Full Width CSS

பத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..!


பொதுவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகிறார்கள். பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். தினமும் 20 லிட்டர் பால், 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ காய்கறி வலிமையான மாட்டுத் தீவனம் என்று சாப்பிடச் சொல்லி திணிக்கிறார்கள். தீவனத்திற்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.2,500 செலவு செய்கிறார்கள். கொழுப்பு வைக்கக் கூடாது என்பதற்காக தினமும் 6 கி.மீ. வாக்கிங் கூட்டிப் போகிறார்கள். அதுவொரு 'முரா' இனத்தை சேர்ந்த எருது காளை. இன்றைய தேதியில் உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட காளை இதுதான். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய். இந்த விலையில் ஒரு ஹெலிகாப்டர் வாங்கி பறக்கலாம். 

யுவராஜ் 
அப்படி என்னதான் இருக்கிறது இந்த காளையிடம். அந்த காளையின் நீளம் 11.5 அடி. உயரம் 5.8 அடி. 1,400 கிலோ எடை. காளையின் பெயர் யுவராஜ். அதன் உரிமையாளர் பெயர் கரம்வீர் சிங். ஹரியானா மாநிலத்தின் மூன்றாம் தலைமுறை விவசாயி. இந்த கிராமத்தின் பெயர் சுநேரியன். மஹாபாரதத்தில் குருஷேத்ரா யுத்தம் நடந்த இடம் இது  என்கிறார்கள்.  இந்த காளை தினமும் ரூ.2 லட்சம் வருமானத்தை தனது உரிமையாளருக்கு சம்பாதித்து கொடுக்கிறது.

இந்த காளையின் விந்துக்கு வடஇந்தியாவில் நல்ல கிராக்கி இருக்கிறது. இதனால் செயற்கை கருவூட்டல் மூலம் ஒன்றரை லட்சம் கன்றுகளுக்கு தந்தையாக இருக்கிறது. தினமும் இந்த காளையின் விந்து சேகரிக்கப்படுகிறது. இதற்காகவே செயற்கையாக ஒரு பெண் எருதை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் பெண்ணுறுப்பு மூலம் விந்து சேகரிக்கப்படுகிறது. 

ஒருமுறைக்கு 4 முதல் 6 மில்லி விந்து வெளியேறுகிறது. இதனை விஞ்ஞான முறைப்படி நீர்க்க செய்து 35 முதல் 40 மில்லி வரை அதிகப்படுத்துகிறார்கள். அதிலிருந்து 0.25 மில்லி விந்து எடுத்து அதை ஒரு டோஸ் என்ற கணக்கில் -196 டிகிரி என்ற குளிர் வெப்பத்தில் லிக்கியூட் நைட்ரஜனில் சேமித்து வைக்கிறார்கள். இப்படி சேகரித்த விந்தின் ஒரு டோஸில் 2 கோடி உயிரணுக்கள் இருக்கும். இது செயற்கை முறை கருவூட்டலுக்கு மிக தாராளமான அளவாகும். இப்படி ஒருமுறை வெளியேறும் விந்திலிருந்து 300 முதல் 500 டோஸ் உயிரணுக்களை சேகரித்துவிடுகிறார்கள். 

லிக்கியூட் நைட்ரஜன்
சாதாரணமாக ஒரு முரா இன எருது காளையின் ஒரு டோஸ் விந்து ரூ.150 விலை என்றால் இந்த யுவராஜின் விந்தின் ஒரு டோஸ் ரூ.1,500. சாதாரண காளையைவிட 10 மடங்கு விலை கூடுதல். ஒருமுறை யுவராஜ் வெளியேற்றும் விந்து மொத்தமாக ரூ. 3 லட்சத்தை கரம்வீர் சிங்கிற்கு சம்பாதித்து கொடுத்துவிடுகிறது. யுவராஜிற்கு பிறக்கும் பெண் கன்றுகள் 20 லிட்டர் பால் கொடுக்கின்றன. அதனால் இந்தக் காளையின் வித்துவிற்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

ஒரு காளை இப்படி லட்சக்கணக்கான வாரிசுகளை உருவாக்கியிருப்பதிலும் உலகிலேயே முன்னணியில் இருப்பது யுவராஜ்தான். ஏகப்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் வாங்கி உரிமையாளருக்கு மேலும் பல பெருமைகளை சேகரித்திருக்கிறது யுவராஜ்.22 கருத்துகள்

 1. ஆச்சர்யமான செய்தி முதலில் ஒரு நாளைக்கு 2500 ரூபாய் செலவு செய்வது எதற்காக ? என்று நினைத்தேன் பிறகுதான் தெரிந்து தினமும் 2 லட்ச ரூபாய் வருமானத்தை தருகிறது அப்படியானால் இவர் விரைவில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் வரிசையில் வரலாமே....

  இந்த விசயம் திரு. ராமராஜனுக்கு தெரியுமா ?
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரிடம் அப்படிப்பட்ட காளை இல்லையே.!
   தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
  2. அவர் காளை இல்லையே. பசுராஜன் என்றல்லவா பெயர்.

   நீக்கு
 2. அருமையான தகவல்
  தங்கள் தேடல் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. ஆமாம், இது கின்னஸ் சாதனை.!
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அய்யா!

   நீக்கு
 4. காமதேனுக்களின் ராஜா இதுதான் போலிருக்கே :)

  பதிலளிநீக்கு
 5. ஆச்சரியமூட்டும் தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. வியப்பூட்டும் தகவல்தான்..அம்பானிக்குப் போட்டியோ!!??..நன்றி நண்பரே!

  கீதா: என் மகனுக்குப் பிடிக்காத மனதளவில் எதிக்ஸ் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விசயம். என்றாலும் நடைமுறையில் நல்ல விதமாக மாட்டின் நலனையும் மனதில் கொண்டு செய்ய வேண்டிய ஒன்று என்பான் அடிக்கடி. ஆனால் அங்கும் வியாபாரம் விளையாடுவதால், ஒரு பசுவை கன்று ஈனும் இயந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் அவனுக்கு மனம் வேதனைப்படும். அப்பசுவின் இப்பயன்பாடு நலுவுறும் வேளையில் அதனை வெட்டுவதற்கு அனுப்புவதையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனை இத்தனை காலம் கன்று போடும் இயந்திரமாகப் பயன்படுத்திவிட்டு பின்னர் அதனை வெட்டுவதற்கு அனுப்புகிறார்களே அது இத்தனை வருடங்கள் நமக்காக உழைத்திருக்கிறதே அதனை இறுதிவரை காப்பாற்ற வேண்டாமா அதன் இயற்கை மரணம் வரை என்று வேதனைப்படுவான்...அவனால் கால்நடைத் துறையில் நடக்கும் இது போன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனிதன் சுயநலவாதி....தன் பெற்றோரையும் இப்படித்தானெ செய்கிறான் என்பான்....

  நானும் மகனும் இது பற்றி நிறைய பேசிக் கொள்வோம். அவன் செட்டில் ஆனால் நிறைய திட்டங்கள் உள்ளது. பார்ப்போம்..

  பதிலளிநீக்கு
 7. Thanks for your article and the Murrah is a buffalo breed and it is famous in north India for milk production -Nice article
  Agri Marruthu,Coimbatore

  பதிலளிநீக்கு
 8. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை