Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மனிதன்


டேவிட் ரெய்மேர், இதுதான் அந்த மனிதரின் பெயர். 38 வருட வாழ்க்கையில் இரண்டு முறை ஆணாகவும் ஒருமுறை பெண்ணாகவும் வாழ்ந்து மீளமுடியாத துயரில் வெம்பி வதங்கி உயிர் நீத்தார். 1965-ல் கனடாவில் ரெய்மேர் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார் டேவிட் ரெய்மேர். 

பிரெண்டா-டேவிட் ரெய்மேர்
ஆறு மாத குழந்தையாக இருந்த போது சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்பட்டான். டாக்டர்கள் 'சர்க்மஸிசன்' என்ற அறுவை சிகிசசைக்காக மருத்துவமனையை பரிந்துரை செய்தார்கள். ஆணுறுப்பின் முன்தோல் நுனியை கத்தரிக்கும் சிகிச்சைக்குத்தான் அப்படியொரு பெயர். புரியும்படி சொல்வதென்றால் 'சுன்னத்'. அனுபவம் இல்லாத ஒரு டாக்டர் செய்த தவறால் ஆணுறுப்பை முழுமையாக அகற்ற வேண்டிய நிலை வந்தது. 

செய்வதறியாது பெற்றோர்கள் தவித்தார்கள். குற்ற உணர்ச்சி வேறு அவர்களை பாடாய் படுத்தியது. குறிப்பிட்ட கால அவகாசத்தில் கொண்டுவந்தால் ஆண் குழந்தையை பெண்ணாக மாற்றலாம் என்று யாரோ சொல்ல, தங்கள் மகனை பெண்ணாக மாற்ற அந்த பெற்றோர்கள் டேவிட்டையும் அழைத்து போனார்கள். பல கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரெண்டா என்ற சிறுமியாக மாறினான் அந்த சிறுவன். 

சிறுமியாக மாறியப் பின்
பள்ளிக்குப் போகும்போது மீண்டும் பிரச்சனை முளைத்தது. என்னதான் பெண்ணாக மாற்றினாலும் அவனிடம் இருந்த ஆண் தன்மை மாறவேயில்லை. ஆண் குழந்தைக்கான அத்தனை தன்மையும் பிரெண்டாவிடம் காணப்பட்டன. அவன் நின்று கொண்டே பெண்கள் கழிவறையில் சிறுநீர் கழித்தது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. பெண் குழந்தைகளிடம் இருந்து பிரெண்டாவை பிரித்து வைக்க வேண்டும் என்று மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் சொல்ல பிரெண்டா தனிமை படுத்தப் பட்டாள். 

இவை அனைத்தும் அந்த பிஞ்சு மனசுக்குள் பெண் உருவத்தின் மீது வெறுப்பை விதைத்தன. 12 வருடங்கள் கழித்து, பிரெண்டா பருவ வயதை எட்டியபோது பிரெண்டாவுக்குள் பெண் தன்மை சுத்தமாக இல்லை. ஆண்மை உணர்வுதான் தலைதூக்கியது. பள்ளி நாடகம் ஒன்றில் மற்றொரு மாணவனுக்கு முத்தம் கொடுப்பதுபோல் நடிக்க வேண்டும். அறுவறுப்பின் உச்சத்துக்கு சென்ற பிரெண்டா மேடையை விட்டு விறுவிறுவென கீழேயிறங்கி ஓடிவிட்டான். 

பெண் உருவத்தில் இருந்தாலும் கைகளில் ரோமங்களும் கழுத்து மற்றும் தோள்பகுதி அகலமாகவும் காணப்பட்டது. இத்தனை நாட்கள் அவளுக்கு மட்டுமே தெரிந்த பிரச்சனை இப்போது வெளியுலகத்துக்கு தெரிய வர தன்னை தனிமை படுத்திக்கொண்டாள் பிரெண்டா. தானே தனது தலைமுடியை ஆண் போல் கிராப்பாக வெட்டிக்கொண்டு தனது அண்ணனின் சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு, தன்னை மீண்டும் ஆணாக மாற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பெற்றோரை மிரட்டினான். 

பிரெண்டாவாக
தனக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த டாக்டரை தேடி கண்டுபிடித்து துப்பாக்கியால் சுட முயன்றான். டாக்டர் அவன் காலில் விழுந்து கதறி அழ உயிரோடு விட்டு வந்தான். "தவறு செய்தவரை தண்டிப்பதைவிட மன்னிப்பதே பெரிய குணம். அவருக்கு பெரிய ரணமும் கூட" என்றான். 

திருமணத்தின் போது
அதன்பிறகு நான்கு அறுவைசிகிச்சை செய்து ஆணாக மாறினான். மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை மணந்து கொண்டான். எதிலும் சந்தோசம் கிடைக்கவில்லை. மனைவியை விட்டு பிரிந்தான். ஆதரவற்று சுற்றித் திரிந்தான். ஒரு கட்டத்துக்கு மேல் இனி வாழ முடியாது என்று தற்கொலை செய்து கொண்டான்.

"எனக்கு விஷயம் தெரிவதற்குள் என்னை இருமுறை இழந்து விட்டேன். என்னிடம் கேட்டு நீங்கள் முடிவெடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. 38 வருடங்களாக நான் உணர்ந்த அந்த வலியை நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் உணரவேண்டும்." என்று தனது பெற்றோருக்கு கடிதம் எழுதியிருந்தான். தன் வாழ்வையும் முடித்துக்கொண்டான். 

கடைசி காலத்தில்


12 கருத்துகள்

  1. மிகவும் வேதனையாக இருக்கின்றது விடயம் அவனது நிலையிலிருந்து நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் கனக்கின்றது.
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. படிக்க மிகவும் கொடுமையாகவும் வேதனையாகவும் உள்ளது.

    எந்த ஒரு குழந்தைக்கும் இதுபோல நேரக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்கும் இப்படியொரு கொடுமை நிகழக்கூடாது. ஆனாலும் தொடர்ந்து அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
      நன்றி!

      நீக்கு
  3. நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் அந்த டாக்டரை மன்னித்த டேவிட் ரெய்மர் போற்றப் படவேண்டியவர்.

    பதிலளிநீக்கு
  4. சமூகத்தில் இப்படியும் ஒரு கொடுமை நடந்துகொண்டு இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. அடடா இப்படியும் நடக்குமா என இருக்கின்றது.மிகவும் கஷ்டமான விடயம் இது. பாவம் அவர். மருத்துவர்களின் கவலையீனம் எத்தனை வேதனையை விளைவித்திருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஷா!

      நீக்கு
  6. அடடா! மிகவும் கஷ்டமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  7. மிகவும் வேதனையாக இருக்கிறது வாசிக்கும் போது. உலகில் எப்படிப்பட்ட துன்பங்கள் எல்லாம் வருகின்றன...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை