• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, ஏப்ரல் 29, 2016

  பார்வையை கூர்மையாக்க எளிய பயிற்சி  ண்களுக்கு பயிற்சி கொடுத்தாலே போதும் பார்வை 'பளிச்'சென்று கிடைக்கும். இது சீனர்களின் நம்பிக்கை. மற்ற நாட்டினரை காட்டிலும் சீனர்களுக்கு கண்பார்வை கூர்மையாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் உடற்பயிற்சி போலவே கண்களுக்கு பயிற்சி அளிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

  கண்களுக்கு என்றே பலவகையான பயிற்சிகளை வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த பயிற்சி. முதலில் ஒரு நாற்காலியில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். பின் இந்த பயிற்சிகள் ஒவ்வொன்றாக செய்தால் போதும். கண்ணாடி இல்லாமலே பார்வை பளிச்சிடும். 

  பயிற்சி 1 
  தலையை அசைக்காமல் கண்களை வலமிருந்து இடமாகவும் பிறகு இடமிருந்து வலமாகவும் பார்க்க வேண்டும். இப்படி 8 முறை செய்ய வேண்டும். எவ்வளவு தூரத்திற்கு பார்க்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு பார்க்க வேண்டும்.

  பயிற்சி 2 
  மேலிருந்து கீழாகவும், பிறகு கீழிருந்து மேலாகவும் பார்க்க வேண்டும். இதை 8 முறை செய்ய வேண்டும்.

  பயிற்சி 3 
  கண்களை வலமிருந்து இடமாக கடிகார முட்களைப் போல 8 முறை சுழற்ற வேண்டும். இதேபோல இடமிருந்து வலமாக 8 முறை சுழற்ற வேண்டும்.


  பயிற்சி 4 
  உங்களது கண்களுக்கு முன்னால் படுக்கை வசத்தில் 8 என்ற எண் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். முதலில் வலமிருந்து இடமாக கண்களால் 8ஐ போடுங்கள். இதையே மாற்றி இடமிருந்து வலமாக செய்ய வேண்டும்.

  பயிற்சி 5 
  உங்களது கண்களுக்கு முன்னால் செங்குத்தாக 8 என்ற எண் இருப்பதாக பாவித்துக்கொள்ளுங்கள். முதலில் மேலிருந்து கீழாகவும் பின் கீழிருந்து மேலாகவும் கண்களால் 8 போட வேண்டும்.

  பயிற்சி 6 
  வலது கண்ணின் மேல் கார்னரை உற்று நோக்க வேண்டும். பிறகு வலது கண்ணின் கீழ் கார்னரை  பார்க்க வேண்டும். இதை 8 முறை செய்ய வேண்டும். இதேபோல இடது கண்ணின் மேல் கார்னரையும் கீழ் கார்னரையும் பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும்.

  ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் கண்களை சிமிட்ட வேண்டும்.

  இந்த பயிற்சிகள் முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்தவாறே வலது உள்ளங்கையால் இடது கண்ணையும், இடது உள்ளங்கையால் வலது கண்ணையும் மென்மையாக அழுத்தம் கொடுக்காமல் மூட வேண்டும். சில வினாடிகள் கழித்து மூடிய உள்ளங்கைகளை மெதுவாக எடுக்க வேண்டும். அப்போது கண்களை சிமிட்டிக்கொண்டே கைகளை எடுக்க வேண்டும். பிறகு முழுமையாக எதிரே உள்ளவற்றை பார்க்கலாம்.

  பயிற்சிகளை தினமும் ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம். 30 முதல் 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக செய்தால் நல்ல பலன் உண்டு. கடைசியாக ஒன்று பயிற்சி காலத்தில் மது, புகை கூடாது. இதற்கு கண்ணாடியே போட்டுக்கொள்ளலாம் என்று புகை, மதுப்பிரியர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.  21 கருத்துகள்:

  1. கண்ணுக்கு பயிற்சி விளக்கம்
   அருமை நண்பரே....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  2. இன்றையிலிருந்து நானும் ஆரம்பித்து விடுகிறேன்.. தகவலுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பயிற்சியை தொடங்கியதற்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  4. பா(ர்)வை ஒன்றே போதுமே... நல்ல பார்வைக்கு எளிய பயிற்சி... ‘பார்’ கூடாதென்று சொல்லிவிட்டீர்கள்... மே 16 க்கு அப்புறம்தான் தெரியும்... மக்கள் பார்வை யார் பக்கம் என்று... அதுவரை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

   இருந்தாலும் இப்பொழுதே ஓட்டுப் போட்டு விடுகிறேன்!

   த.ம. 3

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மக்கள் பார்வை யார் பக்கம்? என்று தெரிய பொருத்துதான் ஆகவேண்டும்.
    தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!

    நீக்கு
  5. பெண்கள் கல்லூரி அருகே, பசங்க நின்றுகொண்டே பயிற்சி எண் ஒண்ணை மட்டும் தவறாமல் செய்வதை ,என் கண்ணாலே பார்த்திருக்கிறேன் :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் பார்வை எப்போதுமே வித்தியாசமானதுதான் பகவான்ஜி!
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  6. அருமையான பயிற்சி முறைகள் ஐயா
   தொடர்கிறேன் நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
  7. புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பல்லாண்டுகளாகக் கண்பயிற்சி நடைபெறுகின்றது. கண்ணாடி அணிபவர்கள் தொடர்ச்சியாக இப்பயிற்சியை மேற்கொண்டால் கண்ணாடியை எடுத்துவிடலாம் என்று சொல்கிறார்கள். புதுவையில் தங்கி சில வாரங்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பிறகு அவர்கள் ஊர்களுக்குத் திரும்பித் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். நான் பயிற்சியை நேரில் பார்த்ததில்லை. ஒரு பந்தைக் கீழே அடித்துத் தரும் பயிற்சி எனச் சிலர் சொல்லக் கேள்வி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. யோகாசனத்தில் இதை செய்வதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
    தங்கள் வருகைக்கு நன்றி!

    நீக்கு
  8. எட்டு போடுவதைத் தவிர பிற உத்திகளை நண்பர்கள் கூறிக் கேட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்