Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இந்தியாவின் முதல் ரயிலோட்டம் இப்படித்தான் நடந்தது..!



ந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 கோடி பயணிகளையும், ஒரு நாளைக்கு 14,444 பயணிகள் ரயிலையும் இயக்கும் பிரமாண்ட சாம்ராஜ்யம்.  இந்த சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டவர் ரோலண்ட் மெக்டொனால்ட் ஸ்டீவன்சன் என்ற பிரிட்டிஷ் பொறியாளர். 1808-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி லண்டனில் பிறந்தவர். 1843-ல் குடும்பத்தோடு இந்தியா வந்தார். 

இந்தியாவில் ரயிலை இயங்க வைக்கவேண்டும் என்பது அவரின் தீவீர கனவு. ஆனால், இந்திய மக்களுக்கு ரயில் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. அதோடு அன்றைக்கு ரயில்வே துறை தனியார் வசமே இருந்தது. இந்தியா போன்ற கரடுமுரடான நில அமைப்பு கொண்ட ஒரு நாட்டில் ரயிலுக்காக முதலீடு செய்ய யார் முன்வருவார்கள்? இப்படி சிக்கல்கள் பல இருந்தாலும் தனது கனவில் தீவிரமாக இருந்தார் ஸ்டீவன்சன். 


அதற்கு ஏற்றாற் போல் 'தி இங்கிலீஸ்மேன்' என்ற ஆங்கில நாளிதழில் அவருக்கு ஆசிரியராக பொறுப்பு கிடைத்தது. இதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். ரயில்களைப் பற்றிய விதவிதமான கட்டுரைகளை தினமும் எழுதினார். இந்திய ரயில்வேயில் முதலீடு செய்வதால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பது போன்ற கட்டுரைகள் அன்னிய முதலீட்டாளர்களை இந்தியா பக்கம் இழுத்தது. இந்தக் கட்டுரைகளை இங்கிலாந்து நாளிதழ்களிலும் வரும்படி செய்தார். 

ரோலண்ட் மெக்டொனால்ட் ஸ்டீவன்சன்

இதன் விளைவாக 1845-ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேய அரசு கிழக்கிந்திய ரயில்வே கம்பெனியை ஆரம்பித்தது. அதனுடைய நிர்வாக இயக்குனராக ஸ்டீவன்சனை நியமித்தது. அதன்பின் இவர் எடுத்த முயற்சிகளை பற்றி எழுத பெரிய புத்தகமே போடவேண்டும். அத்தனை சிரமப்பட்டிருக்கிறார் அந்த மனிதர்.  

ஸ்டீவன்சன் உடல் பலவீனமானவர். ஆனாலும் ஐந்து ஆட்கள் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மனவலிமை மிக்கவர். இந்திய மொழிகள் எதுவும் தெரியாதவர். எப்போதும் அலுவலகமே கதியென்று கிடப்பவர். இருப்புப் பாதை அமைக்கும் பணியில் அரசுடனும் நில உரிமையாளர்களுடனும், ஒப்பந்தகாரர்களுடனும் இவர் சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. 
வேறு யாரவது இது போன்ற சிக்கல்களை சந்தித்திருந்தால் எப்போதோ வேலையை விட்டு ஓடிப்போயிருப்பார்கள். ஆனால், ஸ்டீவன்சனோ கோபங்களுக்கும் மனசோர்வுக்கும் அப்பாற்பட்டவர். அளவுகடந்த பொறுமை கொண்டவர். முடியாது என்ற வார்த்தையே அவரது அகராதியில் கிடையாது. இப்படி பல இன்னல்களுக்கு இடையே சாதித்துக்காட்டியவர் ஸ்டீவன்சன். இவர் இல்லாமல் இந்திய ரயில்வே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். 

சரி, இப்போது முதல் ரயில் ஒடியபோது என்னென்ன நடந்தது என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அது 1853-ம் வருடம் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி.

