவர் சமையலை உண்டு ரசித்தவர்கள். எண்ணற்ற தொண்டு நிறுவனங்களை நடத்தியவர். பல திருமணங்களுக்கு தலைமையேற்று தாலி எடுத்துக் கொடுத்தவர். சபரிமலையில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதான கூடத்தில் மூன்று வேளையும் உணவு வழங்கியவர்.

எண்ணற்ற பல முதலாளிகளை உருவாக்கியவர். எத்தனையோ பேர்களுக்கு வாழ்வளித்து அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர்.

தெய்வம் அவரை நேரடியாக மோட்சத்திற்கு கொண்டு செல்லட்டும்..!

ஆகவே, கொரோனா என்னும் நோய் வராமலிருக்க
முகக் கவசங்கள் அணிந்து கொண்டு அனைவரும் அரசாங்க சொல்படி கேட்டு வீட்டிற்குள்ளே அனைவரும் இருக்கவும்.


வெள்ளி, மே 08, 2020

கூகுள் பிழையை சரி செய்வோம்..!இந்தியாவின் அதிகாரப்பூர்வமான மொழிகள் என்று கூகுள் தேடலில் தேடிப் பாருங்கள். அதில் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியும் ஆங்கிலமும்தான் காட்டும். இது தவறான தகவல். இதை நம்மால் மாற்ற முடியும்..!

அதற்கு நாம் செய்யவேண்டிய சுலபமான வேலை இதுதான். 

How many languages are spoken in India?

என்று கூகுள் தேடலில் கேளுங்கள்


2 Official Languages: Hindi English

என்று கூகுள் சொல்லும்.


வலதுபுறத்தில் தேசிய கொடிக்கு கீழே Feedback என்ற சொல்லைக் கிளிக் செய்யுங்கள்.


நீல வண்ணத்தில் Click on the error என்று தோன்றும். அதன் கீழ் உள்ள Give general feedback என்ற லிங்கை கிளிக் செய்யவும்..

What is wrong this? என்று வரும்.


அதில் Required என்ற இடத்தில் கீழுள்ளதை வெட்டி ஒட்டி அனுப்புங்கள்.

India has 22 official languages, namely Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Telugu and Urdu. There are also hundreds of other less prominent languages like Tulu, Bhojpuri and Ladakhi that are the main spoken language of some places.


பின் send என்று அனுப்பவும்.. Thanks for your feedback என்று வரும் 


UNDERSTOOD

என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.
அதோடு உங்கள் பக்கத்தில் பகிர்ந்தால் பலரையும் சென்றடையும்.

நமக்கு மின்னஞ்சலில் பதில் வரும்.

வெள்ளி, நவம்பர் 29, 2019

மொழிவாரி மாநிலங்களாக இந்தியாவை பிரிக்கும் போது நடந்த பரபரப்பு நிகழ்வுகள்


நமது வலைப்பதிவு நண்பர்கள் எழுதும் பதிவுகள் பலவற்றை படிக்கும்போது அவற்றை காணொளியாக மாற்றும் எண்ணம் ஏற்படும். அப்படி கடந்த மாதம் முத்துநிலவன் அய்யா அவர்கள் தனது வலைப்பூவில் எழுதிய மொழிவாரி மாநிலங்கள் பற்றிய பதிவைப் படிக்கும்போது எனக்கு தோன்றியது. உடனே அய்யாவிடம் இதைப் பற்றி பேசினேன். அவரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தார். அதற்கான பணியில் இறங்கும் முன்னே நான் பணியாற்றும் 'தினத்தந்தி'யிலிருந்து மற்றொரு புத்தகத்தை தயார் செய்து தரும்படி தகவல் வந்தது. அந்த வேளையில் இறங்கியதால் இந்தக் காணொளி ரெடியாக தாமதமாகிவிட்டது. தகவலை பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்த அய்யா அவர்களுக்கு நன்றி..!

இனி காணொளி பற்றி...

இந்த ஆண்டு அதிக வாசிப்பு

சமீபத்திய பதிவு

ஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..!

அது ஏப்ரல் மாதம் முதல் வாரம். 2020 ஆண்டு. கொரோனா  என்ற கண்ணுக்குத் தெரியாத அசுரன் மொத்த உலகையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்த காலம். இ...