மும்பையில் உள்ள போரி பந்தர் என்ற ரயில் நிலையம் விழா கோலம் பூண்டிருந்தது. இந்த ரயில் நிலையத்தின் தற்போதைய பெயர் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸ் என்பது. இன்றைக்கு மும்பை மாநகரின் மாபெரும் அடையாளமாக திகழும் இந்த ரயில் நிலையம் அன்று சாதாரணமாக மிகச் சிறியதாக இருந்தது.

நூறு அடி நீளத்திற்குத்தான் நடைமேடை கட்டப்பட்டிருந்தது. முழுமையாக முடிவடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் நிலை இருந்தது. நடைமேடையில் மையப்பகுதியில் வண்ணமயமான தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. 

வெயில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. நடைமேடை முழுவதும் துணித்தோரணங்களும், கொடித்தோரணங்களும் மிளிர்ந்தன. நடைமேடைக்கு எதிரே 18 கொடிக்கம்பங்கள் இருந்தன. அவற்றில் வண்ண வண்ண கொடிகள் பறந்தன. ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடிதான் மிக உயரத்தில் பறந்தது.

'கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே' என்ற நிறுவனம்தான் இந்தப் பகுதியில் ரயில்பாதை அமைக்கவும், இயக்கவும் அனுமதி வாங்கியிருந்தது.

போரி பந்தர் ரயில் நிலையத்தின் டிராபிக் மேலாளர் ரோச் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பல்லாண்டுகால உழைப்பு அங்கீகாரம் பெறும் வரலாற்று சிறப்புமிக்க நாளல்லவா..! அதனால் அவர் மிகுந்த பதற்றத்தோடு இருந்தார்.

மதியம் 1 மணி.

மேலும் அறிந்து கொள்ள இந்தக் காணொளியைக் காணவும்..!





ஒலி வடிவிலும் இந்தப் பதிவை கேட்கலாம்.



14 கருத்துகள்

  1. அருமை நண்பரே
    கேட்பொலி கேட்டேன்...

    முடிவில் சொன்னது இந்திய செல்வங்களை கொள்ளையடித்து இங்கிலாந்து கொண்டு செல்வதற்கான முயற்ச்சிதான்... மனம் கனக்க வைத்த சதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே! ஆனால், ஆரம்பத்தில் அது சதியாக இருக்கவில்லை. பின்னாளில் அப்படி மாற்றினார்கள்.
      வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. நல்லதொரு காணொளி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  3. செந்தில்,

    அருமையான செய்தி/பட தொகுப்பு. ஸ்டீவன் போற்றத்தக்கவர்.

    திட்ட செலவில் மீதம் இருந்தது, குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு முன்னமே திட்டம் முடிக்கப்பட்டது, உழைப்பாளிகளுக்கான ஊதிய உயர்வும் இனி கற்பனை செய்துகூட பார்க்க முடியாதபடி கால சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    பின்னாளில் ஆங்கில பேரரசு இந்த புதிய வரவை சுய நல நோக்கில் செயல் படுத்தப்போவதை ஸ்டீவன்அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

    அறிய தகவல் பகிர்வுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரித்திரம் ஆங்கிலேயர்கள் எத்தகைய கொடியவர்கள் என்பதை அடிக்கடி நமக்கு சொல்கிறது. ஆனால், அவர்கள் கூட சில சமயங்களில் நமது ஆட்சியாளர்களைவிட சில விஷயங்களில் தாராளமாக செயல் பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இந்த பயணியர் ரயிலும்...!

      தங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. வரலாற்று தகவல்... காணொளி தகவல்களும் அருமை...

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல்கள். இதே போல் இதர்க்கு முன், சென்னையில் ரயில்வே அமைத்தது குறித்து sps media youtube channel இல் சுட்டி பார்த்தேன். அது குறித்தும் தகவல்கள் தரவும் ஐய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக தருகிறேன்!
      தங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. நல்ல வரலாற்று தகவல்கள் தொகுப்பு. சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்

    வாழ்த்துகள்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தெரிந்துகொள்ள வேண்டிய அரிய செய்திகள். தொகுத்துத் தந்த விதம் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை